வியாழன், 31 ஜனவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 14

தியாகராஜ ஆராதனைகள்: 40-களில்

இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் சமயம். 1945 என்று நினைக்கிறேன். அந்தக் கால “விகடனில்” ஆசிரியர் “தேவன்”  ”யுத்த டயரி” என்று வாரா வாரம் ஒரு கட்டுரை எழுதுவார்.

[ தேவனின் “யுத்த டயரி”யைப் பற்றி மிகச் சிறப்பாக அசோகமித்திரன் பேசியிருக்கிறார்.
 ( http://www.hindu.com/fr/2008/09/12/stories/2008091251250300.htm ) ]

அத்தகைய “யுத்த டயரி” ஒன்றின் கடைசிப் பக்கம் என்று நினைக்கிறேன். அதைக் கீழே கொடுக்கிறேன். அதிலிருந்து, வரலாறு தெரிந்த அன்பர்கள், இது நடந்தது எந்த ஆண்டு என்று சரியாகச் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.


இதற்குப் பின்பக்கத்தில்  1945- ஆம் ஆண்டு திருவையாறு தியாகராஜ ஆராதனையை விவரிக்கும் “விகட”னின்  “ஆடல் பாடல்” கட்டுரை  தொடங்குகிறது.  எப்படி இந்தச் சூழ்நிலை? “சாந்தமு லேகா” என்று பாடிய தியாகராஜரைப் போற்ற நல்ல சமயம் தானே?  அந்த முழுக் கட்டுரையைக் கீழே கொடுக்கிறேன். இனிமேல் என் எழுத்துக்கு என்ன வேலை?


இன்னொரு தியாகராஜ ஆராதனை. 1946-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். விழாவைத் திறந்து வைக்க அழைக்கப் பட்டிருந்த ஸர் எஸ்.வி.ராமமூர்த்தி வரமுடியாமல் போனாலும், அவருடைய பிரசங்கத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரன் ஐ.சி.எஸ் படித்து, விழாவைத் திறந்து வைக்கிறார். அந்த ஆராதனையைப் பற்றி விகடனில் வந்த ஒரு பக்கம் இதோ! பெங்களூர் நாகரத்தினம் அம்மையார் நாமாவளி பாட, ஸ்ரீ ராமுடு பாகவதர் அர்ச்சனை செய்யும் படத்திற்காக இதை வெளியிடுகிறேன்.  


( மேலே உள்ள கட்டுரைகள் கொடுக்கும் தகவல்களின் ஆதாரத்தில், நான் சொல்லும் ஆண்டுகள் சரியா என்று இசை வரலாற்று வல்லுநர்கள் அறிவுறுத்துவர் என்று நம்புகிறேன்.)  


புதன், 30 ஜனவரி, 2013

குழப்பக் கோட்பாடு: கவிதை

குழப்பக் கோட்பாடு
பசுபதி


பட்டிக்காட்டில் பறந்திடுமோர்
பட்டுப்பூச்சி சிறகடித்தால்
பட்டணத்தில் பருவமழை பலக்கும்.

காலவெளியின் ஞாலத்தில்
அணுவொன்றின் அக்குளில்
ஒரு 'கிசுகிசு ';
வேறிடத்தில் வேறோர் துகள்
விலாப் புடைக்க சிரிக்கும் !
குழப்பக் கோமான் குதூகலிக்கும்
விஞ்ஞான விளையாட்டு !
அறிவியலின் புதுப்பாட்டு!
குழப்பக் கோட்பாடு!

காலவெளியைச்
சொடுக்கியது ஒரு சலனம்.
மயிலையில் ஒரு ஜனனம்.
வாயசைத்தது வள்ளுவப் பூச்சி.
'ஒன்றாக நல்லது கொல்லாமை
. . . . .
பொய்யாமை நன்று. '

அதிர்வுகள் அமுங்கின;
ஆண்டுகள் கழிந்தன.
குஜராத்தில் ஓர் அக்டோபர்.
கருவுற்ற ஒரு கார்மேகம்
சிலிர்த்தது; சிரித்தது.
அஹிம்சை மின்னியது; வாய்மை இடித்தது.
பெய்தது மோகனதாஸ் மழை.
குளிர்ந்தது பாரத மண்.

மீண்டும் வருமா வண்ணப் பூச்சி ?

******
குழப்பக் கோட்பாடு = Theory of Chaos

[ 'திண்ணை’ இதழில் 2001-இல் வெளியான கவிதை]

தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 25 ஜனவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 13

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி -1‘கல்கி’ பத்திரிகைக்கும் , எம்.எஸ்ஸுக்கும் உள்ள விசேஷ தொடர்பு யாவரும் அறிந்த ஒன்று.

எம்.எஸ்ஸின் ஓர் இசைத்தட்டைப் பற்றியும், அவர் செய்த நிதியுதவிக் கச்சேரிகள் இரண்டைப் பற்றியும் 40-களில் ’கல்கி’யில் வந்த மூன்று கட்டுரைகளைக் கீழே பார்க்கலாம்.


( “யாரோ இவர் யாரோ” என்ற பாடலைப் பாடியவர் சீதையா, ராமரா என்ற குழப்பம் இன்றும் இருக்கிறது! அண்மையில் நான் பார்த்த ஒரு நடன நிகழ்ச்சியில் சீதை பாடியதாகக் காட்டியது நினைவிற்கு வருகிறது!)
( பாரதியார் ஞாபகார்த்த நிதிக்காகப் பாடிய அக் கச்சேரியில் எம்.எஸ் எந்தப் பாடல்களைப் பாடியிருப்பாரோ என்று கேட்கத் தோன்றுகிறது...)

[ கச்சேரியின் முன் வரிசையில் யார் யார் ..கவனித்தீர்களா? சி.பி., ராஜாஜி, ஸ்ரீநிவாச சாஸ்திரி, டி.கே.சி,.... அடேயப்பா!] [நன்றி: கல்கி]

தொடர்புள்ள பதிவுகள்:

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

சங்கீத சங்கதிகள்

சுத்தானந்த பாரதியார்

வியாழன், 24 ஜனவரி, 2013

ஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை - 4

கடைசிப் பிரச்சினை - 4முந்தைய பகுதிகள்

பகுதி -1  ; பகுதி -2  ;  பகுதி -3

இந்தக் கதையின் இந்தக் கடைசிப் பகுதியைப் படித்தபின்,  மூலக் கதை “ஸ்ட்ராண்ட்’ இதழில் 1893-இல் வெளியானபோது,  ஷெர்லக் ஹோம்ஸின் விசிறிகளான ஆயிரக் கணக்கான வாசகர்களின் மனங்கள் எப்படித் துடித்துப் போயிருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

(தொடர்ச்சி)


( முற்றும்) 

( பிரச்சினை தீர்ந்தது ....  ஷெர்லக் ஹோம்ஸ் ஒழிந்தார் என்றுதான் டாயிலும் நினைத்தார்..ஆனால் வாசகர்கள் அவரை விட்டார்களா?  மீண்டும் ஷெர்லக்கின் மறுபிறப்பை அடுத்த கதையில் விரைவில் பார்க்கலாம்! )

தொடர்புள்ள பதிவு

மற்ற ஆனந்தசிங் கதைகள்

புதன், 23 ஜனவரி, 2013

ஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -3

கடைசிப் பிரச்சினை -3
முந்தைய பகுதிகள்


பகுதி -1  ;  பகுதி -2

இந்தப் பகுதியில் ஆனந்தசிங்கின் சகோதரர் மோகனசிங்கைப் பற்றிப் படிப்பீர்கள். மூலத்தில் அவர் பெயர் ‘மைக்ராஃப்ட் ஹோம்ஸ். இவரும் ஒரு சுவையான பாத்திரமே. மற்ற சில ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளிலும் இவர் அங்கங்கே வருவார்.

(தொடர்ச்சி)
(தொடரும்)

தொடர்புள்ள பதிவுகள்:
ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’

செவ்வாய், 22 ஜனவரி, 2013

ஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -2

கடைசிப் பிரச்சினை -2முந்தைய பகுதிகள்:

பகுதி -1

”துஷ்ட சிகாமணிகளாகிய குற்றவாளிகளின் சக்கரவர்த்தி “ என்று ஆரணியாரால் சித்திரிக்கப்பட்ட ஏமநாதனைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறவேண்டும்.   பேராசிரியர் மொரயார்டி ஷெர்லக் ஹோம்ஸின் “விரோதி நம்பர் ஒன்” என்று அறியப்பட்டவர்.  ஷெர்லக்கின் “முடிவை” மனத்தில் வைத்தே கானன் டாயில் இவரை உருவாக்கி இருக்கிறார் என்பது தெளிவு; இருப்பினும் மேலும் சில ஷெர்லக் கதைகளிலும் இவர் பெயர் அடிபடுகிறது.

(தொடர்ச்சி)(தொடரும்)

தொடர்புள்ள பதிவுகள்:
ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’


திங்கள், 21 ஜனவரி, 2013

ஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -1

கடைசிப் பிரச்சினை -1
1927-இல் ’கானன் டாயில்’ தனக்கு மிகவும் பிடித்த 12 ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளைப் பட்டியலிட்டார். அவற்றுள் நான்காம் கதை :
‘கடைசிப் பிரச்சினை’ ( The Final Problem) .  ஆம், நினைவிற்கு வருகிறதா?
இதில்தான் டாயில் ஹோம்ஸைக் கொலை செய்கிறார்! இனிமேல் ஹோம்ஸ் கதைகளை எழுதவேண்டாம் என்று முடிவு செய்த டாயில் எழுதிய கதை இது!

ஆரணி குப்புசாமி முதலியார் எப்படி இக்கதையைத் தழுவித் தன் கதையைப் படைத்தார் என்று பார்க்கலாமா? இது ஆரணியாரின் ‘ஆனந்தஸிங்’ நாவலில் இரண்டாம் அத்தியாயம். ( 'கடைசிப் பிரச்சினை’ என்பது நான் கொடுத்த தலைப்பு: ஆரணியார் இக்கதைக்குத் தனியான தலைப்புக் கொடுக்கவில்லை.)

முக்கியப் பாத்திரங்கள் :

ஆனந்தஸிங் - ஷெர்லக் ஹோம்ஸ்
விஸ்வநாதர் - வாட்ஸன்
 ஏமநாதன் -  மொரயார்ட்டி

இனி ஆரணியாரே பேசட்டும்!
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:
ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’