பசுபடைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பசுபடைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 டிசம்பர், 2022

2388. சங்கச் சுரங்கம்: ஊஞ்சல் நாடகம்

ஊஞ்சல் நாடகம்

பசுபதி 



'இருவாட்சி' 2020 பொங்கல் சிறப்பிதழில் ( ஆசிரியர்: எஸ்.சங்கரநாராயணன்)  வந்த கட்டுரைக்கதை.









[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 

பசுபடைப்புகள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 16 டிசம்பர், 2022

2362. சுடோக்கு : கவிதை

சுடோக்கு 

பசுபதி


சதுரனென நான்பெருமை சாற்றப் புதிய 

புதிரொன்றைத் தேடுகின்ற போது -- முதியர்

இளைஞர்கைச் செய்தித்தாள் ஏடுகளில் கண்டேன்

சுளுவாய்த் தெரிந்த சுடோக்கு.


கட்டத்தில் எண்களிடக் காலொன்றில் நின்றாலும்

கட்டம்தான் மிச்சம்! களைத்தயர்ந்தேன் !-- துட்டர்கள் 

ஒன்பதின்மர் தந்தனரே உன்மத்தம்! சித்ரவதைத் 

துன்பத்தின் எல்லை சுடோக்கு.


எண்ணும் எழுத்துமிரு கண்களெனப் போற்றென்றார்;

எண்நம்மைக் கைவிட்டால் என்செய்வோம்? -- நண்பரே!

போக்கு குறுக்கெழுத்துப் போட்டிகளில் உன்பொழுது! 

தூக்கிக் கடாசு சுடோக்கு! 

இது ‘திண்ணை’ மின்னிதழில் 2006 -இல்  வெளியானது )


தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

2353. பாரதி போற்றும் மந்திரம்!

பாரதி போற்றும் மந்திரம்!

பசுபதி 

2022 கோபுர தரிசனம் தீபாவளி மலரில் வந்த கட்டுரை.   இதை அழகாய்ப் பதிப்பித்து வெளியிட்ட ஆசிரியர் சீனிவாசகமணிக்கு என் மனமார்ந்த நன்றி.] 






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவு:



பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


புதன், 30 நவம்பர், 2022

2335. ஓமெனும் சக்தி : கவிதை

ஓமெனும் சக்தி 

பசுபதி




உமையென ஒலிமாறும் -அந்த

. ஓமெனும் சக்தியை வேண்டிடுவேன்.

அமைதியைத் தந்திடவே - வினை

. ஆற்றிடு வாய்மதி தேற்றிடுவாய் ! 

சமைத்திடு வியனுலகை  - இந்த

. சகந்தனி லேநரர் அகந்தனிலே!

தமிழ்க்கவி பூத்திடவே - தலை

. தாழ்த்துகி றேன்எமை வாழ்த்திடுவாய்!

( அ+உ+ம் =ஓம் => உ+ம்+அ ) 

தொடர்புள்ள பதிவுகள்:


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 2 நவம்பர், 2022

2294. பெற்ற மனம்: கவிதை

பெற்ற மனம்

பசுபதி


'தினமணி'யில் 2 நவம்பர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.

====

பெண்ணின் மணமென்னும் போதினிலே – அந்தப்

  பெற்றோரின் உள்ளம் கலங்குவதேன்?

கண்ணின் மணியாய் வளர்ந்தவளோ – தாலி

  கட்டி யவனுடன் செல்வதனால்.


மைந்தன் திருமணம் ஆனபின்பும் – தாய்

  தந்தையர் நெஞ்சம் கலங்குவதேன்?

மந்திரம் போட்டவள் சொற்படியே – பிள்ளை

  வாழ்ந்திடச் செல்லும் தனிக்குடியால்.


உள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் – இந்த

  உன்னதக் கல்யாண தீபவொளி

தள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ – ஒரு

  தாபத் தனிமை இருட்டினிலே ? 

===


தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.                     

   

புதன், 26 அக்டோபர், 2022

2285. தண்ணீரின் கண்ணீர்:கவிதை

தண்ணீரின் கண்ணீர்

பசுபதி



'தினமணி'யில் 26 அக்டோபர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.

=====


கலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க

வலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.


வழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த்தேவி.

விழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: “மானுடனே! 


பரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட?

அருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க?


ஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;

நாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்! 


பூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்!

மாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ? “

===

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 10 டிசம்பர், 2021

1990. இலக்கியத்தில் அறிவியல்: கட்டுரை

இலக்கியத்தில் அறிவியல்
பசுபதி


‘ தாய்வீடு’ இதழில் மே 2018-இல் வந்த கட்டுரை. இது நான் டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில்  31-03-2018 -இல் நிகழ்த்திய ஓர் உரையின் சுருக்கமான தொகுப்பு.

====


அறிமுகம்
‘அறிவியல்’ என்ற சொல் அறிவு ( Knowledge) என்ற சொல்லில் பிறந்தது. பண்டைய காலத்தில் மொழி,இலக்கியம் தொடர்பில் மட்டுமே ‘அறிவு’ என்ற சொல் பயன்படுத்தப் பட்டது; இன்றோ , அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் அச்சொல் பொருந்துகிறது. மொழியைக் கையாளுவதிலும், அறிவியல் அறிவைச் சுட்டுகிறது இலக்கியம். சான்று; கடலைக் ‘கார்கோள்’ என்கிறது திருமுருகாற்றுப்படை. கார் என்ற மேகம் கடலிலிலிருந்து தான் நீரைக் கொள்கிறது என்ற அறிவியல் உண்மையை அன்றே தமிழர் அறிந்திருந்தனர் என்பதை இது காட்டுகிறது.  
 
அறிவியல் என்றால் ‘விஞ்ஞானம்’ ( Science); ‘தொழில் நுட்பம்’ என்றால் (‘Technology’ ). அறிவியலுக்கும் தொழில் நுட்பத்திற்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது.. இந்தக் கட்டுரையில் தமிழ் இலக்கியத்தில் உள்ள அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த சில தகவல்களைப் பார்க்கலாம். கூடவே, நம் இலக்கியத்தில் ‘. ‘வலவன் ஏவா வானூர்தி’ ( புறம் 27-8 ) போன்ற அறிவியல்சார் கனவுகளும் இருக்கும். அவற்றையும் நம் கண்ணோட்டத்தில்  சேர்த்துக் கொள்ளலாம். 


முற்காலம்

புறநானூற்றில் ஒரு பாடலில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் வானியல் அறிஞர்கள் இருந்தனர் என்று சொல்கிறார்; தொல்காப்பியம் உலகத்தின் அடிப்படை ‘நிலம் நீர் தீ வளி விசும்பு’ என்ற ஐம்பூதங்கள் என்கிறது; பதிற்றுப் பத்து கரும்பு பிழியும் எந்திரங்களைப் பற்றியும், பெருங்கதை ஆழ்துளைக் கிணற்றையும், மணிமேகலை எந்திரவாவி ( நீச்சல் குளம்) யையும், பெருங்கதை எந்திர யானையையும் குறிப்பதைப் படிக்கிறோம். மேலும், நேரத்தைக் கணக்கிட தரையில் நடப்பட்ட கம்பின் நிழல் உதவியதைப் பற்றிக் குறிக்கிறது இலக்கியம். நீரைக்  கொண்டு நாழிகை அறியும் ‘நாழிகை வட்டில்’ என்ற கருவியும் அக்காலத்தில் இருந்தது. 

கபிலர் ஒரு பாடலில் எப்படி ஏரிகள் எட்டாம் பிறை வடிவில் ஒரு சிக்கன அமைப்பில் இருக்கவேண்டும் என்ற சுற்றுச் சூழல் அறிவைப் புகட்டுகிறார் .  குளத்தைத் தோண்டியும், மரங்களை நட்டும், மக்கள் நடமாட்டத்திற்கான வழிகளை ஏற்படுத்தியும், மேடுகளைத் தோண்டி உழும் வயலாக்கியும், கிணற்றைத் தோண்டியும் இவ்வைந்து அறச் செயல்களை எவர் செய்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார் என்கிறது சிறுபஞ்ச மூலத்தில் உள்ள ஒரு பாடல்.

கணக்கதிகாரம் என்று நூலில் ‘வட்டத்தின் பரப்பளவு’ என்ன என்று சொல்லும் ஒரு குறள் வெண்பா.
வட்டத் தரைகொண்டு விட்டத்தரை தாக்க
சட்டெனத் தோன்றுங் குழி. 
[ பொருள்: வட்டப்பகுதியின் அரைப்பங்கு நீளத்தை விட்டத்தின் அரைப்பங்கு நீளத்தால் பெருக்கினால் வட்டமப் பரப்பு பெறப்படும்.]

இக்கணக்கில் மறைந்திருக்கும் ‘பை’ ( Pi ) பற்றிய ஒரு வெண்பா:

மூவரில் முன்னவன் நான்முகனே* பைங்கணிதப்
பாவை அழகுகண்டு 'பை'யென்று சொன்னானோ?
வட்டத்தின் சுற்றளவை விட்டம் வகுத்திடின் 
பட்டென்று பம்பிடுவாள் பை. ( பசுபதி )

[  மார்ச் 14 (3/14) 'பை' தினம். * முதல் மூன்று சீர்கள் பையின் தோராய மதிப்பாம் 3.14-ஐக் குறிக்கிறது.  பை = அழகு ]

கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

போதையனாரின் சூத்திரம் ஒன்று  ( 3,4,5 ) , ( 5,12, 13 ) என்ற இரண்டு எண்கூட்டங்களில் ( அல்லது அவற்றின் மடங்குகளில்) மட்டும் இருக்கும் செங்கோணங்களில்  வர்க்கமூலம் இல்லாமல் ‘கர்ணங்களைக் கண்டுபிடிக்க  உதவுகிறது.

