வியாழன், 31 ஜனவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 14

தியாகராஜ ஆராதனைகள்: 40-களில்

இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் சமயம். 1944 என்று நினைக்கிறேன். அந்தக் கால “விகடனில்” ஆசிரியர் “தேவன்”  ”யுத்த டயரி” என்று வாரா வாரம் ஒரு கட்டுரை எழுதுவார்.

[ தேவனின் “யுத்த டயரி”யைப் பற்றி மிகச் சிறப்பாக அசோகமித்திரன் பேசியிருக்கிறார்.
 ( http://www.hindu.com/fr/2008/09/12/stories/2008091251250300.htm ) ]

அத்தகைய “யுத்த டயரி” ஒன்றின் கடைசிப் பக்கம் என்று நினைக்கிறேன். அதைக் கீழே கொடுக்கிறேன். அதிலிருந்து, வரலாறு தெரிந்த அன்பர்கள், இது நடந்தது எந்த ஆண்டு என்று சரியாகச் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.


இதற்குப் பின்பக்கத்தில்  1944- ஆம் ஆண்டு திருவையாறு தியாகராஜ ஆராதனையை விவரிக்கும் “விகட”னின்  “ஆடல் பாடல்” கட்டுரை  தொடங்குகிறது.  எப்படி இந்தச் சூழ்நிலை? “சாந்தமு லேகா” என்று பாடிய தியாகராஜரைப் போற்ற நல்ல சமயம் தானே?  அந்த முழுக் கட்டுரையைக் கீழே கொடுக்கிறேன். இனிமேல் என் எழுத்துக்கு என்ன வேலை?


இன்னொரு தியாகராஜ ஆராதனை. 1946-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். விழாவைத் திறந்து வைக்க அழைக்கப் பட்டிருந்த ஸர் எஸ்.வி.ராமமூர்த்தி வரமுடியாமல் போனாலும், அவருடைய பிரசங்கத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரன் ஐ.சி.எஸ் படித்து, விழாவைத் திறந்து வைக்கிறார். அந்த ஆராதனையைப் பற்றி விகடனில் வந்த ஒரு பக்கம் இதோ! பெங்களூர் நாகரத்தினம் அம்மையார் நாமாவளி பாட, ஸ்ரீ ராமுடு பாகவதர் அர்ச்சனை செய்யும் படத்திற்காக இதை வெளியிடுகிறேன்.  


( மேலே உள்ள கட்டுரைகள் கொடுக்கும் தகவல்களின் ஆதாரத்தில், நான் சொல்லும் ஆண்டுகள் சரியா என்று இசை வரலாற்று வல்லுநர்கள் அறிவுறுத்துவர் என்று நம்புகிறேன்.)  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக