பெற்ற மனம்
பசுபதி
'தினமணி'யில் 2 நவம்பர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.
====
பெண்ணின் மணமென்னும் போதினிலே – அந்தப்
பெற்றோரின் உள்ளம் கலங்குவதேன்?
கண்ணின் மணியாய் வளர்ந்தவளோ – தாலி
கட்டி யவனுடன் செல்வதனால்.
மைந்தன் திருமணம் ஆனபின்பும் – தாய்
தந்தையர் நெஞ்சம் கலங்குவதேன்?
மந்திரம் போட்டவள் சொற்படியே – பிள்ளை
வாழ்ந்திடச் செல்லும் தனிக்குடியால்.
உள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் – இந்த
உன்னதக் கல்யாண தீபவொளி
தள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ – ஒரு
தாபத் தனிமை இருட்டினிலே ?
===
தொடர்புள்ள பதிவுகள்:
பி.கு. If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it will deliver my blog-updates to your e-mail regularly.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக