சங்கீத சீசன் : 1954 - 1
போன வருஷம் , இந்தத் தொடரில் 1953-இல் சென்னையில் நடந்த மார்கழி மாத இசைவிழாக்களைப் பற்றிய ’விகடன்’ கட்டுரைகளையும், படங்களையும் பார்த்தோம். இந்த வருஷம், 1954-ஆண்டுக்குச் செல்வோம்.
முதலில், 1954- ஐப் பற்றிய சில குறிப்புகள்:
இசை விழாக்களின் வரலாற்றிலேயே முதன்முறையாய் ஒரு பெண்மணி ஒரு விழாவிற்குத் தலைமை வகிக்கிறார்.
சங்கீத வித்வத் சபையின் ‘சங்கீத கலாநிதி’ பட்டத்தைத் தன் குரு பெறுவதைக் கண்டு களிக்கிறார் மதுரை சோமு.
53-இல் சென்னை முதல் மந்திரியாய் இருந்து, 54-இல் ( முதல்) பாரத ரத்னா விருது பெற்ற ஒருவர் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் விழாவைத் தொடங்கி வைக்கிறார்; 54-இல் சென்னை முதலமைச்சராய்ப் பதவி ஏற்றவர் தமிழிசைச் சங்க விழாவை ஆரம்பித்து வைக்கிறார்.
அரியக்குடி முதன் முறையாய்த் தமிழிசை மன்றத்தில் கச்சேரி செய்கிறார். “அரியக்குடியும் தமிழும்” என்று ஒரு கட்டுரையே எழுதிய ‘கல்கி’ அக்கச்சேரியை விண்ணுலகிலிருந்து கேட்டு மகிழ்கிறார்.
பேராசிரியர் ‘கல்கி’ மறைந்த துக்கத்தில், 54-இல் ‘பத்மபூஷண்’ விருது பெற்ற ஒரு விதூஷி 54 சீசனில் மூன்று விழாக்களிலும் பாடவில்லை.
பிற்காலத்தில் ‘சங்கீத வித்வத் சபையின்’ இசையரங்கம் தன் பெயரைத் தாங்கி நிற்கும் என்பதை அறியாத ஒரு பிரமுகர் சங்கீத வித்வத் சபையின் இசை விழாவைத் துவக்கி வைக்கிறார்.
ஒரு கேள்வி இப்போது என் மனத்தில் எழுகிறது: ஆனால் விடை தான் தெரியவில்லை. நினைவும் இல்லை. டிசம்பர் 5, 54 -இல் தமிழிசைக்குத் தன் பேனாவால் பலம் கொடுத்த ‘கல்கி’ மறைந்தார். அவருக்கு அஞ்சலியாய் அவருடைய பாடல்கள் அந்த வருஷம் சீசனில் எங்கேனும் யாராலும் பாடப்பட்டனவா?
சரி, அந்த சீசனில் ‘விகட’னில் வந்த “ஆடல் பாடல்” கட்டுரையின் முதல் பகுதியைப் பார்க்கலாமா?
தொடர்புள்ள பதிவுகள்:
சீஸன் 53 : 1
சீஸன் 53: 2
சீஸன் 53 : 3
சீஸன் 54: 2
சீஸன் 54 -3
மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்
( தொடரும் )
[ நன்றி: திருப்புத்தூர் திருத்தளியான் ] |

[ நன்றி : விகடன் ]
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:
சீஸன் 53 : 1
சீஸன் 53: 2
சீஸன் 53 : 3
சீஸன் 54: 2
சீஸன் 54 -3
மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்
( தொடரும் )
பொக்கிஷமளிக்கும் பசுபதிக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவலைப்பூவிற்கு வந்து, உங்கள் வாழ்த்தைத் தெரிவித்ததற்கு நன்றி!
பதிலளிநீக்கு1954-இல் சங்கீதத்தின் தரம் குறைந்துவிட்டதே என்ற கவலை தொனித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. நீங்கள் பகிர்வது எல்லாமே பொக்கிஷம்!
பதிலளிநீக்கு@bandhu இங்கு வந்ததற்கும், கருத்துரைத்ததற்கும் நன்றி. உங்களைப் போல ரசிகர்கள் இருப்பதாலேயே எனக்கும் மேலும் தேடிப் பிடித்து சில பதிவுகளை இட ஆர்வம் பிறக்கிறது.
பதிலளிநீக்குI could write a lot about the season that it was held in PS High School. I used to live right opposite to the school at venkatesa agraharam. My Grand uncle a well known lawyer was a close friend of TTK. So he loved into the home that TTK was occupying before. I had attended most of the program and was a volunteer too. Those were the days!
பதிலளிநீக்கு