வெள்ளி, 31 மே, 2019

1297. பாடலும் படமும் - 64

கூர்மாவதாரம்


[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மத்தாய்ச் சுழன்ற மந்தரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். 

அருணகிரிநாதர் பல திருப்புகழ்களில் இந்த அவதாரத்தைப் பாடியுள்ளார். 



மலையை மத்தென வாசுகி யேகடை
     கயிறெ னத்திரு மாலொரு பாதியு
          மருவு மற்றது வாலியு மேலிட ...... அலையாழி

வலய முட்டவொ ரோசைய தாயொலி
     திமிதி மித்திமெ னாவெழ வேயலை
          மறுகி டக்கடை யாவெழ மேலெழு ...... மமுதோடே

என்கிறார் “ முலை மறைக்கவும்” என்று தொடங்கும் திருப்புகழில்.

மலையை மத்து என வாசுகியே கடை கயிறு எனத் திருமால்
ஒரு பாதியும் மருவும் மற்றது வாலியும் மேல் இட ... (மந்தர)
மலையை மத்தாக நாட்டி, வாசுகி என்னும் பாம்பைக் கடைகின்ற
கயிறாகக் கொண்டு, திருமால் ஒரு பாதிப் புறமும், பொருந்திய
மற்றொரு பாதிப் புறத்தை வாலியுமாக முற்பட்டு,

அலை ஆழி வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம்
எனா எழவே ... அலைகள் வீசும் கடலிலிருந்து பூவலயம் முழுமையும்
ஒரே பேரொலியாய் சப்தம் திமி திமித்திம் என்று கிளம்பவும்,

அலை மறுகிடக் கடையா எழ மேல் எழும் அமுதோடே -
 கடல் கலங்கும்படி கடைதலை மேற்கொள்ள, (அப்போது) மேலே எழுந்த அமுதுடனே

’’ஈரமோடு சிரித்து” என்று தொடங்கும் இன்னொரு திருப்புகழில் ,

பார மேருப ருப்பத மத்தென
     நேரி தாகஎ டுத்துட னட்டுமை
          பாக ராரப டப்பணி சுற்றிடு ...... கயிறாகப்

பாதி வாலிபி டித்திட மற்றொரு
     பாதி தேவர்பி டித்திட லக்ஷுமி
          பாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு

கீர வாரிதி யைக்கடை வித்ததி
     காரி யாயமு தத்தைய ளித்தக்ரு
          பாளு வாகிய பச்சுரு வச்சுதன் ...... 

என்று பாடுகிறார் அருணகிரி.

பார மேரு பருப்பத(ம்) மத்து என நேரிதாக எடுத்து உடன்
நட்டு உமை பாகர் ஆரப் படம் பணி சுற்றிடு கயிறாக ... கனத்த
மேரு மலையை மத்தாகத் தேர்ந்து எடுத்து, உடனே அதை (பாற்கடலில்)
நாட்டி, உமையைப் பாகத்தில் உடைய சிவபெருமானது மாலையாக
விளங்குவதும், படங்களைக் கொண்டதுமான (வாசுகி என்ற) பாம்பை
(அந்த மத்துக்குச்) சுற்ற வேண்டிய கயிறாகப் பூட்டி,

பாதி வாலி பிடித்திட மற்றொரு பாதி தேவர் பிடித்திட
லக்ஷுமி பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு ... ஒரு பாதியை
வாலி பிடிக்க, மற்றொரு பாதியைத் தேவர்கள் பிடித்திட, லக்ஷ்மி,
பாரிஜாதம் முதலான பல சித்திகளும், அரும் பொருட்களும் (பாற்கடலில்
இருந்து) வெளிவரும்படி,

கீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை
அளித்த க்ருபாளு ஆகிய பச்சு உரு அச்சுதன்  ...
பாற்கடலைக் கடைவித்த தலைவனாய், அமுதத்தைத் தேவர்களுக்குக்
கொடுத்தருளிய கிருபா மூர்த்தியாகிய, பச்சை நிறம் கொண்ட திருமால்

திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ:

மலங்கு விலங்கு நெடுவெள்ளம் 
  மறுக அங்கோர் வரைநட்டு
இலங்கு சோதி யாரமுதம் 
  எய்து மளவோர் ஆமையாய்,
விலங்கல் திரியத் தடங்கடலுள் 
  சுமந்து கிடந்த வித்தகனை,
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து 
  அடியேன் கண்டு கொண்டேனே. 

( பொருள்: உள்ளுக்கிடக்கிற) மீன்சாதிகள் தடுமாறும்படியான பெரிய 
வெள்ளம் குழம்பும்படியாக ஆழமான அவ்விடத்திலே ஒரு (மந்தர) பர்வதத்தை நாட்டி விளங்குகின்ற தேஜஸ்ஸோடு கூடின 
அம்ருதமானது  தோன்றும் வரையில் ஒப்பற்ற ஆமையா யிருந்துகொண்டு  அந்த மந்தரமலையானது நாற்புறமும் திரிந்து வரும்படியாக  பெரிய அக்கடலிலே அம்மலையைத்) தாங்கிக் கொண்டிருந்த ஆச்சரியபூதனான பெருமானை கலக்கமுள்ள கடலை அணித்தாக வுடைய  திருக்கண்ணபுரத்திலே அடியேன் கண்டுகொண்டேன்- )

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கடல் கடைந்த வாலி

தசாவதாரம்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

செவ்வாய், 28 மே, 2019

1296. சங்கீத சங்கதிகள் - 191

மைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனைகள் - 3



மே 28. வாசுதேவாச்சாரின் பிறந்த தினம்

‘சுதேசமித்திரனில்’ 1956-இல் வெளியான இரண்டு கட்டுரைகள் இதோ






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

திங்கள், 27 மே, 2019

1295. ரசிகமணி டி.கே. சி. - 7

வாடா விளக்கு 
டி.கே.சி.


‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை.



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:
ரசிகமணி டி.கே.சி.

ஞாயிறு, 26 மே, 2019

1294. எல்லார்வி - 1

நல்வாழ்வு
‘எல்லார்வி’ 

"எல்லார்வி" ( எல்.ஆர்.விஸ்வநாத சர்மா) கல்கிக்கு  அம்மாஞ்சி முறையாவார். இளம் வயதில், "அன்புள்ள அத்தானுக்கு" என்று ஒரு கடிதம் எழுதி, விகடனுக்கு அவர் ஒரு கதையை அனுப்பினார். கல்கி " உறவுக்கும் தொழிலுக்கும் கூட்டுறவு வைக்காமல், நட்பையும் உறவையும் ஒதுக்கி வைத்து, தனி முயற்சியில் முன்னுக்கு வருவது தான் மேல்" என்று பதில் எழுதினார். ரோசத்தில் எல்லார்வி மற்ற பல பத்திரிகைகளில் தன் கட்டுரை, கதைகளைப் பிரசுரித்தார். " எல்லார்வி" என்பவர் யாரென்று தெரியாமலே கல்கியும் அவருடைய சில படைப்புகளை வெளியிட்டார். கடைசிவரை கூச்சத்தினாலும், சமயம் கிட்டாதலாலும்  எல்லார்வி தான் யாரென்பதைக் கல்கியிடம் தெரிவிக்க முடியவில்லை என்பது ஒரு சோகம். 
[ நன்றி: "பொன்னியின் புதல்வர்']
 

. பல சங்கீத வித்வான்களைப் பற்றிய அருமையான நூல்களை எல்லார்வி எழுதியுள்ளார். .இவர் எழுதிய ‘ கலீர் கலீர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘ ஆடவந்த தெய்வம்’.

‘அஜந்தா’ இதழில் 1953-இல் வந்த படைப்பு இதோ. (  கே.ஸ்ரீ. என்பவரை ஆசிரியராய்க் கொண்ட 'அஜந்தா' 40/50 களில் வந்த ஒரு இதழ்.) 












[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சனி, 25 மே, 2019

1293. பாடலும் படமும் - 63

மத்ஸ்யாவதாரம் 


திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யாவதாரம்
வேதங்களைத் திருடிக் கடலாழத்தில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் கொன்று வேதங்களை மீட்டெடுக்க  மீனாய் எடுத்த அவதாரம்.


சிறுத்தசெலு வதனு ளிருந்து
     பெருத்ததிரை உததி கரந்து
          செறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே

என்கிறார் அருணகிரிநாதர் “ கறுத்த தலை” என்று தொடங்கும் திருப்புகழில்.

( பொருள்: சிறுத்த செலு அதனுள் இருந்து ... சிறிய மீன் உருவத்தினுள்
அவதாரம் செய்து,

பெருத்ததிரை உததி கரந்து செறித்த ... பெரிய அலை வீசும்
கடலுக்கு அடியில் ஒளித்து வைத்த

மறை கொணர நிவந்த ஜெயமால் ... வேதங்களை மீட்டு
வருவதற்காகத் தோன்றிய வெற்றித் திருமால்  )

“இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவரூபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.

பெரும் பிரளயத்தின் போது விஷ்ணு மீன் அவதாரம் எடுத்து, வைவஸ்தமனுவின் குடும்பத்தினரையும், சப்தரிஷிகளையும் காத்து, மீண்டும் பூவுலகில் அனைத்து உயிரினங்களையும் செழிக்க வைத்தார். ”

திருமங்கையாழ்வார் தசாவதாரங்களையும் பாடியுள்ளார்.

முதல் அவதாரத்தைப் பற்றி அவர் பாடிய பாடல்:

வானோர் அளவும் முதுமுந்நீர் 
  வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் 
  கொண்ட தண்தா மரைக்கண்ணன்,
ஆனா உருவில் ஆனாயன் 
  அவனை- அம்மா விளைவயலுள்,
கானார் புறவில் கண்ணபுரத்து 
  அடியேன் கண்டு கொண்டேனே.

( பொருள் : கடல் வெள்ளம் தேவர்களின் எல்லையளவும் பரந்து சென்ற காலத்திலே வலிகொண்ட வடிவையுடைய மீனாய்த்  திருவவதரித்து, ஆச்சரியப்படும்படியாக, எல்லாரையும்  பிழைப்பித்தருளின குளிர்ந்த தாமரை போன்ற  திருக்கண்களையுடையவனும் விகாரமற்ற உருவையுடைய ஸ்ரீ கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானை, அழகிய பரந்த விளைவுமிக்க வயல்களை யுடையதும் காடுகள் செறிந்த     பர்யந்தங்களை உடையதுமான திருக்கண்ணபுரத்திலே  அடியேன் கண்டு கொண்டேன்-.) 

மச்ச அவதாரம் : விக்கிப்பீடியா .

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

தசாவதாரம்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

வெள்ளி, 24 மே, 2019

1292. சுத்தானந்த பாரதி - 11

கோனார் பாட்டு
சுத்தானந்த பாரதி


‘பாரதமணி’  இதழில் 1938-இல் வந்த ஒரு கவிதை.



 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


சுத்தானந்த பாரதியார்

வியாழன், 23 மே, 2019

1291. சங்கீத சங்கதிகள் - 190

பாடலும், ஸ்வரங்களும் - 11
செம்மங்குடி சீனிவாச ஐயர்



[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 40-களில் வெளியிட்ட இரு பாடல்களும் , அவற்றின் பொருளும், ஸ்வரங்களும்  இதோ.







[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

செவ்வாய், 21 மே, 2019

1290. கரிச்சான் குஞ்சு - 1

கரிச்சான் குஞ்சு - நாராயணசாமி
சு.இரமேஷ்


2019. இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம்.
====

தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழுதாமல் வடமொழி சார்ந்த தத்துவ விசாரணையில் ஈடுபடும் எழுத்துத் திறனைக் கொண்டிருந்தவர் கரிச்சான் குஞ்சு.இவர் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் தம் திறனை வெளிப்படுத்தியவர்.


கரிச்சான் குஞ்சு என்று அனைவராலும் அறியப்பட்ட இவரின் இயற்பெயர் நாராயணசாமி.


1919ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி, தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தைச் சேர்ந்த சேதனீபுரத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை இராமாமிருத சாஸ்திரி, தாய் ஈஸ்வரியம்மாள்.கரிச்சான் குஞ்சு இளமையிலேயே தந்தையை இழந்தவர். வறுமை நிறைந்த குடும்பம். இராஜலட்சுமி, ருக்மணி, நாகராஜன், சுந்தரராமன் ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள். இராஜலட்சுமி மட்டும் இவருக்கு மூத்தவர்.

8 வயது முதல் 15 வயதுவரை இவர் (பெங்களுரில்) வடமொழியும், வேதமும் பயின்றார். பின்னர் மதுரை, இராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் 17 வயது முதல் 22 வயதுவரை தமிழும், வடமொழியும் கற்று "வித்வான் சிரோமணி" ஆனார்.

கு.ப.ரா., புதுமைப்பித்தன், மெளனி, நா.பிச்சமூர்த்தி போன்றோரின் எழுத்துகளை மணிக்கொடியில் பார்த்த கரிச்சான் குஞ்சு, அவர்களைப் போலத் தாமும் எழுத வேண்டுமென ஆசைப்பட்டார். 1940-இல் "ஏகாந்தி" என்ற புனைபெயரில் இவரது முதல் சிறுகதையான "மலர்ச்சி" கலைமகள் இதழில் வெளிவந்தது. கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா.வோடு நெருங்கிப் பழகியவர். அவரது புனைவுகளால் ஈர்க்கப்பட்டவர். கு.ப.ரா., "கரிச்சான்" என்ற புனைபெயரில் கட்டுரைகள் எழுதினார்.

கு.ப.ரா., மீது கொண்ட அன்பினால், தம் பெயரை "கரிச்சான் குஞ்சு" என்று மாற்றிக்கொண்டார்.

கரிச்சான் குஞ்சு, 1940 - 43 வரை சென்னை இராமகிருஷ்ணா பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1943 - 45 வரை கும்பகோணம் நேட்டிவ் பள்ளியிலும், 1945 - 47 வரை தஞ்சை மாவட்டம் விஷ்ணுபுரம் உயர்நிலைப் பள்ளியிலும் பணியாற்றியுள்ளார். இறுதியாக, 1948 - 77 வரை மன்னார்குடி தேசிய உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

சென்னையில் இருக்கும்போது தி.ஜா.வும் இவரும் ஒன்றாகத் தங்கியிருந்தனர். தி.ஜா. இவருக்கு தூரத்து உறவினர். கரிச்சான் குஞ்சுவுக்கு 19வது வயதில் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் வாலாம்பாள். தீராத நோயின் காரணமாக மனைவி இறந்துவிட, தி.ஜா.வின் வற்புறுத்தல் காரணமாக சாரதா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அப்போது இவருக்கு 28 வயது; சாரதாவுக்கு 17 வயது. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள்.

கரிச்சான் குஞ்சு அடிப்படையில் ஆங்கிலக் கல்வியைக் கற்கவில்லை என்றாலும், ஆங்கிலம், இந்தி, வடமொழி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் புலமை பெற்றவர். இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜா., தஞ்சாவூரைச் சேர்ந்த சுவாமிநாத ஆத்ரேயன் ஆகிய நால்வரும் கு.ப.ரா.வின் எழுத்துகளால் கவரப்பட்டு கதை எழுதத் தொடங்கியவர்கள். எப்பொழுதும் கு.ப.ரா.வுடனேயே இருப்பார்கள். திருச்சியில் கவிஞர் திருலோகசீதாராம் நடத்திய "சிவாஜி" இதழில் கரிச்சான் குஞ்சு தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதினார். தவிர, "கலாமோகினி" இதழிலும் இவரது படைப்புகள் பிரசுரமாயின.

காதல் கல்பம், குபேர தரிசனம், வம்சரத்தினம், தெய்வீகம், அன்றிரவே, கரிச்சான் குஞ்சு கதைகள், சுகவாசிகள், தெளிவு, கழுகு, ஒரு மாதிரியான கூட்டம், அம்மா இட்ட கட்டளை ஆகியவை இவரின் சிறுகதைத் தொகுப்புகள். இவைதவிர, "பசித்த மானிடம்" என்ற நாவலையும் எழுதியுள்ளார். இந் நாவல்தான் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. "சங்கரர்", "கு.ப.ரா.", "பாரதி தேடியதும், கண்டதும்" என்னும் மூன்று வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார். ஆனந்த வர்த்தனன் மற்றும் தேவி பிரசாத் சட்டோபாத்யாவின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.



160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். "சுகவாசிகள்" என்னும் இவரது குறுநாவல் "மனிதர்கள்" என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது. சாகித்திய அகாதெமி, "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் இவருக்கும் இடமளித்து பெருமை சேர்த்துள்ளது.

"தன்னையே அழித்துக்கொள்ளும் அடக்கம் மிகுந்தவர்" என்று நண்பர்களால் பாராட்டப்பட்ட கரிச்சான் குஞ்சு, 1992ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி இயற்கை எய்தினார்.



{ நன்றி:- தினமணி, http://www.heritagewiki.org/  }

தொடர்புள்ள பதிவுகள்:

கரிச்சான் குஞ்சு

திங்கள், 20 மே, 2019

1289. தி.ஜானகிராமன் - 5

தேவதரிசனம்
 மூலம்: கா.டெ.மேஜர்   தமிழாக்கம்: தி.ஜா 

காதம்பரி’ இதழில் 48-இல் வந்த ஒரு படைப்பு.










[ நன்றி: காதம்பரி ]

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

தி.ஜானகிராமன்

ஞாயிறு, 19 மே, 2019

1288. ஓவிய உலா -2

பொன்னியின் செல்வன் -1 




’கல்கி’ 29 அக்டோபர் 1950 இதழ்.

பொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய  இதழ் .
அட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர் மணியம் நான்கு பாத்திரங்களை நமக்கு ஓவிய அறிமுகம் செய்து வைக்கிறார்: வந்தியத்தேவன், குந்தவை, ஆழ்வார்க்கடியான், பெரிய பழுவேட்டரையர்.

என்னிடம் சிறிது சிதிலப்பட்ட நிலையில் உள்ள அந்த முதல் அத்தியாயப் படங்களையும், அட்டைப் படத்தையும், பட விளக்கத்தையும் இங்கே பகிர்கிறேன்.


”கல்கி” யின் அட்டைப்பட விளக்கம்.  ( தன் முதல் வரலாற்றுப் புதினமான “ பார்த்திபன் கன”வையும் நினைவுகூருகிறார்).








[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

   

சனி, 18 மே, 2019

1287. சாவி - 22

'அல்டாப்' ஆறுமுகம் 
 சாவி

[ ஓவியம்: நடனம் ]


அல்டாப் ஆறுமுகம் தன் கீழ் உதட்டை இழுத்து மடித்து 'உய்...' என்று ஒரு விசிலடித்தால், அது அந்த வட்டாரம் முழுவதுமே எதிரொலிக்கும். அந்தச் சீட்டியின் சாயலிலிருந்தே தங்கள் வாத்தியார் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்பதை ஆறுமுகத்தின் சகாக்கள் புரிந்து கொண்டு விடுவார்கள். 

டீக்கடை, சலூன், சினிமாக் கொட்டகை, ரிக்ஷா ஸ்டாண்டு - இம்மாதிரி இடங்களில்தான் அவனுடைய சீடர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். 'சலாம் வாத்தியாரே!' என்று ஆறுமுகத்தை அன்புடன் வரவேற்பார்கள். அவனிடத்தில் அவர்களுக்கு ஒரு தனி மரியாதையும் பக்தியும் உண்டு. 
இரவு 'நைட்ஷோ' ஆரம்பித்து ஊர் அடங்குகிற நேரத்தில்தான் ஆறுமுகத்தின் அட்டகாசம் ஆரம்பமாகும். 

''டாய்......கேட்டுக்கினீங்களாடா, நம்ப வெங்கடேசன் கதையை; பொறுக்கிப் பையன் புத்தியைக் காமிச்சுட்டாண்டா...நேத்து ராத்திரி மணி ஒண்ணு இருக்கும்; நாடார் கட்டைத் தொட்டி இருக்குதுல்வே, அந்தச் சந்துலே வாரன்...கும்முனு இருக்குது இருட்டு! நாயர் கடை இன்னம் மூடியாவல்லே. அங்கே போய் ஒரு பீடியைப் பத்த வச்சுக்கிட்டு ஜைலண்டா நடக்கறேன். தபால் பொட்டி பக்கத்துலே முருங்கமரம் இல்லே, அந்தக் குடிசைக்குள்ளாற யாரோ பொம்பளை அழுவற சத்தம் கேக்குது. நடுப்புற ஆம்பளைக் குரலும் கேக்குது. 

[ ஓவியம்: சு.ரவி, மூலம்: கோபுலு ]


''கம்மலைக் கழட்டிக் குடுக்கப் போறயா, இல்லே உதை வாங்கப் போறயான்னு' ஒரே அடியா கலாட்டா பண்றான் அவன். அதுவோ 'லபோ திபோ'ன்னு அடிச்சுகிணு அழுவுது; பாவம்! 

''நீ என்னை வீட்டைவிட்டு அடிச்சித் துரத்தி ஆறுமாசம் ஆவுது. இங்கே ஏன் வரே நீ? எங்கண்ணங்காரன் சேஞ்சு போட்ட கம்மல் இது. நீ என்னை வெட்டிப் போட்டாலும் சரி, குடுக்கமாட்டேன்'னுது . 

''இவன் அத்தோட வுட்டுட்டுப் போக வேண்டியதுதானே? கம்மலைக் கழட்டிக் குடுத்தாத்தான் ஆச்சுன்னு அடாவடித்தனம் பண்றான். இன்னாடா அக்குரும்பு இது? எனக்குப் பொறுக்கல்லே; நான் ரவுடிதான். ஆனா நாயத்துக்குக் கட்டுப்பட்டவன். உள்ளே அப்படியே பாஞ்சி அவனை இழுத்து வந்து வெளியே போட்டேன். இவன் என்னைக் கண்டுட்டுத் திக்குமுக்காடறான். 'இன்னாடா சோம்பேறி! கம்மலா வோணும் ஒனக்கு? இந்தா வாங்கிக்கோன்னு' உட்டேன் பாரு ஒண்ணு, அப்படியே கீழே குந்திக்கினான். 

''டேய், மரியாதையா இந்த இடத்தை உட்டுப் போயிடு. இல்லாட்டி நான் பொல்லாதவனாயிருப்பேன். யாரும் இல்லாத நேரத்திலே ஒரு பொம்பளை கிட்டே வந்து கலாட்டாவா பண்றே? சோமாறி! பாவம், பச்சைப் பொண்ணு! அதை வெச்சுக் காப்பாத்தத் துப்பு இல்லே உனக்கு. போடா கைராத்து! இன்னாடா மொறைக்கிறே? நீ பெரிய சீமானா? சார்பட்டா பரம்பரை வஸ்தாதா? போடாஆ! கையிலே இன்னா இருக்குதுனு பார்த்துகினியா? அப்படியே சீவிடுவேன், சீவி! நம்பகிட்டயா கமால் காட்றே நீ? நட்டைக் கயிட்டிடுவேன் ராஸ்கோல்னேன்!'' 

''இதுக்குள்ளே அக்கம்பக்கமெல்லாம் 'ஜேஜே'ன்னு கூடிப்போச்சு. 

''டேய், அல்டாப்! உனக்கு வெக்கறேன் இருடா 'வேலை'ன்னு சொல்லிக்கினே சைக்கிள்ளே குந்திக்கினு பறந்துட்டான் அந்தத் துடை நடுங்கி! 
 
''போடா கய்தே! எங்கிட்டே ஒரு கும்மாகுத்து தாங்குவியா நீ...உனக்கு ஓர் அடையாளம் பண்ணி வெக்கறேன் இரு'ன்னு சவால் விட்டுட்டு வந்துட்டேன். பாவம், அந்தப் பொண்ணு மொகத்தைப் பார்த்தேன்; அப்படியே மனசு எளகிடுச்சுப்பா! நான் ரவுடிதாம்பா. ஆனா, நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன். நாயம் அநியாயம் பார்க்கணும்பா எதுக்கும் இவனாட்டமாவா? செங்கல் சூளை தன்சேகரன்கிட்டே போய், அநியாயமா வலுச்சண்டைக்கு நிக்கறானே; அது இன்னா யோக்யதை...? அடடே! அந்தக் கதை தெரியாதா உனக்கு? சொல்றேன் கேளு. தாய் தவப்பன் இல்லாத பொண்ணுப்பா அது. தெளஜன் லைட்லே ரொட்டிக் கடை வெச்சுருக்குது. இந்தத் தன்சேகரன் பையன் மல்லு ஜிப்பா போட்டுக்கினு, கழுத்திலே ஒரு தங்க சையினை மாட்டிக்கினு அந்தப் பொண்ணை 'டாவு' அடிக்கிறான். அது இவனைச் சட்டை பண்லே. பள்ளிக்கூடம் படிக்கிற அந்தப் பையனும் அதுவும் சிநேகிதம். செங்கல் சூளையானுக்கு அது ஆவலே. அந்தப் பள்ளிக்கூடத்துப் பையனை மடக்கி அடிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டான். இந்தப் பொறிக்கி வெங்கடேசன்தான் அவனுக்குக் கையாளு. தன்சேகரன்கிட்டே துட்டை வாங்கித் துன்னுக்கினு தினம் போய் வரான் இவன். ஒண்ணுப் பையனை அடிக்கணும்; இல்லாட்டி துட்டைத் திருப்பிக் கொடுத்துடணும். துட்டை வாங்கிக்கினு ஆளை அடிக்காம ஏமாத்தறது எந்த நாயத்தைச் சேர்ந்தது? அவனைச் சும்மா உடலாமா? இது ஒரு பொழைப்பா? இன்னைக்கு ஆவட்டும்...அவனுக்கு வெக்கறேன் வேலை!'' 

சினிமாக் கொட்டகை வாசலில் ஒரு பெரிய கூட்டம். 

அந்தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பலம் வாய்ந்த கை பிச்சுவாவை உயர்த்திக்கொண்டு நிற்கிறது. அந்தக் கையை வேறொரு கை இறுகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. கத்தி மேலாக எந்தத் திசையில் நகருகிறதோ, அந்தப் பக்கமே அந்தக் கூட்டமும் சாய்கிறது. அந்தக் கத்திக்குரியவன் வேறு யாருமல்ல; 'அல்டாப்' ஆறுமுகந்தான். வெங்கடேசன் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டான். ஆறுமுகம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க்கொண்டிருக்கிறான்! 

''ரெளடியாயிருந்தா என்ன? அதுக்காவ அக்கிரமம் செய்யலாமா? அதான் கீறிட்டேன். ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லே. டாய்! எவனாச்சும் தப்புத்தண்டா சேஞ்சிங்க, திரும்பி வந்ததும் தீர்த்துப்புடுவேன். ஆமாம், சொல்லிட்டேன். இந்த 'அல்டாப்' நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன்!'' 


[ நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்: