இராமாயணம் - 26
சுந்தர காண்டம்எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் ஏழாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம். இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு) கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால் 1958 -இல் வெளியிடப் பட்டது.
அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.
वानरोऽहं महाभागे दूतो रामस्य धीमतः।
रामनामाङ्कितं चेदं पश्य देव्यङ्गुलीयकम्
"O noble lady I am a vanara, an envoy of learned Rama. You see this ring with Rama's name inscribed on it, O godlike lady"
கம்பன்
"மீட்டும் உரை வேண்டுவன இல்லை" என, "மெய்ப் பேர்
தீட்டியது; தீட்டஅரிய செய்கையது; செவ்வே,
நீட்டு இது" என,நேர்ந்தனன்' எனா, நெடிய கையால்,
காட்டினன் ஓர்ஆழி; அது வாள் நுதலி கண்டாள்.
மீட்டும் உரைவேண்டுவன இல்லை என - திரும்பவும் யான் கூற
வேண்டியவை இல்லை என்று;
மெய்ப்பேர் தீட்டியது - உண்மைப் பேர் பொறிக்கப்பட்டதும்;
தீட்டரிய செய்கையது - எழுத முடியாத வேலைப்பாடு பெற்றதும்;
(ஆன) இது - இந்தத் திருவாழி;
செவ்வே நீட்டு என - செவ்வையாய் அமைந்த திருமுகம் என்று கூறி;
(இராமபிரான்) நேர்ந்தனன் - என்பால் வழங்கினான்;
எனா - என்று கூறி (அனுமன்);
நெடிய கையால் - நீண்ட கைகளில்;
ஓர் ஆழி - ஒப்பற்ற மோதிரத்தை;
காட்டினன் - காண்பித்தான்;
அது - அந்த மோதிரத்தை;
வாள் நுதலி - ஒளிமிக்க நெற்றியை உடைய பிராட்டி;
கண்டாள் - பார்த்தாள்.
[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]
எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்
S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam
பி.கு. If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it will deliver my blog-updates to your e-mail regularly.
If you are already a Follower of my blog , thanks for reading!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக