கோபுலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோபுலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 அக்டோபர், 2022

2250. பாடலும் படமும் - 149

அலைகடல் 

கல்கி+கோபுலு



'பொன்னியின் செல்வன்' நாவலில் வந்த பிரபலமான கவிதை. கோபுலுவின் வண்ணத் தூரிகையில் .



[ நன்றி : கல்கி ]


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 25 நவம்பர், 2021

1978. மணியம் - 1

சித்திரம்+சரித்திரம் = மணியம்

கோபுலு


 

அக்டோபர் 6, 1968 -கல்கி இதழ் அச்சாகிக் கொண்டிருக்கும் போதே மணியம் ( டி.வி. சுப்பிரமணியம் ) ) அவர்கள் மறைந்த செய்தி  கிட்டுகிறது.  கல்கி இதழ் உடனே ஒரு குறுஞ்செய்தி வெளியிடுகிறது.


அடுத்த  இதழில்  'கல்கி'யில் வந்த அஞ்சலி இதோ.


அப்போது 'தினமணி கதிர்' ஆசிரியராக இருந்த 'சாவி' கேட்டுக் கொண்டதற்கிணங்க ஓவியப் பிதாமகர் 'கோபுலு' தினமணி கதிரில்  மணியம் பற்றி எழுதிய கட்டுரை  இதோ கீழே. 

( நான் பல நாள்களாகத் தேடிக் கொண்டிருந்த கட்டுரை இது. மணியம் செல்வன் அமெரிக்காவிற்கு வந்திருந்தபோது, நான் இதைப் பற்றி  முனைவர் நா.கணேசனிடம் சொல்ல, அவர் கேட்டுக் கொண்டதின் பிறகு  மணியம் செல்வன் இந்தியா சென்றபின் அனுப்பியது இது . )


              
[ மணியம், டைரக்டர் எல்லிஸ் டங்கன், கல்கி ] 


[ நன்றி: கல்கி, மணியம் செல்வன், நா.கணேசன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

மணியம்: பசுபதிவுகள்

World of Artist Maniam | Illustrator of Ponniyin Selvan Paintings | 'Kalki' Maniam

Characters of Ponniyin Selvan | Kundavai | Vandiyathevan | Paintings | Artist Maniam | Author Kalki  

llustrated Life of Artist Maniam | Sivagamiyin Sabatham | Ponniyin Selvan | Partiban Kanavu  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 8 ஜூன், 2021

1885. தேவன்: துப்பறியும் சாம்பு - 13

தோல்வியே வெற்றி!

தேவன்+கோபுலு



ஆகஸ்ட் 30, 1942-இல்  ’ஆனந்த விகட’னில் ராஜுவின் ஓவியங்களுடன் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு  சிறுகதைத் தொடரில் இது 6-ஆவது கதை. 

தேவன் 57-இல் மறைந்தபின்,   கோபுலுவின் கை வண்ணத்தில் 1958-இல் விகடனில் சித்திரத் தொடராய் வந்தது. நூலாய் வரவில்லை.









[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


[ நன்றி : நண்பர் ‘ரா’ ; விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:


 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it   will deliver my blog-updates to your e-mail regularly. 
If you are already a Follower of my blog , thanks for reading! 

வியாழன், 29 ஏப்ரல், 2021

1858. கோபுலு - 8

ஜீவனைக் கைப்பற்றிய தூரிகை!

சீதா ரவி 

[ வடிவாக்கம்: மணியம் செல்வன் ]


29 ஏப்ரல். கோபுலு அவர்களின் நினைவு தினம். அவரைச் சந்தித்த நினைவுகளும், தொலைபேசி மூலம் பேசியதும் பசுமையாக உள்ளன. என்றும் இருக்கும். 

2010-இல் அவரைச் சந்தித்தபோது, அவரிடம் சமர்ப்பித்த வெண்பா:

நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும்,

ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன்

சோபிக்கும் சித்திரமும் தோமிலா ஹாஸ்யமிட்ட

கோபுலு ஓவியர் கோ 

வாழ்க அவர் புகழ்!

அவர் மறைவுக்குப் பின் கல்கியில் வந்த அஞ்சலி கீழே. 



[ நன்றி : கல்கி, அமுதசுரபி ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கோபுலு

வியாழன், 11 ஜூலை, 2019

1322. தேவன்: துப்பறியும் சாம்பு - 12

மைசூர் யானை
தேவன்+கோபுலு


ஆகஸ்ட் 30, 1942-இல்  ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு  சிறுகதைத் தொடரில் இது 5-ஆவது கதை.  கோபுலுவின் கை வண்ணத்தில் 1958-இல் விகடனில் வந்த சித்திரத் தொடரிலிருந்து.







[ நன்றி : நண்பர் ‘ரா’ ; விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சனி, 23 பிப்ரவரி, 2019

1234. கோபுலு - 7

அஃறிணை அஹஹா! -1









 [ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கோபுலு

சனி, 8 செப்டம்பர், 2018

1152. பாடலும் படமும் - 46

இராமாயணம் - 18
யுத்த காண்டம், மீட்சிப் படலம்

[ ஓவியம்: கோபுலு ]

கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை, 

பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை 

தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை, 

அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். 


[ அத் தலைவனும் - அந்த தலைமையான நாயகனாகிய இராமனும்;
கற்பினுக்கு அரசினை- கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாக 
உள்ளவளை; 
பெண்மைக் காப்பினை- பெண்மைக் குணங்களுக்கு வாழ்விடமாக உள்ளவளை; 
பொற்பினுக்கு அழகினை- அழகிற்கு அழகாக விளங்குகின்ற பிராட்டியை; புகழின் வாழ்க்கையை- புகழை இவ்வுலகில் வாழும்படி நிலை நிறுத்திய தேவியை; 
தன் பிரிந்து அருள்புரி தருமம் போலியை - தனி நாயகனாகிய
தன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும் தருமம் போன்ற சீதையை; 
அற்பின்- அன்பினால்; 
அமைய நோக்கினான் - நன்றாகப் பார்த்தான்.]

 மர்ரே ராஜம் ‘கம்பராமாயணம்’ நூல்களின் அட்டைகளில் வந்த 18 படங்களைக் கொண்ட இந்தத் தொடர் இத்துடன் நிறைவேறுகிறது.) 

[ பொருத்தமான பாடல்களுக்கு நன்றி: அமுதசுரபி தீபாவளி 
மலர் 2004

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

1149. பாடலும் படமும் - 45

இராமாயணம் - 17
யுத்த காண்டம், வேல் ஏற்ற படலம்


[ ஓவியம்: கோபுலு ]

இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி,
கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ?


[ இலக்குவற்கு   முன்  வீடணன் புகும் - இலக்குவனுக்கு
முன்னர் வீடணன் செல்வான்; 
இருவரையும் விலக்கி அங்கதன் மேற்செலும் - அவ்விருவரையும்  விலக்கி  விட்டு  வாலி மகன் அங்கதன்   முன்  புகுவான்;  
அவனையும்  விலக்கி  வானரக் காவலன் கலக்கும்- அங்கதனை விலக்கிவிட்டு வானரர் அரசாம் சுக்கிரீவன்  முந்துவான்;  
அனுமன் முன்  கடுகும்  - அனுமன் விரைந்து செல்வான்; 
அலக்கண் அன்னதை  -   அப்படிப்பட்ட துன்பத்தை; 
இன்னது என்று உரை செயல் ஆமோ- இத்தகையது என்று கூற முடியுமா? ]

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

1146, பாடலும் படமும் - 44

இராமாயணம் - 16
யுத்த காண்டம், இராவணன் சோகப் படலம்


[ ஓவியம்: கோபுலு ]


'சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம்  மேவி,

நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி  நீரால்,

எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி, 

உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?'

[ சினத்தொடும் கொற்றம் முற்றி-  சினத்தோடு நின்று
வெற்றியை முழுமையாக எய்தி; 
இந்திரன் செல்வம் மேவி இந்திரனுடைய செல்வத்தை அடைந்து; 
நினைத்தது முடித்து நின்றேன் - நினைத்ததைச்  செய்து  முடித்து  நின்ற யான்;
நேரிழை   ஒருத்தி   நீரால் -  (இப்போது)  பொருந்திய அணிகலன்களை  அணிந்த  (சீதை  என்கின்ற)  ஒருத்தியின் காரணமாக,  
( அந்நிலையிழந்து); 
எனக்கு  நீ  செய்யத்தக்க கடன் எலாம் - எனக்கு நீ செய்யத் தக்க இறுதிக் கடன்களை எல்லாம்;  
ஏங்கி  ஏங்கி  உனக்கு நான் செய்வதானேன்  -  வருந்தி  வருந்தி  உனக்கு யான்  செய்யும் நிலைமையை அடைந்தேன்;  
என்னின்  யார்  உலகத்து   உள்ளார்?- என்னைவிட இழிந்தவர்கள் இவ்வுலகத்து யாருளர்?]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

1141. பாடலும் படமும் - 43

இராமாயணம் - 15
யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம்


[ ஓவியம் : கோபுலு ]

வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ
நின்று இக் கடை தாழுதல் நீதியதோ?
சென்று, இக்கடி வேள்வி சிதைத்திலையேல்,
என்று, இக் கடல் வெல்குதும் யாம்?’ எனலும்,

