வியாழன், 27 ஜூலை, 2017

787. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 5

குமரி முனையில் தமிழ்க் குரல்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைஜூலை 27. கவிமணியின் பிறந்த தினம்.

‘சக்தி’ இதழில் 1948 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ.தொடர்புள்ள பதிவுகள் :

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

786. மௌனி - 1

செம்மங்குடி - தன் ஊர் தேடல்
மௌனி 

ஜூலை 27. மௌனியின் பிறந்த தினம்.

தன் ஊரைப் பற்றி அவர் ‘விகட’னில் 1968-இல் எழுதின கட்டுரை இதோ.


தொடர்புள்ள பதிவுகள்:

மௌனி : தமிழ் விக்கிப்பீடியா

புதன், 26 ஜூலை, 2017

785. பெர்னாட் ஷா - 1

பெர்னார்டு ஷா
‘பாகோ’ 

ஜூலை 26. ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் பிறந்த தினம்.

‘சக்தி’ இதழில் 1946-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.
தொடர்புள்ள பதிவுகள்:

ஜார்ஜ் பெர்னாட் ஷா : தமிழ் விக்கிப்பீடியா

784. மு.இராகவையங்கார் - 1

பெருங்குன்றூர் கிழார்
மு.இராகவையங்கார் 


ஜூலை 26. மு.இராகவையங்காரின் பிறந்த தினம்.

‘சக்தி’யில் 1939-இல் அவர் எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரை.
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:

மு. இராகவையங்கார் : தமிழ் விக்கிப்பீடியா

செவ்வாய், 25 ஜூலை, 2017

783. சங்கீத சங்கதிகள் - 128

பாடலும், ஸ்வரங்களும் - 5
செம்மங்குடி சீனிவாச ஐயர்


ஜூலை 25. செம்மங்குடி சீனிவாச ஐயரின் பிறந்த தினம்.

‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 46-இல் வெளியிட்ட இரு பாடல்களும் , அவற்றின் பொருளும், ஸ்வரங்களும்  இதோ.[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] ]

782. அலெக்சாண்டர் டூமா - 2

சிவப்பு மாளிகை வீரன் ( புதினம் )
மூலம்: டூமா    தமிழாக்கம் : வெ.ராஜகோபாலன் 

அண்மையில் வெளிவந்த இந்தப் புதினத்தைப் பற்றிச் சில விவரங்கள்:[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

முழு நாவலையும்
https://drive.google.com/file/d/0B85HwZpvaWo8dGVTdk9Oc0Z4UVE/view - இல் படிக்கலாம். ( தரவிறக்கமும் செய்து கொள்ளலாம். ) 

தொடர்புள்ள பதிவுகள்:

திங்கள், 24 ஜூலை, 2017

781. அலெக்சாண்டர் டூமா - 1

நடிக ஆசிரியர் டூமாஸ் 
வி.ஆர்.எம். செட்டியார்ஜூலை 24. அலெக்சாண்டர் டூமாவின் பிறந்த தினம்.

அன்றும், இன்றும், என்றும் - நான் ‘டூமா’வின் ரசிகன் !  அவருடைய ‘ Three Musketeers' புதினத்தை படித்தால் ‘கல்கி’யின்  வந்தியத் தேவனிலும், நந்தினியிலும், பழுவேட்டரையரிலும்  ‘டூமா’வின் பாத்திரங்களின் தாக்கம் நன்றாய்த் தெரியும். ( ”அந்தக்” காலத்தில், ‘ Three Musketeers' திரைப்படம் ‘ மூன்று எம்.ஜி.ஆர். வீரர்கள்’ என்ற தமிழ்ப் பெயருடன் திரையரங்கத்தில் வந்தது ! :-)

இப்போது “பொன்னியின் செல்வ”னின் தொடர்ச்சியாய்ப் பல புதினங்கள் வந்துள்ளனவா? டூமாவே தன் “ Three Musketeers" - ஐத் தொடர்ந்து
Twenty Years After,  The Vicomte de Bragelonne, Louise de la Valliere, and The Man in the Iron Mask  என்ற அற்புதமான வரலாற்று நவீனங்களைப் படைத்தார். இவை யாவுமே தற்கால நடையில் தமிழாக்கம் செய்யப் படவேண்டிய புதினங்கள்.  ( “ Three Musketeers" மட்டும் “ மூன்று வீரர்கள்” என்ற பெயரில் 1962-இலும், “நான்கு நண்பர்கள்” என்ற பெயரில் 1957-இலும் மொழிபெயர்க்கப்  பட்டுள்ளது.  )

‘ சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!

தொடர்புள்ள பதிவுகள்:
அலெக்சாண்டர் டூமா : தமிழ் விக்கிப்பீடியா

அலெக்சாண்டர் டூமா

ஞாயிறு, 23 ஜூலை, 2017

780. பால கங்காதர திலகர் -2

நான் கண்ட திலகர்
வினோபாஜி ஜூலை 23. திலகரின் பிறந்த தினம்.

