மலர் அன்னை
பாரதி
பாரதி
கதைகளுக்கு வரையப்படும் சித்திரங்களைப் போலவே, பாடல்களுக்கு வரையப்படும் ஓவியங்களும் அப் பாடல்களுக்குத் தனி அழகைக் கூட்டும். படத்தையும், பாடலையும் சேர்த்துப் பார்க்கும்போது, படிக்கும்போது கிடைக்கும் இன்பமே இன்பம்!
இதோ ஒரு பாரதி பாடலும், மணியம் வரைந்த படமும்! 50-களில் வந்தது என்று நினைவு.
( பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பிரபல ஓவியர் வரைந்த ஓவியம் உள்ள கவிதைத் தொகுப்பு இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் அடிக்கடி கனவு காண்பதுண்டு! இப்போது தொழில் நுட்பம் இருக்கும் நிலையில், இப்படி ஒரு நூல் வரமுடியாதா? வரக்கூடாதா? சொல்லுங்கள்!)
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
5 கருத்துகள்:
பாரதி பிறந்த நாள், கலைமகள் வாழ்த்து, மணியம் ஓவியம் - மகோன்னதப் பொருத்தம்! மிக்க நன்றி!
ரொம்ப அழகுறவே பாரதிப் பணி செய்கின்றீர் பசுபதி!
வாழ்க.. எடுத்துக்காட்டும் படமும் சோலை நடுவில் மயிலொன்று தோகை விரித்தாற்போன்று அழகோ அழகு..
யோகியார்
அண்ணா!
அருமையான யோசனை. இதை நண்பர்களிடம் சொல்லி முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
ரமணன்
நல்ல கருத்து அய்யா. தமிழார்வளர்கள்
தர்மகர்த்தாக்கள் சமயசஞ்சீவிகள் பதிப்பாளர்கள்
முதலியவர்கள், மக்கள் பயனுற இத்தகைய
செயற்பாட்டைச் செய்யலாம்.
---------------------------------
பாவகை : ஆசிரியத் துறை
____________________________
இப்படியாய் சிந்தனை எவர்க்கு மில்லை
இலக்கியத்தை வளர்க்க மனமுமில்லை
தம்முடைய திறமையைக் காட்டவேண்டி நாளும்
தம்பிடித்து மேடைதோறும் வார்த்தைஜாலம்
பத்திரிக்கை பக்கத்தில் படமும்வர படாதபாடு
பட்டுகாசு பணம்சேர்கும் காலம்
பாரதியை வானவில்லா கப்பார்க்கும் பாவலர்கள்
சாரதியாய் தமிழ்த்தேரை செலுத்துகின்றார்
ஜாலராக்கள் தமிழ்க்கவிஞர் ஒழியவேண்டும் பாரதியார்
சாற்றியகவி தைகளிதுபோல் வெளிவரவேண்டும்
சங்கத்தமிழ் மரபுக்கவிதை நாயன்மார்கள் ஆழ்வார்கள்
பொங்குமனத் தேந்தமிழில் திளைக்கவேண்டும்
புன்மை நிலையகலப் பொய்தீர்ந்த நற்கல்வி
நன்மையுற நாம்பெறவே நனிவிழையும் - இன்கவிகள்
தாமியற்றிப் போதிக்கும் பாரதியே! சிறக்கும்
பூமியெங்கும் நின்றன் புகழ்.
கருத்துரையிடுக