புதன், 26 அக்டோபர், 2022

2285. தண்ணீரின் கண்ணீர்:கவிதை

தண்ணீரின் கண்ணீர்

பசுபதி



'தினமணி'யில் 26 அக்டோபர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.

=====


கலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க

வலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.


வழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த்தேவி.

விழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: “மானுடனே! 


பரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட?

அருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க?


ஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;

நாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்! 


பூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்!

மாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ? “

===

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக