சனி, 25 செப்டம்பர், 2010

கவிதை இயற்றிக் கலக்கு! -1

கவிதை இயற்றிக் கலக்கு! :  கட்டுரைகள் 1--16நல்ல வடிவில், ஓசை அழகுடன்   கவிதையை எழுதவும், பழமிலக்கியங்களை ரசிக்கவும்  அவசியமான யாப்பிலக்கணத்தை அறிய எண்ணியதுண்டா?

இத்தொடர் உங்களுக்காக..! எளிமையாகவும், அதே சமயம்
சுவாரசியமாகவும் யாப்பைப் பயில..!

 'கவிதை இயற்றிக் கலக்கு' என்பது யாப்பிலக்கணத்தைப்
பற்றி  நான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் ; இப்போது  பல மாற்றங்களுடன் , பயிற்சிகளுடன் ஒரு நூலாகவும் வெளியாகி உள்ளது .  அந்தக் கட்டுரைகளின் விவரங்களையும், அவற்றின் சுட்டிகளையும் இம்மடலிலும், இதன் தொடர் மடல்களிலும் கொடுக்கிறேன்.


நூல் விவரத்தை

கவிதை இயற்றிக் கலக்கு -5

என்ற சுட்டியில் பார்க்கலாம்.

( நூலைப் பற்றி நண்பர் எழுதிய வெண்பா. )

கானடாப் பாவலர் நூல் கற்றறிந் தாலுனக்(கு)
ஏனடா வீண் ஐயம் ஏற்றமிகத் - தேனாய்ச்
சுவையூறும் சொல்தேர்ந்து சுந்தரமாய் என்றும்
கவிதை இயற்றிக் கலக்கு!

-  அரிமா இளங்கண்ணன்

நூல் பற்றி டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ‘அமுதசுரபி’யில் எழுதியதையும், கவிமாமணி இலந்தை இராமசாமியும், பேராசிரியர் அனந்தநாராயணனும் நூலைப் பற்றி எழுதிய சில பகுதிகளையும்

கவிதை இயற்றிக் கலக்கு -6

-இலும்,

கவிமாமணி குமரிச்செழியனின்  மதிப்புரையை

கவிதை இயற்றிக் கலக்கு -7   

-இலும்

கலைமாமணி ஏர்வாடி  எஸ். இராதாகிருஷ்ணன் ‘கவிதை உறவு’ இதழில் எழுதிய  விமரிசனத்தை

கவிதை இயற்றிக் கலக்கு -10

-இலும் படிக்கலாம்.


======

அறிமுகம்

கவிதை இயற்ற யாரும் கற்றுக் கொடுக்க முடியாது!
உணர்ச்சியும், கற்பனையும் ஒருங்கிணைந்து மனத்தில்
எழும்பும் எண்ணமே நல்ல கவிதைக்குக் கருப்பொருள்.
ஆனால், கவியுள்ளம் படைத்தவருக்கு, ஓசை நயம் மிளிர,
ஒரு நல்ல வடிவில் கவிதையை அமைக்கக்
கற்றுக்கொடுக்கலாம். அதுவே யாப்பிலக்கணத்தின் பணி.
பழமிலக்கியங்களை ரசிக்கவும் யாப்பிலக்கண அறிவு தேவை.
தற்காலத் திரை இசைப் பாடல்களிலும், பல புதுக்
கவிதைகளிலும் யாப்பின் மரபணுக்கள் இருப்பதைப்
பார்க்கலாம். ஓசை, இசை அடிப்படையில் அமைந்த
யாப்பிலக்கணம் தமிழ் முன்னோர் கண்டுபிடித்த ஒரு
அறிவியல் பொக்கிடம். பாரி மகளிர் முதல் பாரதி வரை
யாவருக்கும் உதவிய அந்தச் செய்யுள் இலக்கணம்
நமக்கும் உதவும்.


மேலும் வலையில் படிக்க:

(  வலையில் உள்ள கட்டுரைகளில் உள்ள முக்கியமான பிழை திருத்தங்களையும் இங்கே இட முயல்வேன்.)


1. அறிமுகம் 2. கவிதை உறுப்புகள்   3. எழுத்துகள்
'எழுத்துகள்' பற்றி யாவருக்கும் தெரிந்த சில
அடிப்படைகளை, இப்பகுதியில் யாப்பிலக்கணக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.

4.நேரசை
எழுத்துகள் சேர்ந்து எழுப்பும் ஓசையையும், இசையையும் அறிவியல் வழியில் ஆராய நம் முன்னோர்கள் கண்டுபிடித்த பொக்கிடங்களே அசைகள்.

5. நிரையசை
அசைகள் மரபுக் கவிதைகளின் ஜீவநாடிகள் .

6. பாடலை அலகிடுதல் 7. சீர்கள் -1
கவிதை இலக்கணத் தொடரின் ஆறாம், ஏழாம் பகுதிகளில் பாடலை அலகிடுதல், ஓரசைச் சீர்கள், ஈரசைச் சீர்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளன

8. மோனை
கவிதை இலக்கணத் தொடரின் எட்டாம் பகுதியில் மோனை (alliteration) பற்றிய விளக்கங்கள் உள்ளன.

9. எதுகை 10. சீர்கள் -2
கவிதை இலக்கணத் தொடரின் இப்பகுதியில் எதுகை (rhyme) பற்றிய விளக்கங்கள் உள்ளன.

11. அலகிடுதல் : சில நுண்மைகள்
கவிதை இலக்கணத் தொடரின் இப்பகுதியில் குற்றியலிகரம், அளபெடை, ஆய்தம் , ஐகாரக் குறுக்கம், ஒற்றுகள் இவற்றை அலகிடுதலில் உள்ள நுணுக்கங்கள் , வெண்டளை பற்றிய விளக்கங்கள் உள்ளன.

பிழை திருத்தம்:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்.

12. வெண்பாவின் ஈற்றடி

13. தளைகள்
கவிதை இலக்கணத் தொடரின் இப்பகுதியில் வெண்பாவின் ஈற்றடியின் இலக்கணம், தளைகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன

14. குறள் வெண்செந்துறை
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் குறள் வெண்செந்துறை என்ற பாடல் வடிவத்தின் இலக்கணமும், காட்டுகளும் உள்ளன

15. ஆசிரியப்பா
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் ஆசிரியப்பா அல்லது அகவல் என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன

16. வஞ்சித் துறை
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் வஞ்சித் துறை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன

( தொடரும் )

வலையில் உள்ள என் மற்ற கட்டுரைகளைப் பற்றிய தகவல்களைக்  ”கவிதை இயற்றிக் கலக்கு”  என்ற தலைப்பில் உள்ள மற்ற பதிவுகளில் ( 2-4 )  பார்க்கவும்.

பி.கு.

ஆசுகவி சிவசூரியின் பின்னூட்டம்

பசுபதியாரின் வலைப்பூ
கவிஞர்களின் கரம்பிடித்தே அழைத்துச் சென்று
  கவிமரபைக் கருத்துள்ளே பதிய வைத்துப்
புவிமகிழ மரபொட்டிக் கவியி யற்றப்
  புரியும்படி இலக்கணத்தை எடுத்து ரைக்கும்
கவிதையியற் றிக்கலக்கென் னும்நூ லாசான்
  கனிவுடனே வடித்துவைத்த வலைப்பூத் தோட்டம்
அமுதமெனக் கவிசெய்ய வழியைக் காட்டும்,
  ஆசான்போல் உடனிருக்கும்,ஊக்கம் ஊட்டும்!


சிவ சூரியநாராயணன்


தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

6 கருத்துகள்:

Siva Suryanarayanan சொன்னது…

பசுபதியாரின் வலைப்பூ

கவிஞர்களின் கரம்பிடித்தே அழைத்துச் சென்று
கவிமரபைக் கருத்துள்ளே பதிய வைத்துப்
புவிமகிழ மரபொட்டிக் கவியி யற்றப்
புரியும்படி இலக்கணத்தை எடுத்து ரைக்கும்
கவிதையியற் றிக்கலக்கென் னும்நூ லாசான்
கனிவுடனே வடித்துவைத்த வலைப்பூத் தோட்டம்
அமுதமெனக் கவிசெய்ய வழியைக் காட்டும்,
ஆசான்போல் உடனிருக்கும்,ஊக்கம் ஊட்டும்!


சிவ சூரியநாராயணன்

kankaatchi.blogspot.com சொன்னது…

ஒரு ஆலம்பழத்திர்க்குள் இருக்கும் கண்ணுக்கு தெரியாத இரு விதைக்குள் ஒரு மாபெரும் ஆலமரம் ஒளிந்திருப்பதைப்போல் கவிதை படைப்பதற்கு
இவ்வளவு அங்கங்கள் தேவை என்றறியும்போது வியப்பு மேலிடுகிறது. அதனால்தான் முறையாக தமிழை கற்க மக்கள் அஞ்சி ஓடுகின்றனர். ஆனால் தமிழ் இலக்கணமே அறியாத பலர் எதுகை மோனையோடு சில வரிகளை எழுதிவிட்டு காசு பார்த்துவிடுகின்றனர் முழுமையாக தமிழ் படித்தவன் ஒரு வேலை சோற்றுக்கு இன்றி அலையும் நிலை உள்ளது.

KABEER ANBAN சொன்னது…

பலருக்கும் பயன்படும் வகையில் இந்த இடுகையின் இணைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். மேலும் வழிகாட்டுதல் வேண்டும்.

Pas S. Pasupathy சொன்னது…

@KABEER ANBAN
நன்றி! "சந்தவசந்தம்" என்ற கூகிள் குழுவில் , மரபுக் கவிதை பற்றிப் பல ஐயங்களுக்கு எனக்குத் தெரிந்தவரை விடைகள் கொடுத்து வருகிறேன். அக்குழுவில் பலரும் கவிதைப் பயிற்சிகளையும் இட்டு, திருத்தங்கள் சொல்லும் சிறந்த கவிஞர்களின் வழிகாட்டலிலிருந்து தெளிவு பெறுகிறார்கள்.

Pas S. Pasupathy சொன்னது…

https://www.facebook.com/groups/santhavasantham/ - என்ற முகநூல் குழுமத்திலும் இப்போது யாப்பிலக்கணப் பயிற்சிகள் தொடர்ந்து வருகின்றன.

Angarai Vadyar சொன்னது…

Kudos to you for your great contributions and help to Tamil lovers.