காளமேகத்தின் ” எட்டொரு மா” என்று தொடங்கும் பாடலால் தமிழர் பின்னங்களை வாழ்க்கையில் சகஜமாய்ப் பயன்படுத்தினர் என்பது தெரிகிறது. அதுபோலவே நெய்தல் குவளை ஆம்பல் சங்கம் வெள்ளம் போன்ற பேரெண்களையும் பாடல்களில் நாம் பார்க்கிறோம்.

” புல்லாகி பூடாய்” என்ற மணிவாசகரின் பாடலுக்கும் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கும் , விஷ்ணுவின் தசாவதாரங்களுக்கும் உள்ள ஆச்சரியமான ஒற்றுமையைப் பார்த்து நாம் வியக்கிறோம்.

16-17 நூற்றாண்டில் வாழ்ந்த போகர் என்ற சித்தரின் பாடல்கள் மூலம் அவருடைய தொழில் நுட்ப அறிவு, பொறியியல் அறிவு வெளிப்படுகிறது. சீனாவிற்குச் சென்று சாதனைகள் செய்ததாய்ப் பாடியிருக்கிறார். நீராவிக்கப்பல், புகைரதம், ’பலூன்’ போன்றவற்றைப் பற்றிப் பாடியுள்ளார்.  போகர் சீனாவில் கல்வி பயின்றபோது யாவரும் வியக்கும் வண்ணம் பாரசூட் செய்ததை, ‘குடைவித்தை’ என்று 9 பாடல்களால் விளக்கியுள்ளார். 

திருக்குறளில் ‘மருந்து’ என்று ஒரு அதிகாரமே இருக்கிறது
கைகேயி தன் இதயத்தில் பாய்ச்சின வரம் எனும் கூர்வேல், இன்று இராமனைத் தழுவியதனால், அவன் மார்பாகிய காந்தம் அதனை வாங்கிவிட்டது என்று தசரதர் கம்பம் காதையில் கூறுவதைப் படிக்கிறோம்.

திருப்புகழில் பல பாடல்களில் அருணகிரிநாதர் அக்காலத்தில் இருந்த நோய்களைப் பட்டியலிடுகிறார். ஒரு சான்று: 

இருமலு ரோக முயலகன் வாத
     மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
     யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
     பெருவலி வேறு ...... முளநோய்கள் 

அகத்தியரின் ஐந்து சாஸ்திரம் என்ற நூலில் 18 வித மனநோய்களைப் பற்றியும், அதற்குரிய மருத்துவம் பற்றியும் சொல்லியிருக்கிறது என்று படிக்கிறோம் 

நிகழ்காலம்

கவிதைகள் மூலமாய்ப் பல அறிவியல் உண்மைகளைச் சுட்டும் வழக்கம் காணப்படுகிறது. முக்கியமாய், பல அறிவியல் உணமைகளைப் படித்தறிந்த பாரதியின் கட்டுரைகளிலும், பல கவிதைகளிலும் அறிவியலைப் பற்றிய சிந்தனையைக் காண்கிறோம்.

நகைச்சுவை கலந்த சில கவிதைகள் சில அறிவியல் கருத்துகளைச் சொல்வதையும் பார்க்கிறோம்.

உதாரணம்: ஐன்ஸ்டீனின் சார்புநிலைக் கோட்பாடு ( Special Theory of Relativity ) மிக விரைவாகச் செல்லும் ஊர்தியினுள் காலம் தாமதமாக ( Time Dilation )  நடக்கும். இதைச் சொல்லும் ஒரு குறும்பா:

ஐன்ஸ்டீனின் பெரும்விசிறி ஆண்டாள்
மின்வேகம் மிஞ்சுகலை தேர்ந்தாள்;
. பார்த்தொருநாள் புறப்பட்டு, 
. சார்புவழி பறந்துவிட்டு,
முன்னிரவு வீடுவந்து சேர்ந்தாள் ! ( பசுபதி

நோபல் பரிசு பெற்ற சி.வி. ராமன் கண்டுபிடித்த ‘ராமன் விளைவு’ பற்றி அவரே சொன்ன ஒரு நகைச்சுவைத் துணுக்கு இங்கே ஒரு கவிதையாய் மாறுகிறது.

ராமன் விளைவு ( Raman Effect )
===========
பார்புகழ் நோபல் பரிசுவென்று பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்.

விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்.
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும். 

மதுக்கிண்ணம் பார்த்ததுமே  மறுத்துவிட்டார் ராமன்.
இதற்கென்ன காரணம்  என்றவர்க்(கு) உரைத்தார்:

"ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்;
ஸோமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!" ( பசுபதி )

திரைப்படப் பாடல்களில் அதிகமாக அறிவியல் சார்ந்த பாடல்களை நாம் பார்ப்பதில்லை. இருப்பினும், , ’நல்ல தம்பி’ (1949) படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் பாடிய அறிவியல்-நகைச்சுவை கலந்த “ விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி” போன்ற பாடல்கள்  பிரபலமானவை.


 அறிவியல் நூல்கள்

அறிவியல் தமிழ் ஆக்க முயற்சியில் முதல் கட்டம் : அறிவியல் நூல்கள் எழுதப்பட்டது, இரண்டாம் கட்டம்: கலைச் சொல்லாக்கப்பணி 19-ஆம் நூற்றாண்டின் முதற் பாதிப்பகுதியில், 1-8 வகுப்பு வரை தாய்மொழியில் பல இடங்களில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அதனால் பல அறிவியல் நூல்கள் எழுதப்பட்டன. 

நூற்றொகை விளக்கம் என்பது 1888 ஆம் ஆண்டில் பேராசிரியர் ‘மனோன்மணியம்’ பெ. சுந்தரனார் எழுதினார். இந்த நூலில் "இவ்வுலக வாழ்க்கைக்கு மனிதனின் அறிவு வளர கணிதம், இரசாயணம், உயிரியல் உளநூல், வானவியல், சோதிடம், புவியியல், இலக்கணம், அறம், சிற்பம், கடற்பயணம், போர்க்கலை, மருத்துவம் என்று பல்வேறு துறைகளை அக்காலத்தில் வழங்கிய சொற்களைக் கொண்டு விளக்குகிறார். 

கலைச்சொல்லாக்கப் பணிகள் முறையாக 20-ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கியது எனலாம். ராஜாஜி, வெங்கடசுப்பையருடன் சேர்ந்து 1916-இல் ‘தமிழ் சாஸ்திர பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை’ என்ற இதழைத் தொடங்கினார். “ கலைச்சொல்லாக்கப் பணியில் இது முதல் கூட்டு முயற்சி “ என்கிறார் வே.செ.குழந்தைசாமி. ராஜாஜி ‘திண்ணை ரசாயனம்’ ’தாவரங்களின் இல்லறம்’ என்ற நூல்களை ( 46/47 -இல் )  எழுதியது நினைவுக்கு வருகிறது. அறிவியல் வளர்ச்சியில் ‘ கலைக்கதிர்’, ‘விஞ்ஞானச் சுடர்’, ‘ வளரும் வேளாண்மை’ போன்ற இதழ்களின் பணி குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வா.செ.குழந்தைசாமி, சுப்பு ரெட்டியார், மணவை முஸ்தபா போன்றோர் பல நூல்களையும், பெ.நா.அப்புசாமி, பொ.திருகூடசுந்தரம் பிள்ளை போன்றோர் பல அறிவியற் கட்டுரைகளையும் எழுதியுள்ளனர். 
=====

                                        


[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort.  Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
பசுபடைப்புகள்

சங்கச் சுரங்கம்  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 29 நவம்பர், 2021

1982. பாரதி நினைவாலய வரலாறு

பாரதி நினைவாலய வரலாறு

பசுபதி


[ 2021 கோபுர தரிசனம் தீபாவளி மலரில் வந்த கட்டுரை. இவ்வாண்டு பாரதியின் நினைவு நூற்றாண்டு என்பதனால் எழுந்த கட்டுரை.  இதை அழகாய்ப் பதிப்பித்து வெளியிட்ட ஆசிரியர் சீனிவாசகமணிக்கு என் மனமார்ந்த நன்றி.] 







[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவு:



பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 9 நவம்பர், 2021

1967. சினிமாவில் வெற்றி! : கவிதை

 சினிமாவில் வெற்றி! 

 பசுபதி


'தினமணி'யில் 9 நவம்பர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.

====

சினிமாவில் வெல்லுவழி ஒன்றே

  சிந்தித்துக் கடைப்பிடிப்பாய் இன்றே


“அஞ்சாமல் திரைகடல் ஓடு

  அங்குள்ள திரவியத்தைத் தேடு “


என்றவ்வை பொன்மொழியைச் சொல்லு!

  இவ்வழியில் உறுதியாய் நில்லு!


சுயமாக யோசித்தல் எதற்கு?

  துட்டொன்றே போதும் நமக்கு!


பிறமொழிகள் ‘திரை’க்கடலில் தேடு!

  பிடித்ததற்குத் தமிழ்வேடம் போடு!


கலகலப்பாய்ப் பாடல்கள் போடு!

  காசுவந்து குவியும்கண் கூடு!

====


தொடர்புள்ள பதிவுகள் :
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 18 நவம்பர், 2020

1695. ரா.ராகவையங்கார் - 2

மகாவித்வான் ரா.ராகவையங்கார் 

பசுபதி 



கோபுரதரிசனம்  2020 தீபாவளி மலரில் வந்த கட்டுரை இது.  . இந்த வருடம் கொண்டாடப்படும் மகாவித்வான் ராகவையங்காரின் 150 - ஆவது பிறந்த நாளை ஒட்டி எழுதப்பட்டது.  அழகாக மலரில் வெளியிட்ட ஆசிரியருக்கு என் நன்றி

 





[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


செவ்வாய், 6 அக்டோபர், 2020

1649. கொத்தமங்கலம் சுப்பு - 30

'கொத்தமங்கலம் சுப்பு'வின் நூல்: “மருக்கொழுந்து": அணிந்துரை

பசுபதி 




பத்மஸ்ரீ, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் 

மண்வாசனை கமழும் கவிதைகளை ரசிகமணி டி.கே.சி. , 

பேராசிரியர் கல்கி போன்றோர் ரசித்து, அந்த 

நடையிலேயே தொடர்ந்து எழுதச் சொன்னார்கள் என்பதை 

நாடு அறியும். அப்படிப்பட்ட மண்மணமும் , தமிழ்மரபின்  

வளமும்  சேர்ந்த கவிதைத் தொகுப்பே “மருக்கொழுந்து”.  

இந்தத் தலைப்பைக் கவிஞர் அவர்களே பல வருடங்களுக்கு 

முன்பு தன் நூலுக்குத் தேர்ந்தெடுத்தார் என்பதும் 

தொகுப்புக்கு ஒரு தனிச் சுவையைச் சேர்க்கிறது. இப்போது 

அவருடைய குடும்பத்தினர் இந்தத் தலைப்பில் ஒரு நூலைக் 

கொணர்வதில் அவருடைய ஆன்மா மிகுந்த திருப்தி 

அடையும் என்பதில் ஐயமில்லை. 





“மருக்கொழுந்து” என்ற கொத்தமங்கலம் சுப்பு 

அவர்களின்  கவிதைத் தொகுப்பு இரண்டு தொகுதிகளாய்

 வந்துள்ளது. முதல் தொகுதியில் பண்டிகை, அறிவுரை,

 காதல், நாட்டு நடப்பு, நாட்டுப் பற்று என்ற தலைப்புகளில்

 200-க்கு மேற்பட்ட பாடல்கள் உள்ளன. இரண்டாம்

 தொகுதியில் தெய்வீகம், இவர்களைப் பற்றி,

 இவைகளைப் பற்றி    என்ற தலைப்புகளில் 160-க்கு

 மேற்பட்ட  கவிதைகள்உள்ளன.


கொத்தமங்கலம் சுப்பு அவர்களைத் தமிழ் கூறும் 

நல்லுலகம் நன்றாய் அறியும். கவிஞர், எழுத்தாளர்,

 திரைப்படப் பாடலாசிரியர் திரைப்படக்

 கதை  வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர்,

 நடிகர்,கதாகாலக்ஷேப விற்பன்னர், வில்லுப் 

பாட்டிசைக்  கலைஞர், பத்திரிகையாளர், ரசிகர், 

கவியரங்கத் தலைவர் என்று பன்முகங்களில் பிரகாசித்த 

மேதை. மிகச்சிலருக்கே இருக்கக்கூடிய இத்தகைய 

அனுபவங்கள் அவருடைய கவிதைகளில் தோய்ந்துள்ள 

உணர்ச்சிகளுக்கும், கற்பனைக்கும் நீர் வார்த்துள்ளன 

என்றால் மிகையாகாது. 


நாட்டுப் பாடல்களுக்குத் தமிழில் நீண்ட பாரம்பரியம் 

உண்டு. வாய்மொழி இலக்கியமாய், நாடோடிப் 

பாடல்களாய்ப் பரிமளித்தவை இவை. பெரும்பாலும் எளிய 

தமிழில், தெம்மாங்கு போன்ற கவர்ச்சியான இசையுடன் 

விளங்கியிருக்கும். கி.வா.ஜகந்நாதன், வானமாமலை, 

ஆறு.இராமநாதன் போன்ற அறிஞர்கள் இவற்றின் 

பலவகைகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள்  . 