[ வீடணன் வென்றிச் சிலை வீரனை - வீடணன், வெற்றி மிக்க
வில்வீரனாகிய  இலக்குவனை  (நோக்கி); 
நீ இக்கடை நின்று தாழுதல் நீதியதோ? - நீ இவ்விடத்து (இ்ந்திரசித்தன் வேள்வியைச்  சிதைக்காது) நின்று  காலந்தாழ்த்துதல்  முறையாகுமா? 
இக்கடி  வேள்வி  சென்று சிதைத்திலையேல்  -  இந்தக்  காவல் மிக்க வேள்வியை  மேற்சென்று சிதைத்து   அழிக்காமல்   விடுவாயாயின்;   
இக்கடல்   யாம்  என்று வெல்லதும்?  எனலும்  -  (அரக்கர்  சேனையாகிய)  இக்கடலை நாம் எக்காலத்தில் வெல்ல வல்லோம்? எனக் கூறிய அளவில்.]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

1137. பாடலும் படமும் - 42

இராமாயணம் - 14
யுத்த காண்டம், நாகபாசப் படலம்


[ ஓவியம்: கோபுலு ]

உழைக்கும்;   வெய்து   உயிர்க்கும்;   ஆவி   உருகும்;
                                  போய் உணர்வு சோரும்;
இழைக்குவது அறிதல் தேற்றான், ‘இலக்குவா! 
                                  இலக்குவா!’ என்று
அழைக்கும்;  தன்  கையை  வாயின்,  மூக்கின்  வைத்து
                                  அயர்க்கும்; ‘ஐயா!
பிழைத்தியோ!’ என்னும்-மெய்யே பிறந்தேயும் 
                                   பிறந்திலாதான்

[ மெய்யே     -  உண்மையாக; 
பிறந்தேயும்  பிறந்திலாதான்  - 
பிறந்திருந்தும்    வினை   வசத்தால்    பிறவாதவனாகிய    இராமன்;
உழைக்கும்  -  வருத்தப்படுவான்; 
வெய்து உயிர்க்கும் - பெரு மூச்சு விடுவான்;  
ஆவி  உருகும்  -  உயிர் உருகுவான்;  
உணர்வு போய் சோரும் -  அறிவு   நீங்கிச்  சோர்வான்;   
இழைக்குவது   அறிதல் தேற்றான் -  செய்வது  இன்னது  என்று  அறிந்து  தெளியாதவனாய்;
இலக்குவா,  இலக்குவா   என்று    அழைக்கும்  -  இலக்குவனே,
இலக்குவனே என்று பலமுறை  அழைப்பான்;  
தன் கையை  மூக்கின் வைத்து - (தனது) கையை (இலக்குவனது) மூக்கின் மேல் வைத்து (மூச்சு உளதா) (என்று பார்த்து); 
அயர்க்கும்  -  வருந்துவான்;  
ஐயா - ஐயா;
பிழைத்தியோ என்னும் - (நீ) பிழைப்பாயோ என்று கூறுவான்.]

  
தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

1133. பாடலும் படமும் - 41

இராமாயணம் - 13
யுத்த காண்டம், முதற்போர்புரி படலம்


[ ஓவியம்: கோபுலு ]

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

[ஆள்  ஐயா-  அரக்கரை  ஆள்கின்ற  ஐயா; 
உனக்கு அமைந்தன - உனக்குத்  துணையாக அமைந்திருந்த படைகள்
அனைத்தும்; 
மாருதம் அறைந்த  பூளை ஆயின கண்டனை-  பெருங்காற்றினால்  தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப் போல சிதைந்து  போயினமையைக் கண்டாய்;  
இன்று போய் நாளை போர்க்கு வா- இன்று உன் இலங்கையரண்மனைக்குச் சென்று, (மேலும்    போர்புரிய  விரும்பினால்)   போர்க்கு   நாளைக்கு வருவாயாக; 
என- என்று; 
நல்கினன் -(இராவணனுக்கு) அருள் புரிந்து   விடுத்தான்;  (யார்  என்னில்) நாகு இளங்கமுகின்மிகவும் இளைய கமுக மரத்தின்மீது; 
வாளை தாவுறும் கோசல நாடுடை  வள்ளல் - வாளை  மீன்கள்  தாவிப் பாயும் (நிலம், நீர்வளம்  மிக்க)   கோசல   நாட்டுக்கு  உரிய  வள்ளலாகிய
இராமபிரான்.]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 29 ஜூலை, 2018

1129. பாடலும் படமும் - 40

இராமாயணம் - 12
யுத்த காண்டம், வருணனை வழிவேண்டு படலம்


[ ஓவியம்: கோபுலு ]

அண்ட மூலத்துக்கு அப்பால் 
  ஆழியும் கொதித்தது; ஏழு

தெண் திரைக் கடலின் செய்கை 
  செப்பி என்? தேவன் சென்னிப்

பண்டை நாள் இருந்த கங்கை 
  நங்கையும் பதைத்தாள்; பார்ப்பான்

குண்டிகை இருந்த நீரும் 
  குளுகுளு கொதித்தது அன்றே.

[ அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும்  கொதித்தது-
அண்டத்தின்   அடிப்பகுதியில்  உள்ள  பெரும் புறக்  கடலும்
கொதித்தது (என்றால்); 
ஏழு தெண்திரைக்  கடலின் செய்கை செப்பிஎன்-  உலகத்திலுள்ள   தெளிந்த   அலைகளையுடைய ஏழுகடல்களின்   செய்கையைச்   சொல்ல என்ன இருக்கிறது?;
தேவன்   சென்னிப்  பண்டை  நாள்   இருந்த  கங்கை
நங்கையும்  பதைத்தாள்-  சிவபிரானுடைய சென்னியில் வெகு
காலமாக வீற்றிருந்த கங்கையாகிய பெண்ணும்  பதைபதைத்தாள்;
பார்ப்பான் குண்டிகை இருந்த நீரும்- அந்தணர் தலைவனான பிரமனது
கமண்டலத்தில் இருந்த  தண்ணீரும்; 
குளு  குளு கொதித்தது அன்றே - குளு குளு வென ஒலித்துக் கொதிக்கலாயிற்று. ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 22 ஜூலை, 2018

1124. பாடலும் படமும் - 39

இராமாயணம் - 11
யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம்



ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து, உவகை கூர,

'ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந் நாள்

வாழும் நாள், அன்றுகாறும், வாள் எயிற்று அரக்கர் வைகும்

தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே; தந்தேன்' என்றான்.


[ ஆழியான் அவனை நோக்கி- ஆணையாகிய   சக்கரத்தை உடைய   இராமபிரான்  வீடணனைப் பார்த்து; 
அருள் சுரந்துஉள்ளத்திலே கருணை   பொங்க; 
உவகை கூறி - மகிழ்ச்சி மிக; 
ஏழினோடு ஏழாய்   நின்ற உலகும்-   ஏழுடன்   ஏழாகிய பதினான்கு  உலகங்களும்;   
என் பெயரும் எந்நாள் வாழும் நாள் அன்று   காறும் -   எனது  பெயரும் எத்தனை காலம் இருக்குமோ அக்காலம்   வரை;   
வாள்   எயிற்று அரக்கர் வைகும்-   ஒளிபொருந்திய   பற்களை  உடைய அரக்கர்கள் வாழும்; 
தாழ்கடல் இலங்கைச்  செல்வம் - ஆழமான கடல் நடுவே உள்ள   இலங்கையின்   அரசுச்செல்வம்;   
நின்னதே தந்தேன்   என்றான் -   உனக்கே உரிமை உடையதாகக் கொடுத்தேன் என்று கூறினான். ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 15 ஜூலை, 2018

1119. பாடலும் படமும் - 38

இராமாயணம் - 10
சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.




பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து
                             பொங்கி,
மெய்யுறவெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை
                            விட்டான்;
ஐயனுக்கு, அங்கி,முன்னர், அங்கையால் பற்றும்
                            நங்கை
கை எனல் ஆயிற்றுஅன்றே-கை புக்க மணியின்
                            காட்சி !

கைபுக்க மணியின்காட்சி - (இராமபிரான்) கையில்புகுந்த அந்தச் சூடாமணியின் தோற்றம்; 

ஐயனுக்கு அங்கி முன்னர் - அந்த இராமபிரானுக்கு, (திருமணக் காலத்தில்) அக்கினி முன்னிலையில்;

அம்கையால் பற்றும் நங்கை கைஎனல் ஆயிற்று - அழகிய கையினால் பிடிக்கப்பட்ட பிராட்டியின் கையைப் போல விளங்கியது; (ஆதலின்)  

பயந்த காமம் பைபைய பரிணமித்து உயர்ந்து பொங்கி - (அதனால்) உண்டான ஆசை உணர்ச்சி மெல்ல மெல்ல வளர்ந்து மேன்மேல் எழுதலால்; 

மெய் உற வெதும்பி - உடல் நன்றாய் வெப்பமுற்று; 

உள்ளம் மெலிவுறும் நிலையை விட்டான் - மனம் தளர்ச்சியடைகின்ற தன்மையை நீக்கினான் ]


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

வெள்ளி, 13 ஜூலை, 2018

1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11

தேடி வருகிறது கௌரவம்!
தேவன் + கோபுலு




ஆகஸ்ட் 30, 1942-இல்  ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு  சிறுகதைத் தொடரில் இது 4-ஆவது கதை.  கோபுலுவின் கை வண்ணத்தில் 1958-இல் விகடனில் வந்த சித்திரத் தொடரிலிருந்து.







[ நன்றி : நண்பர் ‘ரா’ ; விகடன் ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]