ஞாயிறு, 9 மார்ச், 2014

பி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5

364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?

பி.ஸ்ரீ


  கம்பனின் இசைச் செல்வத்தை நாளதுவரை யாரேனும் முழுவதும் கண்டுவிட்டதாகச் சொல்லமுடியுமா? இசைக்கு அடுத்தபடியாக மனோபாவந்தான் கவிஞனுக்கு மூலதனம். அந்த மூலதனம் இல்லாமல் --கவிக்கடை போடுவதெல்லாம் வீண்முயற்சியே. கம்பனது மனோபாவம் ( imagination)  பல்வேறு வடிவங்களைக் கொண்டு ஒரு அற்புத சித்திரசாலையைப் படைத்திருக்கிறது. எனவேதான் இதைக் ’கம்பசித்திரம்’ என்கிறோம். இதற்கு மேலாக கம்பனிடம் நாம் காண்பது நாடகப் பண்பு. “கம்ப நாடகம்” என்று மணவாள மாமுனிகள் கூறுவது சிந்திக்கத் தக்கது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போதும், ஊடுருவிப் பார்க்கும்போதும் நமக்குத் தோன்றுவதுதான் என்ன? 

இது மொழிபெயர்ப்புமன்று. சார்பு நூலுமன்று. “முதல் நூல்” என்றே முடிவு கட்டத்தக்க இலக்கிய படைப்புத்தான் கம்பராமாயணம் “

        --பி.ஸ்ரீ,ஆசாரியா, சரசுவதி ராமநாதன்,
       “ கம்பன் கலைக்கோயிலுக்கு ஒருகைவிளக்கு “ என்ற நூலில்.

சரி, நம் “சித்திர ராமாயண”ப் பயணத்தில் பி. ஸ்ரீ-யின் அடுத்த கட்டுரையைப் பார்ப்போமா? ஜாம்பவான் அனுமனின் சக்தியைப் புகழ்ந்து பேசும் கட்டம்.

ஒரு குறிப்பு: சரியாக, 70 -ஆண்டுகளுக்கு முன் ( ஆம், 1944 -இல் ) விகடனில் தொடங்கப்பட்ட இத் தொடரில் முதலில் ஆர்ட் டைரெக்டர், ஓவியர் ‘சேகர்’ தான் ஓவியங்களை வரைந்தார் என்று தெரியவருகிறது. பிறகு தான் ‘சித்திரலேகா’வின் ஓவியங்கள்.

======

[ நன்றி: விகடன், படம்: சித்திரலேகா ]

தொடர்புள்ள முந்தைய கட்டுரைகள்:

360. தமிழகத்தில் ராமதூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா


பி. ஸ்ரீ படைப்புகள்

( தொடரும் ) 

1 கருத்து:

Swami சொன்னது…

அருமையான பதிவு. உயிரோட்டம் உள்ள படங்கள்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

சுவாமிநாதன்

கருத்துரையிடுக