ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சங்கீத சங்கதிகள் - 6

ஸங்கீதத்தின் பெருமை
அரியக்குடி ராமானுஜய்யங்கார்
‘கல்கி’ விகடன் ஆசிரியராக இருந்தபோது,   பல ‘புதிய’ எழுத்தாளர்களை எழுத்துலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.  இவர்களில் அரியக்குடியாரும் ஒருவர். இதோ அவர் 1938 ‘விகடன்’ தீபாவளி மலரில் எழுதிய ஒரு அபூர்வமான கட்டுரை!  அவருக்கே உரித்தான நகைச்சுவையும் கட்டுரையில் பரிமளிப்பதைப் பார்க்கலாம்!

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


 [ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள் ;

அய்யங்காரின் பிளேட் : ‘கல்கி’

அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி!

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

வெள்ளி, 28 டிசம்பர், 2012

தென்னாட்டுச் செல்வங்கள் - 6

235. சீறிய அழகும் ஆறிய அழகும்  ( திருவாரூர்)

சில்பி + தேவன்இன்று ஆருத்திரா தரிசனம் அல்லவா?

திருவாரூரில் உள்ள நடராஜரையும், துர்க்கையையும் ‘சில்பி’யின் கண்மூலமும், ‘தேவ’னின் கைமூலமும் தரிசிக்கலாமா?

‘1948-இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய தொடரில் இது 235-ஆவது கட்டுரை.
[நன்றி; விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி

வியாழன், 27 டிசம்பர், 2012

சங்கீத சங்கதிகள் - 5

சங்கீத ‘ஜோக்ஸ்’!

சிரிகமபதநி - 0

[ மேற்கண்ட படம் எனக்கு அரியக்குடி ராமானுஜ ஐயங்காரையும், பாலக்காடு மணி ஐயரையும் நினைவுறுத்துகிறது! :-)) ]
[நன்றி: விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:

சிரிகமபதநி

சங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம்

சங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி

மாமாங்க மாறுதல்கள் ! ..மாலி-சில்பி

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

திங்கள், 24 டிசம்பர், 2012

சங்கீத சங்கதிகள் - 4

நான் ஒரு சங்கீத கலாநிதி . . .

 பயப்படாதீர்கள்! நான் ஒரு சங்கீத கலாநிதி பயன்படுத்திய சில நூல்களை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லவந்தேன்!  அவ்வளவுதான்! ( இதுவே அவரைப் பற்றி இங்கு ஒரு மடல் இடும் உரிமையை எனக்குக் கொடுக்கிறது, அல்லவா?)


இதோ அந்த நூல்களின் சில பக்கங்கள்:


என்னிடம் எப்படி அந்த நூல்கள் வந்தன என்பதைவிட, அந்தச் சங்கீத கலாநிதியைப் பற்றி அறிந்துகொள்வது  இன்னும் முக்கியமல்லவா? :-))

இதோ பிரபல வழக்கறிஞர் வி. ஸி.கோபாலரத்னம் அவர்களின் கட்டுரை!
1953-இல் விகடனில் வந்தது.
[நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சில சங்கீத வித்வான்கள் பற்றி டி.எல்.வெங்கடராமய்யர்

சங்கீத சங்கதிகள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சங்கீத சங்கதிகள் - 3

சங்கீத சீசன் 1953 : ஆடல் பாடல் -2
முந்தைய பகுதி:

சீசன் 1953 - 1

(தொடர்ச்சி)

அதே 53- சங்கீத சீசனில் ‘விகடனில்’ வந்த இன்னொரு ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ:


அந்த வருடம் பாடிய மணக்கால் ரங்கராஜன் அவர்களைப் பற்றி நிறைய எழுதலாம்.

