வெள்ளி, 8 ஜூலை, 2016

ஆனந்த சிங் : காட்டூர்க் கடுங்கொலை -2

காட்டூர்க் கடுங்கொலை -2 


காட்டூர்க் கடுங் கொலை -1  

இரண்டாம் அத்தியாயம்

ஆனந்தஸிங், விஸ்வநார், இன்ஸ்பெக்டர் அண்ணு ராவ் மூவரும் புறப்பட்டு இரயிலேறி ஒரு சிறு ஸ்டேஷனில் இறங்கினார்கள். அங்கிருந்து இவர்கள் காடு மேடான வழிகளிற் சென்று கடைசியில் பாதை யோரத்தி லிருந்த அத் தனி வீட்டருகிற் சென்றார்கள். அண்ணுராவ் , “ இதுதான் கொலை நடந்தவிடம்,' என்றான்.

அண்ணுராவ் முதலில் இவர்களை இறந்தவனுடைய வீட்டிற்குள் அழைத்துச் சென்று கறுப்பனுடைய மனைவியைக் காட்டினான். அவள் முகத்தைப் பார்க்கும்போது கோரமாயிருந்தது. நீடித்த காலம் சுகம் சந்தோஷம் என்பதையே காணாது மிக்க மனவருத்தமும் சொல்லொணாத துன்பமும் அனுபவித்துக் கொண்டிருந்தவளென்று நன்றாய்த் தெரிந்தது. அவள் முகம் சவம்போல் வெளுத்துக் கலவரமும் திகிலும் குடிகொண்டிருந்தது. அவள் புத்திரியும் மிகமெலிந்த தேகியாய் வாலிபத்தில் பிரகாசமே யில்லாதவளாய் இருந்தாள். தன் தந்தை இறந்தது அவளுக்குச் சந்தோஷ மென்றால் அக் குடும்பத்தின் நிலைமை எப்படிப்பட்ட தென்பதை வாசிப்போரே அறிந்துகொள்ள லாகும். அவள் மனம் விட்டு, ”அய்யா சட்டப்படி என் தந்தையைக் கொன்றவன் தண்டிக்கப்பட வேண்டியது நீதியே. ஆனால், என் வரையில் அவர் இறந்ததற்கு நான் சந்தோஷப் படுவதோடு, அவரைக் கொன்ற கைக்கு நான் ஆசீர்வாதம் செய்யும்படிக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.ன்றாள்.

ஆனந்தஸிங்கும் மற்ற இருவரும் அங்கிருந்து கப்பலறைக்குச் சென்றார்கள். அண்ணுராவ் தன்னிட மிருக்கும் சாவியை யெடுத்துப் பூட்டைத் திறக்க முயன்றவன் தட்டென்று ஆச்சரியமும் பிரமையும் கொண்டு திடுக்கிட்டு நின்றான்.


ஆ! யாரோ இதைத் திறக்கப் பார்த்திருக்கிறார்கள், “  என்றான்.

ஆனந்தஸிங் அருகிற்போய்ப் பார்த்து, ”ஆம் தடை யில்லை; இதோ அடையாளங்கள்; வேறு சாவியோ ஆணி போன்ற ஒரு கருவியோ போட்டுத் திறக்க முயன்றிருக்கிறார்கள். இந்தப் பூட்டிலிருக்கும் புதுக் கீறல்களைப் பார்!  நன்றாய்த் தெரிகிறது. என்றான் பிறகு சாளரத்தருகில் சென்று பார்த்து யாரோ இதையும் திறக்க முயன்றிருக் கிருர்கள் ன்றான். சற்று சிந்தித்து,” ஆயினும் எதையும் அவன் திறக்க முடியாமலே போய்விட்டான். ஆனல், அவன் கெட்டிக்காரன் என்பதில் மட்டும் சந்தேகமே ல்லை,” என்றான்.

அண்ணு- இது மிக்க ஆச்சரியமே. ஆனல் இந்த அடையாளங்க ளெல்லாம் நேற்று இங்கு இல்லை யென்று சக்தியம் செய்வேன்.

விஸ்வநாதர்.-யாரோ கிராமத்திலிருக்கும் குறும்புக் காரன் செய்த வேலை யிதுவென நினைக்கிறேன்,' என்றார்.

அண்ணு- ஒருகாலு மிராது. கிராம வாசிகளில் ஒருவன்கூட இந்த இடத்தினருகிலேயே வரமாட்டான். அதில் உள்ளே நுழைய எவன் துணிவான்? நீ என்ன நினைக்கிறாய் ஆனந்தஸிங்?

ஆனந்த-அதிஷ்டம் நமது பக்கத்தி லிருக்கிறது. என்று நான் நினைக்கிறேன்.

அண்ணு:-இரவு வந்தவன் இன்னும் மறுபடி வருவா னென்று நினைக்கிறாயோ?

ஆனந்த-முக்காற்பங்கு அப்படித்தான். நேற்று. கதவு திறந்திருக்கு மென்றெண்ணி வந்தான். பூட்டி ருக்கவே கையிலிருந்த சிறு பேனாக்கத்தியால் திறக்க முயன்றான். முடியவில்லை. பிறகு என்ன செய்வான்?

அண்ணு-மறுநாள் தக்க ஆயுதத்தோடு வரவேண் டியதே!

ஆனந்த-ஆம். சந்தேகமென்ன? நாம் கிட்டவிருந்து அவனைப் பிடிக்காவிடில் அது நமது தப்பிதமேயாகும். அதற்கிடையில் அறைக்குள் பார்ப்போம்.

அவ்வாறே அறைக்குள் பிரவேசித்தார்கள். அங்கிருந்த மரணக்குறிகள் யாவும் எடுத்துவிடப்பட்டிருந்தன. ஆனந்தஸிங் சுமார் இரண்டு மணி நேரம் அங்கிருந்த எல்லா வஸ்துக்களையும் மிக்க உன்னிப்பாய்ப் பார்த்தான். ஆனல் சற்றாவது பயனடைந்ததாய் அவன் நினைக்கவில்லை யென்று அவன் முகத்தால் தெரிந்தது. ஆராய்ச்சி செய்யும்போது ஒருதரம் சற்று நின்று அண்ணுராவை நோக்கி,

'நீ இங்கிருந்து எதையாவது எடுத்திருக்கிறாயோ?" என்றான்.

அண்ணுராவ் தான் ஒன்று மெடுக்கவில்லை யென்று. திடுக்கிட்டுக் கூறினான்.

ஆனந்தலிங் அங்கிருந்த அலமாரியைச் சுட்டிக்காட்டி, :இதோ பார் அலமாரியின் ஒரு பக்கத்தில் தூசு மிகக் கொஞ்சமாய் படிந்திருக்கிறது. இங்கிருந்து ஒரு பெரிய புத்தகமோ அல்லது பெட்டியோ எதுவோ எடுக்கப் பட்டிருக்கிறது. இதற்குமேல் இங்கு நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. அண்ணு ராவ், நாங்கள் சற்று நேரம் தோட்டத்தில் உலாவிவிட்டு வருகிறோம். பிறகு இராத்திரிக்கு அவன் அகப்படுகிறானா பார்ப்போம்,' என்றான்.

அன்றிரவு மூவரும் அந்தக் கடலறையின் பக்கத்தி லிருந்த புதர்களின் இடையில் மறைந்துகொண்டு காத்திருந்தார்கள். அண்ணுராவ் அறையின் கதவைத் திறந்து வைக்கலாம் என்றான். ஆனந்தஸிங், “ சே, சே. அது கூடாது. அப்படிச் செய்தால் அவனுக்குச் சந்தேக முண்டாய்விடும். பூட்டு மிக்க சாதாரணமான பூட்டே. கொஞ்சம் பலமான சிறு கத்தியின் அலகினால் கஷ்டமின்றித் திறந்துவிடுவான். மேலும் நாம் அறைக்குள் இருக்கலாகாது; வெளியிலிருந்து மெதுவாய்ச் சாளரத்தின் வழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தால், அவன் என்ன செய் வதற்காக இங்கு வந்தான் என்பதை அறியலாகும்" என்றான்.

அவ்வாறே சாளரத்தின் திரையில் ஒர் துவாரம் செய்துவிட்டு சந்தடி செய்யாது எச்சரிக்கையா யிருந்தார்கள். முதல் சற்றுநேரம் வேலையிலிருந்து நேரங் கழித்து கிராமத்திற்குச் செல்லும் ஆட்கள் ஒவ்வொருவரும் பாதை வழியாய்ச் செல்லும் சந்தடி கேட்டது. கிராமத்தில் கொஞ்சம் சந்தடியா யிருந்தது. போகப் போக கிராமத்தில் அங்கிருந்த தீபவொளியும் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து எங்கும் இருள் சூழ்ந்தது. சந்தடியும் அடங்கி எங்கும் நிர்ச்சந்தடியாய் விட்டது. இவர்கள் எச்சரிக்கையோடு காத்துக்கொண்டிருந்தார்கள்.

தூரத்திலிருந்த கோயில் மணியால் கால அளவுமட்டும் தெரிந்தது. மணி இரண்டடித்தது. அப்போது அங்கு அதிக இருட்டான வேளை. அச்சமயத்தில் வீட்டிலிருக்கும் எல்லையைச் சூழ்ந்துள்ள வேலியிலிருக்கும் ட்டிக் கதவை யாரோ திறப்பதுபோல் களிக் என்று சத்தம் கேட்டது. யாரோ உள்ளே நுழைந்தார்கள் என்று தெரிந்ததே மூவரும் ஜாக்கிரதை யானார்கள். பிறகு பாதைவழியே யாரோ மெதுவாய் கடந்து வருவதுபோல் தெரிந்தது. ஒரு ஆள் அறையை நோக்கி வந்து இவர்களிருக்கும் பக்கத்திற்கு மறுபக்கத்திருந்த கதவண்டை சென்றுகின்றன். கிர் கிர் என்ற சத்தத்தால் அவன் பூட்டைத் திறக்க முயற்சி செய்கிறான் என்று தெரிந்தது. ஆனால் இந்த முறை அவன் சரியான ஆயுதம் கொண்டு வந்திருந்தபடியால் இரண்டு நிமிடங்களில் களிக் என்று பூட்டுத் திறந்துகொண்டதும் கதவைத் திறந்து ஆள் உள்ளே நுழைந்து மறுபடி கதவை மூடிவிட்டான். உடனே அறைக்குள் தீபம் ஏற்றப்பட்டதும் சாளரத்தின் திரையில் வெளிச்சம் தெரிந்தது.

மூவரும் பூனைகள்போல் மெதுவாய்ச் சென்று திரையில் செய்யப்பட்டிருக்கும் துவாரத்தின் வழியாய் உள்ளே நோக்கினர்கள். வந்திருந்தவன் ஒரு வாலிபன்; மிக்க மெலிந்த தேகி. கறுத்த மீசை மட்டும் விட்டுக்கொண் டிருக்கிறான். நாணயமான பெரிய மனிதர்போல் உடை ணிந்திருந்தான். வயது இருபதிற்கு மேலிராது. முகம் மிக்க அலைச்சலும் துயரமும் அடைந்தவனதுபோல் இருந்தது. அவன் கைகள் டுங்கிக்கொண்டிருந்தன. திகிலும் கலவரமும் அவன் நெஞ்சில் குடிகொண்டிருந்தன. அவனைப் பார்க்கும்போது மிக்க பரிதாபமாயிருந்தது. அவன் கையில் பிடித்திருந்த மெழுகுவத்தியை மேஜைமேல் வைத்து விட்டு அறையின் ஒரு மூலைக்குச் சென்று அங்கு அலமாரியில் அடுக்கி வைத்திருந்த பெரிய புத்தகங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு விளக்கருகில் வந்தான். அவன் புத்தகத்தை மேஜையின் மேல் வைத்து அதன் மேல் சாய்ந்து கொண்டு புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தான்.





 கடைசியில் தான் தேடிய விஷயத்தைக் காணாதவன்போல் கோபத்தோடு புத்தகத்தின் மேல் கையை அறைந்து அதை எடுத்துப்போய் இருந்தவிடத்தில் வைத்து விட்டு விளக்கை யணைத்து விட்டான். அவன் விளக்கை யணைத்து விட்டுத் திரும்புவதற்குள், அண்ணுராவ் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து அவனைப் பிடித்துக் கொண்டான். அவ்வாலிபன் பயத்தால் நடுங்கி அலறிவிட்டான். உடனே தீபம் ஏற்றப்பட்டது. வாலிபன் நடுங்கி வியர்த்து எதிரிலிருப்பவர்களே மாறி மாறிப் பார்த்து மிரள மிரள விழித்தான்.


அண்ணுராவ் அவனை நோக்கி-தம்பி! நீ யார் இந் நேரத்தில் இங்கு என்ன வேலையாக வந்தாய்?" என்றான்.

வாலிபன் சற்று சமாளித்துக்கொண்டு, “ அய்யா! நீங்கள் துப்பறிபவர்கள்போல் காண்கிறது. அப்படியானால் இக்கரியன் கொலையில் நான் சம்பந்தப்பட்டவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலும். அடியோடு தவறு. உண்மையாய்க் கூறுகிறேன் நான் முழுவதும் நிரபராதி," என்றான்.

அண்ணு- அதைப்பற்றிப் பிறகு பார்த்துக்கொள்வேன். உன் பெயர் என்ன?’ என்று வினவினான்.

அதற்கவ் வாலிபன் ஜயபுரம் அஞ்சல் நஞ்சப்பன், ! என்றான்.
இதைக் கேட்டதே அண்ணுராவும் ஆனந்தஸிங்கும் நோட் புத்தகத்தில் கண்ட ஜ. அ. ந. என்ற குறிப்பை நினைத்துக்கொண்டு ஒருவர் முகத்தை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அண்ணுராவ் வாலிபனை நோக்கி இங்கு என்ன செய்கிறாய்?' என்றான். /
வாலிபன், நான் கூறுவதை இரகசியமாய் வைத்துக் கொள்கிறீர்களா?' என்றான். அண்ணு ஒரு காலும் முடியா தென்றான். வாலிபன் அப்படியாயின் உன்னிடம் கூற மாட்டேன் என்றான். அண்ணுராவ் 'நீ விடை கூறாவிட்டால் அது உனக்குத்தான் விரோதமாய் முடியும்,' என்று கூறியதைக் கேட்ட வாலிபன் சற்று நேரம் சிந்தித்து,
"சரி, சரி கூறுகிறேன். ன் கூறலாகாது? ஆயினும் நாட்பட்டு மறைந்துபோன சமாசாரத்தை மறுபடி பறைறைவிப்பது அவமானமாயிருக்கிறதென்று அஞ்சுகிறேன்; வேறொன்றுமில்லை. தங்கப்பிள்ளை நயனப்பன் கம்பெனி என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?’ என்றான்.

இதைக் கேட்டதே ஆனந்தஸிங் தோட்களை அசைத்துக்கொண்டு அக்கரையோடு செவி கொடுத்துக் கேட்க முயன்றான். அண்ணுராவ் அப் பெயரைக் கேள்விப் பட்டதேயில்லை யென்று அவன் முகத்தால் தெரிந்தது. ஆனந்தஸிங் வாலிபனை நோக்கி,

மேற்கு மாகாணத்தில் பாங்கி வைத்துக்கொண் டிருந்தபோது பத்து லக்ஷத்துக்கு கஷ்டமடைந்து அனேக குடிகளை அழித்துவிட்டுப் பாங்கியை மூடிவிட்டார்களே: யனப்பன் என்பவன் எங்கோ ஒடிவிட்டான்,' என்றான்.


வாலிபன்- அவர்களே! அவர்களே! நயனப்பன் என்பவர் என் தந்தை. தங்கப்பிள்ளை அதற்கு முன்பே கூட்டிலிருந்து நீங்கிவிட்டார். இப்போது நான் கூறுவதைத் தயை செய்து கவனமாய்க் கேளுங்கள்.  எனககு
ப்போது பத்துப் பதினோரு வயதேயாயினும் என் தந்தைக்கு நேர்ந்த அவமானம் என் மனதில் நன்றாய்த் தாக்கியது. நெடுநாளாய் அவர் பாங்கியிலிருந்த எல்லாப் பத்திரங்களையும் உண்டிகளையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார் அது உண்மையல்ல. இன்னும் கொஞ்ச நாள் தவணைமட்டும் கொடுத்திருந்தால் அவர் காசுகூடக் குறைவின்றி எல்லாப் பணத்தையும் கொடுத்து விட்டேயிருப்பார். அவர் மேல் வாரன்ட் பிறக்க இரண்டு நாட்களிருக்கையில் அவர் ஒரு சிறிய கப்பலிலேறி வடக்கிலுள்ள ஒரு தேசத்திற்குச் சென்றார் அவர் புறப் படும் தினம் என் தாயாரிடமும் என்னிடமும் பேசியது எனக்கு நன்றாய் நினைவிலிருக்கின்றது. அவர் கையில் எடுத்துக்கொண்டுபோன பாங்கிப் பத்திரங்களின் விவரப் பட்டி யொன்று என் தாயிடம் கொடுத்துவிட்டு, தான் எப்படியேனும் தனக்கு நேர்ந்த அவமானத்தை நீக்கிக் கொண்டு திரும்பி வருவதாகவும், தன்னை நம்பி தன்னிடம் பணம் கட்டியவர்களுடைய காசு முழுமையும் ஒன்றுகூடப் பழுதின்றி திரும்பக் கொடுக்கப்படுமென்றும் கூறிச் சென்றார். அவ்வளவே சங்கதி. அவரைப்பற்றி அதன் பிறகு எங்கும் ஒரு பிரஸ்தாபமுமில்லை. அவர் மட்டுமல்ல, அவர் எறிச் சென்ற கப்பல்கூட அடியோடு அதிலிருந்த ஆட்களோடு மாயமாய்ப் போய்விட்டது. அக் கப்பலும் அதிலிருந்த ஆட்களும் என் தந்தையோடு கடலில் மூழ்கி விட்டார்கள் என்றே தீர்மானித்துவிட்டோம். என் தந்தைக்கு ஆப்த நண்பரொருவரிருக்கிறார். அவர் தான் சில நாட்களுக்கு முன் என் தந்தை யெடுத்துச் சென்ற பாங்கிப் பத்திரங்களில் சில நகரத்தில் செலாவணியா யிருப்பதாய்த் தெரிந்து வந்து கூறினர். எங்களுக்குண்டான சந்தோஷத்திற்கும் ஆச்சரியத்திற்கும் அளவேயில்லை. நான் உடனே அதைப்பற்றி கண்டறியப் புறப்பட்டுப் பல நாட்கள் அலைந்து கஷ்டப்பட்டுக் கடைசியில் அவைகளை முதலில் விற்றவன் கடல்யாளி என்னும் கப்பலின் கப்பித்தானாகிய பள்ளியூர் கரியன் என்னும் இந்த மனிதனே என்று கண்டறிந்தேன். அதன் மேல் இவனைப்பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். இவன் நடத்திய கப்பல் திமிங்கல வேட்டை யாடுங் கப்பலென்றும், என் தந்தை வட கடலிலுள்ள நாட்டிற்குச் சென்ற காலத்தில்தான் அதாவது 1888-வது வருடம். இவன் கப்பல் வட கடலிலிருந்து திரும்பி வந்திருக்கிறதென்றும் கண்டறிந்தேன். மேலும் அந்த மாதங்களில் வட கடலில் புயல் அதிகம். தெற்கிலிருந்து காற்று அடிக்கடி பலமாய் அடித்துக்கொண்டிருந்தது. ஆகையால், என் தந்தையின் கப்பல் வடக்கு நோக்கி அடித்துக்கொண்டு போகப்பட்டிருக்கும். அங்கே தற்செயலாய் இவன் கப்பலைச் சந்தித்திருக்கும். அப்படியாயின் என் தந்தையிடமிருந்த பத்திரங்கள் இவனிடம் சிக்கியிருப்பதால், அவை எப்படி இவனிடம் வந்தன என்பதும், என் தந்தை என்ன கதியானாரென்பதும் இவனுக்குத் தெரிந்திருக்கும். இந்த உண்மையைக் கண்டு பிடித்து என் தந்தை அப் பத்திரங்களை இவனுக்கு விற்கவில்லை என்று ருசுவானால் அவர் ஜனங்களை மோசம் செய்யக் கருதவில்லை என்பது விளங்கிவிடும். அவர்மேலிருக்கும் அவமானம் துடைக்கப்பட்டுப்போம்.

ஆகையால் இவனைக் காண்பதற்காக நான் புறப்பட்டு அருகிலிருக்கும் நகரத்திற்கு வந்து சேர்ந்தேன். என் ஈன அதிஷ்டம் அச்சமயத்தில்தான் இக்கொலை நடந்திருக்கிறது. இதைப்பற்றிய மரண விசாரணையைப் பத்திரிகைகளில் வாசித்தபோது இந்த அறையின் விவரத்தை அறிந்தேன். இதிலிருக்கும் அலமாரியில் கடல் யாளி' என்ற கப்பலைச் சேர்ந்த புத்தகங்களனைத்தும் வைக்கப்பட்டிருந்ததாய் அதிற் கூறப்பட்டிருந்தது. ஆகவே இந்தப் புத்தகங்களைப் பார்த்தால் என் தந்தையின் சென்ற வருடத்திய பதிவுகளில் இக் கப்பலில் இன்னின்ன சம்பவம் நேர்ந்ததெனக் கண்டறிய லாகும். அதனால் என் தந்தையின் கெதி என்னவாயிற்று என்று கண்டறியலாகுமென்று எண்ணினேன். கடந்த இரவு வந்து கதவைத் திறக்கப்பார்த்தேன். முடியவில்லை. இன்று மறுபடி வந்தேன். என் தந்தையின் சென்ற வருடத்தைச் சேர்ந்த பதிவுகளிருக்கவேண்டிய இதழ்களெல்லாம் கிழித்தெடுக்கப் பட்டிருக்கின்றன. கோபத்தோடு புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். நீங்கள் வந்து பிடித்துக்கொண்டீர்கள்,' என்று முடித்தான்.

அண்ணுராவ்:- இவ்வளவுதானா?' என்றான்.
நஞ்சப்-ஆம். இவ்வளவே.

அண்ணு-கடந்த இரவுக்குமுன் நீ இங்கு வரவில்லையே? “

நஞ்சப்:-இல்லைஎன்றான். –

அண்ணுராவ் தன் மடியிலிருந்த நோட் புத்தகத்தை எடுத்து அவனுக்குக் காட்டி அப்படியானால் இந்தப் புத்தகம் இங்கு சவத்தருகிலிருந்து அகப்பட்டதே? இதற்கென்ன கூறுகிருய்?" என்றான்.

அதைக் கண்டதே அவன் இடிவிழுந்தவன் போலாய் விட்டான். எனக்குத் தெரியாது. இது ஒட்டலில் போக்கடித்து விட்டதென்று எண்ணி யிருக்கிறேன்." என்றான்.


அண்ணு:-சரி, போதும், போதும் மற்றப்படி நீ கூறவேண்டிய விஷயங்களிருப்பின் நியாயஸ்தலத்தில் கூறிக்கொள்ளலாம். இப்போது என்னோடு போலீஸ் சாவடிக்கு வரவேண்டியதே,” என்றான்.

( தொடரும் )


தொடர்புள்ள பதிவுகள்:



1 கருத்து:

Unknown சொன்னது…

ஆர்வத்தை உண்டாக்குகிறது!
- அரிமா இளங்கண்ணன்