சனி, 9 ஜூலை, 2016

ஆனந்தசிங்: காட்டூர்க் கடுங்கொலை -3

காட்டூர்க் கடுங்கொலை -3 



காட்டூர்க் கடுங் கொலை -1  

காட்டூர்க் கடுங்கொலை -2

மூன்றாம் அத்தியாயம்

ஞ்சப்பனைச் சாவடிக் கழைத்துச் செல்லும் அண்ணு ராவுக்குக் குற்றவாளியைப் பிடித்துவிட்டோம் என்ற  சந்தோஷ மிகுதியால் அகங்கார முளை கிளம்பிவிட்டது. 'பந்தயத்தை ஜெயித்த பின்பே சந்தோஷம் கொண்டாட வேண்டும்,' என்ற பெரியோர் வாக்கை மறந்துவிட்டான். இப்போது நடக்கும் ஐரோப்பா மகா யுத்தத்தில் ஜெர் மானியர் யுத்தத்திற்குப் புறப்படும்போதே பாரிஸ் நகரைப் பிடிக்க நாள் குறித்துக்கொண்டதோடு பிடித்த பிறகு அந்த ஜெயத்தின் அறிகுறியாகத் துருப்புகளுக்கு அளிக்க கெளரவப் பதக்கங்களை முன்னாடியே செய்து வைத்துக் கொண்டார்களோ அல்லது இன்னமாதிரிப் பதக்கங்கள் செய்ய ஏற்பாடு செய்துகொண்டார்களோ, இரண்டி லொன்று செய்தார்கள். அப்படிச் செய்ததன் காரணம் முடியு முன்பே பாரிசைப் பிடித்துவிட்டதாய் நம்பிவிட்டார்கள்.

அதைப் போலவே அண்ணுராவும் குற்றம் விசாரணை யாகிக் குற்றவாளி தண்டிக்கப்படு முன்பே தான் ஜெயமடைந்து விட்டதாய் எண்ணிக் சற்று மமதை அடைந்து ஆனந்தஸிங்கை நோக்கி,

 "நல்லது ஆனந்தஸிங் நீயும் உன் நண்பரும் இவ்வளவு தூரம் வரக் கஷ்ட மெடுத்துக்கொண்டதற்காக வந்தன மளிக்கிறேன். ஆனல் நான் உங்களை அழைத்து வந்ததே அனாவசியம். ஏனெனில் உங்கள் உதவி இல்லாமலேயே இந்த விஷயம் இதே முடிவிற்கு வந்திருக்கும். ஆயினும் உங்களுக்கு வந்தன மளிக்கிறேன். கிராம ஒட்டலில் உங் களுக்கு அறைகள் ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆகையால் கிராமம் வரையில் நாம் ஒன்றாய்ப் போகலாம்." என்றான்.

அன்றிரவு ஆனந்தஸிங்கும் விஸ்வநாதரும் ஹோட்டலில் படுத்திருந்து மறுநாட் காலையில் இரயிலேறி நகரத்திற்குப் பிரயாணமானார்கள் வழியில் விஸ்வநாதர் ஆனந்தஸிங்கை நோக்கி,

டந்த சங்கதியால் நீ திருப்தியடையவில்லை என்று தோன்றுகிறது," என்றார்.

ஆனந்த-"ஒ!! நான் பூரண திருப்தி யடைந்தேன். ஆனல் அந்த வழிகள் என் மனதிற்குச் சற்றேனும் பிடிக்க வில்லை. நான் அண்ணுராவ் பிரக்யாதி யடைவான் என்று நம்பி யிருந்ததெல்லாம் கனவாய்ப் போய்விட்டது. அவன் இதைவிட எவ்வளவோ புத்திசாலித்தனமாய் நடப்பான் என்று நான் நம்பியிருந்தேன். இப்படிப்பட்ட சம்பவங்களில் ஒருவன் எப்போதும் இது வேறு விதமாய் நடந்திருக்கலாகுமாவென்று முன்னே சிந்திக்க வேண்டும். அப்படி நடந்திருக்கலாகுமென்று தெரிந்தால், அப்படி நடக்க முடியாதென்று அத்தாக்ஷி ஏற்படுகிற வரையில் அதை ஆராய்ந்து பார்த்த பிறகே சமயோசித சாட்சியம் காட்டும் குற்றவாளியை உண்மைக் குற்றவாளி யென்று கருதி விவகாரத்தைத் தொடங்கவேண்டும்.

அதுவுமன்றி இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று அவ்வாலிபன் கூறிய விஷயங்கள் நம்பக் கூடியவைகளென்றே தெரிகிறது. அவ்வளவு உண்மையை கூறிவிட்டவன் தான் சத்தியமாய் நிரபராதியென்று கூறி விட்டான். இது இருக்கட்டும். இன்னொன் றெதுவெனில் அவன் கொலை செய்ததாயின், அறைக்குள் வந்தவுடனே, தன் விஷயத்தைப் பேசாமல், அங்கிருந்த ஈட்டியை எடுத்து
அவனைக் குத்திவிட்டாயிருப்பான்? அப்படிப் பேசியிருந்தால் அவன் தந்தையைப்பற்றிய விஷயமாவது பத்திரங்களைப் பற்றியாவது கொஞ்சமாவது அறிந்திருப்பானல்லவா? மேலும், இவனைக் கொன்றவன் எவனாயினும் சரி, அவன் வரும்போது இவனைக் கொல்ல வெண்ணியும் வரவில்லை, கையில் ஆயுதம் கொண்டு வரவுமில்லை யென்பது உண்மை கொலை நடந்தபோது அங்கு ஒரு குழப்பமாவது சந்தடியாவது உண்டாகவில்லை. அப்படியிருக்கக் கொன்ற பின்பு உடனே தனக்கு வேண்டிய பொருள் அங்கிருக் கிறதாவென்று சோதிக்காமல் திரும்பிப்போய் ஒரு வாரங் கழித்து எந்த மூடனாவது வருவானே! அதுவரையில் கொலை கடந்த அறையிலேயே எல்லா வஸ்துக்களும் வைத்தது. வைத்தபடி இருக்குமென்று நம்புவான்?' என்றான்.
.
விஸ்வநாதர் -ஆனல் நீ கூறுவதுபோல் நேரிட்டிருக்கக்கூடிய வேறு சம்பவம் என்ன?

ஆனந்த-' அதைத்தான் நான் ஆராய்ச்சி செய்யப் போகிறேன். முடிவில் யாவும் கூறுகின்றேன்." என்றான்.

அதன் பிறகு இரண்டு மூன்றுநாள் கழித்து ஒருநாள் இருவரும் வெளியிற் சென்றிருந்து திரும்பிவந்தபோது வீட்டில் ஐந்தாறு கடிதங்கள் வந்திருந்தன. யாவும் ஆனந்தஸிங்குக்கே யெனினும், மேல் விலாசத்தில் பெயர் மூன்று நான்கு விதமாயிருந்ததுகாப்டென் பசுபதிஎன்றிருந்தது. ஆனந்தஸிங் யாவற்றையும் வாசித்துப் பார்த்தபின் பேஷ் நமது ஆராய்ச்சி பயனளிக்கும்போலவே யிருக்கிறது. விஸ்வநாரே தயை செய்து இரண்டு தந்திகள் எழுதும்; ஒன்று சோமு செட்டி, கப்பல் ஏஜென்ட், என்ற விலாசம். மூன்று ஆட்களையும் நாளை காலை 10-மணிக்கு என்னிடம் வரும்படி அனுப்பும். இப்படிக்கு காப்டென் பசுபதி என்று எழுதும். அந்த விடங்களில் எனக்கு காப்டென் பசுபதி யென்றே பெயர். இன்னொன்று நமது இன்ஸ்பெக்டர் அண்ணுராவுக்கு- நாளைக் காலை ஒன்பது மணிக்குச் சரியாய் இங்கு வரவேண்டும். மிக்க முக்கிய சமாசாரம், சந்தர்ப்ப மில்லாவிடின் பதில் தெரிவி' என்றெழுதும். விஸ்வநாதரே! இந்தக் கேஸ் கடந்த ஒருவார மாய் என் நெஞ்சில் உறுத்திக்கொண்டே யிருந்தது. நாளைக் காலை பத்து மணிக்கு ஒரு முடிவிற்கு வந்து விடுவது உண்மை. அதோடு இதைக் கை கழுவவிடுவதே" என்றான்.

மறுநாட் காலை சரியாய் ஒன்பது மணிக்கு இன்ஸ்பெக்டர் அண்ணுராவ் அறைக்குள் வந்தான். அடைந்த ஜெயத்தின் சந்தோஷத்தால் அவன் உள்ளம் பூரித்திருந்தது. முகத்தில் அந்தக் குறி நன்றாய் விளங்கியது. ஆனந்தஸிங் முன்னமே ஏற்பாடு செய்திருந்தபடி மூவரும் போஜனத்திற்கு உட்கார்ந்தார்கள்.

ஆனந்தஸிங் அண்ணுராவை நோக்கி : - நீ செய்த தீர்மானம் உண்மையாகவே சரியானதென்று நினைக்கிறாயா?"
என்று வினவினான்.

அண்ணு:- இதைவிடப் பூரணமான தீர்மானம் வேறொன் றிருக்குமென்று நான் நினைக்கவில்லை."

ஆனந்த-என் மனதிற்கு அது பூரணமானதென்று விளங்கவில்லை.

 அண்ணு- நீ கூறுவது எனக்கும் மிக்க வியப்பா யிருக்கிறது. இன்னம் என்னதான் வேண்டி யிருக்கிறது?"

ஆனந்த-அதிற் சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களுக்கும் சமாதானம் பூரணமாயிருக்கிறதா?

ண்ணு:-சந்தேகமின்றி, ஞ்சப்பன் கொலை நடந்த தினம்தான் அந்தப் பிரதேசத்திற்கு வந்திருக்கின்றான். அவன் தங்கியிருந்தது அன்னசாலை யென்ற ஹோட்டலில். அங்கு அவன் கீழ்க்கட்டில் தங்கியிருந்தான். அங்கிருப்பவர்களுக்குத் தெரியாமலே அவன் தன் பிரியப்படி வெளியிற் போகலாம் வரலாம், அன்றிரவே கரியனைக் காணச் சென்று அவனோடு சச்சரவு நேர்ந்ததால் அவனைக் கொன்றுவிட்டுப் பிறகு கலவரத்தால் ஒடிவிட்டான். அப்போதுதான் அந்த நோட் புத்தகம் கீழே விழுந்து விட்டது. அதில் குறிக்கப்பட்டிருந்த பாங்கிப் பத்திரங்களைப் பற்றி அவனைக் கேட்பதற்காகவே அங்கு சென்றான். அறையில் சில குறிப்பிட்டிருக்கின்றனவல்லவா? அவை யாவும் வெளிவந்து விட்டவை. மற்றவை பெரும்பாலும் கரியனிடத்திலேயே யிருந்திருக்கலாகும். அவற்றைப் பெற்றுக்கொண்டால் தன் தகப்பனுடைய கடன்காருக்குத் திருப்தி செய்யலாகும் என்பது அவன் நோக்கம் கொலை நடந்த விடத்திற்கு மறுபடி துரிதமாய் வர அச்சங் கொண்டு இருவாரங் கழித்துப் பத்திரங்களைத் தேடவந்தான். எல்லாம் இரண்டும் இரண்டும் நான்கு என்பதுபோல் தெளிவாய் விளங்குகிறது. வேறென்னதான் வேண்டும்: என்றான்.

ஆனந்தலிங் புன்னகையோடு தலையை சைத்து,

 " எல்லாம் சரியே. ஒரே ரு முக்கியமான குறைதான் இருக்கிறது.           அதாவது, நஞ்சப்பன் அவனைக் கொன்றானென்பது அசம்பாவிதம். அகாவது நடக்கக் கூடாத காரியம். அண்ணு ராவ்!  அத்தகைய ஈட்டியால் இறந்த மனிதன் தேக அளவுள்ள ஒரு தேகத்தினைக் குத்திப் பார்த்திருக்கிறாயா? இல்லை. சே! சே! நீ இத்தகைய தகவல்களைக்  கவனித்துப் பார்க்கவேண்டும். நான் ஒரு நாள் காலை நேரம் முழுதும் அதைப் பற்றிச் சோதித்துப் பார்த்தேன் என்பதை விஸ்வநாதர் அறிவார். அப்படிக் குத்துவது சுலபமான காரியமல்ல. அதோடு நன்றாய் அதில் பழகிய கையா யிருக்கவேண்டும். அந்தக் குத்தோ மிக்க கோபத்தோடு குத்தப்பட்டிருக்கிறது. ஈட்டியின் முனை தேகத்தில் ஊடுருவிக் கீழிருந்த பலகையில் பாய்ந்திருக்கிறது. அந்த மெலித்த தேகியாகிய. வாலிபன் அத்தகைய பயங்கரமா காரியத்தைத்  செய்யக் கூடியவனென்றா  நீ நினைக்கிறாய்? ருகாலுமில்லை. அவனா கரியனோடு சரியாய் அரைபுட்டி ரம் சாராயத்தை நெட்டியிருக்கிறவன்? கொலை நடந்த தினத்திற்கு முன் தினம் சாளரத்தின் திரையில் காணப்பட்ட தாடியுடைய முரட்டு முகம் அவனுடையதா ? இல்லை இல்லை. நீ இவற்றைச் சிந்திக்கவில்லை. அண்ணுராவ்! கரியனைக் கொன்றவன் இராக்ஷசன் போன்ற மிக்க பலாட்டியனான வேறொரு முரட்டு மனிதன். அவனைத்தான் நாம் கண்டு பிடிக்க வேண்டும், “ என்றான்.

ஆன்ந்தஸிங் கூறியதைக் கேட்க்க் கேட்கத் துப்பறியும் இன்ஸ்பெக்டர் மனது வரவரக் கலக்கமடைந்து சோர்வுறத் தொடங்கியது. ஆனந்தஸிங் கேலிக்காகவாவது வியர்த்தமாகவாவது இப்படிக் கூறுகிறவ னல்லவென்று அவனுக்கு நன்றாய்த் தெரியும். அவன் கொண்டிருந்த நம்பிக்கையும் சந்தோஷமும் ஜலத்தில் கற்கண்டுபோல் கரையத் தொடங்கின. ஆயினும் அந்தோ மனிதனுடைய அகங்கார சுபாவம் தன் குற்றத்தையாவது தோல்வியை யாவது உடனே ப்புக்கொள்ள இடங்கொடுப்பதில்லை. ஆகையால் அண்ணுராவ் இன்னொரு கை பார்ப்போ மெனத் துணிந்து ஆனந்தஸிங்கை நோக்கி,

ஆனந்தஸிங்!  கொலை நடந்த இரவு நஞ்சப்பன் .
அங்கு வந்திருக்கிறான் என்பதை நீ மறுக்க முடியா தல்லவா-அங்கு அகப்பட்ட அவன் நோட் புத்தகமே அதை ருசுப்படுத்துகிறது : இதில் ஏதாவது சந்திருக்கிற தென்று காட்டக்கூடுமோ? நான் ஜூரர்களுக்குக் திருப்தியாக இதை ருகப்படுத்திவிடுவேனென்று நினைக்கிறேன். மேலும் ஆனந்தஸிங் ! என் ஆளை நான் பிடித்துக் கொண்டேன். நீ கூறுகிற அந்தப் பயங்கரமான இராசக்ஷசன் எங்கே யிருக்கிறான்?' என்று அலட்சியமாகக் கேட்டான்.

ஆனந்தஸிங் சாந்தமாகவே : --- “ பெரும்பாலும் அவன் இப்போது நமது வீட்டிற்குள் நுழைகிறானென்று நினைக்கிறேன்,' என்றான்.

ஏனெனில் சாதாரணமாய் மற்ற மனிதர்கள் செவிக்குப் புலப்படாத சொல்ப சத்தத்தையும் உணர்வதும் இருட்டில். கூடியவரை பார்த்தறிவதும் தன் தொழிலுக்கு அவசியமான உதவியென்று ஆனந்தஸிங் அப்பியாசத்தால் அவற்றில் தேர்ச்சி யடைந்திருக்கிருன். ஆதலால் அச்சமயம் தெரு வாசற்படியில் இரண்டு மூன்று பேர் உள்ளேறி வரும் சத்தம் அவன் செவிகட்குப் புலப்பட்டது. விஸ்வ
நாதருக்கும், மூவர் வரப்போகிறார்களென்று தான் எழுதிய தந்தியால் தெரியுமாதலால் அவரும் அப்படியே நினைத்தார். ஆனால் அண்ணுராவோ ஆனந்தஸிங் கூறியதைக் கேவலம் கேலியாகவே கருதினான்.

