புதன், 20 மார்ச், 2019

1253. பாடலும் படமும் - 56

புதன்
கி.வா.ஜகந்நாதன்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


வண்ண ஒவியத்தில் விளங்கும் புதன் பொன்னிறமேனியோடு மஞ்சளாடை புனைந்து, சிங்க வாகனம் ஏறி, வாளும் பரிசையும் கதையும் வரதமும் திருக்கரங்களில் ஏந்தி, அழகு பொலிய வீற்றிருக்கிறான். அவனுடைய கொடியில் சிங்கம் இருக்கிறது. மேருவை வலஞ் செய்யும் குறிப்பைப் பின்னே தோன்றும் அதன் உருவம் தெரிவிக்கிறது.

வலப்புறத்தில் மேலே அதிதேவதையாகிய விஷ்ணு, சங்க சக்ர கதா தாரியாகத் திருமகளுடன் நிற்கிறார். இடப் பக்கத்தில் பிருகு முனிவருடைய அடிச்சுவடு மார்பில் தோன்ற இரண்டு திருக்கரங்களுடன் நாராயணனாகிய பிரத்தியதிதேவதை வீற்றிருக்கிறார்.

கீழே கன்னி யொருத்தியின் உருவமும் ஆணும் பெண்ணுமாகிய இரட்டையுருவமும் கன்னியா ராசிக்கும் மிதுன ராசிக்கும் தலைவன் புதன் என்பதை நினேப்பூட்டுகின்றன. பச்சைப் பசேலென்ற நிலைக்களத்தில் புதன், அறிவின் உருவாகவும் அழகின் உருவாகவும் திகழ்கிறான். சந்திரன் உள்ளங்கவர் அழனாக இருப்பதுபோலவே இவனும் அழகனாகக் காட்சி தருகிறான். சந்திரனுடைய மகன்தானே இவன்? 

புந்திவலி சேரப் புரிவான்பொன் மேனியினான்
சந்திரன்சேய் வாள்பரிசை தாங்குகதை - உந்துகையான் 
வெம்புசிங்க ஊர்தியான் மேனாள் இளைதழுவும் 
அம்புதன்என் றோதும் அவன்.

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

பிருகஸ்பதி

சுக்கிரன்

சனி[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக