வியாழன், 25 ஏப்ரல், 2019

1272. பாடலும் படமும் - 61

ஐம்பூதத் தலங்கள்  -5
தில்லை
எஸ்.ராஜம் 


கற்பனை கடந்த சோதி
   கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
   யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
    திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
   பூங்கழல் போற்றி போற்றி
         ( பெரிய புராணம் - தில்லைவாழ் அந்தணர் புராணம் )

[ தன்னறிவாலும், தளையறிவாலும் கற்பிக்கப் பெறும் கற்பனைகளையெல்லாம் கடந்து நிற்கும் ஒளி வடிவாகிய இறைவன், தன் கருணையால் வடிவு கொண்டு, யாவர்க்கும் அற்புதம் விளைக்கும் திருக்கோலத்தில், சிறந்த அரிய மறைகளின் முடிவாக உள்ள உபநிடதங்கட்கும் உச்சியின் மேலாய் நிற்கும் ஞான ஒளி வடிவாய் விளங்கும் திருச்சிற்றம்பலத்துள் நிலைத்து நின்று, அழகும், மகிழ்வும், பொருந்த நடனம் செய்தருளும் பொலிவினை உடையவா கிய திருவடிகட்கு, என் வணக்கத்தைப் பன்முறையும் தெரிவித்துக் கொள்கிறேன்.]

சித்பரம் - உயிர் அறிவிற்கு மேலாக நிற்கும் ஞானப் பெருவெளி; அவ்வெளியே திருச் சிற்றம்பலம் ஆகும். சித் - அறிவு, பரம் - மேலான, வியோமம் - வெளி.

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்


காஞ்சிபுரம்

திருவானைக்கா


திருவண்ணாமலை

திருக்காளத்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக