ஞாயிறு, 20 ஜனவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 12

ரேடியோ எப்படி? - 1’கல்கி’ கிருஷ்ணமூர்த்தி  1941-இல் விகடனை விட்டு விலகியபின்னரும், விகடன் தொடர்ந்து இசைத் தொடர்பான கட்டுரைகளை மிகுந்த அக்கறையுடன் பிரசுரித்து வந்தது. வழக்கம் போல் ‘ஆடல் பாடல்’ கட்டுரைகள் தொடர்ந்தன.  தங்கள் பெண்களுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் ஆர்வம் பெற்றோரிடம் வளர்ந்து வருவதைப்  பற்றிச் சொல்லும் ( 40-களில் வந்த)  ஓர் ‘ஆடல் பாடல்’ கட்டுரையின் ஒரு பக்கம் இதோ ! ( ராஜுவின் ஓவியத்துடன்! )


[ “ ரஸிகன்”  என்பவர் நா.ரகுநாதன்  என்று எண்ணுகிறேன் ]

வானொலியில் வரும் கச்சேரிகளின் விமரிசனங்களைத் தனியாக ‘ரேடியோ எப்படி?’ என்ற கட்டுரைகள் கொடுத்தன. 40-களில் வந்த சில ‘ரேடியோ எப்படி?’ கட்டுரைகள் இதோ!

சங்கீத வித்வான் அமரர் எஸ்.ராஜம் போன்றோரின் முயற்சிகளால் இன்று கோடீஸ்வர ஐயர் என்ற பெயர் பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், 40-களில் எப்படி? கட்டுரையைப் படியுங்கள்!


கீழ்வரும் கட்டுரையில் இசைப் பயிற்சியைச் சொல்லிக்கொடுப்பதில் சென்னை வானொலி திருச்சி வானொலியை விட மேலானது என்கிறார் ரேடியோ நிருபர்.ஏன்? படியுங்கள்! 


பாட்டு, வயலின், மிருதங்கம் --- ‘சர்வம் பெண்கள் மயமானால்’  மவுஸ் அதிகம் என்கிறது இந்தக் கட்டுரை! ரேடியோவில் ரிகார்டு சங்கீதம் அதிகமானதற்குக் காரணம் என்ன? என்றும் கேட்கிறது.
”மட்டமாகப்” பாடுபவரைக் காலையிலும் அரை மணி, மாலையிலும் அரை மணி என்று இரண்டு முறை கேட்க வேண்டுமே என்று நொந்திருந்தோம் என்கிறார் ரேடியோ நிருபர். 
[ நன்றி: விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்

3 கருத்துகள்:

TVG சொன்னது…

You are doing a very nice job. I do not know how you get these old publications. I have never seen these articles, as I was in school in 1950's!!!! Regards, TVG.

UK Sharma சொன்னது…

இப்போதெல்லாம் ரேடியோவில் சங்கீதத்தைக் கேட்பதே அரிதாகி விட்டது. சங்கீதத்துக்கென்றே ஒரு பண்பலை ஒலிபரப்பு ஆரம்பித்தார்கள். இப்போது அது தினமும் மூன்று 1-மணி நேரக் கச்சேரிகளை ஒலிபரப்புவதோடு சரி. ஒரு காலத்தில் இசை விழாக்களை காலையிலும் மாலையிலிருந்து நள்ளிரவு வரையிலும் கூட அஞ்சல் செய்தார்கள். இப்போது இது இல்லை.

Pas Pasupathy சொன்னது…

Thanks UK Sharma. TVG, Yes I was also in the school in the 50's ! :-)

கருத்துரையிடுக