ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

825. பாடலும் படமும் - 21

பிருகஸ்பதி

‘குருப்பெயர்ச்சி’ என்கிறார்களே? தேவகுரு எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டாமா? 

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

இந்தப் படத்தில் காட்சி அளிக்கும் பிருகஸ்பதி தூய்மைக்கும் அறிவுக்கும் உறைவிடமாக விளங்குகிறார். குடை முடி, சதுரமான பீடமுள்ள தேர், அதில் இரண்டு குதிரைகள் ஆகியவை அவருடைய தலைமைக்கு அடையாளங்கள். சாந்தமான பார்வை, உடம்பில் அணிந்த ருத்திராட்ச மாலைகள், கையிற் பிடித்த ஜபமாலை, ஞான முத்திரை காட்டும் கரம், ஒரு கையில் உள்ள யோக தண்டம், மற்றொன்றில் உள்ள கமண்டலம் ஆகியவை அவருடைய ஞானச் சிறப்பைக் காட்டுகின்றன. அவருக்கு அருகில் தாரை வீற்றிருக்கிருள். அவளுடைய உருவம் சிறியதாக இருப்பது பிருகஸ்பதிக்குமுன் காமம் சிறுமையடைவதைக் காட்டுகிறது. பின்னே மேருமலையின் தோற்றத்தைக் காணலாம். 

 வலப்பக்கத்தில் அதிதேவதையாகிய பிரமதேவன் அமர்ந்திருக்கிறான். மூன்று முகங்கள் முன் தோன்ற மற்றொன்று பின்னே மறைந்திருக்க அவன் காட்சி அளிக்கிறான். இடப்புறத்தில் பிரத்யதிதேவதையாகிய இந்திரன் தன் அரச நிலைக்கு ஏற்ற வகையில் யானையுடனும் ஆசனத்துட லும் விளங்குகிறான். 

 நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளியிருக்கிறார் வியாழ பகவான். ஒரத்தில் காணும் வில்லும் மீனும் அவர் தனுர் ராசிக்கும் மீன ராசிக்கும் அதிபதி என்பதைப் புலப் படுத்துகின்றன. 

வாசவனார் போற்றுகுரு வாக்குக் கொருதலைவன் 
தேசுறுபொன் போன்ற திருமெய்யான் - மாசில் அக்க 
மாலைதண்டம் குண்டிகைசின் முத்திரைகை வைத்தகுண 
சீலன் வியாழனென்று தேர். 
                                                --- கி.வா.ஜகந்நாதன் ---

பி.கு.

அசுரகுருவைப் பார்க்க  இங்கே  போகவும்! 

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

பிருகஸ்பதி

சுக்கிரன்

சனி
[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக