வெள்ளி, 25 டிசம்பர், 2015

ராஜாஜி - 2

இந்த உலக மன்றம் தனிலே 

ஆங்கில மூலம் : ராஜாஜி ; தமிழாக்கம்: மீ.ப.சோமு  

டிசம்பர் 25. ராஜாஜி அவர்களின் நினைவு நாள்.மார்கழி இசை விழாக்களில் எம்.எஸ். பாடிப் பிரபலப் படுத்திய “குறை ஒன்றும் இல்லை” என்ற ராஜாஜியின் பாடலைப் பலரும் அறிவர். இந்த சமயத்தில் அவர் எழுதிய , எம்.எஸ். பாடிய இன்னொரு ஆங்கிலப் பாடலையும் நினைவு கூரலாமே?

இதில் இரண்டு பொருத்தங்கள் . ஒன்று, இந்த வருடம் எம்.எஸ். ஸின் நூற்றாண்டு வருடம். இரண்டாவது, “குறை ஒன்றும்” பாடலில் ராஜாஜிக்கு உதவியவர் தமிழறிஞர் மீ.ப.சோமு . அவரே இந்த ஆங்கிலப் பாடலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் தன்  1966 ஐ.நா. சபைக் கச்சேரியின் நிறைவில் ராஜாஜியின் ஆங்கிலப் பாடலை, ஆங்கில இசை முறைப்படியே பாடினார். இதற்கு இசை அமைத்தவர் சென்னை வானொலியில் மேனாட்டிசைப் பொறுப்பாளராய் இருந்த ஹாண்டேல் மானுவல் அவர்கள்.  ஐ.நா.சபையில் எம்.எஸ்.  ஒரு ஆங்கிலப் பாடலைப் பாட வேண்டும் என்று தூண்டியவர் மேஜர் ஜெனரல் கரியப்பா என்று சொல்வர்.


முதலில் மீ.ப.சோமுவின் தமிழாக்கம்.

அனைவரின் குற்றமும் பொறுத்தருள் இறைவா!
மக்கள் யாவரும் ஒன்றாய்ச் சேர்ந்தே 
இந்த உலக மன்றம் தனிலே! 

வெறுப்பும் அச்சமும் விட்டுத் தொலைந்தே 
ஒருவரை ஒருவர் உள்ளம் புரிந்திட 
இந்த உலக மன்றம் தனிலே !

சென்ற போரில் ஆகுதி யாக 
உயிரை ஈந்தவர் எம்மைக் கருதிப் 
பூசலில் உள்ள தீரம் தனிலும் 
அமைதியில் மாபெரும் தீரம் வேண்டுமென்(று) 
அமைத்தனர் எமக்கொரு பணியை அன்றோ 
இந்த உலக மன்றம் தனிலே 

ஒவ்வொரு மானிட நல்லுயி ருள்ளும் 
அணுசக்தியிலும் அளவிலாப் பெரிய 
அரியதோர் சக்தி மறைந்துள துணர்ந்தே 
அதனைக் கண்டு பயன்பெற முனைந்தே 
அவனியில் அமைதி நிலைத்திடும் வண்ணம் 
அணுவெடி போலதை வெடித்திட அருள்வாய்!
இந்த உலக மன்றம் தனிலே

இறைவா அனைவரின் குற்றம் பொறுத்தே 
அமைதியில் எம்மை உய்த்தே அருள்வாய் 
இந்த உலக மன்றம் தனிலே!

ஆங்கில மூலம் :

May the Lord forgive our sins
And gather all the Nations
Here under this Uniting Roof.

To give up hate and fear
And learn to understand
Here under this Uniting Roof.

They took the risks of war
And dying, wished us take
The better risks of peace
Here under this Uniting Roof.

The God in everyman
is an atom too
of measureless potential.
Let us learn to find it
And explode it into lasting peace
Here under this Uniting Roof.

May the Lord forgive our sins
Inspiring us to peace on Earth
Here under this Uniting Roof.

==== 

தொடர்புள்ள பதிவுகள்:

ராஜாஜியைப் பற்றி

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

THANKS for bringing out this HISTORIC account of Rajaji's contributions (a minor part may be!) & I intend talking about the ELECTRIC RENDERING BY MS at UN Concert in '66 & CORRECT INACCURATE accounts writte in books& literature about it; I ACTUALLY attended that concert....VKV

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
ஐயா
அற்புதமான தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
எனது பக்கம் வாருங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:        

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கருத்துரையிடுக