‘கல்கி’யில் வந்த ஒரு கட்டுரை இதோ!
===[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]

[ நன்றி : கல்கி ] 

தொடர்புள்ள பதிவுகள்:

பால கங்காதர திலகர்

சனி, 22 ஜூலை, 2017

779. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் -2

அவன் அமரன் 
மூலம்: தாகூர்      தமிழில்: பாஸ்கரத் தொண்டைமான்


ஜூலை 22. தொ.மு.பாஸ்கரத் தொண்டமானின் பிறந்த தினம்.

=== 


தொடர்புள்ள பதிவுகள்:
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

வெள்ளி, 21 ஜூலை, 2017

778. மாயூரம் வேதநாயகம் பிள்ளை -2

மாயூரம் வேதநாயகம் பிள்ளை 10
ராஜலட்சுமி சிவலிங்கம்


ஜூலை 21. வேதநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு தினம்.
==
தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சிக் கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை (Mayuram Vedanayagam Pillai) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திருச்சி மாவட்டம் குளத்தூரில் (1826) பிறந்தார். தந்தையிடம் கல்வியைத் தொடங்கியவர், தமிழ், ஆங்கிலக் கல்வியை தியாகராச பிள்ளையிடம் பயின்றார். சிறு வயதிலேயே எழுது வதில் ஆர்வமும் ஆற்றலும் கொண்டி ருந்தார். திருமணம், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளில் நகைச்சுவைக் கவிதைகள் எழுதுவார்.


* நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர், பதிவாளராகப் பணியாற்றினார். பின்னர், தரங்கம்பாடியில் முன்சீஃப் பணியில் சேர்ந்தார். மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால், மாயூரம் வேதநாயம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். (பின்னாளில் இவ்வூர் பெயர் மாயவரம் என்று மருவி, தற்போது மயிலாடுதுறை எனப்படுகிறது.)

* மாயவரம் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்த காலகட்டத்தில் தமிழின் முதல் புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நூலைப் படைத்தார். மேலும் 15 நூல்கள் எழுதினார். வீணை வாசிப்பதில் வல்லவர்.


* வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன. தமிழ் கவிதையில் இந்த பாணி ஒரு புதிய உத்தியாக, முதல் முயற்சியாக கருதப்படுகிறது.

* சமகாலத் தமிழ் அறிஞர்களான மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம், சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்.

* 1805 முதல் 1861 வரையிலான நீதிமன்றத் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக வெளியிட்டார். தீர்ப்புகளை முதலில் மொழிபெயர்த்த பெருமைக்கு உரியவர். சட்ட விதிகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் முதலில் வெளியிட்டார்.


* தமிழ் உரைநடையை வளம் பெறச் செய்த முன்னோடிகளில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். இவரது கட்டுரைகள், பெண் கல்வி, தாய்மொழிப் பற்று, கடவுள் பக்தி, நல்லாட்சி, நீதி நெறிகள் என பல அம்சங்களையும் உள்ளடக்கியவை. இவை தமிழில் கட்டுரை இலக்கிய வளர்ச்சிக்கு முன்னோடியாக அமைந்தன.

* பெண் கல்வி குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் உரைநடைச் சிறப்புக்கு சான்றாக விளங்குகின்றன. மாயவரத்தில் பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். இது தமிழகத்தில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் பள்ளி.

* கிறிஸ்தவ வழிபாட்டு பாடல்கள் கிரேக்கம், லத்தீன், ஆங்கில மொழிகளிலேயே இருந்தன. தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழிலேயே உணர்ந்து வழிபட வேண்டும் என விரும்பினார். திருவருள் மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, தேவ தோத்திர மாலை, பெரியநாயகி அம்மைப் பதிகம் போன்ற இலக்கியங்களைப் படைத்தார்.


* தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர், மறுமலர்ச்சிக் கவிஞர், சமூக சீர்திருத்தவாதி எனப் போற்றப்படும் வேதநாயகம் பிள்ளை 63 வயதில் (1889) மறைந்தார்.

[ நன்றி : http://tamil.thehindu.com/ ]
தொடர்புள்ள பதிவுகள்:
மாயூரம் வேதநாயகம் பிள்ளை

வியாழன், 20 ஜூலை, 2017

777. அன்னை சாரதாமணி தேவி -2

அன்னை சாரதாமணி
சுவாமி ருத்ரானந்தா 


ஜூலை 20. அன்னை சாரதாமணி தேவியின் நினைவு தினம்.
[ கட்டுரை ஆசிரியர் ‘கல்கி’யின் சிறுவயது நண்பர் ‘முத்துக்கிருஷ்ணன்’ . பின்னர் மயிலை இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சுவாமி ருத்ரானந்தராக மாறினார்.  ]
தொடர்புள்ள பதிவுகள்:

அன்னை சாரதாமணி தேவி

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்