சனி, 2 பிப்ரவரி, 2013

சாவி -8: ஆராய்ச்சி ஆர்.வி.ராமன்

ஆராய்ச்சி ஆர்.வி.ராமன்
சாவி

                                                 


மெஹந்தி, ஹென்னா என்று பல பெயர்களில் , பேஸ்ட், கூம்பிய ‘கோன்’ ( cone) என்று பல உருவங்களிலும் இன்று கிடைக்கும் மருதாணியைப் பற்றி அன்றே ஆய்வு செய்த ஒரே முன்னோடி ஆய்வாளர் ‘சாவி’யின் ஆர்.வி.ராமன் தான்!  மேலே படியுங்கள்!
        
[ அசல்: கோபுலு;  நகல்: சு.ரவி ] 


” அது ஒரு கிராக்கு சார்ஆராய்ச்சி பண்றதாம் ஆராய்ச்சிஎப்பக் கண்டாலும் வீட்டு நிறைய தழைபுல்லுபூச்சி இதையெல்லாம் குவிச்சு வெச்சுண்டு பூதக்கண்ணாடியிலே பார்த்துண்டிருக்குதுவேளையிலே சாப்பிடறதில்லைராத்திரியெல்லாம் தூங்கறதில்லேஏதோ பெரிசா புரட்டிடற மாதிரி ஆகாசத்தை வெறிச்சு வெறிச்சுப் பாக்கறதுஇதான் அதுக்கு வேலைஎம்.படிச்சிருக்குஎன்ன பிரயோஜனம்ஒழுங்கா ஓர் உத்தியோகத்துலே சேர்ந்து குடியும் குடித்தனமுமா வாழக்கூடாதுமனைவியை மாமனார் வீட்டிலேயே விட்டு வைத்துட்டு காடு மலையெல்லாம் அலைஞ்சுண்டிருக்குதுகேட்டால் 'ரிஸர்ச்பண்றதாம்ஏதோ பெரிசா கண்டு பிடிச்சுடப் போறதாம்மனசிலே ஐன்ஸ்டீன்சி.விராமன்னு நினைப்புஅதுக்காக ஆர்வெங்கட்ராமன்கிற தன் பெயரை ஆர்.விராமன்னு சுருக்கி வைத்துக்கொண்டிருக்கிறது.

''ஒரு நாளைக்கு என்ன செஞ்சுது தெரியுமோகாட்டிலே இருக்கற 'மருதாணி'த் தழையையெல்லாம் வெட்டிண்டுவந்து ஆட்டுக்கல்லுலே போட்டு அரைச்சிண்டிருந்தது.


''இதெல்லாம் என்னடான்னு கேட்டேன்அந்தக் கிராக் சொல்றதுமருதாணியை மாவா அரைச்சு உலர்த்திப் பவுடர் பண்ணி அதை க்யூடெக்ஸுக்குப் பதிலா உபயோகப் படுத்தறதுக்கு ஆராய்ச்சி நடத்திண்டிருக்கானாம்அதை வெளிநாட்டுக்கெல்லாம் அனிப்பிச்சா லட்சம் லட்சமாப் பணம் வருமாம்டாலர் எர்னிங் பிஸினஸாம்எப்படியிருக்கு பார்த்தயோன்னோ இதும் புத்திஇது உருப்படுமான்னு கேக்கறேன்.


[ ஓவியம்: நடனம் ]


''இதுக்கு முன்னே ஒருதடவை இப்படித்தான் இன்னோர் ஆராய்ச்சி நடந்திண்டிருந்ததுஎன்னடா இதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கேன்னேன். 'உனக்கு ஒண்ணும் தெரியாதுமாமாஇது மட்டும் ஸக்ஸஸ் ஆகாட்டா என் தாடியை எடுத்துடறேன் பாருன்'னு சபதம் பண்றது!


''இது தாடியை எடுத்தால் தேவலையாஎடுக்காட்டாத் தேவலையாஒரு நாளைக்குத் தாடி வெச்சுண்டு வரும்இன்னொரு நாளைக்குத் தாடியை எடுத்துட்டு வரும்இதுதான் சுத்த பைத்தியமாச்சே!


''முன்னே ஒரு தடவை ஊரிலே இருக்கிற பழைய 'பியூஸ்போன பல்பெல்லாம் தெருத் தெருவா அலைஞ்சு விலைக்கு வாங்கிக்கொண்டு வர ஏற்பாடு பண்ணித்து.


''ஏதாவது பழைய 'பல்ப்வியாபாரம்தான் பண்ணப் போறதோன்னு நினைச்சேன்இது என்ன பண்ணித்து தெரியுமோலட்சம் பல்பு சேர்ந்தப்புறம்தான் ரகசியத்தை வெளியே விடுவேன்னுது.


''கடைசியா ஓர் அமாவாசை அன்னிக்கு இருபது முப்பது பேரை அழைச்சுண்டு எங்கேயோ நடுக்காட்டிலே போய் அங்கே பறக்கிற மின்மினிப் பூச்சியெல்லாம் புடிச்சிண்டு வந்து காலி பல்புகளில் அடச்சு மூடிட்டுது. 'மாமாமின்சாரமில்லாமலேயே எரியக்கூடிய மின் விளக்குகளைக் கண்டுபுடிச்சுட்டேன் இத பாரு'ன்னு மின்மினிப் பூச்சியை அடைச்சு வெச்ச பல்பைக் கொண்டுவந்து காண்பிக்கிறது.


''ஏண்டாபூச்சி செத்துப்போயிட்டா என்னடா பண்ணுவேன்னேன்இந்தியாவிலே மின்மினிப் பூச்சிக்குப் பஞ்சமே கிடையாதுஎவ்வளவு வேணுமானாலும் கிடைக்கும்அப்படியே கிடைக்காவிட்டாலும் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி பண்ற மாதிரி மின்மினிப்பூச்சிப் பண்ணை ஒன்று நடத்தி உற்பத்தி செய்துக்கலாங்கறது.


''ஏண்டா உனக்கு தலையெழுத்துஒழுங்கா ஒரு வேலைக்கு போயேண்டா'ன்னா, 'உனக்குத் தெரியாது,  மாமாஇது மட்டும் ஸக்ஸஸ் ஆச்சுன்னா லட்சம் லட்சமாப் பணம் புரளுங்கறது.


''ஒரு மாசம் கழிச்சு புதுசா இப்ப என்னடா ஆரம்பிச்சிருக்கேன்னு கேட்டேன்.''


''மாமாஎன்கூட ஒரு ஆறு மாசம் மலபார்லே வந்து இருக்கயா?ன்னான்.


''மலபார்லே என்னடா ஆராய்ச்சின்னேன்அங்கே வாழைத்தோப்பெல்லாம் காண்ட்ராக்ட் எடுக்கப்போறானாம்வாழைப்பழங்களையெல்லாம் உரித்து வெயிலில் உலர்த்தி பவுடராப் பண்ணி டப்பாவில் அடைத்து அமெரிக்காவுக்கு அனுப்புவானாம்அந்தப் பவுடர்லே அவங்க தண்ணியைத் தெளிச்சா பழப்பவுடர் மறுபடியும் வாழைப்பழமாக மாறிவிடுமாம்இப்படி ஒரு திட்டம் வெச்சிருக்கேன்னு பயமுறுத்தறான்.


''இதைப்போல இன்னும் என்னென்னவோ ஐடியாவெல்லாம் இருக்காம் அவனிடம்ஒரு நாளைக்கு எருக்கஞ்செடி பக்கத்திலே போய் உட்கார்ந்துண்டிருந்ததுஏன் தெரியுமோஅந்தச் செடியிலேருந்து பஞ்சு வெடிச்சு வருமாம்அந்தப் பஞ்சுலேருந்து ரேயான் நூல் மாதிரி தயார் செய்துஅதுக்கு 'எருக்ரேயான்'னு பேர் வைக்கப்போறானாம்இதன் ஐடியாவிலே எருக்கை வெட்டி அடிக்க!


''அப்பளத்து மாவில் கோந்தும்பாகும்மிளகுப்பொடியும் கலந்து இண்டியன் சுயிங்கம் தயார் பண்றதுக்கு ஒரு திட்டமாம்குடமிளகாய்ச் செடிக்கு தேன் இஞ்செக்‌ஷன் பண்ணி ஸ்வீட் குடமுளகாய் செய்றதுக்கு ஒரு திட்டமாம்.


''வீணாகப் போகும் ரம்பத்தூளை வஜ்ரத்தில் கலந்து மர அட்டைகள் செய்வதற்கு மற்றொரு திட்டமாம்இப்படி ஆயிரம் திட்டம் வைத்திருக்குதாம்.


''திடீர்னு இப்போஇருக்கிற குளத்திலேயெல்லாம் இறங்கி அங்கே இருக்கும் பாசியெல்லாம் வாரி வாரிச் சேகரம் பண்ணிண்டிருக்குது.
          


''இது எதுக்குடான்னு கேட்டேன்இது ஒர் ஆராய்ச்சிமாமாகுளத்துப் பாசியைக் கொண்டு வந்து ஒரு தொட்டியிலே கொட்டி மூடிவைத்தால்அதிலே பூஞ்சக்காளான் புத்து வருமாம்அதை வைத்துக்கொண்டு பெனிஸிலின் மாதிரி ஒரு பாசிலின் மருந்து கண்டுபிடிக்கப் போறானாம்கான்ஸருக்கு இது கைகண்ட ஒளஷதமாம்இதுமட்டும் ஸக்ஸஸ் ஆயிடுத்துன்னா அவ்வளவுதான்இந்தியாவுக்கு வெளிநாட்டிலெல்லாம் ஒரே புகழ்தானாம்பாசிலின் கண்டு பிடிச்ச ஆர்.வி.ராமனுக்கு பாரத ரத்னம் பட்டங்கூடக் கிடைக்குமாம்.


''ஜவ்வாது மலைக்குப்போய் அங்குள்ள வாசனையெல்லாம் திரட்டி அதை மாத்திரைகளாக உருட்டிண்டு வரப்போறானாம்அணுப்பிரமாணம் உள்ள அந்த மாத்திரையைச் சாக்கடையிலே போட்டால் சாக்கடை நாற்றமெல்லாம் அப்படியே பறந்து போய்விடுமாம்சாக்கடைத் தண்ணியும் ஸ்படிகம் மாதிரி சுத்தமாயிடுமாம்அதைக் கண்டு பிடிச்சுட்டால் எருமை மாடுகளெல்லாம் இறங்கிக் குளிக்கறதுக்குச் சாக்கடைத் தண்ணி இல்லாமல் போயிடுமேன்னுதான் யோசிக்கிறானாம்இதன் ஆராய்ச்சியிலே தீயை வைக்க! “

[ நன்றி: சாவியின் ‘கேரக்டர்’ நூல் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சாவியின் படைப்புகள்

4 கருத்துகள்:

kalpagam சொன்னது…

hilarious

Pas S. Pasupathy சொன்னது…

ஒரு நண்பரின் பின்னூட்டம்;
=====
சாவியின் “ ஆராய்ச்சி ஆர்.வி. ராமன்” நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும்
அதில் சொல்லப்படும் ஆய்வுகள் இன்று நிஜமாகவே நடந்துள்ளன.

மின்மினி பூச்சியின் வால்பகுதி வெட்டிக் காயவைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

-Firefly வாலில் லூஸிபெரேஸ் (luciferase) என்ற என்ஸைம் (enzyme) உண்டு.
ATP , Luciferin என்னும் பொருளோடு கலக்க ஒளி விளைகிறது. ATP அளவை அளக்க இது
பயனாகிறது.

மருதாணி (mehandhi) பெளடர் இன்று கிடைக்கிறது. தேவையான போது தண்ணீர் சேர்த்து
கைவிரல்களுக்கோ, தலைமயிருக்கோ சாயமிடப் பயனாகிறது.

இந்திய தேசிய உணவு ஆய்வுக் கழகம், சீனப்போருக்குப் பிறகு, இமயமலையில் பணி புரியும்
காவலஎகள் பயன்படுத்த வசதியாக freeze dried சப்பாத்தி
தயாரித்தார்கள். பலநாள் கெடாது வைத்திருக்கலாம். தண்ணீர் சேர்த்தால் திடீர் சப்பாத்தி !

பாசியை வளர்த்து புரத உணவாக்கலாம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் !

பாவம் ஆர்.வி. ராமன். அங்கீகாரம், விருது ஒண்ணும் இல்லை ! (:-)

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

Rajagopalan.S சொன்னது…

Most of the things described in the story is fact today. Savi is a writer whose imagination was strong to create a story with contents which will be available in future

Unknown சொன்னது…

கலைவாணர் பாடிய அடுப்படி இயந்திரப் பாட்டு நிஜமானது
இப்படி சாவியின் கதாநாயகச் சிந்தனைகள் வருங்கால ஆராய்ச்சியின் யுக்திகள் சிந்தனைகள் சிறப்பானால் சீர்மிகும் உலகம்