அசடு வழிந்தது !
ஸ்ரீ சுத்தானந்த பாரதி
வ.வே.சு. ஐயரின் வாழ்வில் புதுவையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்.
சுத்தானந்த பாரதியார் கல்கியில் 45/46 -இல் ( இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்) எழுதிய ஓர் அரிய கட்டுரை. பலர் படித்திருக்க மாட்டார்கள் என்பதால் இங்கே இடுகிறேன்.
====
[ நன்றி: கல்கி ]
தொடர்புள்ள பதிவுகள்:
சுத்தானந்த பாரதியார்
வ.வே.சு.ஐயர்
ஸ்ரீ சுத்தானந்த பாரதி
சுத்தானந்த பாரதியார் கல்கியில் 45/46 -இல் ( இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்) எழுதிய ஓர் அரிய கட்டுரை. பலர் படித்திருக்க மாட்டார்கள் என்பதால் இங்கே இடுகிறேன்.
====
ஒருநாள் காலையில் வேலைக்காரி
பருவதம் கொல்லைக் கிணற்றில் தண்ணீர் இறைத்தாள். வாளியில் ஒரு பாத்திரம்.
வந்தது அதைக் கண்டு பயந்து, “ அம்மா !. சூனியம் !! சூனியம்!!” என்று கதறினாள்,
பாக்கியலக்ஷ்மியம்மாள் ஐயரை அழைத்துக் கொண்டு வந்தாள் ஐயர் பாத்திரத்தை உற்றுக் கவனித்தார். முக்திரை வைத்திருந்தது. அடிப்புறம் பார்த்தார். “சரி, அந்த ஆசாமிகள் வேலை! “ என்று உடனே பாரதியார்
முதலிய நண்பர்களை அழைத்து வந்து
பாத்திரத்தைத் திறந்து பார்த்தார். அடடா! எப்படிப்பட்ட சரக்குகளை
மகானுபாவர்கள் மிகவும் சிரமப்பட்டுச் சேர்த்திருக்கிறார்கள் ! காளியின் படம்; அதற்கு ஒருதலை பலி தருவதாக பாவனை. ஒரு
அறிக்கை: அதில் புரட்சி வரிகள். அதில் புதுவை தேச பக்தர்கள் ஜாப்தா, ஒரு கத்தி. இவ்வளவும் அந்தப் பாத்திரத்தில் துருப்பிடித்துக். கொண்டிருந்தன.
வ.வே.சு.ஐயர் |
ஐயர் அப்படியே பாத்திரத்தை மறைத்துக் கொண்டு பிரெஞ்சு சர்க்கரரிடம் போனார், பருவதம், ஐயர் திரும்புகிற வரையில் வெளியே தலை நீட்டவில்லை. ஐயர் அழகாகப் பிரெஞ்சு பேசி, “ஏதோ நாங்கள் குடியரசுப் பிரெஞ்சு ராஜ்ஜியத்தில் அமைதியாக இருக்கிறோம்: என்றால், எங்களை இப்படி யெல்லாம்
செய்கிறார்களே? இதிலிருப்பதெல்லாம் சுத்தப் பொய் இதற்கும் எங்களுக்கும்
சம்பந்தமே இல்லை. கிரிமினல் சட்டத்தின் இத்தனாவது செக்க்ஷன்படி!
“ என்றெல்லாம் வெளுத்து வாங்கினார். அதிகாரி, “நீங்கள் தைரியுமாய் இருங்கள்.
நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் “ என்று சமாதானம் சொல்லி
அனுப்பினார். பாத்திரம் சர்க்காரிடம் சேர்ந்தது ஒற்றருக்குத் தெரியாது.
ஒரு மணி நேரத்திற்கெல்லாம் தடதடவென்று போலீஸார் புகுந்தனர். " வீட்டைச் சோதனை போடுவோம்
“ என்றனர். “ ஆஹா! தாராளமாகப் போடுங்கள்"
என்றார் ஐயர் விநயமாக மல்லாந்திருந்த சட்டி
பானைகளெல்லாம் குப்புறக் கவிழ்ந்தன. இரகசியப்
புலிகள் புத்தகப் பெட்டியை உதறி உதறிப் பார்த்தனர். ஒற்றர் எலிப் பொந்து எறும்புப் பொந்துகளை யெல்லாம். கண்ணில் திரிவிட்டுப்
பார்த்தனர். மண் கூட அகப்படவில்லை. பருவதம் அவ்வளவு சுத்தமாக வீட்டைக் கூட்டியிருந்தாள்
! “ ஐயரே! நீர் புரட்சிச் சாமான்களைக் கிணற்றில்
ஒளித்து வைத்திருப்பீர். கிணற்றை இறைத்துப் பார்ப்போம்
“ என்றனர். “ ஆஹா! சந்தோஷம். எங்களுக்குத் தூர்வை எடுக்கப் பணம் கிடையாது. அந்த உதவி
செய்தால் நல்லதுதான் ’ என்றார் ஐயர்.
ஆசாமிகள் கிணற்றை இறைக்கத் தொடங்கினர்.
இறைத்தனர். " பள பளான்னு
தெரியுதா' என்றார் ஒருவர். “ ஒன்றுமில்லேங்கிறேன் “ என்றான் மற்றொருவன். இதற்குள்
இன்னொருவன் நுழைந்தான். “அட, வீண் வேலை! நிறுத்தடா!
“ என்றான். ஒற்றர் முகத்தில் அசடு வழிந்தது. நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
சிரிக்காதவர் ஐயர் ஒருவர் மட்டும்தான்! ஏன் சிரிக்கவில்லை
"ஐயோ! நமது தேசத்திலே இப்படி அசடுகளும் உண்டா? “ என்றுதான்.
=============
போனஸ் : கட்டுரையின் அடியில் வந்த ஒரு துணுக்கு :
[ நன்றி: கல்கி ]
தொடர்புள்ள பதிவுகள்:
சுத்தானந்த பாரதியார்
வ.வே.சு.ஐயர்
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக