வெள்ளி, 16 டிசம்பர், 2022

2362. சுடோக்கு : கவிதை

சுடோக்கு 

பசுபதி


சதுரனென நான்பெருமை சாற்றப் புதிய 

புதிரொன்றைத் தேடுகின்ற போது -- முதியர்

இளைஞர்கைச் செய்தித்தாள் ஏடுகளில் கண்டேன்

சுளுவாய்த் தெரிந்த சுடோக்கு.


கட்டத்தில் எண்களிடக் காலொன்றில் நின்றாலும்

கட்டம்தான் மிச்சம்! களைத்தயர்ந்தேன் !-- துட்டர்கள் 

ஒன்பதின்மர் தந்தனரே உன்மத்தம்! சித்ரவதைத் 

துன்பத்தின் எல்லை சுடோக்கு.


எண்ணும் எழுத்துமிரு கண்களெனப் போற்றென்றார்;

எண்நம்மைக் கைவிட்டால் என்செய்வோம்? -- நண்பரே!

போக்கு குறுக்கெழுத்துப் போட்டிகளில் உன்பொழுது! 

தூக்கிக் கடாசு சுடோக்கு! 

இது ‘திண்ணை’ மின்னிதழில் 2006 -இல்  வெளியானது )


தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: