சனி, 13 ஜூலை, 2019

1323. பாடலும் படமும் - 71

பலராம அவதாரம்
'கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல்  ”சங்கினை ஒத்த வெண்நிறமும் நாஞ்சில் பனைக்கொடியும் உடையவர் ”என்று பலராமனை வர்ணிக்கின்றது,


திருமங்கையாழ்வாரின் பாசுரம் இதோ.

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் 
  ஒருபால் தோன்றத் தான்தோன்றி,
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் 
  விண்பாற் செல்ல வெஞ்சமத்து,
செற்ற கொற்றத் தொழிலானைச் 
  செந்தீ மூன்றும் இல்லிருப்ப,
கற்ற மறையோர் கண்ணபுரத்(து) 
  அடியேன் கண்டு கொண்டேனே.பதவுரை

ஒற்றை குழையும் - ஒரு காதில் தொங்குகிற திருக்குண்டலமும்
ஒருபால் - ஒரு பக்கத்தில்
நாஞ்சிலும் - கலப்பையும்
தோன்ற - விளங்க
தான் தோன்றி  - (பலராமனாய்த்) திருவவதரித்து,
வெற்றி தொழிலார் - ஜயம்பெறுவதையே இயல்வாக வுடையரும்
வேல் - வேற்படையையுடையருமான
வேந்தர் - அரசர்கள்
விண் பால் செல்ல -வீரஸ்வர்க்கத்திற்குச் சென்று சேரும்படி
வெம் சமத்து - வெவ்விய போர்க்களத்தில்
செற்ற - (அவ்வரசர்களை) அழியச் செய்ததனாலுண்டான
கொற்றம் - வெற்றியை
தொழிலானை - தொழிலாகவுடைய பெருமானை,-
செம் தீ மூன்றும் - த்ரேதாக்நிகளெனப்படுகிற மூன்று அக்நிகளும்
இல் - திருமாளிகை தோறும்
இருப்ப - ஜ்வலித்துக் கொண்டிருக்கப்பெற்றதும்
கற்ற மறையோர் -கலைகளைக் கற்ற வைதிகர்களுடையதுமான
கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தில்
அடியேன் கண்டுகொண்டேன்.

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும் 

தசாவதாரம்

வியாழன், 11 ஜூலை, 2019

1322. தேவன்: துப்பறியும் சாம்பு - 12

மைசூர் யானை
தேவன்+கோபுலு


ஆகஸ்ட் 30, 1942-இல்  ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு  சிறுகதைத் தொடரில் இது 5-ஆவது கதை.  கோபுலுவின் கை வண்ணத்தில் 1958-இல் விகடனில் வந்த சித்திரத் தொடரிலிருந்து.[ நன்றி : நண்பர் ‘ரா’ ; விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 10 ஜூலை, 2019

1321. ய.மகாலிங்க சாஸ்திரி - 1

 இது ஒப்பந்தக் கல்யாணமல்ல
ய.மகாலிங்க சாஸ்திரி ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த படைப்பு..[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
ய.மகாலிங்க சாஸ்திரி

திங்கள், 8 ஜூலை, 2019

1320. சங்கு சுப்பிரமணியம் - 2

கோர்ட்டுக் குளவிகள்
சங்கு சுப்பிரமணியம்சக்தி இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்

சங்கு சுப்பிரமணியம்

சனி, 6 ஜூலை, 2019

1319. பாடலும் படமும் - 70

இராமாவதாரம் 

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]
அருணகிரிநாதர்  இராமாயணக் குறிப்புகள் கொடுக்கும் பற்பல பாடல்களில் இருந்து ஒரு காட்டு :

ஆலகாலம்” என்று தொடங்கும் திருப்புகழில் இராமாயணச் சுருக்கத்தையே கொடுக்கிறார்.

மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
     பால னாகியு தித்தொர்மு நிக்கொரு
          வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே

மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
     மாது தோள்தழு விப்பதி புக்கிட
          வேறு தாயட விக்குள்வி டுத்தபி ...... னவனோடே

ஞால மாதொடு புக்கவ னத்தினில்
     வாழும் வாலிப டக்கணை தொட்டவ
          னாடி ராவண னைச்செகு வித்தவன்

மேலை வானொர் உரைத் தசரற்கு ஒரு பாலனாகி உதித்து
ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ(க்) கற்கு உரு
அடியாலே மேவியே ... மேல் உலகத்தில் உள்ள தேவர்கள் புகழ்ந்த
தசரதற்கு ஒரு குழந்தையாகப் பிறந்து, ஒப்பற்ற விசுவாமித்திர
முனிவருக்கு ஒரு யாகத்தில் காவல் புரிந்து, அந்த கல்லைத்
திருவடியினால் (மிதித்துப்) பழைய வடிவத்தை (அகலிகை)
எய்தும்படிச் செய்து,

