ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஜனவரி, 2013

பாடலும் படமும் - 2: திருப்பாவை

அம்பரமே


   ஆண்டாளின் ‘திருப்பாவை’ப் பாடல்களுக்கு வரையப் பெற்ற பழங்காலப் படங்களைத் தேடினேன். ‘திருப்பாவை’ என்ற நூல் கையில் அகப்பட்டது. அதன் முன், பின் அட்டைகளின் படங்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.


      



இந்த நூலில் 30 பாடல்களுக்கும் சித்திரங்கள் உள்ளன. அவற்றிலிருந்து எனக்குப் பிடித்த ஒரு படத்தை இங்கிடுகிறேன். “அம்பரமே” என்று தொடங்கும் 17-ஆம் திருப்பாவை . நந்தகோபன், கிருஷ்ணன், பலராமன், யசோதை இவர்களைத் துயிலெழுப்பும் காட்சிகள் உள்ள அபூர்வமான படம் இது.

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்

அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்

செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

( இந்த நூலை எனக்குத் தந்த ஸ்ரீநிவாச ரங்கஸ்வாமி அவர்களுக்கு நன்றி; ரங்கஸ்வாமி அவர்கள் ‘ஒட்டக்கூத்தரை”ப் பற்றி ஓர் அழகிய , சிறிய ஆய்வு நூல் எழுதியிருக்கிறார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.)




நந்தகோபன், யசோதை, கண்ணன், பலராமன் ஆகிய நால்வரை எழுப்பும் காட்சியைச் சித்திரிக்கும் ஒரு தற்கால ஓவியம்.

[நன்றி: தினமணி]


மேலும் இப்பாடலுக்கு ( நான் பார்த்த, எனக்குக் கிட்டிய )  சில படங்கள் :







[ நன்றி : கேசவ் ] 
[ ஓவியம்: கேசவ் ]


[ ஓவியம்: சித்ரலேகா; நன்றி : அனந்த் ] 

                                     

[ நன்றி: ரவிசந்திரன் ]
                                   

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்