வெள்ளி, 4 ஜூலை, 2014

கொத்தமங்கலம் சுப்பு - 9

திரைப்படத்துறையில் கொத்தமங்கலம் சுப்பு


[ நன்றி: விகடன் ]
” சினிமா பாடல்கள் எழுதுவது என்னை உயர்த்தியது. கற்பனை வெள்ளத்திற்கு கால்வாய் வகுத்தது; செயற்கரிய செயல் என்று சொல்லாவிட்டாலும் கற்பகத் தருவைச் சார்ந்த அற்புதப் பூங்கொடி போல் என்னை வளர்த்தது” 
          கொத்தமங்கலம் சுப்பு, பேசும் படம், 72.


" திரையுலகில் பணியாற்றிய போதும், பத்திரிகைகளில் எழுதிய போதும், கவியரங்குகளில் பங்கு பெற்றபோதும் சுப்பு தம் முத்திரையைப் பதிக்காமல் விட்டதில்லை. தமது பாடல்களில், எழுத்தில், பேச்சில் தேசிய உணர்வையும், தமிழ்ப்பற்றையும், கிராமிய மணத்தையும், நகைச்சுவையையும் கலந்து நம் இதயத்தைத் தொடும் ஓர் அபூர்வ பாணியை உருவாக்கியவர் அவர். " 
            ஆனந்த விகடன் காலப் பெட்டகம், 1974.

” சிறந்த இலக்கியவாதிகள் திரைப்படத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்றி வெற்றிபெற முடியும் என நிரூபித்த இலக்கியவாதி கொத்தமங்கலம் சுப்பு. “ 
                                -- கிருஷ்ணன் வெங்கடாசலம் 





சுப்புவின் திரைப்பணிகள் :
தொகுப்பு: கிருஷ்ணன் வெங்கடாசலம் 



1938 - அனாதைப்பெண் - நடிப்பு
1939 - அதிர்ஷ்டம் - நடிப்பு
1939 - சாந்த சக்குபாய் - வசனம், நடிப்பு
1939 - அடங்காப்பிடாரி - நடிப்பு
1939 - சுகுண சரசா - நடிப்பு
1940 - பக்த சேதா - நடிப்பு
1941 - சூர்ய புத்ரி - நடிப்பு
1941 - மதனகாமராஜன் - நடிப்பு
1942 - நந்தனார் (ஜெமினி) நடிப்பு
1942 - பக்த நாரதர் - நடிப்பு
1944 - தாசி அபரஞ்சி (ஜெமினி), கதை, வசனம், பாடல் மற்றும் நடிப்பு
1945 - கண்ணம்மா என் காதலி (ஜெமினி) - வசனம் இயக்கம்
1947 - மிஸ் மாலினி (ஜெமினி) வசனம், இயக்கம்
1948 - ஞான சௌந்தரி - வசனம் (கூட்டாக)
1948 - சக்ரதாரி (ஜெமினி) - பாடல்
1948 - சந்திரலேகா - வசனம் (கூட்டாக) (ஜெமினி)
1949 - அபூர்வ சகோதரர்கள் (ஜெமினி) பாடல்
1951 - சம்சாரம் (ஜெமினி) - பாடல்
1952 - மூன்று பிள்ளைகள் (ஜெமினி) - பாடல்
1953 - ஔவையார் (ஜெமினி) திரைக்கதை, பாடல் மற்றும் இயக்கம் - நடிப்பு
1955 - வள்ளியின் செல்வன் (ஜெமினி) - திரைக்கதை, நடிப்பு - இயக்கம்
1958 - வஞ்சிக்கோட்டை வாலிபன் (ஜெமினி), வசன பாடல், நடிப்பு
1960 - இரும்புத் திரை (ஜெமினி) வசனம் - பாடல்
1960 - களத்தூர் கண்ணம்மா (ஏவிஎம்) பாடல்
1965 - படித்த மனைவி - வசனம் (கூட்டாக)
1968 - தில்லானா மோகனாம்பாள் - (கதை)
1970 - விளையாட்டுப் பிள்ளை - கதை




பின் குறிப்பு :

சுமார் 30 படங்களுக்குச் சுப்பு பாடல்கள் எழுதியதாக ஒரு குறிப்புக் கிடைக்கிறது. ஒரு காட்டு: ”மோட்டார் சுந்தரம் பிள்ளை” யில் அவர் எழுதிய ஒரு பாடல் மிகப் பிரபலமானது. அண்மையில் ( மே 26, 2014 ) காலமான ஜெயலக்ஷ்மி ( கர்நாடக இசை இரட்டையர் ராதா-ஜெயலக்ஷ்மி புகழ்) ஹிந்தோளத்தில் பாடிய பாடல் அது.
 மனமே முருகனின் மயில் வாகனம் 
மானிட தேகமே குகன் ஆலயம் 
குரலே செந்தூரின் கோவில் மணி - அது 
குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி! 

இதில் இரண்டாம் வரி சுப்புவின் அனுமதியுடன், “ மாந்தளிர் மேனியே குகனாலயம்” என்று படத்திற்காக மாற்றப்பட்டது.  

மேலும், இந்தப் பாடலில் ஒரு சரணமும் உண்டு: 


விழிகளில் ஆனந்தக் கண்ணீரு -வடி
வேலனுக்கு அபிஷேகப் பன்னீரு
சிரமே முருகனின் திருச்சேவடி -இந்த 
ஜென்மம் அவனுக்கு பால் காவடி 

அடாணாவில் முதலில் அமைந்திருந்த இப்பாடலின் ராகத்தை ஹிந்தோளமாக மாற்றி அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.


நன்றி: அமுதசுரபி; ’கூடு’ koodu.thamizhstudio.com, கொ. சுப்பு நூற்றாண்டு விழா மலர், “கலைமணி ஓர் காவியம்” , கொத்தமங்கலம் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன் ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


 ‘மிஸ் மாலினி’ பாடல்கள்:
  மைலாப்பூர் வக்கீலாத்து ...

 பாடும் ரேடியோ
https://youtu.be/E188Qq3S3j0


செந்தமிழ் நாடு செழித்திடவே
https://www.youtube.com/watch?v=iR9CO7_0cPE

ஜெகமே ஒரு சித்திர சாலை
https://www.youtube.com/watch?v=t1U8KrHTRmU

ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே
https://www.youtube.com/watch?v=Jci-XpxnYL4

குளிக்கேணம்
https://www.youtube.com/watch?v=hs6CHCtBgLk


9 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு....வாழ்த்துக்கள் சார்........இதை நான் facebook இல் share செய்யலாமா?

அசோக் ஸ்ரீனிவாசன்

Pas S. Pasupathy சொன்னது…

Thanks, Asok Srinivasan. You are welcome to share it, as long as the my blog's URL is also there as the source.

Arima Ilangkannan சொன்னது…

அருமையான பதிவுகள். அனைத்தும் பொக்கிஷங்கள். - அரிமா இளங்கண்ணன், லாஸ் ஏஞ்சல்ஸ்

UK Sharma சொன்னது…

அரிய தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

Ezhil சொன்னது…

Your blog is so much sir, how can I say it is a Treasury for Tamil Lover. Thanks for your wonderful job sir.

Pas S. Pasupathy சொன்னது…

யாவருக்கும் நன்றி.

Unknown சொன்னது…

கொத்தமங்கலம் சுப்பு 1930கள் முதலே என் தமிழுக்கு வழிகாட்டி! விகடனில் வெளிவந்த எளிமையான கிராமியப் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கும்.அவரது காந்தி மகான் பாடல் ஏற்படுத்திய எழுச்சியை இன்றைய தலைமுறையினர் அறியமாட்டார்கள். தாங்கள் வழங்கிய தொகுப்புகள் தமிழுக்குக் கிடைத்திருக்கும் சிறப்பு ஆவணங்கள் ஆகும். -சிங்கப்பூர் சர்மா

Rajaram சொன்னது…

our memories fly back 6 decades to dwell in happy feast served beautifully by Sri Pasupathy.May his unique work continue
and spread far and wide.