வெள்ளி, 8 ஏப்ரல், 2016

சங்கீத சங்கதிகள் - 71

டாக்டர் எஸ்.இராமநாதன் - 1

ஏப்ரல் 8.  

சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதனின் பிறந்த நாள். 


இன்று ( 8 ஏப்ரல், 2016)   டொரண்டோவில் 44-ஆவது தியாகராஜர் ஆராதனை இசை விழா தொடங்குவதும், 1973-இல் இங்கு நடந்த முதல் ஆராதனையில் டாக்டர் இராமநாதன் , தன் மகள் கீதா பென்னட்டின்  வீணையுடன்  ஓர் இசைக் கச்சேரி கொடுத்ததை நான் கேட்டேன் என்பதுமான  தற்செயலான நிகழ்ச்சிகள்  எனக்கு இப்பதிவிடுவதில் ஒரு மேலதிகச் சுவையைக் கூட்டுகின்றன !

அவர் நினைவில் மூன்று  தகவல் பத்திகள் இதோ!

[ நன்றி: The Hindu ] 


முதலில் ஒரு சிறிய அறிமுகம்:


டாக்டர் எஸ் இராமநாதன்  ஏப்ரல் 8, 1917-இல் தென்னாற்காடு மாவட்டத்து வளவனூரில் பிறந்தவர்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை பயின்று சங்கீத பூஷணம்' பட்டம் பெற்றார். 1938 முதல் வாய்ப்பாட்டு, வீணை இசையாசிரியராகவே பணிபுரிந்தார், 1960-இல் கர்நாடக இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

1964-65, 1970-72 ஆண்டுகளில் அமெரிக்காவிலுள்ள வெஸ்லியன், கோல்கேட், இல்லினாய் வாஷிங்டன் பல்கலைக் கழகங்களில் இசைப் பேராசிரியராயிருந்தார். வெஸ்லியன் பல்கலைக் கழகத்தில் சிலப்பதிகாரத்தில் இசை பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி 'டாக்டர்பட்டம் பெற்றார், 1968-69, 1973-77 இல் மதுரைப் பல்கலைக் கழகத்துக்குச் சத்குரு சங்கீத வித்தியாலயத்தின் முதல்வராய் இருந்தார்

1968-இல் மதுரை சத்குரு ஸ்மாஜம் 'மதுரகலாப் பிரவீணர்' என்ற பட்டத்தையும், 1981-இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைமாமணி' என்ற பட்டத்தையும், தமிழிசைச்சங்கம் இசைப் பேரறிஞர்' என்ற பட்டத்தையும் அளித்து கெளரவித்தன. இவர் ஸம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லுநர், பல இசை நூல்களை ஆராய்ந்து சுர தாளங்களோடு பதிப்பித்துள்ளார். 1985-இல் சங்கீத கலாநிதி பட்டம் பெற்ற இவர் 1988 மார்ச் 19-இல் காலமானார்.


இரண்டாவதாக ‘சுப்புடு’ 84-இல் எழுதிய ஒரு விமர்சனம்:
கடைசியில், ‘சுப்புடு’ ‘குங்குமம்’ இதழில் எழுதிய ஒரு சிறு கட்டுரை:
தொடர்புள்ள பதிவுகள்:

சுப்புடு2 கருத்துகள்:

மு.இளங்கோவன் சொன்னது…

இசைமேதை அவர்களை நினைவுகூர்ந்தமைக்கு நன்றியன்.

Partha Sarathy சொன்னது…

Dear Sir,
A second thanks in is order for Dr S. Ramanathan...

கருத்துரையிடுக