உதாரணமாக, 

தெய்வங்கள், மழையும் பஞ்சமும், தாலாட்டு, விளையாட்டு, 

காதல், திருமணம், குடும்பம், சமூகம், உழவும் தொழிலும், 

ஒப்பாரி என்பது அந்த வகைகளின் ஒரு பட்டியல். இவற்றில் 

எல்லாம் கவிஞர் சுப்புவும் பாடியுள்ளார். மேலும் அவர் 

காலத்திற்கேற்ப எழுந்த பல புதிய பிரச்சினைகளை, 

பொருட்களங்களை, மனிதர்களை மையப்படுத்தியும் 

பாடியுள்ளார். சித்தர்களின் கருத்துகளை வெளிப்படுத்திய 

‘சிந்து’ என்ற எளிய பாடல் வகையை  பாரதி புதிய 

கருத்துகளுக்குப் பயன்படுத்தி , “சிந்துக்குத் தந்தை” என்று 

புகழ்பெற்றார். அதைப் போலவே, சுப்புவும் தமிழ்நாட்டுப் 

பாடல் இயற்றினோர் மரபின் ஒரு தொடர்ச்சியாக 

விளங்குவது மட்டுமன்றி, புதிய கருத்துகளுக்கும் அந்தப் 

பாடல் வகையைப் பயன்படுத்தித் தற்காலத்திற்கேற்பத் 

தனக்கே உரிய ஒரு தனிப்பாணியில் எழுந்த ஓர் 

இலக்கியத்தை நம்முன் வைத்துள்ளார். அதனால், கவிஞர் 

சுப்புவை “ நாட்டுப்பாடல் இலக்கியத் தந்தை” என்றே 

கூறலாம். மேலும், பாரதியைப் போலவே கவிஞர் சுப்புவும் 

தெய்வீகம், நாட்டுப் பற்று, தமிழ்மொழி என்ற மூன்றுமே 

தன் 

மூச்சாய் இருந்தார் என்பது இந்த நூலிலிருந்து நன்கு 

விளங்குகிறது.    


இந்த நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு காலகட்டங்களில் 

எழுதப்பட்டுள்ளன என்பதை மனத்தில் வைத்துக் கொண்டு  

வரலாற்று நோக்குடன் இப்பாடல்களைப் படிக்கும்போது 

இவற்றின் கருத்தோட்டத்தையும், சமூகச் 

சூழ்நிலைக்கேற்பக் கொட்டும் கவிஞரின் கற்பனை, 

உணர்ச்சி ஊற்றுகளையும் மேலும் ரசிக்க முடிகிறது., 

உதாரணமாக, 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ 

என்ற விண்கலத்தில் லைகா என்ற நாயை அனுப்பியது ; 

இது 

யாவரும் அறிந்த விஷயம். ஆனால், இதைப் பற்றி, “ 

சந்திரனே, சந்திரனே, சௌக்கியமா’ என்ற பாடலில் புதிய 

கண்ணோட்டத்தில் லைகா, ஸ்டாலின் போன்றோர் 

பேசுவதுபோல் பேசி


 நாயைப்பறக்க விட்டபோதே நன்றிபறந்து போச்சுடா

 நாம்செய்த பாவம் நம்மை நாடுமறந்து   போச்சுடா  

மாயப்ரபஞ்மென் றுரைத்தவாக்குப் பலிச்சுப்போச்சுடா

  மானத்திலே ஏறினாலும் மனிசன் மனிசன்தானடா   


 என்று நம்மைச் சாடுகிறார்.  


1935 முதல் 1973 வரை , ‘சக்தி, ஹனுமான், பாரதமணி,  

அமுதசுரபி, சிவாஜி, ஆனந்த விகடன், கல்கி போன்ற 

இதழ்கள், வானொலி, கவியரங்கங்கள் என்று பல 

தளங்களில் வலம் வந்தவை இந்தப் பாடல்கள். சிறிய 

பாடல்கள் மட்டுமன்றி. கருணையின் கதை ( 

அங்குலிமாலன் 

கதை) , அக்கூ அக்கூ அக்கூ, தெய்வச்சிலை, நந்தன் வீட்டில் 

விஷ்ணு, பொற்பனையான் கோயில்,  போன்ற  

அருமையான நீண்ட கதைப்பாடல்களும் நூலில் உள்ளன. 

”இவர்களைப் பற்றி” என்ற பகுதியில் காந்தி, நேரு, சுபாஷ் 

சந்திர போஸ், ராஜாஜி, பாரதி, ம.பொ.சி, காமராஜர், ஜீவா, 

கருணாநிதி, அண்ணாதுரை போன்ற தலைவர்களைப் 

பற்றிய கவிதைகள் நாட்டின் வரலாற்றை 

நினைவூட்டுகின்றன.


பேராசிரியர் கல்கியிடம் பெருமதிப்புக் கொண்டவர் கவிஞர் . 