ஒரே ஒரு சின்ன தகவல் மட்டும்--இப்போதைக்கு! அவர் “எங்கள் தெரு மாப்பிள்ளை’! ஆம், நான் சென்னையில் தியாகராய நகரில் இருந்த அதே தெருவின் கோடியில், பிரபல எழுத்தாளர் ‘துமிலன்’ குடியிருந்தார். அவருடைய மகள் பத்மாவிற்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ரங்கராஜன் , பிறகு அவரையே மணம் செய்துகொண்டார் என்பது வரலாறு! (அண்மையில் அவருடைய ரசிகர் லண்டன் பத்மநாப ஐயர் ரங்கராஜனைப் பற்றி எடுத்த ஆவணப் படம் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.)டி.எல்.வெங்கடராமய்யரைப் பற்றி இதில் படித்திருப்பீர்கள்.
அவருக்கு அறுபதாம் ஆண்டு நிறைவும் இந்த சீஸனில்  நடந்தது  என்று நினைக்கிறேன். அவரைப் பற்றி விகடனில் வந்த ஒரு கட்டுரையும் என்னிடம் உள்ளது.

பின்பு இடுவேன்.

(தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:


சீஸன் 53 : 3

சீசன் 54 : 1

சீஸன் 54: 2

சீஸன் 54 -3

மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்
[நன்றி: விகடன்]


புதன், 19 டிசம்பர், 2012

சங்கீத சங்கதிகள் - 2

”மாலி”யின் கைவண்ணம் உயிரும், உணர்ச்சியும் கொண்ட சித்திரங்களால் கர்நாடக சங்கீத வித்வான்களை    நம் கண்முன் நிறுத்தியவர் ‘விகடன்’  ஓவியர்  மாலி.
இவருக்கு முன் தமிழிதழ்களில் இத்தகைய சித்திரங்கள் வரவில்லை என்றே தோன்றுகிறது.

“ மாலி என்றழைக்கப்படும் மகாலிங்கம் விகடனில் ஒரு சகாப்தம். ஆனந்த விகடன் என்பது என்ன மாதிரியான பத்திரிகை, அதன் காரக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்று நம் கையில் தவழும் விகடனுக்கான அஸ்திவாரம் அமைத்தவர் மாலிதான்” என்கிறார் ‘கோபுலு’

1930 -களில் மாலி  “ஆனந்த விகடனில்” வரைந்த சில படங்கள் இதோ:

ஏழு ஸ்வரங்களுக்கு ஏற்றம் கொடுத்த ஏழு வித்வான்கள் ![நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்திங்கள், 17 டிசம்பர், 2012

தென்னாட்டுச் செல்வங்கள் - 5

தென்காசி ரதி -மன்மதன், 
          ஆவுடையார் கோவில் தலக் கதை  ...’சில்பி’யின் மனைவியின் பெயர் பத்மா; சில்பியின் இயற்பெயர் சீனிவாசன்.

மனைவியின் பெயரையும் தன் பெயரின் இறுதியையும் சேர்த்து, கிரிதரனுக்குப் பத்மவாசன் என்று நாமகரணம் செய்து, தன் சீடனாக அவரை ஏற்றுக்கொண்டார் ‘சில்பி’ இன்று பிரபல ஓவியராக விளங்கும் பத்மவாசன் சொல்கிறார்:

சில்பி அவர்கள் படம் வரைவதை ஒரு தவமாக வைத்திருந்தவர். கடுமையான ஆசார அனுஷ்டானங்களும், நியம நிஷ்டைகளும் அவருக்கு உண்டு. பயங்கரமான கோபக்காரர் வேறு! படங்கள் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று தன்னை வருத்திக் கொள்ளலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது.

அவர் வீட்டில் பல நோட்டுப் புத்தகங்களில் விதவிதமான முகங்கள் வரையப்பட்டிருப்பதை ஒரு சமயம் கண்டு, ‘இவை என்ன ?’ என்று கேட்டேன்.
அது, அவரது பயிற்சி முறை என்று சொன்னார்.

தினமும் பொழுது விடிந்ததும் ஒரு நோட்டுப் புத்தகம், பென்சிலுடன் ட்ராமில் ஏறி உட்கார்ந்து கொள்வாராம். (தொடக்க காலங்களில்) ‘இன்று ஐம்பது முகங்களையாவது வரையாமல் சாப்பிட மாட்டேன்’ என்று சபதம் செய்து விட்டு, ட்ராமில் தமக்கு எதிரே அமருகிறவர்களைப் பார்த்துப் பார்த்து சளைக்காமல் வரைந்து கொண்டே இருப்பாராம். ஐம்பது முகங்களைச் சரியாக வரைந்த பின்னரே உணவு! படங்கள் சரியாக அமையாவிட்டாலோ, அத்தனை பேர் அகப்படா விட்டாலோ அன்று பட்டினி தானாம்!

சிலிர்த்து விட்டது எனக்கு! எப்படிப்பட்ட ஒரு தீவிரம் இருந்தால் இத்தனை நெஞ்சுரம் வந்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்த்தேன்.

தொழிலில் வெறித்தனமான ஈடுபாடும் வெற்றி பெரும் உத்வேகமும் உள்ள யாருமே இப்படித்தான் — உழைப்பதற்கு அஞ்சுவதில்லை.“

[ நன்றி: ஜெயித்த கதை, ஔரங்கசீப் (பா.ராகவன்), மதி நிலையம், 1999.
http://balhanuman.wordpress.com/ ]

  48-இல் வந்த மேலும் இரு கட்டுரைகள் இதோ:[நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் -1

தெ.செ -2

தெ.செ. -3

தெ.செ. -4

’சில்பி’யின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்: மற்ற கட்டுரைகள்

~*~o0O0o~*~

கவிஞர் சிவசூரியின் பின்னூட்டம்:

மனம் மயக்கும் மன்மதன் 
1)

விண்மீது மோதுகின்ற கலசம் கொண்ட 
   விசுவநாதர் எழுந்தருளும் கோயில் தன்னில்
கண்காணத் தென்காசி நகரில் அங்கே
   கவினழகுச் சிலயாக நிற்கும் மாரா
மண்மீது வாழ்கின்ற மக்கள் உன்றன் 
   வடிவழகைக் கண்டாலே காதல் தானே
உண்டாகி ஓடாதோ ஆறாய் எங்கும்
   ஓரம்பை விடுவதுவும் தேவை ஆமோ!


2)

அறியாத பருவத்தார் நெஞ்சம் மீதும் 
   அடுக்கடுக்காய் ஐங்கணைகள் எறிவாய் நீயே
செறிவான செந்தமிழர் கோட்டம் கட்டிச்
   செப்பமுடன் நினைத்தொழுதார் முந்தை நாளில் 
நிறையாத இன்பங்கள் நித்தம் தந்தும் 
   நிலமெங்கும் உயிர்வளரும் நின்னால் அன்றோ
மறைவாக நின்றென்றும் அம்பை விட்டு 
   மையலென்னும் பயிர்வளர்க்கும் மன்னன் நீயே.


3)

தென்றலெனும் தேரேறி நேரில் இங்கே
   தென்பாண்டி நாட்டிற்கே வந்தாய் மாரா!
தென்றலது என்றென்றும் பொதியம் என்னும் 
   செந்தமிழர் நன்னாட்டு நிதியம் ஆகும் 
கன்னலதை வில்லாக்கிக் கண்கள் காணக்
   கவினழகாய் வந்தனையே காமன் நீயே 
மன்னுபுகழ் முத்தமிழாம் மொழியின் முன்னே
   கன்னல்வில் செயலற்றுப் போகும் கண்டாய்.


4)


குற்றாலக் குறவஞ்சி எனுமோர் நூலில் 
   கொஞ்சுதமிழ் முழங்குவதைக் கேட்டால் போதும் 
வற்றாத ஊற்றாகக் காதல் நெஞ்சில் 
   மடைதிறந்த் வெள்ளமெனப் பெருகிப் பாயும் 
பற்றேதும் இல்லாத பத்தர் கூடப்
   பாசத்தால் பரிதவிக்கச் செய்யு மாறு 
கற்றோரும் கல்லாரும் களிக்கும் வண்ணம் 
   கற்கண்டாய்ப் படைத்துளதைப் பார்த்தால் போதும்.


5)

கரும்பாலே வில்செய்து மலர்கள் வைத்துக்
   கணையாக விடுகின்ற வேலை வேண்டாம் 
சுரும்பெல்லாம் நாணாகும் தேவை இல்லை 
   சுகமெல்லாம் தானாகப் பெருக்கும் காதல்
அரும்பெல்லாம் மலராகும் முப்பால் பார்த்தால்
   அழகெல்லாம் கண்முன்னே தானே தோன்றும்
விருந்தாக இதையுண்ணும் மக்கள் நெஞ்சில் 
   வெள்ளமென இன்பங்கள் பற்றும் தானே.


6)

பாண்டியனின் சங்கத்தில் தலைமை ஏற்றுப்
   பைந்தமிழை வளர்த்தவனாம் பரமன் நாடு;
ஆண்டவனே ஆடல்பல செய்த ளித்த 
   அழகுதமிழ் நாட்டினிலே முன்னோர் அன்று 
வேண்டியுனைத் தொழுதிடவே நோன்பும் செய்து 
   விருப்பமுடன் பாடியதால் வந்தாய் போலும், 
ஆண்டுதொறும் உன்புகழை நெஞ்சில் வைத்தே
   அழகான லாவணிகள் பாடும் நாடு.


7)
ஐந்திணையைப் பாடுகின்ற மக்கள் எங்கள் 
   அகமெல்லாம் காதலென்றும் ஆறாய்ப் பாயும் 
ஐங்கரனின் தம்பியெனும் குமரன் கண்டார் 
   அனங்கனுனை ஏறெடுத்தும் பார்ப்பர் உண்டோ?
பைந்தமிழர் நன்னாட்டுப் பெண்டிர் என்னும் 
   பாசமுகம் இருக்கையிலே வேறென் வேண்டும்?
ஐங்கணையை வைத்திங்கே யாதே செய்வாய்
   ஐந்தருவி வீழுகின்ற அழகாம் நாட்டில்?8)
என்பதனால் நீயேதான் சிலையாய் மாறி 
   எழிலாகக் கண்முன்னர் உள்ளாய் போலும் 
நின்விரலின் நகவழகும் கரும்புத் தோகை 
   நெடுகெங்கும் ஓடுகின்ற நரம்பும் கூட 
மன்பதையில் கற்சிலையில் காணும் வண்ணம் 
   வடிப்பதுவும் இயலுவதும் உண்டோ, இல்லை 
நன்கிதனை நானறிவேன் நீயே தானே 
   நானிலத்தில் படிவமென நிற்கின் றாயே
.


===========

இரதியென்னும் எழிற்பெட்டகம் 
1)

மங்கலம் பொங்கிட மன்பதை வாழ்ந்திட 

          மன்மதனை- அந்தத்    

திங்களைச் சூடியும் தீயினை ஏந்தும் 

          சிவனார்முன் - உடன்    
ஐங்கணை விட்டிட ஆணை கொடுத்திட
         அமரரெலாம் -அவன்    
அங்கம் நடுங்கி அலறிச் சிலையென
         ஆனபின்னும்      


2)

மீண்டும் அவனையே வேண்டிடத் தேவர் 

         வினயமுடன்- அவனைத்    

தீண்டிடச் சொல்வது தீயை எனவே 

         தெரிந்ததனால்- இனி    
மாண்டுயிர் போகும் மரணம் அணைக்கும் 
         மதனனையே- என    
ஆண்டவன் பக்கம் சிலையென ஆனாள்
         இரதியுந்தான்   !

3)

அன்னப் பறவை எழிலார் உடல்மேல் அ  

          அழகுரதம் -இவள்    

என்னத் தெரிய இரதியும் இங்கே 
          எழுந்தருள - ஒளிர்
கன்னக் கதுப்பைக் கிளியும் தடவிக் 
          களித்திருக்க - ஒரு
வன்னப் புதையல் வனிதையாய் இவ்விடம் 
          வந்ததுவே!


4)

அமுதக் கலசம் அணிமணி சூடி 

         அமர்ந்துளதோ- இரு

குமுதம் விழியெனக் கொஞ்சும் முகத்தில் 

         குடியுளவோ - ஒரு
சிமிழே மதுவைத் திரட்டிய செவ்விதழ் 
         ஆனதுவோ - நம்
தமிழே மகளெனத் தாரணி மீதில் 
         தவழ்கிறதோ!


5)
மாரன் மனத்தினில் மையல் விளைத்திடும் 

         மாமலரோ - இவள் 

நேரில் நிலத்தினில் காதற் பயிரென 

         நிற்பவளோ - இவள்
பாரோர் பருக அமுதைப் பெருக்கிடும் 
         பால்நிலவோ - இவள்
சீரார் தமிழரின் சிற்பக் கலைஞரின்
         அற்புதமோ!===========

சனி, 15 டிசம்பர், 2012

சங்கீத சங்கதிகள் - 1

சங்கீத சீசன் 1953: ஆடல் பாடல் -1 
எம்.கே.தியாகராஜ பாகவதரின் தமிழிசைக் கச்சேரியின் சில பகுதிகளை சென்னை வானொலி ஒலிபரப்புகிறது.

2009-இல் பத்மஸ்ரீ விருது வாங்கப்போகும் டாக்டர் ஜான் ரால்ஸ்டன் மார்   வித்வத் சபையில் ஒரு பிரசங்கம் செய்கிறார்.

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் எதிரில் உட்கார்ந்திருக்கும் மந்திரி ஸி. சுப்ரமணியத்தைப் பார்த்தவாறே “ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே” என்று பாடுகிறார்.

இவையெல்லாம் எப்போது நடந்தன என்று கேட்கிறீர்களா? 1953- 'சீஸன்’ .
 புல்லாங்குழல் இசைக்கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளைக்குச் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப் பட்ட ஆண்டு.

ஐம்பதுகளில் ‘ஆனந்தவிகடனில்’ ஆடல் பாடல் என்ற தலைப்பில், சென்னையில் நடக்கும் இசை விழாக்கள் பற்றிப் படங்களும் , கட்டுரைகளும் வாராவாரம் வரும். அவற்றில் சிலவற்றை  உங்கள் முன்வைக்கிறேன்.

விகடனில் அந்த 53 சீஸனில் வந்த முதல் ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ!


மேலும் அந்த ஆண்டில் வந்த சில கட்டுரைகள் உள்ளன ....

[நன்றி; விகடன்]

(தொடரும்)

தொடர்புள்ள பதிவுகள்:சீஸன் 53: 2

சீஸன் 53 : 3

சீசன் 54 : 1

சீஸன் 54: 2

சீஸன் 54 -3

மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்


வெள்ளி, 14 டிசம்பர், 2012

தென்னாட்டுச் செல்வங்கள் - 4

கிருஷ்ணாபுரம், நெல்லை, ஆவுடையார் கோவில்’சில்பி’ என்றாலே பலருக்கும் அவர் ‘விகடனில்’ வரைந்த ஓவியங்கள் தாம் நினைவுக்கு வரும். இது நியாயம்தான். ஏனென்றால் சில்பி விகடனில் 22 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.   இருப்பினும், சில்பியின் ஓவியங்கள் மற்ற பல இதழ்களிலும் பவனி வந்திருக்கின்றன.

 1945-இலிருந்து விகடனில் முழுநேர ஓவியராய் இருந்த ‘சில்பி’, 1960-இல் விகடனை விட்டு நீங்கியபின், பவன்ஸ் ஜர்னல், அமுதசுரபி, கலைமகள், தினமணி கதிர், இதயம் பேசுகிறது என்று பல இதழ்களில் ஓவியங்கள் வரைந்துள்ளார்.   ( விகடனைத் தவிர, மற்ற இதழ்களில் ‘சில்பி’ வரைந்த ஓவியங்களும் தொகுக்கப்பட்டு நூல்களாக வரவேண்டும்! )

சில நூல்களைச்  ‘சில்பி’யின் ஓவியங்கள் அலங்கரித்திருக்கின்றன . உதாரணமாக, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட கண்ணதாசனின் “ அர்த்தமுள்ள இந்துமதம்” என்ற 10 நூல்களின் ஒரு தொகுப்பு முழுதும் ‘சில்பி’யின் அற்புத சித்திரங்கள் இருக்கும் . தினமணி கதிரில் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற ஒரு தொடரில் சில்பியின் ஓவியங்கள்
வந்ததென்று படித்திருக்கிறேன். இந்தத் தொடர் நூலாக வெளிவந்ததா என்று தெரியவில்லை. ( வேறு நூல்களில் சில்பியின் ஓவியங்கள் இருப்பது தெரிந்த  ரசிகர்கள் இப்பதிவின் பின்னூட்டத்தில் அவற்றின் பெயர்களைத் தெரிவிக்கலாம்.)