ஆனல் இரண்டொரு நிமிடங்களில் ஆனந்தஸிங்கின் வேலைக்காரி அறைக்குள் வந்து 'அய்யா! யாரோ மூன்று பேர் வந்து காப்டென் பசுபதியைக் காணவேண்டும் என்கிறார்கள்,' என்றாள்.

ஆனந்தஸிங் விஸ்வநாதரை நோக்கி, “சரி உடனே ஆயத்தமாக வேண்டியதே; தாங்கள் அந்த கைத்துப்பாக்கியைச் சட்டென்று கைக்கு எட்டக்கூடிய விடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டுத் தான் எழுந்து தன் மேஜையிலிருந்து கையொப்பமிடாத ஒரு ஒப்பந்தப் பத்திரத்தை எடுத்துப் பக்கத்திலிருந்த ஒரு சாய்ப்பு மேஜை மேல் விரித்து வைத்துவிட்டு, விஸ்வநாதரையும், மிரள மிரள  விழித்துக்கொண்டிருக்கும் அண்ணுராவையும் இது எந்த வினாடியும் சமயோசிதப்படி நடந்துகொள்ள: ஆயத்தமாயிருக்கவேண்டும்,: என்று கூறிவிட்டு, வேலைக்காரியை நோக்கி, இனிச் சென்று அவர்கள் மூவரையும் தனித்தனி, ஒவ்வொருவராய் உள்ளே யனுப்பு. ஒருவன் வெளி வந்த பின் இன்னொருவனை  அனுப்பு' என்றான்.
-
அவ்வாறே முதல் ஒருவன் உள்ளே வந்து வந்தனமளித்து நின்றான். அவன் சுமார் 20-வயதுள்ள் சாதாரண மனிதன். ஆனந்தஸிங் தன் ஜே.பியிலிருந்த கடிதத்தை யெடுத்துப் பார்த்துக்கொண்டு. அம்மனிதன் நோக்கி,

"உன் பெயரென்ன?" என்றான்.

அவன்:-'லட்சுமணன்' என்றான்.

ஆனந்த-இலக்ஷ்மணா!  உனக்குத் தகுதியாயிருந்த வேலைக்கு நேற்றுத்தான் இன்னொருவன் வந்து அமர்ந்து விட்டான். பாபம், இந்தா. நீ ஏமாற்ற மடைந்ததற்காக இந்த 5-ரூபாயைப் பெற்றுக்கொள்,' என்று ரூபாயைக் கொடுத்தனுப்பிவிட்டான்.

இரண்டாவது வந்தவன் சங்கதியும் அவ்வாறே முடிந்தது. அவனும் 5 ரூபாயோடு வெளியில் சென்றான். மூன்றாவது ஒருவன் வந்தான். அவனைக் கண்டதே விஸ்வநாதரும் அண்ணுராவும் திடுக்கிட்டார்கள். அவன் சுமார் ஏழடி உயரமும் பருத்துத் திரண்டு கட்டுவிட்ட புயங்
களும் கறுத்த முட்களைப்போன்ற குட்டையான தாடியும்,
கொள்ளிக் கட்டையைப் போன்ற தீக்ஷண்யமான கண்களும், பயங்கர சொரூபமுமுடையவன். வயது 40-இருக்கலாம். அவன் உள்ளே வந்ததும் கட்டையைப்போல் முறைப்பாய் நின்று வந்தனமளித்தான். அவன் உடைகளால் அவன் ஒரு மாலுமி என்று தெரிந்தது.

ஆனந்த- உன் பெயர்?' என்றான்

அகற்கவன் பட்டூர் கங்காராஜ்' என்றான்.

அதைக் கேட்டதே அண்ணுராவுக்கு இடி விழுந்த மாதிரியாயிற்று. ஏனெனில் கடல் அறையிலிருந்த மேஜை மேலிருந்தகப்பட்ட புகையிலைப் பையின்மேல் '. என்ற எழுத்துக்களிருந்ததும், அதைப் பள்ளியூர் கரியன் என்று தான் தவறாய் அர்த்தம் செய்துகொண்ட முட்டாள்தனமே தன் தோல்விக்குக் காரணமென்றும் அவன் புத்தியிற்
பட்டது.

ஆனந்த-உன் தொழில்? என்றான்.
அவன்-திமிங்கில வேட்டைக்காரன்; 26-வருடங்களாக அதில் நல்ல பழக்கமுண்டு.

ஆனந்த-கஷ்டமான வட கடலிலும் அனுபோகமோ?

அவன்:-வட கடலில்தான் நல்ல பழக்கமுண்டு.

ஆனந்த-சம்பளம் எப்படி?

கங்காராஜ்-எல்லாச் செலவும் போக மாதம் நூறு ரூபா.

ஆனந்த-உடனே என் கப்பலில் வேலைக்கு அமர்ந்து விடக்கூடுமா?

கங்காராஜ்-ஆகா தடையின்றி.

ஆனந்த-உன் நற்சாட்சி பத்திரங்களைக்கொண்டு வந்திருக்கிறாயா?" என்றான்.

மாலுமி உடனே தன் ஜேபியிலிருந்து மாசடைந்த ஒரு பெரிய கடிதத்தை யெடுத்தளித்தான். ஆனந்தஸிங். அதை வாங்கிப்பார்த்து பேஷ் இத்தகைய ஆளே தேவை. அதோ அந்தச் சாய்ப்பு மேஜைமேல் நீ கொடுக்கவேண்டிய ஒப்பந்தப் பத்திரம் ஆயத்தமா யிருக்கிறது. அதில் கை யொப்பம் வைத்துவிட்டால் விவகாரம் முடிந்த மாதிரியே,: எனறான்.

மாலுமி அவ்வாறே மேஜை அருகிற் சென்று ஒரு கையில் பேனாவைப் பிடித்துக்கொண்டு இரண்டு கரங்களையும் பத்திரத்தின் மேல் வைத்துக்கொண்டு, இங்கே கை யொப்பம் வைக்கட்டுமா என்றான். 




ஆனந்தஸிங் எழுந்து சென்று அவன் பின்னால் நின்று தோளின் பக்கமாய்த் குனிந்து இரு கரங்களையும் முன்னேவிட்டு இங்கே போட்
டால் போதும்,' என்றான். ஆனல், அதே நிமிடம் கிளிக் என்று பூட்டிட்டது போன்ற ஒரு சத்தம் கேட்டதும் மறுவினாடி மாலுமியும் ஆனந்தஸிங்கும் கீழே புரண்டார்கள். அந்த மாலுமியோ மிக்க பலசாலி. ஆனந்தஸிங் அவ்வளவு சாமர்த்தியத்தோடு அவன் கையில் விலங்கைப் பூட்டிவிட்டாலும் அந்த விலங்குக் கைகளோடேயே சற்று நேரத்திற்குள் ஆனந்தஸிங்கைத் தரையோடு தரையாய் நசுக்கி விட்டேயிருப்பான். ஆனல், அவர்களிருவரும் கீழே  விழுந்ததே அண்ணுராவும் விஸ்வநாதரும் பாய்ந்து வந்து ஆனந்தஸிங்கை விடுவித்துவிட மூவரும் சேர்ந்து அவன் கரங்களைக் கட்டிவிட்டார்கள். அதற்குள் மூவருக்கும் பெருமூச்சு வாங்கிவிட்டது. 




ஆனந்தஸிங் அண்ணுராவை நோக்கி, அண்ணு ராவ்! இடை பாதியில் விடப்பட்ட ஆகாரம் சூடாறிவிட்டிருக்கு மென்று நினைக்கிறேன். ஆயினும் உன் கேஸ் அனுகூலமாய் முடிந்த சந்தோஷத்தால் திருப்தியாகவே புசிப்பாயென்று நம்புகிறேன்,' என்றான்.

அண்னுராவ் பேசவும் நாவெழாதவனாய்த் தடுமாற்றத்தோடு ஆனந்தஸிங்  இன்னது கூறுவதென்று எனக்குப் புலப்படவில்லை. நான்  பெரிய முட்டாள் தனமாய் நடந்து கொண்டதாக எனக்குப் புலப்படுகிறது. நீ குருவென்பதையும், நான் சீடன் என்பதையும் நான் மறந்திருக்கலாகாதென்று இப்போதுதான் என்புத்திக்குப் புலப்படுகிறது. இப்போதுகூட நீ செய்தது மட்டும் எனக்குத் தெரிகிறதேயன்றி, எப்படி இதைச் செய்தாயென்றும், இதன் அர்த்தமென்ன வென்பதும், எனக்கு சற்றேனும் புலப்படவேயில்லை  என்றான்.

இதனால் ஒருவன் எப்போது தான் கற்றதைப் பூரணமாய் விட்டதென்றாவது, நாம் குருவிலும் அதிக கெட்டிக் காரனாய்விட்டோ மென்றாவது கருதலாகாது. 'நிறைகுடம் நீர்தளும்பாது,” “ பழுத்த மரம் தலை தாழ்த்தி நிற்கும்," என்ற மூத்தோர் வாக்கேபோல் ஆனந்தஸிங் முன்பு அண்ணுராவ் நடந்துகொண்ட மமதையான நடத்தைக்குச் சற்றேனும் மனத்தாங்க லடையாது சந்தோஷ முகத்தோடேயே,

அண்ணு ராவ்! எவ்வளவு ஒருவன் கற்றுக்கொண்டாலும் போகப்போகச் சுய அனுபவத்தால்தான் அவன் கல்வி பூரணமடைந்து பயனளிக்கும். நாமனைவரும் அனுபவத்தால் எதையும் கற்றுக் கொள்கிறோம். இப்போது நீ கற்றுக்கொள்ளவேண்டிய தென்னவெனில் 'சமயோசித அத்தாக்ஷியாலோ வேறெந்தச் சாக்ஷியத்தாலோ ஒரு குற்றம் ஒரு வழியாய் நடைபெற்றிருக்குமென்று நமக்குப் பூரணமாய் புலப்படுகிறது. அப்படியிருந்தாலும் அது வேறொரு வழியாய் நடைபெற்றிருக்கக் கூடும் என்று சொல்ப சந்தேகத்தினால் புலப்படினும், அந்த வேறொரு வழியாய் நடந்திருக்க முடியாதென்று அய்யமறத் தெரியுந்தனிலும், அந்த வழியையும் ஆராய்ச்சி செய்தபின்பே முதலில் தோன்றியதை உண்மையென்று கருதவேண்டும். நீ உன் மனம் முழுமையும் நஞ்சப்பன் மேலேயே காட்டி விட்டாய். அவன்தான் நிரபராதி யென்று கூறியும் நீ அவனே கொன்றவன் என்று ஆரம்பத்திலேயே உன் மனதில் தீர்மானித்துக்கொண்டதால் புகையிலப் பையையும் மற்ற விஷயங்களையும் பற்றிச் சிந்திக்க உன் மனம்
இடந்தரவில்லை. பூரண ஆராய்ச்சிக்கு முன் ஒரு தலையாய் எப்போதும் தீர்மானித்துக் கொள்ளலாகாது," என்றான்.

அதற்குள் சிறைப்பட்ட மாலுமி, “  அய்யா! நீ இம் மாதிரி என்னை விலங்கிட்டதற்கு நான் குறைகூறவில்லை. ஆனல் என்னை அக்ரமக் கொலையாளியென்து மட்டும் கருத வேண்டாம். முழு உண்மையும்  முன்னே தெரிந்து கொள்ளுங்கள். அப்போது என் ஸ்தானத்தில் நீங்கள் இருந்தால் நீங்களும் என்னைப் போலத்தான் நடந்துகொண் டிருப்பீர்களென்று நன்ருய் விளங்கும். நான் பொய்க் கதை யேதாவது கட்டப் போகிறேனென்று நினைக்கிறீர்களாக்கும்,' என்றான்.

ஆனந்த- ஒருகாலுமில்லை. உன் போன்ற ஆள் பொய்கூறத் தன் குற்றத்தை மறைக்கமாட்டானென்று நான் அனுபவத்தால் அறிந்திருக்கிறேன். இனி நடந்த சங்கதியைக் கூறு பார்ப்போம், என்றான்.

கங்கராஜ் என்ற மாலுமி கீழ்க்காணும் விஷயங்களைக் கூறினான்:


'அவ்வாறே கூறுகிறேன். கடவுளறிய நான் கூறுவது யாவும் உண்மை. இப்போது நான் கூறப்போகும் சம்பவம் 1888-வது வருடம் ஆகஸ்ட்மீ வடகடலில் நேர்ந்தது. கடல்யாளி யென்ற திமிங்கில வேட்டையாடும் கப்பலில் இந்தப் பள்ளியூர்க் கரியன் கப்பித்தானா யிருந்தான். நான் எறி ஈட்டியால் திமிங்கிலத்தைத் தாக்கிக் கொல்லும் ஆட்களில் ஒருவனாக இருந்தேன். நாங்கள் அப்போது வட கடலி லடித்த கொடிய புயற் காற்றுகளுக்குத் தப்பித் திரும்பி வந்தபோது கீழ்காற்றில் அடித்துக் கொண்டுவந்து விடப்பட்ட ஒரு சிறு கப்பலைக் கண்டோம். அதில் ஒரே
மனிதன் இருந்தான். அவன் மாலுமியல்ல. ஒரு வர்த்தகன் போலிருந்தான். அதிலிருந்த ஆட்கள் கப்பல் கவிழ்ந்து விடுமென்றஞ்சிப் படகிலேறி வடகடலிலிருந்த ஒரு கரையை நோக்கிப் போய் விட்டார்களாம். அவர்கள் கடலுக்கிரையாகியே யிருப்பார்க ளென்பது திண்ணம். நாங்கள் அவனை எங்கள் கப்பலிலேற்றிக் கொண்டோம். கப்பலிலிருந்து அவன் கொண்டு சாமானெல்லாம் கூடி ஒரு தகரப்பெட்டி மட்டுமே. அவன் எங்கள் கப்பலுக்கு வந்தபின் கப்பித்தானகிய கரியனும் அவனும் கப்பித்தானறையில் நெடுநேரம் இரகசியமாய்ப் பேசினார்கள். எனக்குத் தெரிந்தவரையில் அம்மனிதன் பெயர் இன்னதென்று வெளிப்படவேயில்லை. இரண்டாவது நாள் இரவு அவன் கப்பலிலிருந்து எப்படியோ மாயமாய் மறைந்துவிட்டான் அவன் வேணுமென்றே யாவது அல்லது அப்போது வீசிக்கொண்டிருந்த கடுமை
யான காற்றின் வேகத்தால் கால் சறுக்கியாவது மேல் தட்டிலிருந்து கடலில் விழுந்துவிட்டிருப்பா னென்று கூறப்பட்டது. –

ஆனால் ஒரே யொரு மனிதனுக்கு மட்டும் நடந்த உண்மை இன்னதென்று தெரியும். அந்த மனிதன் நானே. நான் நடந்ததைக் கண்ணால் கண்டேன். அன்றிரவு மிக்க நல்ல நடு இரவு வேளை. எங்களால் காப்பாற்றப்பட்ட அந்த மனிதனும் கப்பித்தானும் கப்பலின் மேல் தட்டில் உலாவிக்கொண்டே இருந்தார்கள். கப்பித்தான் திடீலென்று அம்மனிதனுடைய இரண்டு கால்களையும் பிடித்துத் தாக்கி அவனைக் கடலில் எறிந்து விட்டான்.