கல்கி மறைந்தவுடன் ‘கல்கி’; இதழில் அவர் எழுதிய 

உணர்ச்சிமயக் கவிதை நம் உள்ளத்தை உருக்குகிறது.  

மேலும் ”கல்கிதமி”ழின் சிறப்பை 


    சொல்லழகு பொருளழகு சோர்வில்லா நீர்வீழ்ச்சி

    நல்லதையே தான்எழுத நாணமில்லா நல்லகுணம்

    எல்லாரும் படிச்சிடலாம் இலக்கணமும் குறைவில்லை

    கல்லாலின் கீழமர்ந்த கடவுள்மொழி கல்கிதமிழ்


என்று துல்லியமாய் எடை போடுகிறார்.    


குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் என்று எல்லா 

வயதினரும் ரசிக்கக் கூடிய பாடல்கள் உள்ளன. ‘அரிச்சுவடி’ 

என்ற குழந்தைகளுக்கு உயிர்எழுத்துகளைக் கற்றுக் 

கொடுக்கிறார் ஒரு பாடலில்.

அதில் அ,ஆ, இ – எழுத்துகளுக்கு அப்பன், ஆத்தாள், இட்லி 

என்று பாடிக்கொண்டு போகிறவர் 


  இட்டிலியில் மொய்க்கும் ஈக்கு முதல் எழுத்து 

      ஈயன்னா ஈயன்னா ஈயன்னா ‘ 


 என்று பாடும்போது , நாமும் குழந்தைகளுடன் சேர்ந்து ‘ஈ’ 

என்று சிரிக்கிறோம். 


நாட்டுப் பாடல்களுக்கே உரிய பல மெட்டுகளில் 

மிளிர்கிறது நூல்.

வில்லுப்பாட்டுக் கலைஞரின் ‘வில்லுப்பாட்டு’ என்ற 

பாடலின் துள்ளும் நடையைப் பாருங்கள்.


   வில்லெடுத்தா  தம்பி வில்லெடுத்தா வெற்றி

      வேலன் புகழ்பாட வில்லெடுத்தா 


 முருகபக்தரான கவிஞரின் “ அறுபடை வீட்டு வழிநடைப் 

பாட்டு” 

கணவன்-மனைவி உரையாடலாக ஆனந்தக் களிப்பு 

மெட்டில் அமைகிறது.! 


   மனைவி:  சண்முகம் ஆறுபடை வீடு – கந்த 

               சட்டிக்கு போய்வா காசுபணம் தேடு

   கணவன்:  சிந்தனை ஏண்டி ரயிலேறு – நம்ம 

               செலவுக்கு வேண்டியதை சாமி தருவாரு 


பல பிரபலமான பாடல்கள் இத்தொகுதிகளில் உள்ளன 

என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இவற்றுள் 

அவருடைய போர்சார்ந்த பாடல்கள் மிகப் பிரசித்தி 

பெற்றவை, அவற்றுள் , 1945 இல் இரண்டாம் உலகப் போர் 

முடிந்த பின்னர் அவர் விகடன் தீபாவளி மலரில் எழுதிய 

ஒரு 

பாடல் எல்லோர் மனத்திலும் இன்றும் நிலைத்து உயர்ந்து 

நிற்கும்,  “ பொறந்த நாட்டை நினைச்சுப் பார்த்து புறப்பட்டு 

வாங்க” என்ற ஒரு ‘கோபுர’க் கவிதை. இரண்டாம் உலகப் 

போர் முடிந்துவிட்டது, பல வருடங்களாய் வெளிநாட்டில் 

இருந்த சிப்பாய்களை நாட்டுக்குத் திரும்பி வந்து நாட்டுக்கு 

உழைக்கச் சொல்லி வேண்டுவதுபோல் அமைந்த கவிதை 

இது. 


இந்தியச் சிப்பாய்களின் வீரம், கடமை உணர்ச்சி இவற்றில் 

பெருமை கொள்ளும் அதே நேரத்தில் , சிப்பாயின் 

குடும்பத்தினரும், அண்டை அயலும் -- ஏன், மாடு, 

கன்றுகளும் தாம் -- அவனைப் பார்க்காமல் ஏங்கும் 

சித்திரம் நம்மை நெகிழவைக்கிறது. 

போருக்குப் போகும்போது தொட்டிலில் இருந்த குழந்தை

 --இப்போதோ பள்ளிக்குச் 

செல்லும் பிள்ளை -- ‘அப்பன் எங்கே’ என்று அம்மாவைக் 

கேட்பது, தந்திதபால்காரன் வந்தால் ‘எங்கே துயரச் செய்தி 

வந்துவிடுமோ’ என்று தாலியைத் தொட்டுப் பயப்படும் 

மனைவி, சிப்பாய்க்குப் பேர் இட்ட கிழவி தன் கடைசிக் 

காலத்தில் அவனைப் பார்க்கத் துடிப்பது ..போன்ற பல 

மனமுருக்கும் காட்சிகள் நிறைந்த ‘நிறைகுடம்’ இந்தக் 

கவிதை. 


பெத்துவளத்துப் பேருமிட்ட

   பெரிய நாச்சியா

பித்துப்பிடிச்சு ராப்பகலா

   பேத்தி நிக்கிறா

முத்தைஉதுத்துப் பேந்தபேந்த

   முளிச்சுப் பாக்குறா

முகத்தைக்காட்ட வேணுமிடா

   வீட்டுக்கு வாங்க.


தந்திதவால் காரன்வந்தா

   தவிதவிக் கிறா

தாலிச்சரட்ட பாத்துக்கண்ணு

   தண்ணி வடிக்கிறா

அந்திப்பட்டா ஒருயுகமா

   அவ துடிக்கிறா

ஆறுவருச மாச்சுதப்பா

   வீட்டுக்கு வாங்க.


இப்படி நம்மைக் கண்கலங்க வைக்கும் கவிஞர் இன்னொரு 

பாடலில் சிப்பாய்க்குத் தன் மனைவியின் கடிதத்தால் 

ஏற்படும் மகிழ்வையும் விவரிக்கிறார். பின்னர் 1963-இல் 

சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து வானொலியில் ஒலிபரப்பான “ 

ஊரைக் காக்கப் புறப்படுங்க: சீன வெடி’ என்ற பாடல்.


          “ தாளம் தட்டு தம்பி தாளம் தட்டு – சீனன்

              தவிடு பொடியாகத் தாளம் தட்டு 

            

என்று வீரரச நடைபோடுகிறது.


முடிவாக, ஆனந்த விகடன் இதழ் 1974-இல்  : “திரையுலகில் 

பணியாற்றிய போதும், பத்திரிகைகளில் எழுதிய 

போதும், கவியரங்குகளில் பங்கு பெற்றபோதும் சுப்பு 

தம் முத்திரையைப் பதிக்காமல் விட்டதில்லை. தமது 

பாடல்களில், எழுத்தில், பேச்சில் தேசிய உணர்வையும், 

தமிழ்ப்பற்றையும், கிராமிய மணத்தையும், 

நகைச்சுவையையும் கலந்து நம் இதயத்தைத் தொடும் 

ஓர் அபூர்வ பாணியை உருவாக்கியவர் அவர். “ என்று 

எழுதியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே கருத்து, 

கற்பனை, உணர்ச்சி, இசை என்று யாவும் கலந்து நாட்டுப் 

பாடல் இலக்கியத்தில் தனித்துவம் ஒளிரும் 

தமிழ்மணத்துடன் விளங்கும் ” மருக்கொழுந்தை”த்  

தமிழ்கூறும் நல்லுலகம் விரும்பி வரவேற்கும் என்பதில் 

ஐயமில்லை. 


  மண்ணின் நறுமணமும் 

                 மரபுதந்த நல்லுரமும் 

 வண்டமிழில் வளமுடனே 

                மலர்ந்துள்ள மருக்கொழுந்”தில்

  பண்பட்ட தன்மனத்தில் 

                 பயிரான எண்ணங்களை

  வண்ணமயப் பாடல்களாய் 

                வழங்கியுள்ளார் கவிசுப்பு.

  ஒண்ணொளி  மஞ்சரியாய் 

               உயுர்ந்தோங்கும்  இந்நூலும்

  எண்டிசையில்  வலம்வரும்  

               எனச்சொல்லி  வாழ்த்துவனே!


                   சு.பசுபதி 

        தகைசார் வாழ்நாள் பேராசிரியர் ( Professor Emeritus)

        டொராண்டோ பல்கலைக் கழகம், டொராண்டோ

         கனடா.  

===== 

*மருக்கொழுந்து - கொத்தமங்கலம் சுப்பு கவிதைகள்.* 

தொகுதி 1, விலை ரூ 400, தொகுதி 2, விலை ரூ400, 

வெளியீடு: 

மீனாட்சி பதிப்பகம், 

கொத்தமங்கலம் சுப்பு இல்லம், 

185/ 107. அவ்வை சண்முகம் சாலை, 

ராயப்பேட்டை, சென்னை - 600 014. 

தொலைபேசி: 044- 2811 6938, 2811 1992, 281 6440



( 4 அக்டோபர், 2020 - 'திண்ணை' இதழில் வெளியான 

கட்டுரை ]



[ நன்றி: திண்ணை : http://puthu.thinnai.com/?p=40981  }


தொடர்புள்ள பதிவுகள்:


கொத்தமங்கலம் சுப்பு: பசுபதிவுகள்


பசுபடைப்புகள்