இப்போது , மேலும் சில ‘தென்னாட்டுச் செல்வங்களை’க் கண்குளிரப் பார்க்கலாமா? ‘தேவன்’ மூலமாகக் கற்கள் சொல்லும் கதைகளையும் படிக்கலாமா?  ( இவை யாவும் 1948-இல் விகடனில் வந்தவை. ஆம், 60-ஆண்டுகளுக்கு முன்பு!)
[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:


தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி


பின்னூட்டம்:

“கற்கள் சொல்லும் கவிதைகளை”  அனுப்புகிறார் சிவசூரி.

அரச குமாரியும் அருந்தவப் புதல்வனும் 


தன்னந் தனிமையை விரும்பி - பெரும் 
   தவம்செய் முனியை நினைந்து 
மின்னற் கொடியென வளர்ந்து - ஒளி 
   வீசும் மதியென நடந்து 
கன்னற் கதுப்புகள் சிவந்து -எழிற் 
   கனியாய்க் காதற் படர்ந்து 
இன்னும் வேறென வேண்டும் - என
   ஏசும் எழிலென வந்தாள்.காலை எழிலெலாம் கலந்து -இரு 
    கைகால் கொண்டிவண் மலர்ந்து 
மாலை மதியெனக் குளிர்ந்து - ஒரு 
    மங்கை உருவினில் மிளிர்ந்து 
சோலை மலரென மணந்து- சுகம்
    தோற்றிடத் தன்னுள் இணைந்து 
வேலை நிகர்விழி விரிந்து -  இள
    வேனிலின் சுகமெனச் சரிந்து  ரதியெனக் கண்முன் படர்ந்திட - புது 
   ரசமது பெருகி அடர்ந்திட
கதியிவன் எனவே தொடர்ந்திட - அவன்
   கணமதில் தவமெலாம் துறந்திட 
மதிமனம் மற்றவை மறந்திட - சுக
  மழையினில் உடலெலாம் நனைந்திட
நிதநிதம் அவளுரு அருந்திட- ஒரு 
  நிருமல வடிவினில் மறைந்தனன்.நரைதிரை தோன்றிய வடிவில் - செந்
  நாவும் நடுங்கிட வந்தும் 
அரையதன் அழகவன் நோக்க - அவன்
  அகமதை அவளும் பார்க்க 
கரையதை உடைத்துக் காதல் - ஒரு 
   கடலெனக் கணமதில் மோத
வரைநிகர் தோளினை மறைத்த- புது 
   வடிவதன் மெய்யதைக் கண்டாள்.ஒருவிரல் தனையுடன் அசைத்து -அவன் 
    உளமதில் குழலென இசைத்துத் 
திருமகன் முனமிடை ஒசித்து - எழிற் 
    சிலையென அவனுளம் வசித்துப்  
பெருநிதி எனஅவன் நினைக்க - அந்தப் 
    பெருமையில் மகிழ்ச்சியில் மிதக்க 
திருமகள் எனஅவள் உதித்தாள்- அந்தத் 
    திருமுனி தாள்விழி பதித்தாள்.


வான்மதியைப் பெண்ணாக்கி வளர்கதிரை உடலாக்கி 
மீன்கொடியை விழியாக்கி மின்னலதை இடையாக்கி 
வான்சிலையை நுதலாக்கி வடிவழகுப் புருவமெனத் 
தேன்கரும்பை விடுத்துவிட்டுத் தென்றலெனும் சுகமளிக்கும் 


தானமரும் ஊர்தியினைத் தண்ணளியால் உடனனுப்பிக் 
கான்மயிலைக் குழலாக்கிக் காதலெனும் பயிர்வளர்க்க 
ஞானமுனி அவனெதிரே நளினமிகு நங்கையென 
ஊனுருக்க மதனனவன் உலவேனவே விடுத்தனனோ!


காலிருக்கும் சிலம்புடனே கைவளையும் சிரித்துவர
நூலிடையால் மனத்துள்ளே நுழைந்துவிட்ட வேதனையால் 
வேல்விழியைப் பார்த்திடவும் வெங்கனலைப் பொழிந்திடவே 
சீலமிகு முனிகுமரன் சித்தமெல்லாம் இழந்தனனே!


காலமெல்லாம் தவமிருந்தும் காதலினால் முனிகுமரன் 
ஞாலமதில் நிலையழிய நங்கையென வந்ததுவும் 
சாலமிகு மதனனவன் தந்திரத்தால் செய்துவிட்ட 
கோலமதன் கொடுமையினைக் கொண்டனனோ தவப்பயனாய்!

======
வீரபத்திரன் 


1)

நெற்றிக் கண்ணனைப் பற்றிய சினத்தில் 
நின்றிடும் ரோமம் நிறைந்தவனாய் - கரும் 
நிழலெனத் தோன்றும் உடலுடனே- அந்த
நீசர் அச்சம் அடைந்திடவே 

கேடயம் தூக்கிய கோலனென- வரும் 
கேட்டினை நீக்கிடும் காலனெனக்


2)

குத்திட் டிருக்கும் கேசத்தைப் பின்னிக் 
கொண்டை போட்டுப் பிறந்தவனை - விழி
கோபக் கனலில் வெடித்தவனை - இரு
கோரைப் பல்லைக் கடித்தவனைக் 
குன்றென நிற்கும் தோளுடனே - வெகு
கூரிய முனையுடை வாளுடனே


3)

சிற்பியின் கையுளி செதுக்கிய கல்லில் -கடும்
சீற்றம் பொங்கிடச் செய்துவிட்டான் -சில்பி
சித்திரம் தனிலதை வடித்துவிட்டான் - நம்
சிந்தையில் தனியிடம் பிடித்துவிட்டான்
சீறும் பத்திரன் நிழலதுவும் - பகை 
செத்திடத் தீய்க்கும் தழலெனவே.

4)

வற்றா நதியென வளங்கள் பெருக இவன்
நற்றாள் பற்றுவர் நானிலந் தன்னில்- அடி 
பற்றிய பத்தரைப் பாரினில் காக்கும் -அவர் 
பாவமும் பயமும் பொடிபடப் போக்கும் - வீர
பத்திரன் சீரினைப் பகரவந்தேன்- என்
பாடலை உம்முடன் பகிரவந்தேன்


(வேறு)

1)

கண்ணிரண்டில் பொங்குதீயைக் காட்டு வீர பத்திரனைக்
கல்லொன்றில் காட்டிவைத்தான் சிற்பி -அதைக்
காகிதத்தில் தீட்டிவைத்தான் சில்பி-வீரன்


காலடிகள் பட்டவிடம் தொட்டவிடம் எங்கும் பெரும்
பூகம்பம் வந்ததுபோல் ஆட்டம் -அந்தப் 
பொன்னுலகில் எல்லோரும் ஓட்டம் - ஒரு2)

பெண்ணைமணம் செய்தவனின் சீரொன்றும் அறியாத தக்கன் 
பேதைமையால் முறைதன்னை மறந்தான் - அந்த 
வேதநெறி தன்னைஅவன் துறந்தான் 

பூதகணம் பின்தொடர நாதனவன் முன்நடக்கப்
பொங்கியெழும் ஈசன்முகச் சீற்றம் - அந்தப்
போதுவீர பத்திரனின் தோற்றம்.-இரு

3)

கண்ணிமைகள் விண்ணிருக்கப் பார்க்குவிழி மண்ணிருக்க 
ஆலகாலம் உண்டவன்போல் வந்தான் - பெரும் 
காலகாலன் போலெனவே நின்றான்

பெண்மயில்கள் அஞ்சிடவே போகும்வேளை வந்ததென 
மண்மீது தக்கனவன் கிடந்தான் - அவன் 
மேனிவீரன் கொக்கரித்து நடந்தான்.-எழிற்

4)

பின்னிவைத்த சடைமுடி பீடுடனே தாங்கியவன்
பெம்மானின் அம்சமென உதித்தான் - தக்கன்
சீரழிய செருக்கழிய மிதித்தான்.

தூக்கிவைத்த மான்மழு தொங்குகின்ற பாம்புடனும்
தோன்றுமதி கொண்டவனே விதித்தான் - இவனந்தத்
துட்டன்மேல் தன்வாளைப் பதித்தான்.

5)

ஆவுடையார் கோவிலிலே அற்புதமாய்க் காணும்படி
ஆக்கிவைத்த கற்சிலையைக் கண்டோம் - அதன்
அம்சமதைப் பேறெனவே கொண்டோம்.


சூரதீரன் வாளெடுத்துத் தக்கனுடல் தன்னில்படு வேகம்
கோரமுடன் குத்துவதைக் காட்டும் - சிலை
வீரபத்ரன் சீரதனை நாட்டும்.============

வீரபத்ரரின் தளபதி

1)

வீர பத்ர சாமி சொல்லை வேதம் போல எண்ணியே
   வேக வேகம் படைகள் போக வீறு கொண்டு முன்னரே
தாரை தட்டை மேளம் கொம்பு தம்மை எல்லாம் முழங்கியே
   தானை போடும் தாள மோடு வானை அதிர வைத்திடும்
சூர தீரர் சூழ நேரில் தோன்றும் வீர தளபதி
   தூணில் இங்கு சிற்ப மாகத் துணிவை ஊட்டக் காணுறான்
ஆர வாரம் செய்த வண்ணம் ஆடிப் பாடி வருகிறான்
   ஆல காலம் உண்ட தேவர் ஆணை எங்கும் நாட்டவே.

2)

வில்லைப் போல வளைந்த மேனி விளையும் வலிமை காட்டவே
   வீர வாளும் கையு மாக விண்ணைத் தீண்டும் கோலமாய்
மல்லர் போலும் உருண்ட தோளும் மலையைப் போலும் மார்புடன்
   வந்து நிற்கக் கண்ட வையம் வணங்கி நெஞ்சம் மகிழவே
எல்லை யின்றி அழகை யெல்லாம் ஏந்தி நிற்கும் சிலையிதை
   இங்கு வந்து போன பேர்கள் இதயம் ஏங்கும் நிலையதைச்
சொல்ல வேண்டி மார்க்கம் தேடி சுற்றிச் சுற்றி அலையவே
   சொக்கிப் போன புலவர் பாடல் சூட்டிப் பார்க்கத் துணிவரே.
3)

தண்டை யாட சிலம்பு மாட சலங்கை கூட ஒலிக்கவே
   தங்க மாலை வைர மாலை தாவி மார்பில் குதிக்கவே
கொண்டை கொண்ட கோல மோடு கொம்பும் ஊதி வருகிறான்
   கொஞ்சம் கூட அச்ச மின்றிக் குழந்தை கூடப் பார்க்குதே
கெண்டை போல விழியி ரண்டும் கிளுகி ளுப்பை ஊட்டுதே
   கீர்த்தி மிக்க மூர்த்தி கண்டு கிறுகி றுத்துப் போகவே
வண்டின் கூட்டம் வந்து தேனை மாந்தி மாந்தி மகிழவே
   வாசம் வீசும் பூவை ஏந்தும் வடிவைக் கண்டு களிக்குதே.

4)
இங்கு மங்கும் தோலின் மேலே எழிலை ஊட்டும் மடிப்புடன்
   என்பும் கூடத் தெரியும் வண்ணம் இந்தச் சிலையைச் செய்துளார்
தொங்கு மீசை தோன்றும் போதும் துளியும் கோப மின்றியே
   துண்டு கூட ஆடும் அந்தத் தோளும் இன்ப மூட்டுதே
சிங்கம் போல நடைந டந்தும் சிரிப்பைச் சிந்தக் காண்பதால்
   தென்றல் வந்து தீண்டு தென்று சிந்தை மகிழ்ந்து போகுதே
அங்க மெங்கும் அணிகள் சூடி ஆடிப் பாடும் அழகினை
   ஆசை கொண்டு பாடும் போது அவனி மறைந்து போகுதே.


சிவ சூரியநாராயணன்.

==============