புதன், 28 நவம்பர், 2018

1189. புதுமைப்பித்தன் - 4

இருட்டு
புதுமைப்பித்தன்

‘சக்தி’ இதழில் 48-இல்  அவர் மறைந்தவுடன் வந்த அஞ்சலி இதழில் வந்த ஒரு கவிதை.
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: 
புதுமைப்பித்தன்

செவ்வாய், 27 நவம்பர், 2018

1188. பாடலும் படமும் - 50

சிங்கமும் சிறுவனும் 

[ நன்றி: வள்ளியப்பன் ராமநாதன் ]

இது ஏ.கே.சேகர் வரைந்த ஓர் அற்புத ஓவியம். 1938-இல் விகடன் தீபாவளி மலரில் வந்த முகப்பு ஓவியம்.  ஜெமினியில் ஆர்ட் டைரக்டராய்த் திகழ்ந்த சேகர் விகடனின் தொடக்க வருடங்களில் நிறைய ஓவியங்களை விகடனில் வரைந்துள்ளார். பிரபலமாய் இருந்த ‘சித்திர ராமாய’ணத்தில் முதலில்  ஓவியங்கள் வரைந்தவர் இவர்தாம். 

இதற்கு விகடனில் வந்த சித்திர விளக்கம் என்ன தெரியுமா? கீழே படியுங்கள்! இது இந்திய விடுதலைக்கு முன் வந்தது என்பதையும் நினைவில் கொண்டு!
======

சிங்கமும் சிறுவனும் 

“ சகுந்தலை பெற்ற பிள்ளை - சிங்கத்தினைத் 
       தட்டி விளையாடி - நன் (று)
உகந்ததோர் பிள்ளை முன்பாரத ராணி
       ஒளியுறப் பெற்ற பிள்ளை”  
                                                                 - பாரதி -

சிங்கத்தோடு விளையாடும் இந்தச் சிறுவனைப்  பாருங்கள், “ பயமென்றால், அது என்ன? வேறு எப்படி யிருக்கும்? அப்படியொன்று இருக்கிறதா? இருக்க முடியுமா? “ என்றெல்லாம் கேட்கக் கூடிய பிள்ளையென்று தோன்றுகிறதல்லவா?

இவந்தான் சகுந்தலை பெற்ற பிள்ளை, பரதன், - பரத நாட்டுச் சிறுவர்களின் லட்சியம். இப்படிப்பட்ட பிள்ளைகளே பாரத ராணியை ராணியாக்கினார்கள். மகுட பங்கம் செய்யப்பட்டிருக்கும் தாய்க்கு மறுபடி முடி சூட்டக் கூடியவர்களும் இத்தகைய பரதர்களே!

‘ பாரதராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை’ என்று கருதத்தக்க காங்கிரஸ், இன்று பிரிட்டிஷ் சிங்கத்துடன் ‘தட்டி விளையாடி’க் கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாமல்லவா? 
====
‘ கல்கி’ விகடன் ஆசிரியராய் இருந்த காலம் அது. ஒருவேளை அவரோ, பி.ஸ்ரீ. யோ இதை எழுதியிருக்கலாம்.

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

திங்கள், 26 நவம்பர், 2018

1187. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 11

என் வாழ்க்கையின் அம்சங்கள் -7
வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி ’சுதேசமித்திர’னில்  1941-இல் வந்த  ஒரு கட்டுரை. 
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி: சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி

சனி, 24 நவம்பர், 2018

1186. டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் - 2

சிறையில் தலைவர்கள்
டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் 
‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார்

புதன், 21 நவம்பர், 2018

1185. மா.இராசமாணிக்கனார் - 1

தமிழர் வீரம்
மா.இராசமாணிக்கனார்

’உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கட்டுரை.
 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

செவ்வாய், 20 நவம்பர், 2018

1184. சத்தியமூர்த்தி - 5

சம்பாஷணை, விருந்தினருக்கு உபசாரம்
எஸ்.சத்தியமூர்த்தி 
43-இல் சுதேசமித்திரனில் வந்த இரு கடிதங்கள்.

பி.கு.

இந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன. 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சத்தியமூர்த்தி

திங்கள், 19 நவம்பர், 2018

1183. ந. சிதம்பர சுப்பிரமணியம் - 1

"சுத்த மணிக்கொடிக்காரர்" ந.சிதம்பர சுப்பிரமணியம்

மணிக்கொடி எழுத்தாளர் வரிசையில் கடைசியில் வந்து சேர்ந்துகொண்டவர். ஆனால், தமிழ்ச் சிறுகதையாசிரியர் வரிசையில் முதலில் வைத்து எண்ணத்தக்கவர்; தன்னுடைய யதார்த்தக் கதைகளின் ஊடாக புனைகதைக்குப் பெருமை சேர்த்தவர்; ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா. உள்ளிட்ட எழுத்தாளர்கள் பிற இதழ்களில் கதை எழுதிவிட்டு மணிக்கொடிக்கு எழுத வந்தவர்கள். ஆனால், இவர் முதன்முதலில் மணிக்கொடியில்தான் எழுதினார்.

"சுத்த மணிக்கொடிக்காரர்" என்ற பெருமைக்குரிய ந.சிதம்பர சுப்பிரமணியம். 

1912ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி காரைக்குடியில் பிறந்தார். காரைக்குடியிலும் புதுக்கோட்டையிலும் தம்முடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர், சென்னையில் சாட்டர்டு அக்கவுண்டண்டாகப் பயிற்சிப் பெற்றார். ஆனால், இப்பயிற்சியை இவர் முழுமையாக முடிக்கவில்லை. சென்னை வந்த இவர், விஜயா - வாஹினி ஸ்டுடியோவில் நிர்வாகியாகப் பணியில் சேர்ந்தார். திரைப்படத்துக்குப் பலமுறை கதை எழுத முயன்று தோற்றார். 1967 ஜூலை முதல் தேதி இப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சுமார் 21 ஆண்டுகள் சிதம்பர சுப்பிரமணியம் இப்பணியில் இருந்தார். எழுதுவதற்குப் புனைபெயர் வைத்துக்கொள்ளாத இவரை, பணிபுரிந்த இடத்தில் மட்டும் என்.சி.எஸ். என்று அழைத்தனர்.  என்.சி.எஸ்., மேல்நாட்டு இலக்கியங்கள் பலவற்றைப் படித்தவர். சங்கீத ஞானம் உடையவர். தியாகைய்யர் மீது அளவில்லாத பற்று கொண்டவர். வீணை வாசிக்கத் தெரிந்தவர். மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, காந்தி, கலைமகள், ஆனந்த விகடன் முதலிய இதழ்களைத் தொடர்ந்து படித்ததன் காரணமாக இவருக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 

"வாழ்க்கையின் முடிவு" என்ற இவரது முதல் கதை மணிக்கொடி ஐந்தாவது இதழில் வெளிவந்தது. பி.எஸ்.இராமையா இவரின் முதல் கதையைப் பிரசுரித்து சிறுகதை உலகுக்கு இவரை அறிமுகப்படுத்தினார். வஸ்தாத் வேணு, ஒரு கூடை கத்தரிக்காய் ஆகியவை முறையே இவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கதைகள். மணிக்கொடியில் மட்டும் 10 கதைகளை எழுதியிருக்கிறார். மணிக்கொடியைத் தொடர்ந்து கலைமகள், சந்திரோதயம், ஹனுமான், தினமணி - ஆண்டு மலர், சக்தி, கிராம ஊழியன் பொங்கல் மலர், கலாமோகினி, ஹிந்துஸ்தான் கதாமணி, சூறாவளி முதலிய பல இதழ்களிலும் இவருடைய கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் பிரசுரமாயின.  என்.சி.எஸ்., சுமார் 60 கதைகள் வரை எழுதியுள்ளார். இவைகளில் ஆறு கதைகள் எந்தத் தொகுப்பிலும் இடம்பெறவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு "சக்ரவாகம் முதலிய கதைகள்". இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "சூரிய காந்தி". மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு "வருஷப் பிறப்பு". தவிர, இவருடைய 12 நாடகங்கள் அடங்கிய "ஊர்வசி" என்ற நாடகத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.  எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கொள்ளாத என்.சி.எஸ்., ஆரம்ப காலத்தில் சிறுகதைகளை எழுதினாலும், இவர் உச்சத்தைத் தொட்டது நாவலில்தான். மொத்தம் மூன்று நாவல்களை  எழுதியுள்ளார்.  இவருடைய முதல் நாவல், இதயநாதம். தான் நேசிக்கும் கலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் ஓர் இசைக் கலைஞனின் கொள்கை அடிப்படையிலான வாழ்க்கை முறையை இந்நாவல் விளக்குகிறது. இதை ஆன்மிகப் புதினம் என்று கூறுமளவுக்கு இதன் தன்மை உள்ளது.இதயநாதம், க.நா.சு.வின் "பொய்த்தேவு" நாவலின் சாயலைக் கொண்டது என்ற விமர்சனமும் உண்டு. இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாவல்.  அடுத்து இவர் எழுதிய நாவல் "நாகமணி". பண்புக்கும் பணத்துக்கும் உள்ள முரண்பாட்டை இந்நாவல் காட்டுகிறது. "புகார் நகரத்தையும் இந்திர விழாவையும் வைத்து ஒரு கதையைக் கற்பனை செய்ய வேண்டுமென்பது என் வெகுநாளைய அவா. அதற்கு இந்தக் கதையின் மூலக் கற்பனை இடங்கொடுத்தது'' என்று என்.சி.எஸ்., நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.  மூன்றாவது நாவல், மண்ணில் தெரியுது வானம். வாசகர் வட்டம் இந்நாவலை 1969ஆம் ஆண்டு வெளியிட்டது. காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது காந்தியை சிதம்பர சுப்பிரமணியம் நேரில் பார்த்திருக்கிறார். அவரது எளிமையானத் தோற்றம் இவரை வசீகரித்திருக்கிறது. காந்தி 1929இல் நடத்திய இயக்கத்தில் கலந்துகொள்ளவிடாமல் இவரின் அம்மா தடுத்திருக்கிறார். அந்தச் சம்பவம் எதிர்காலத்தில் இப்படியொரு நாவல் எழுதத் தூண்டியிருக்கிறது. காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவின்போது இந்நாவல் வெளிவந்தது. பக்கத்துக்குப் பக்கம் இந்நாவல் காந்தியடிகளின் பெருமை பேசுகிறது."காந்திய யுகத்தில் நான் அனுபவித்ததையும் கண்டதையும் இந்நாவலில் காட்ட முயன்றிருக்கிறேன். காந்தி இருந்த காலம், நம் சரித்திரத்தில் ஒரு பொற்காலம்; என் வாழ்விலும் இது ஒரு பொற்காலம்தான். மகாத்மாவும் நானும் ஒரே காற்றை ஒரே சமயத்தில் சுவாசித்துக் கொண்டிருந்தோம் என்பதே எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. இது ஒரு தனி மனிதன் கதைதான். ஆனால், மகாத்மாவின் கதையும்கூட; தேசத்தின் கதையும் கூடத்தான்'' என்று இந்நாவல் குறித்து சிதம்பர சுப்பிரமணியம் முன்னுரையில்  குறிப்பிட்டிருக்கிறார். 

நமக்காகத்தான் நாம் எழுத வேண்டும். மற்றவர்களுக்காக நாம் என்றும் எழுத முடியாது. வாசகர்களுக்கென்று நான் எழுதவில்லை (ஞானரதம், மார்ச்.1972) என்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ந.சிதம்பர சுப்பிரமணியம், 1978ஆம் ஆண்டு காலமானார். 

புனைகதை வரலாற்றுக்கு இவரளித்த பங்களிப்பு அளப்பரியது. மணிக்கொடி எழுத்தாளர்கள் குறித்துப் பேசும்போது, இவருடைய எழுத்துகளையும் சேர்த்துதான் பேசவேண்டும்.  ந.சிதம்பர சுப்பிரமணியம் எழுதிய கட்டுரைகள் இன்னும் முறையாகத் தொகுக்கப்படவில்லை. நீண்டகாலமாக பதிப்பிக்கப்படாத, மறுபதிப்பில்லாத அவருடைய எழுத்துகளை காலவரிசையாகத் தொகுப்பதுதான் நாம் அவருக்குத் தரக்கூடிய மிகச்சிறந்த அங்கீகாரமாக இருக்கும்.

[ நன்றி:- தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
ந.சிதம்பர சுப்பிரமணியம்

சனி, 17 நவம்பர், 2018

1182. சங்கீத சங்கதிகள் - 164

பாடலும், ஸ்வரங்களும் - 9
செம்மங்குடி சீனிவாச ஐயர்‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 40-களில் வெளியிட்ட இரு பாடல்களும் , அவற்றின் பொருளும், ஸ்வரங்களும்  இதோ.
[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

திங்கள், 12 நவம்பர், 2018

1181. ஏ.கே.செட்டியார் - 4

டென்மார்க் - நார்வே 
ஏ.கே.செட்டியார் 

‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:
ஏ.கே.செட்டியார்

ஞாயிறு, 11 நவம்பர், 2018

1180. சங்கீத சங்கதிகள் - 163

தியாகராஜர் கீர்த்தனைகள் - 10
ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.
மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1932-இல் சுதேசமித்திரனில்  வெளியானவை.
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

வெள்ளி, 9 நவம்பர், 2018

1179. தமிழ்வாணன் - 5

மயான போகம்
தமிழ்வாணன்

நவம்பர் 10. தமிழ்வாணனின் நினைவு நாள்.

‘சக்தி’ இதழில் 1947-இல் வந்த ஒரு கட்டுரை.

 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 6 நவம்பர், 2018

1178. பாடலும் படமும் - 49

சத்யபாமா 
பசுபதி

[ ஓவியம்; Bapu ] 

அரக்கன் நரகனின் வதத்தினிலே – உதவி
  அளித்த பாமையை மறப்போமா?
கருணை காட்டிடும் தாய்க்குலமும் – தீக்
  கயமை அழிப்பதில் முன்வரட்டும் !  

கவிவேழம் இலந்தை இராமசாமியின் பின்னூட்டம்:

பாசாங்குக் கண்ணன் படுத்திருக்க- சத்ய 
  பாமாவும் அம்பைத் தொடுத்திருக்க
கூசாமல் நாடகம் ஆடுகிறான் – மகனைக்
  கொன்றிட த் தாயினை ஏவுகிறான்

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

1177. தீபாவளி மலரிதழ்கள் - 3

'மாதமணி’  1947 தீபாவளி மலரிலிருந்து 

நான் இதுவரை கேள்விப்படாத ஓர் இதழின் மலர் ஒன்று அண்மையில் கிட்டியது. கோயம்புத்தூரிலிருந்து வந்த இதழ். கே. சி. எஸ். அருணாசலம்  அவர்களுடன் தொடர்புள்ள பத்திரிகை என்று வல்லிக்கண்ணன் எழுதுகிறார்.

ஆசிரியர்: டி.சி.ராமஸ்வாமி . கௌரவ ஆலோசகர்கள்: டி.ஏ.ராமலிங்கம்  செட்டியார் பி.ஏ.பி.எல், டி.எம்.நாராயணசாமி பிள்ளை, எம்.ஏ.பி.எல்.   என்று இதழில் உள்ளது.

( மேலும் இவ்விதழின் வரலாறு அறிந்தோர் பின்னூட்டங்கள் இடலாம்.)

மலரிலிருந்து சில பக்கங்கள்:

முதலில் அட்டைப்படம்.  கோவலன், வசந்தமாலை, யாழிசைக்கும் மாதவி.
ஓவியம் : வி.எம்.பிள்ளைஒரு விளம்பரம்

 ஒரு பாடல்

ஒரு திரைப்பட விளம்பரம்:

ஒரு கட்டுரை:

தியாகராஜ பாகவதரின் பரிந்துரை:

இன்னொரு விளம்பரம்
இன்னொரு கவிதை:

கே.பி. சுந்தராம்பாளின் கட்டுரை.

தீபாவளி மலர்