சனி, 13 ஜூலை, 2019

1323. பாடலும் படமும் - 71

பலராம அவதாரம்




'கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல்  ”சங்கினை ஒத்த வெண்நிறமும் நாஞ்சில் பனைக்கொடியும் உடையவர் ”என்று பலராமனை வர்ணிக்கின்றது,


திருமங்கையாழ்வாரின் பாசுரம் இதோ.

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் 
  ஒருபால் தோன்றத் தான்தோன்றி,
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் 
  விண்பாற் செல்ல வெஞ்சமத்து,
செற்ற கொற்றத் தொழிலானைச் 
  செந்தீ மூன்றும் இல்லிருப்ப,
கற்ற மறையோர் கண்ணபுரத்(து) 
  அடியேன் கண்டு கொண்டேனே.



பதவுரை

ஒற்றை குழையும் - ஒரு காதில் தொங்குகிற திருக்குண்டலமும்
ஒருபால் - ஒரு பக்கத்தில்
நாஞ்சிலும் - கலப்பையும்
தோன்ற - விளங்க
தான் தோன்றி  - (பலராமனாய்த்) திருவவதரித்து,
வெற்றி தொழிலார் - ஜயம்பெறுவதையே இயல்வாக வுடையரும்
வேல் - வேற்படையையுடையருமான
வேந்தர் - அரசர்கள்
விண் பால் செல்ல -வீரஸ்வர்க்கத்திற்குச் சென்று சேரும்படி
வெம் சமத்து - வெவ்விய போர்க்களத்தில்
செற்ற - (அவ்வரசர்களை) அழியச் செய்ததனாலுண்டான
கொற்றம் - வெற்றியை
தொழிலானை - தொழிலாகவுடைய பெருமானை,-
செம் தீ மூன்றும் - த்ரேதாக்நிகளெனப்படுகிற மூன்று அக்நிகளும்
இல் - திருமாளிகை தோறும்
இருப்ப - ஜ்வலித்துக் கொண்டிருக்கப்பெற்றதும்
கற்ற மறையோர் -கலைகளைக் கற்ற வைதிகர்களுடையதுமான
கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தில்
அடியேன் கண்டுகொண்டேன்.

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும் 

தசாவதாரம் 

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

1 கருத்து:

RSR சொன்னது…

WONDERFUL. While Krishna ( Mayavan- Madhurai mainthan) can be thought of as the God of pasotoral life in 'Mullai Nilam', Balaraman can be seen as that of small peasant in the same region. Everything in Sangam literature confirms that the Ancient Tamils came from Mathsya desam. on the banks of Yamuna. Subadhra even is sung in 'Silambu'. ( Nappinnai)