ஞாயிறு, 27 டிசம்பர், 2015

சங்கீத சங்கதிகள் - 61

சங்கீத சீசன் : 1956 - 1

50-களில் சென்னை இசை விழாக்கள் என்றாலே மூன்று இடங்கள் தான் ரசிகர்களை இழுத்தன: வித்வத் சபை ( Madras Music Academy ), தமிழிசைச் சங்கம், இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி.  1956-இலும் அப்படியே.

1956-இல் வித்வத் சபையின் தலைவர்: திருவீழிமிழலை சுப்ரமண்ய பிள்ளை .
வித்வத் சபை தொடங்கிய 1927-ஆம் ஆண்டிலேயே அங்கே நாகஸ்வரம் வாசித்தவர் !

தமிழிசைச் சங்கத்தில் மு.வரதராசனார் தலைமை.  “ தியாகய்யர் தமிழரே. அவர் தாய்மொழி தெலுங்காக இருந்ததால் அவர் தெலுங்கில் பாட்டியற்றினார். ஆனால் அவர் கையாண்ட இசை தமிழிசை தான். ஆகவே கர்நாடக சங்கீதம் வேறு தமிழிசை வேறு என்று சொல்வது பெரும் தவறு” என்றெல்லாம் பேசினார் மு.வ. ( இதை இவருக்குப் பின் எத்தனை பேர்கள் சொல்லியிருப்பார்கள் என்பதைக் கணக்கிடுவது கடினம்! ஆனால், சொன்னவர்கள் மு.வ. 56-இலேயே சொன்னார் என்று சொல்லியிருப்பார்களா என்பது ஐயமே! )

இந்த வருடத்தில் இன்னொரு விசேஷம். சில்பி, கோபுலு இருவருமே ‘ஆடல் பாடலுக்கு’ அவர்களின் கைவண்ணத்தைச் சேர்த்திருக்கிறார்கள் ! ( சில்பியும், கோபுலுவும் நல்ல நண்பர்கள்! ”சிலரை நான் வரைகிறேன், நீர் வரைய வேண்டாம்”, என்று கோபுலு சொல்லியிருப்பார்” என்பது என் யூகம். பாலசரஸ்வதியை அவர் ‘காரிகேசராக’ வரைந்தது நடனமணிக்குப் பிடிக்கவில்லை ;அவர்  விகடன் ஆசிரியர் வாசனைக் கூப்பிட்டுப் பேசினதாகப் பின்னர் கோபுலு ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.)

இந்த வருடம் ‘தேவன்’ விகடனில் பொறுப்பாசிரியராய் இருந்தார். 57-இல் இசை விழாவைப் பார்க்க அவர் இல்லை.

56-இல் இசை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு: நாகஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 12 டிசம்பர், 56 -இல் மறைந்தார்.

இதோ ‘விகடனின்’ 56-இன் முதல் ஆடல் பாடல் கட்டுரை!  [ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53: 1  ;  சீஸன் 53: 2 ; சீஸன் 53 : 3

சீசன் 54 : 1 ; சீஸன் 54: 2 ; சீஸன் 54 -3


சீஸன் 55-1 ; சீஸன் 55-2


சங்கீத சீசன் : 1956 - 1 ;    சங்கீத சீசன் : 1956 -2   ; 
சங்கீத சீசன் : 1956 -3  ; சங்கீத சீசன் : 1956 -4 

சங்கீத சங்கதிகள்

1 கருத்து:

UK Sharma சொன்னது…

அருமையான தொகுப்பு!

கருத்துரையிடுக