நான் பிறகு என்ன நடக்கிறது பார்ப்போமென்று ஒன்று  
மறியா  தவன்போலிருந்தேன். நாங்கள் நமது நாட்டிற்கு வந்த பிறகு அச்சங்கதி சுலபமாய் அடக்கி விடப் பட்டது. அதைப்பற்றி ஒரு கேள்வியும்  உண்டாகவில்லை. யாருக்கும் அறிமுகமில்லாத ஒரு அன்னியன் தற்செயலாய்க் கடலில் விழுந்து மடிந்ததால் யாருக்கு அதைப்பற்றி விசாரிக்க அக்கரை ! ஊர் வந்து சேர்ந்தவுடனே கரியன் வேலையினின்றும் நீங்கிவிட்டான். அதன் பிறகு அவன் இப்போது க்ஷேமமான நிலைமையிலிருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். கொஞ்சக் காலத்திற்கு முன்புதான் அவன் இருப்பிடம் எனக்குத் தெரியவந்தது. அவனுக்கு வந்த க்ஷேமம் கடலில் தள்ளப்பட்ட மனிதனுடைய தகரப் பெட்டியிலிருந்த பொருளால்தான் என்று எனக்குத் தெரிந்தது. அதற்காசை வைத்தே அவன் அம் மனிதனைக் கொன்றான். ஆகையால், அவன் இரகசியத்தை மறைத்து வைப்பதற்காக நமக்கு அதில் ஒருபாக மளிக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தத் தீர்மானித்தேன். நகரத்தில் இருந்த ஒரு மாலுமிதான் அவன் வசிக்கு மிடத்தை எனக்குத் தெரிவித்தான். ஒரு நாள் இரவு நான் அங்கு சென்று அவனைச் சந்தித்தேன், அன்றிரவு அவன் சாந்தமாகவே சம்பாஷித்தான். நியாயப்படி என் பாகத்தை யளிப்பதாகவும், மறுநாள் இரவு வந்தால் இருவரும் கலந்து இவ்வளவு தொகை என்று முடிவு செய்து கொள்ளலாமென்றும் தீர்மானித்துக்கொண்டோம். அந்தப்படி இரண்டாவது இரவு நாள் சென்றபோது அதற்கு முன்பே அவன் குடித்து முக்கால்பங்கு வெறித்துக் கோப குணத்தோடிருந்தான். பிறகு இருவரும் குடிக்க ஆரம்பித்துப் பழைய கதைகளைப் பேசிக்கொண்டே யிருந்தோம். குடியேற யேற அவனுடைய பார்வை எனக்குச் சற்றாவது பிடிக்கவில்லை. அப்போது ஏதோ விபரீதம் நடக்குமென்றும், இவன் கெட்ட எண்ணம் கொண்டிருக்கிறானென்றும் என் மனதிற் பட்டதால், ஒரு சமயம் அப்படி நேர்ந்தால் நம்மிடம் ஒரு ஆயுதமுமில்லையே என்ன செய்வதென்று சுற்றுமுற்றும் பார்த்துச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த எறியீட்டியைக் குறிப்பிட்டுக் கொண்டேன். நான் நினைத்தபடியே அவன் என்னைக் காறியுமிழவும் சபிக்கவும் தொடங்கிவிட்டான். அவன் முகத்தில் கோபத் தணல் வீசியது. சட்டென்று ஜே.பியிலிருந்த ஒரு பெரிய உறையிட்ட கத்தியைக் கையிலெடுத்தான். அவன் உயிர் அல்லது என் உயிர் இரண்டிலொன்று போகவேண்டியதே யென்று எனக்குத் தெரிந்துவிட்டது. ஆகையால், அவன் கத்தியை உறையிலிருந்து எடுப்பதற்குள் நான் ஈட்டியை யெடுத்துக் குத்திவிட்டேன். அப்பா! கடவுளே! அவன் என்னமாய்க் கூச்சலிட்டான் தெரியுமா! அவன் தேகத்தி லிருந்து இரத்தம் என்னைச் சுற்றிலும் பீறிட்டுக்கொண்டிருந்தது. சற்று நேரம் நின்றேன். ஒரு சந்தடியுமில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்தத் தகரப்பெட்டி யிருந்தது. அதற்கு அவனுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவு சொந்தம் எனக்கு மிருக்கிறது. ஆகையால், அதை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளிப்பட்டேன். ஆனால் முட்டாள்தனமாய் மேஜைமேல் வைத்த என் புகையிலைப் பையை மறந்து விட்டுவிட்டேன். இன்னொரு அதிசயமான சங்கதி, நான் அறையை விட்டுச் சற்றுதூரம் செல்லும்போது யாரோ மறு பக்க மிருந்து வருவதைக் கண்டு மறைந்துகொண்டேன். ஒரு மெலிந்த வாலிபன் பூனைபோல் பதுங்கிக்கொண்டே வந்து அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றான். யாரவன், இச் சமயம் என் அங்கு செல்கிறானென்று பார்த்துக் கொண்டே அறையை விட்டு வெளிப்பட்டு வந்த வழியே ஒட்டமா யோடி ஒரு நொடியில் மறைந்து விட்டேன். நான் பிறகு பத்துமைல் தூரம் நடந்து இரயிலேறி நகரம் வந்து சேர்ந்தேன்.

கடைசியில் நான் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் ஒரு காசுகூட இல்லை. ஆனால் பாங்கிப் பத்திரங்க ளிருந்தன. அவற்றை நான் வெளிக்குக் கொண்டுபோனால் ஆபத்தாய் முடியும். ஆதலால், பேசாமல் வைத்திருக்கிறேன். நான் எண்ணிவந்த காரியம் கெட்டுக் கையில் காசில்லாமல் தியங்க நேரிட்டதால் அந்தக் கப்பல் ஏஜென் டின் ஆபீஸில் வேலைக்காகப் பெயர் பதிவு செய்தேன். அவர் உம்மிடம் அனுப்பினார். கடைசியில் நான் செய்த காரியத்திற்காக அதிகாரிகள் எனக்கு வந்தன மளிக்க வேண்டும். ஏனெனில், நான் அவனைக் கொன்றதால் துரைத்தனத்தார் அவன் கழுத்திற்கு மாட்டவேண்டிய தூக்குக் கயிற்றின் விலையையும், கொலையாளியின் கூலியையும் மீத்திவிட்டேன். இவ்வளவே என் சங்கதி,” என்றான்.