மிதிலைச் சிலை செற்று மின் மாது தோள் தழுவிப் பதி
புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே
ஞால மாதொடு புக்கு ... மிதிலையில் சனகர் முன் (சிவதனுசு என்ற)
வில்லை முறித்து ஒளி பொருந்திய சீதையை மணம் புரிந்து அயோத்தி
நகருக்குத் திரும்பி வந்து, மாற்றாந் தாயாகிய கைகேயி காட்டுக்குள்
போகும்படிச் செய்ய, தம்பியாகிய இலக்குவனுடன் பூதேவி மகளாம்
சீதையோடு சென்று,

அ(வ்)வனத்தினில் வாழும் வாலி படக் கணை தொட்டவன்
நாடி ராவணனைச் செகுவித்தவன் ... அந்தக்
காட்டில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பைச் செலுத்தியவனும்,
தேடிச் சென்று இராவணனை அழித்தவனுமாகிய ராமன்


திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ:

வைய மெல்லா முடன்வணங்க 
  வணங்கா மன்ன னாய்த்தோன்றி,
வெய்ய சீற்றக் கடியிலங்கை 
  குடிகொண் டோட வெஞ்சமத்து,
செய்த வெம்போர் நம்பரனைச் 
  செழுந்தண் கானல் மணநாறும்,
கைதை வேலிக் கண்ணபுரத்து 
  அடியேன் கண்டு கொண்டேனே.


உரை:


உலகமெல்லாம் ஒருமைப்பட்டு திருவடிகளில் விழுந்துவணங்க
தான் ஒருவரையும் வணங்க வேண்டும்படியிராத ராஜாதிராஜனாய் (இராமபிரானாய்) திருவவதரித்து கடுமையான சீற்றத்தையுடையதும்
அரண்களையுடையதுமான இலங்காபுரியிலுள்ளவர்கள்
குடும்பத்தோடும் (யமலோகத்திற்கு) ஓடிச் செல்லும்படியாக
வெவ்விய போர்க்களத்தில் கடுமையான யுத்தத்தை நடத்தின
எம்பெருமானை,அழகிய குளிர்ந்த நெய்தல் நிலத்தையுடையதும்
பரிமளம்மிக்க தாழைகளை வேலியாகவுடையதுமான
திருக்கண்ணபுரத்திலே அடியேன் கண்டுகொண்டேன்.


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

வியாழன், 4 ஜூலை, 2019

1318. சுத்தானந்த பாரதி - 12

கர்மவீரன் கரிபால்டி
சுத்தானந்த பாரதி 


4 ஜூலை . கரிபால்டியின் பிறந்ததினம்.
’சக்தி’யில் 1943-இல் வந்த கட்டுரை இதோ.


தொடர்புள்ள பதிவுகள்:

சுத்தானந்த பாரதியார்

செவ்வாய், 2 ஜூலை, 2019

1317. பாடலும் படமும் - 69

திக்குத் தெரியாத காட்டில் 
பாரதி 
திக்குத் தெரியாத காட்டில்-உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.

மிக்க நலமுடைய மரங்கள்,-பல
விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்,-ஒரு                          (திக்குத்)

நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்,-எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள்,-மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,-முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்,-ஒரு                   (திக்குத்)

ஆசை பெறவிழிக்கும் மான்கள்-உள்ளம்
அஞ்சக் குரல் பழகும்,புலிகள்,-நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை,-அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு,-ஒரு                       (திக்குத்)

தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன்
சத்தத் தினிற்கலங்கும் யானை-அதன்
முன்னின் றோடுமிள மான்கள்-இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை-ஒரு                      (திக்குத்)

கால்கை சோர்ந்துவிழ லானேன்-இரு
கண்ணும் துயில்படர லானேன்-ஒரு
வேல்கைக் கொண்டுகொலை வேடன்-உள்ளம்
வெட்கங் கொண்டொழிய விழித்தான்-ஒரு                 (திக்குத்)

‘பெண்ணே உனதழகைக் கண்டு -மனம்
பித்தங் கொள்ளு’ தென்று நகைத்தான்-”அடி
கண்ணே,எனதிருகண் மணியே-உனைக்
கட்டித் தழுவமனங் கொண்டேன்.                                                        (திக்குத்)

சோர்ந்தே படுத்திருக்க லாமோ?-நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம்-சுவை
தேர்ந்தே கனிகள்கொண்டு வருவேன்-நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்.”                                                    (திக்குத்)

என்றே கொடியவிழி வேடன்-உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான்-தனி
நின்றே இருகரமுங் குவித்து-அந்த
நீசன் முன்னர்இவை சொல்வேன்;                                                      (திக்குத்)

அண்ணா உனதடியில் வீழ்வேன்-எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன்
கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை-உன்தன்
கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?”

“ஏடீ,சாத்திரங்கள் வேண்டேன்-நின
தின்பம் வேண்டுமடி,கனியே!-நின்தன்
மோடி கிறுக்குதடி தலையை,-நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போல”

காதா லிந்தவுரை கேட்டேன்-‘அட
கண்ணா’வென் றலறி வீழ்ந்தேன்-மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே-என்தன்
போதந் தெளியநினைக் கண்டேன்.

கண்ணா!வேடனெங்கு போனான்?-உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ?-மணி
வண்ணா! என தபயக் குரலில்-எனை
வாழ்விக்க வந்த அருள் வாழி!

தொடர்புள்ள பதிவுகள் ;பாடலும், படமும்

திங்கள், 1 ஜூலை, 2019

1316. சரோஜா ராமமூர்த்தி - 2

குடும்பக் காட்சி
சரோஜா ராமமூர்த்தி


‘சக்தி’ இதழில் 1943-இல் வந்த  ஒரு கதை இதோ.


தொடர்புள்ள பதிவுகள்:
சரோஜா ராமமூர்த்தி

சனி, 29 ஜூன், 2019

1315. திருலோக சீதாராம் - 2

மொழிபெயர்ப்புக் கலை 
திருலோக சீதாராம்சிவாஜி’ இதழின் 1960 சுதந்திர மலரில் வெளியான கட்டுரை. திருச்சி வானொலியில் ஒலிபரப்பானது.  [  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 28 ஜூன், 2019

1314. பாடலும் படமும் - 68

பரசுராம அவதாரம் 

[ஓவியம்: எஸ்.ராஜம் ]
திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ:

வடிவாய் மழுவே படையாக 
  வந்து தோன்றி மூவெழுகால்,
படியார் அரசு களைகட்ட 
  பாழி யானை யம்மானை,
குடியா வண்டு கொண்டுண்ணக் 
  கோல நீலம் மட்டுகுக்கும்,
கடியார் புறவில் கண்ணபுரத்து 
  அடியேன் கண்டு கொண்டேனே.உரை:

கூர்மை பொருந்திய வாயையுடைய கோடாலியையே ஆயுதமாகக் கொண்டு (பரசுராமனாய்த்) திருவவதரித்து இருபத்தொரு தலைமுறையளவும் பூமியில் நிறைந்திருக்கிற க்ஷத்ரியர்களாகிற விரோதிகளை தொலைத்த மிடுக்குடையனான எம்பெருமானை, வண்டுகளானவை குடும்பமாக (மதுவை) எடுத்துப் பருகும்படியாக அழகிய நீலோற்பல மலர்கள் மதுவை பெருகச்செய்யப் பெற்ற பரிமளம் மிக்க சுற்றுப் பிரதேசங்களையுடைய திருக்கண்ணபுரத்தில் அடியேன் கண்டுகொண்டேன்.


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

செவ்வாய், 25 ஜூன், 2019

1313. சுகி சுப்பிரமணியன் - 2

போர்டிங் லாட்ஜிங்
‘சுகி’ 1952-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த படைப்பு.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சுகி சுப்பிரமணியன்

ஞாயிறு, 23 ஜூன், 2019

1312. வ.ரா. - 6

குப்பண்ணா
வ.ரா. 


1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம்.
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.ரா.

சனி, 22 ஜூன், 2019

1311. பாடலும் படமும் - 67

வாமன அவதாரம்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


அருணகிரிநாதர்  பல பாடல்களில் திருமாலின்  வாமனாவதாரத்தைக் குறிக்கிறார்.  உதாரணமாக, “  சீர்பாத வகுப்”பில்  வரும் சொற்றொடர்:

வடிவு  குறளாகி மாபலியை 
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய
வளருமுகில்

( குள்ள வடிவங் கொண்ட வாமனா மூர்த்தியாக,  மகா பலி சக்ரவர்த்தியை,  கடினமான சிறையில் வைக்க,  அண்டத்தின் உச்சி பிளவுபட, முழுமையாக வளர்ந்த மேகம் அன்ன நிறமும் கொடைத் திறமும் கொண்ட திருமால்)

திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ:

தொழுநீர் வடிவில் குறளுருவாய் 
  வந்து தோன்றி மாவலிபால்,
முழுநீர் வையம் முன்கொண்ட
  மூவா வுருவி னம்மானை
உழுநீர் வயலுள் பொ ன்கிளைப்ப 
  ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து
  அடியேன் கண்டு கொண்டேனே.


பொருள்:  கண்டவாறே வணங்கவேண்டும் படியான நீர்மையையுடைய
வடிவு கொண்ட வாமன ரூபியாய் அவதரித்து மஹாபலியினிடத்தில்
முன்பொருகால் கடல் சூழ்ந்த உலகத்தை இரந்து பெற்ற விகாரமற்ற ரூபத்தையுடையனான ஸர்வேச்வரனை, (எப்போதும்) உழுவதையே இயல்பாகவுடைய வயல்களிலே பொன் விளையப் பெற்றதும் வேறு சில இடங்களில் முல்லைமலர்களும் கருமுகைமலர்களும் செங்கழுநீர்ப் பூக்களும் மலரப் பெற்றதுமான திருக்கண்ணபுரத்திலே அடியேன் கண்டு கொண்டேன்-

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும் 

தசாவதாரம்

வியாழன், 20 ஜூன், 2019

1310. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 15

என் வாழ்க்கையின் அம்சங்கள் -11
வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி 


’சுதேசமித்திர’னில்  1941-இல் வந்த  ஒரு கட்டுரை

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி: சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி