ஞாயிறு, 28 ஜூலை, 2013

'தேவன்': நடந்தது நடந்தபடியே - 3

தென்கயிலையில் ஒரு நாள்
தேவன் நடந்தது நடந்தபடியே’ தான் தேவன்’ எழுதிய முதல் பயணக் கட்டுரைத் தொடர்.


அமரர் ராஜுவின் சித்திரங்களுடன் விகடனில் மூன்று மாதங்களுக்கு வந்த சிறிய தொடர் இது .

திருநீர்மலை, திருப்பதி, திருச்சானூர், காளஹஸ்தி,  திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சி, திருவிடைமருதூர் என்று பல தலங்களைப் பார்த்த அனுபவங்களை நகைச்சுவையுடன் சொல்கிறார் ‘தேவன்’. 


இத்தொடரில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனியாகவே படித்தும் ரசிக்கலாம். கீழ்க்கண்ட அத்தியாயத்தில் திருப்பதி, திருச்சானூர், கீழத்திருப்பதி, காளஹஸ்தி சென்ற அனுபவங்களை விவரிக்கிறார் ‘தேவன்’.
[ நன்றி: விகடன் ]
 
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


துப்பறியும் சாம்பு

தேவன் படைப்புகள்

9 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நகைச்சுவையான பயணக் கட்டுரை. திரு தேவனின் இந்த கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி.

Pas S. Pasupathy சொன்னது…

ரசித்தமைக்கு நன்றி, வெங்கட் நாகராஜ்.

V. Dhivakar சொன்னது…

அழகான விவரங்கள் கொண்ட கட்டுரை.. அந்தக் கால பஸ்ஸில் நீராவி எஞ்ஜின் பயன்படுத்தினார்களா? விவரம் சொல்ல முடியுமா?.. தேவன் திருப்பதி பஸ் எழுதுகையில் அப்படித்தான் இருந்ததாக எனக்குப் படுகிறது..

நன்றி!

அன்புடன்
திவாகர்

Pas S. Pasupathy சொன்னது…

நண்பர் ஹரிகிருஷ்ணன் சொன்ன தகவல்:
என் தாயைப் பெற்ற தகப்பனார் நீடாமங்கலம் ‘ராமநாதன், சென்னை தம்புசெட்டித் தெருவில் குடியிருந்த சமயத்தில் நீராவி சக்தியால் ஓடும் நான்கு பேருந்துகளை வைத்திருந்தார். காலை நான்கு மணிக்கு வந்து, கரியை மூட்டி, ஏதோ ஒரு கைப்பிடியைச் சுழற்றிச் சுழற்றி நீராவியை உண்டு பண்ணுவார்களாம். பாட்டியின் வாய்மொழிக் கதை இது.

Pas S. Pasupathy சொன்னது…


I have heard anecdotes on steam powered buses from my mother. Here are some details from the book "The first wheels roll into India"

In 1903, Samuel John Green of Simpson & Co, Madras, built India’s first steam car and caused a sensation on the roads of the city. The Madras Mail hailed its appearance as the beginning of “a new industry for Madras.” Two years later, Simpson’s built the first steam bus. It ran between Bezwada (Vijayawada) and Masulipatam (Machilipatnam) in what was possibly the first motor bus service in the country.

Soundar

Pas S. Pasupathy சொன்னது…

I remember making a lot of trips on the 'கரிவண்டி' which is what the coal/steam-powered bus was called by the locals in places like periyakulam, madhurai, nilakkkottai, palani, kodaikkanal etc . The cleaner boy or the conductor used to start turning a handle on the side of the bus an hour or more before the bus starts and the smell of burnt coal will fill the air. The advent of the பெட்ரோல் வண்டி' in later years was a big event.

ananth

Pas S. Pasupathy சொன்னது…

கரியால் ஓடும் பஸ்!
புஷ்பா தங்கதுரை

யுத்த காலத்தில் டி.வி.எஸ். நிறுவனத்தார் பெட்ரோல் கிடைக்காததால் கரி வாயு மூலம் பஸ்களை ஓட்டினார்கள். இதற்கான நாலடி உயர கரி வாயு உண்டாக்கும் பிளான்ட் பஸ்ஸின் பின்பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பஸ் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக அதில் கரியைப் (நிலக்கரி அல்ல) போட்டு அதைக் கொளுத்திவிடுவார்கள். ஒவ்வொரு கரித்துண்டும் கங்குகளாக மாறுவதற்கு அங்கே வேலை செய்த பிள்ளைகள் தான் அந்த எந்திர அமைப்பின் பின்னால் உள்ள இயந்திரக் காற்றாலையை கையால் சுற்றிச் சுற்றிக் கரி வாயு உண்டாக்குவார்கள்.

இந்த பஸ்ஸின் வேகம் பெட்ரோல் வண்டியின் வேகம் போல் இருக்காது. இந்த டவுன் பஸ் ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

From:
http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article998993.ece

[ நன்றி: அனந்த் ]

V. Dhivakar சொன்னது…

Excellent information, Thanks lot!
Dhivakar

V. Dhivakar சொன்னது…

http://pazhayathu.blogspot.in/2009/09/slow-and-difficult-bus-travels-of-1950.html
This was very informative blog on steam gas buses.

கருத்துரையிடுக