சனி பகவான்
கி.வா.ஜகந்நாதன்
படத்தில், கழுகு வாகனத்தின்மேல் அமர்ந்திருக்கும் சனிபகவான் திருவுருவத்தைக் காணலாம். இவன் உருவமும் உடையும் அணியும் மணியும் மலரும், கருமையும் நீலமும் உடையனவாக ஒவியர் எழுதியிருக்கிறார் சடையுடையவனாகவும் சூலமும் வில்லும் அம்பும் பூண்டவனாகவும் காட்சி தருகிறான் சனி, வலக்கால், சற்றே மெலிந்து தோன்றுகிறது. இடப்பக்கத்தில், மேலே கும்பமும் முதலையும் உள்ளன. அவை கும்ப ராசிக்கும் மகர ராசிக்கும் இவன் தலைவன் என்பதைக் குறிப்பிக்கின்றன. பின்னே உள்ள மேருமலை, சனி அதனை வலம் வருபவன் என்பதற்குச் சான்றாக நிற்கிறது.
பார்ப்பதற்கு அச்சத்தை விளைவிக்கும் உருவங்கொண்ட இவனுடைய வலப்பக்கத்தில் கீழே, எருமைக் கடாவின்மேல் யமன் அமர்ந்திருக்கிறான். இவன் சனிக்கிரகத்தின் அதிதேவதை. இடப்பக்கத்தில் பிரத்தியதி தேவதையாகிய பிரஜாபதி ஆசனத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் தோன்றுகிறான்.
சனியை ஆயுஷ்காரகனாகச் சொல்வது சோதிட நூல். இவனை வழி பட்டு இவனுடைய அருளுக்கு உரியவர்களானால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். இவனைப்போல் கெடுப்பவரும் இல்லை; இவனைப்போல் கொடுப்பவரும் இல்லை.
வெய்யசுட ரோன்சாயை மேவுமகன், சூற்கரத்தான்
பைய நடக்கின்ற பங்கு, கரு-மெய்யன்
இனியன் அருளுங்கால், இன்றேல் கொடியன்,
சனியன்.அவன் சீற்றம் தவிர்
தொடர்புள்ள பதிவுகள்:
கி.வா.ஜகந்நாதன்
[ ஓவியம்: எஸ்.ராஜம் ] |

பாடலும், படமும்
S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால்,
என்ற நூலைப் படிக்கவும்.]
பி.கு. தமிழ்நாட்டில் காகமே வாகனமாகச் சொல்லப்படுவதைக் குறிப்பிடும் கி.வா.ஜ. வடமொழி தியான ஸ்லோகங்கள் பலவற்றில் கழுகைக் குறிப்பிடுவதைச் சொல்கிறார். எஸ்.ராஜம் அதன்படி வரைந்திருக்கிறார். மேலும் அறிய மேலே இணைப்பில் உள்ள கி.வா.ஜ. வின் 'நவக்கிரகங்கள்' என்ற நூலைப் படிக்கலாம்.
1 கருத்து:
அற்புதப் படைப்பு : வரைபடமும் வாகீச கலாநிதியின் பாடல் விளக்கமும்.
கருத்துரையிடுக