ஆனந்தஸிங்- அண்ணுராவ்!  யாவும் உண்மையே! நீ முன்னே நஞ்சப்பனை  விடுதலை செய்வதோடு அவன் தந்தையின் துயரமான முடிவை அவனுக்குக் கூறித் தகரப் பெட்டியை அவனிட மளித்து மன்னிப்புக் கேட்டுக்கொள். கங்காராஜின் தண்டனையை நம்மால் கூடியவரையில் குறைக்கப் பார்க்கவேண்டும். அவசியமாயின் என்னைச் சாட்சியாய் அழை. இனி உன் குற்றவாளியை அழைத்துச் செல்லலாம்,' என்றான்.

அண்ணு:-'ஆனந்தலிங் ! உனக்கு நான் பாராட்டும் நன்றிக்கு அளவேயில்லை. ஆனால் இப்போதும் நீ எப்படி இதைக் கண்டுபிடித்தாயென்று எனக்கு விளங்கவில்லை." என்றான்.

ஆனந்த- எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு வழியில் ஆலோசனை சென்றது. அதாவது அவனைக் கொன்றவன் மிக்க பலாட்டியனா  யிருக்கவேண்டும். அதே எறியிட்டியை உபயோகிக்கப் பழகித் தேர்ந்தவனா யிருக்கவேண்டும். புகையிலைப் பையும் அவன் மாலுமி யென்றும் அவனே கொலை செய்தவனென்றும் தெரிவித்தது. எவ்வாறெனில் அப் புகையிலையும் அப்பையும் மாலுமிகளிடந்தா னிருக்கும். அங்கு சுங்கானில்லாததால் அது கரியனுடைய தல்ல வென்று தெரிகிறது. ப.க. இருந்ததென்கிறாயோ, அதே முதல் எழுத்துக்களுடைய பெயர் வேறு யாருக்கும் இருக்க லாகாதோ? இதுவரையில் தெரிந்தபின் அவன் மாலுமியான வரையில் இறந்தவனோடு முன்னமே சம்பந்தப்பட்டவனுக யிருக்கவேண்டும். கடல் யாளியில் 1883- வருடம் யாரார் மாலுமியா யிருந்ததென்று கப்பல் ஏஜெண்டுகள் ஆபீஸில் போய்ப் பட்டியைப் பார்த்தேன். ப. க. என்ற எழுத்துக்களே முதலாகவுடைய இவன் பெயர் அகப்பட்டது. இனி இவன் எங்கிருக்கிறானென்று பார்த்தேன். போன மாதமே வேலையை விட்டுவிட்டுப் பெயரைப் பதிவுசெய்து வைத்திருக்கிறான் என்று தெரிந்தது. நான் ஒரு கப்பித்தான். திமிங்கில வேட்டையாடப் போகிறேன். அதில் பழக்கமுடைய ஆட்கள் வேண்டும்' என்று கப்பல் ஏஜெண்டுக்குத் தெரிவித்து ஆளை இங்கு வரவழைத்தேன் என்றான்
இதைக் கேட்ட அண்ணுராவ் மிக்க வியப்படைந்து குற்றவாளியை அழைத்துக்கொண்டு சென்றான்.

விசாரணையில் கங்காராஜ் கொன்றான் என்பதற்கு அவன் புகையிலைப் பையும் அவன் வாய் மொழியுமன்றி வேறு சாட்சிய மில்லாததாலும், அதிலும் அப் பையில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களால் இவன் பெயரென்றும் கறுப்பன் பெயரென்றும் சந்தேகத்திற் கிடமா யிருப்பதாலும், அதோடு கொன்றதாய் ஒப்புக்கொள்ளும் குற்றவாளி தன் தற்காப்பை யுத்தேசித்துத் தன்னுயிரைக் காப்பாற்றிக்கொள்ளச் செய்ததாய்க் கூறுவதாலும், அவன் ஆயுதமின்றி அங்கு சென்றதும், அங்கிருந்த ஆயுதத்தாலேயே அவனைக் கொன்றதும் இறந்தவனருகில் உறையிட்ட கத்தியிருந்ததும் அவன் மொழியை மெய்ப்படுத்துவதாலும் குற்றவாளி விடுதலை யடையும்படித் தீர்ப்பளிக்கப் பட்டான். கரியனால் கொல்லப்பட்ட நஞ்சப்பன் தந்தையின் சொத்தாகிய பத்திரங்கள் நஞ்சப்பனிட மளிக்கப் பட்டன- அதற்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு அவன் தன் தந்தையின் கடனைத் தீர்த்தான். 

( நிறைந்தது ) 

பி.கு.

* இந்தக் கதையைக் கானன் டாயில் 1904 -இல் எழுதினார்.

* ஆரணியாரின் மொழியாக்கம் அவருடைய “ ஆனந்தஸிங் “ என்ற நூலில் வெளிவந்தது. முதல் பதிப்பு 1918-இல் வந்தது! 
நூலைப் பற்றிய விவரங்களை 
http://s-pasupathy.blogspot.com//2012/08/2.html  - இல் படிக்கவும்.




தொடர்புள்ள பதிவுகள்:


ஆரணியாரின் நூல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக