ஞாயிறு, 31 ஜூலை, 2022

2193.பாடலும் படமும் - 146

சொக்கநாதன் ஆடிய சொக்கட்டான்


1965- கல்கி தீபாவளி மலர் அட்டைப்படமும், அதைத் தூண்டிய பாடலும்.  ஆடுதளத்தில் உள்ள சிங்கங்கள், ரிஷபங்கள் முறையே பார்வதிக்கும், சிவனுக்கும் உரிய "காய்கள்" என்று கொள்ளலாம்.  



அந்த வடமொழி சுலோகமும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும். கங்கையைப் போற்றும் சுலோகம் இது.

[ நன்றி : கல்கி, https://ia804502.us.archive.org/13/items/SansGangalahari/Sans_Gangalahari.pdf ]


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


சனி, 30 ஜூலை, 2022

2192. கா.ஸ்ரீ. ஸ்ரீ - 4

கா.ஸ்ரீ.ஸ்ரீ அமரரானார்

வாசன்


ஜூலை 28. கா.ஸ்ரீ.ஸ்ரீ. யின் நினைவு தினம்.

===

மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் சுடராக ஒளிவிட்டு மற்ற தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கு முன்னோடியான அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீனிவாசாச்சார்யா அவர்கள், கோதாவாி சலசலக்கும் நாசிக் நகரத்தில் 28.7.99 அன்று தமது 87ம் வயதில் மறைந்தார்.

அறிஞர் அண்ணா ஒருமுறை (1961ம் ஆண்டு,செங்கல்பட்டு) இலக்கிய மாநாட்டில் கா.ஸ்ரீ.ஸ்ரீயை ‘தமிழக காண்டேகர் ‘ என பாராட்டினார். கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்புகளால் தமக்கு தற்கால இலக்கிய ஆர்வம் ஏற்பட்டதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டதுண்டு. இலக்கிய உலகில் தனக்கென ஒரு பாணி, தனி நடை ஏற்படுத்திக்கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீயின் எழுத்துப் பணி மகத்தானது!

நேர்மை, எளிமை, வாய்மை, தூய்மை, பன்மொழிப்புலமை, சொல்வளமை, ஆன்மிகத் தன்மை, எண்ணத்தில் இளமை என அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் அரும்பெரும் குணங்களைப் பற்றி நிறைய எழுதலாம். எதையுமே ஆராய்ந்து பார்த்தபின் ஏற்பதோ மறுப்பதோ அவருடைய நிதானத்தைக் காட்டியது. உள்ளத்திருந்ததை ஒளிக்காமல், யாரையும் புண்படுத்தாமல் பேசும் திறமை அவருக்கு கைவந்த கலை. பழுத்த வயதிலும் பண்பு, அடக்கத்துடன் வாழ்ந்த அவாிடம் (ஜூன் 99ல் ஒரு நாள்), ‘தற்கால தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? ‘ என்று கேட்டபோது, அவர் தயங்காமல், ‘வயதான பின்பு புதிய தமிழ் நூல்களை நான் அதிகம் படிக்கவில்லை. எனவே தற்கால தமிழ் எழுத்தாளர்பற்றி ஏதும் கூற எனக்குத் தகுதியில்லை ‘ என்று நேர்மையான மறுமொழி தந்தார்.

சில குறிப்புகள் –

மகாத்மா காந்தி 1937ல் சென்னை வந்தபோது, உ.வே.சாமிநாத ஐயாின் தமிழ் வரவேற்புரையை கி.வா.ஜகந்நாதனின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்தியில் மொழிபெயர்த்தது கா.ஸ்ரீ.ஸ்ரீ.தான். மகாத்மா காந்தி அந்த உரையை வெகுவாகப் பாராட்டினார். அப்போது கி.வா.ஜ.வுடன் ஏற்பட்ட உறவு கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்கு சுமார் 40 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘கலைமகள் ‘ பத்திாிகைக்கு துணையாசிாியராகவும் பதிப்பாசிாியர்களுள் ஒருவராகவும் பல ஆண்டுகள் பணிபுாிந்தார். ‘மஞ்சாி ‘ பத்திாிகையில் ஏராளமாக எழுதினார்.

பன்மொழிப்புலவரான கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழுக்கு சிறப்பிடம் தந்தார். சென்னை இந்தி பிரசார சபாவில் அவர் வேலை செய்த போது நடந்த சம்பவம் அவருடைய தமிழுணர்வை இலக்கிய உலகுக்கு வெளிகாட்டியது. ‘இந்தியைத் தவிர வேறு இந்திய மொழியில் சிறந்த இலக்கியம் இல்லை, நாமே இலக்கியச் சக்கரவர்த்திகள் ‘ என்ற தொனியில் சில இந்தி எழுத்தாளர்கள் பேசினார்கள். இதைக்கேட்டு வெகுண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘இந்தியை விட தமிழில் சிறந்த கதை கட்டுரைகள் இருக்கின்றன ‘ என்று வாதாடினார். அப்போதிலிருந்து தமிழ் கதைகள், கட்டுரைகள், தமிழிலக்கிய வளம்பற்றின கட்டுரைகள் என பலவற்றை இந்தியில் மொழி பெயர்த்து இந்தி இலக்கியப் பத்திரிகைகளில் வெளியிட்டு வெற்றிகண்டார். ‘இந்தியச் சிறுகதைகள் ‘ என்ற நூல் இந்தியில் வெளிவந்தபோது அதில் கல்கி, புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, கு.ப.ரா, சிதம்பர சுப்ரமணியன் போன்றோர் படைப்புகளை இந்தியில் அமைத்து இடம் பெறச் செய்த அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.தான். இந்த முயற்சிக்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல பாரதியின் ‘தராசு ‘ (கட்டுரைகள்) படைப்பை உள்ளது உள்ளவாறே இந்தி வடிவாக்கி வெளியிட்டார்.

மொழிபெயர்ப்புத் துறையில் சுடராக விளங்கிய கா.ஸ்ரீ.ஸ்ரீ. ஒரு சிறந்த படைப்பாளரும்கூட என்பது குறிப்பிடத் தக்கது. ‘காந்தம் ‘ என்பதுதான் இவர் எழுதிய முதல் தமிழ் நாவல் – 1945ல் கலைமகள் வெளியீடாக வந்தது. இரண்டாம் நாவல் 1949ல் வெளியிடப்பட்ட ‘காற்றாடி ‘ என்ற தமிழ் நாவல். மேலும் ‘நீல மாளிகை ‘ ‘அன்னபூரணி ‘ போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழ் வாசகர்களுக்கு அளித்தார். குமுதம் பத்திாிகை நிறுவிய திரு. எஸ்.ஏ.பி.அண்ணாமலை கேட்டுக்கொண்டபடி, கா.ஸ்ரீ.ஸ்ரீ. சொந்தச் சிறுகதையை குமுதம் முதல் இதழுக்கு அனுப்பினார். மேலும், கா.ஸ்ரீ.ஸ்ரீ.தமிழில் மொழிபெயர்த்த காண்டேகாின் நாவலான ‘வெண்முகில் ‘ குமுதம் வெளிவர ஆரம்பித்த 1947 நவம்பர் மாதம் அதில் முதல் தொடர்கதையாக வெளிவந்தது. 1940-50களில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் கதைகளை வெளியிடாத தமிழ் பத்திாிகைகளே இல்லையென்றால் மிகையாகாது.

இளம் வயதிலேயே வடமொழிப்புலமையும் மராட்டி மொழி பழக்கமும் பெற்ற கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சரளமாக எழுத பேசக் கற்றுக்கொண்டார். இவர் வி.ஸ.காண்டேகாின் மராட்டி இலக்கியத்தைத் தமிழில் மொழிபெயர்த்துக் குவித்தார். காண்டேகருடன் இவருக்கு இருந்தது கடிதத்தொடர்பு மட்டுமே. இருவரும் நோில் சந்தித்துக்கொள்ள வாய்ப்பே ஏற்படாமல் போனது. ‘காண்டேகாின் நூல்களை ஏன் மொழி பெயர்க்க விரும்பினீர் ? ‘ என்ற கேள்விக்கு, கா.ஸ்ரீ.ஸ்ரீ.அளித்த பதில் – ‘வங்க, இந்தி நாவல்கள் தமிழில் பெரும்பாலும் வந்து ஓய்ந்திருந்த காலத்தில், புதுமையான காண்டேகாின் இலக்கியத்தை தமிழாக்க விரும்பினேன். 1940-50களில் காண்டேகாின் 13 நாவல்களையும், சிறந்த 150 சிறுகதைகளையும் தமிழாக்கினேன். வாசகர் காண்டேகர் இலக்கியத்தை ஆர்வத்துடன் விரும்பிப் படித்தனர். ‘

‘சமூக அமைப்பு முறையில் மிகப்புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர் முரசு – காண்டேகரின் கதைகள் ‘ என்று அறிஞர் அண்ணாவால் குறிப்பிடப்பட்ட அந்த கதைகளை தமிழ் வாசக உலகுக்கு அயராமல் அளித்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யைப் பற்றி, ‘மராத்தியில் நான் பெற்ற புகழைவிட, தமிழில் என் இலக்கியத்தை மொழி பெயர்த்து கா.ஸ்ரீ.ஸ்ரீ.பெற்ற புகழ் அதிகம். அதற்கு அவர் தகுதியானவருங்கூட ‘ என்று காண்டேகரே ஒருமுறை கூறியுள்ளார்.

காண்டேகாின் படைப்புகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யை மிகவும் கவர்ந்த நாவல் ‘யயாதி ‘தான். ‘புராண பாத்திரமான யயாதியை இக்காலத்திய மிதமிஞ்சிய வேட்கை வெறியிலாழ்ந்த மனிதனாக காண்டேகர் சித்தாித்திருக்கிறார். புராணக்கதையொன்றை அற்புதமான நவீனமாய் படைக்க முடியுமென்பதற்கு இது தக்க சான்று ‘ என புகழ்ந்தார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. காண்டேகாின் மராட்டிய ‘யயாதி ‘க்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சாகித்ய அகாதெமியின் பாிசும் பிறகு அதற்கு பாரதீய ஞானபீட பாிசும் கிடைத்தன. கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘யயாதி ‘க்கு 1991ல் சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பாிசு கிடைத்தது!

மொழி நம்மைப் பிாிக்கும் என்று எண்ணுவது குறுகிய கண்ணோட்டம். சமுதாயப் பிரச்னைகளை விளக்கிட்டுகூ காட்டும் நூல்கள் எந்த மொழியிலிருந்தாலும் தாய்மொழியில் தரப்படும்போது, பிரச்னைகளை நம்மால் நன்கு புாிந்துகொள்ளமுடிகிறது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு இவ்வகையில் மகத்தான தொண்டு புாியும் இலக்கியவாதி கள்தாம் மொழிபெயர்ப்பாளர்கள். ஆரவாரமில்லாமல் ஆயுட்காலம் முழுதும் இந்த இலக்கியப் பணியில் ஈடுபட்டிருந்த வர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுண்கலை. நல்ல சங்கீதம், ஓவியம் போல பிசிறில்லாமல் இருக்க வேண்டும். அதற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாலும், எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் தகும் ‘ என்று சொன்னவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.

வடமொழிப்புலமை கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ. வான்மீகி ராமாயணத்தை நன்கு அறிந்தவர். இந்த இலக்கிய ஆராய்ச்சின் விளைவாக, ‘சுதர்ஸனம் ‘ என்ற வைணவ மாத இதழில் ராமாயணத்தையொட்டி பல மனோதத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார். வேதங்கள் பற்றி விாிவான ஆராய்ச்சியை பல ஆண்டுகள் செய்தார். பல பாகங்கள் கொண்ட வேதநூல்களை தமிழில் எழுத வேண்டும் என்பது இவருடைய பொிய இலக்கிய இலக்காக இருந்தது. ஆனால் அதற்குள் முதுமை இவரை வென்றது. இவர் கடைசியாக ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிறிய நூல் வேதத்தைப் பற்றியதுதான். கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் நூல்களை சீராக வெளியிட்ட, 2000ல் நூற்றாண்டை கொண்டாடப்போகும் மயிலை அல்லயன்ஸ் பதிப்பகத்தார்தான் இந்த ஆங்கில நூலையும் வெளியிடுவதாக இருக்கிறார்கள். இது ஒரு ஆன்மிகக் கருத்துக்கோவை – கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் இலக்கியப் பணிக்கு ஒரு சிகரம்போன்றது எனலாம்.

‘இலக்கியப் பணி என்றால் அதில் சமூகப் பணியும் ஆன்மிகப் பணியும் அடக்கம் ‘ என்று சொன்ன அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. இன்று இந்தியாவை ஆக்கிரமித்துள்ள (சமூக)நோய் என்ன என்ற கேட்டபோது, ‘தன்னலம் ‘ என்று ஒரே சொல்லில் பதில் தந்த அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்கு நமது அஞ்சலி.

(இந்த அஞ்சலியின் சுருங்கிய வடிவம் ‘கல்கி ‘ 15.8.99 இதழில் இடம்பெற்றது. – வாசன்)

Thinnai 1999 December 3


[ நன்றி: https://old.thinnai.com/?p=69912039 ]

தொடர்புள்ள பதிவு:

வி. ஸ. காண்டேகர்  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வெள்ளி, 29 ஜூலை, 2022

2191. கதம்பம் - 99

அருணா ஆசஃப் அலி 10

ராஜலட்சுமி சிவலிங்கம்


ஜூலை 26. அருணா ஆசப் அலியின் நினைவு தினம்.


இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும் சமூக சேவகியுமான அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali)  பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஹரியாணா மாநிலம் கால்கா நகரில் (அப்போது பஞ்சாப் மாநிலம்) பெங்காலி குடும்பத்தில் (1909) பிறந்தவர். தந்தை ஹோட்டல் நடத்திவந்தார். லாகூர் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு நைனிடாலில் பயின்றார்.

l இங்கிலாந்தில் உயர்கல்வி கற்க விரும்பியவர், அதற்கு பணம் ஈட்ட, கல்கத்தா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறு வயதில் இருந்தே சுதந்திர வேட்கையும் துணிவும் கொண்ட இவர், இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

l சட்ட வல்லுநரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான ஆசிஃப் அலியை சந்தித்தார். ஆங்கில இலக்கியத்தில் இருவருக்கும் இருந்த ஈடுபாடு இவர்களை வாழ்க்கையிலும் இணைத்தது. உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதால் ஓராண்டு காலம் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.

l டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட இவர், பெண் அரசியல் கைதிகளின் உணர்வுகளை மதிக்காத சிறை அதிகாரிகளுக்கு எதிராக போராட முயன்றார். உடனே ஆண்கள் சிறையான அம்பாலாவுக்கு மாற்றப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் இவர் விடுதலை செய்யப்படவில்லை. இதை கண்டித்து மற்ற பெண்களும் வெளியேறாமல் போராட்டம் நடத்தினர். பின்னர், மகாத்மா காந்தி தலையிட்டதாலும் பொது மக்கள் போராடியதாலும் விடுதலை செய்யப்பட்டார்.

l 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னணி தலைவராக இருந்து போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

l பம்பாய் கோவாலியா குள மைதானத்தில் தடையை மீறி காங்கிரஸ் கொடியை ஏற்றினார். இதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். ஒருமுறை இவரைப் பிடிக்க ரொக்கப் பரிசுகூட அறிவிக்கப்பட்டது.

l நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸில் இருந்து வெளியேறி சோஷலிச இயக்கங்களில் இணைந்தார். சமூக சேவைகளில் ஈடுபட்டார். நலிவுற்ற பெண்கள், மாணவர்கள் நலனுக்காகப் பாடுபட்டார். மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்றார்.

l டெல்லியின் முதல் மேயராக 1958-ல் நியமிக்கப்பட்டார். அப்போது நகரின் சுத்தம், சுகாதாரம், வளர்ச்சிக்காக பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார். மாநகர நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். பொருளாதாரம், ஜாதி மற்றும் ஆண்-பெண் பாகுபாடுகளைப் போக்க முனைப்புடன் பணியாற்றினார்.

l ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காக, குடிசைப் பகுதிகளுக்குச் சென்று பணியாற்றினார். 1964-ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். ஆனால் தீவிர அரசியலில் இருந்து விலகியே இருந்தார். ‘லிங்க்’ வார இதழ், ‘பேட்ரியாட்’ நாளிதழை தொடங்கி நடத்தினார்.

l அமைதிக்கான லெனின் பரிசும் 1992-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டன. நேர்மை, தன்னலமற்ற சேவை, நாட்டுப்பற்று ஆகியவற்றுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய அருணா ஆசஃப் அலி 87 வயதில் (1996) மறைந்தார். அவருக்கு 1998-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[நன்றி: https://www.hindutamil.in/news/blogs/48989-10-2.html ]

தொடர்புள்ள பதிவுகள்:

அருணா ஆசப் அலி: விக்கி

Aruna Asaf Ali: Wiki

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 28 ஜூலை, 2022

2190.நட்சத்திரங்கள் - 19

லட்சங்கள் லட்சியங்கள் : எம்.எஸ்.விஜயாள்

அறந்தை நாராயணன்

[ Bhakta Naradar, courtesy: The Hindu]









[ நன்றி; தினமணி கதிர், பாபு பழனியப்பன்]


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:



பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


புதன், 27 ஜூலை, 2022

2189. மௌனி - 3

குடும்பத்தேர் 

மௌனி


ஜூலை 27. மௌனியின் பிறந்த தினம்.

மணிக்கொடியில் 1936-இல் வந்த கதை.

=== 

பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு, ஒரு நாள் , கிருஷ்ணய்யர் தன் வீட்டு ரேழி உள்ளே உட்கார்ந்துகொண்டு, நான்கைந்து தினம், எழுதப்படாது நின்றுபோன தினசரிக் கணக்கை எழுதிக் கொண்டிருந்தார்.

 கிருஷ்ணய்யருக்கு ஐம்பத்திரண்டு அல்லது ஐம்பத்து மூன்று வயது இருக்கலாம். திடசாரி. அவர் அந்தஸ்தும் கௌரவமும் உடையவர். குடும்ப பரிபாலனம், வெளி விஷய வியாபகம் முதலிய எல்லா விஷயங்களிலும் அக்கிராமத்தாருக்கு, பின்பற்றக்கூடிய லட்சிய புருஷராகக் கருதப்பட்டவர். நாலைந்து தினம் அசௌக்கியமுற்றுக் கிடந்து, அவருடைய தாயார் இறந்து போய் ஒரு மாதம் ஆகிறது. 

கிழவிக்கு, அந்த எண்பது வருட உலக வாழ்க்கை , ஒரு மலர்ப்பாய்ப் படுக்கையாக இருக்கவில்லை. ஒரு தனவந்தக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டது, அவளை சிற்சில சங்கடங்களுக்கு ஆளாகாது மீட்டதெனினும், அற்ப ஆயுளில் போன அவள் குழந்தைகள், குடும்பம் நடுநடுவே சஞ்சலங்கள் முதலிய இன்னும் எத்தனையோ விதப் பொறுப்புகளின் தன்மையற்ற தொல்லைகளை அவள் அனுபவிக்காமல் இல்லை. அதில் சந்தோஷமே தவிர அவள் வருத்தம் கொள்ளவில்லை. விவேகமான இயற்கை அறிவு கொண்டு அவள் நடத்திய குடும்ப வாழ்க்கை , வீடு நிறைந்த ஒரு சுடரொளி போன்றது.

 செலவுகளை ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்தி எழுதலானார். ஆட்களுக்குக் கொடுத்தது. பறையன்கள் தண்ணிக்காக..... தச்சன்கூலி.... மூன்று நாள் முன்பு அமாவாசை தர்ப்பண தக்ஷிணை... ஸ்வாமி புறப்பாட்டிற்கான ஊர் வீதாச்சாரம் எல்லாம் எழுதியாகி விட்டது. அப்படியும் மூன்றே காலணாக் குறைந்தது. செலவு தெரியவில்லை . வழக்கமாக, எழுதிப் பழக்கப்பட்ட கை, 'அம்மா பற்று..... 0.3.3' என்று எழுதிக் கணக்கைச் சரிக்கட்டி விட்டது. அதைக் கிருஷ்ணய்யர் பார்த்தார். அதன் அர்த்தம் சிறிது சென்று திடீரென்று புலப்பட்டது போன்று அவர் கண்கள் நிரம்பின. இரு சொட்டுக் கண்ணீர் கணக்குப் புத்தகத்தின் மீது விழுந்தது. அறியாமல் விரலால் துடைத்த  போது அம்மா பற்று........0.3.3' என்ற வரி நன்கு காயாததினால் மெழுகிக் கறைபட்டது. 

'அது அவர் வழக்கம். சிறிது தொகை கணக்கிற்கு அகப்படாவிட்டால், தலையைச் சொறிந்தும் ..... பேனா மறுமுனையை மூக்கு நுனியில் அழுத்தியும் ..... என்ன ஞாபகப்படுத்தியும், செலவு தெரியாவிட்டால் 'அம்மா பற்று என்று குறைந்த தொகையை எழுதி முடித்துவிடுவது அவர் வழக்கம். 

கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு, இரண்டு தரம், நன்றாகப் பூட்டப்பட்டு இருக்கிறதா என்று கதவை தள்ளிப் பார்த்துவிட்டுக் கூடத்து ஊஞ்சலில் வந்து உட்காருவார். திருப்பத்தாழ்வாரச் சந்தனக் கல்லடியில், குருட்டு யோசனைகள் செய்துகொண்டு அவர் தாயார் படுத்திருப்பாள். மனைவி உள்ளிருந்து காப்பி கொணர்ந்து வைத்துவிட்டுப் போனவுடன், காப்பியை அருந்தி, வெற்றிலை போட்டுக்கொண்டே அம்மா இன்னிக்கு உன் பற்று அணா' என்று சொல்லுவார். உள்ளே இருந்து அவர் மனைவியின் சிரிப்புச் சப்தம் கேட்கும். அவர் தாயாருக்கோவெனின், சமீப சில வருஷமாக காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது. ஆனாலும் இவர் சொல்வது அவளுக்குக் கேட்கும். 'ஆமாம் எனக்குத்தான் காக்கை புத்தி வைத்தது மறந்துவிடும்! உனக்கு? அவ்வப்போது செலவு குறித்துக்கொண்டால் தானே. நான் இருக்கேன் என் தலையை உருட்ட , என் தலையிலே போட, அப்புறம் வயது ஆகியும் குடும்பப் பொறுப்பு...' அவள் சொல்லி முடிப்பாள். கிருஷ்ணய்யருக்கு சாந்த சுபாவம் தான். இருந்தாலும் தன் தாயார் சொல்லும்போது சிற்சில சமயம் கடிந்து பேசி விடுவார் - 'ஆமாம், பிரமாதம்! குடிமூழ்கிப் போய்விட்டது. அடித்துக் கொள்ளுகிறாயே' என்பார். 

'எல்லாம் இருந்தாத்தாண்டா. எப்படியாவது போயேன்; என் காதிலே போட்டால் தானே நான் சொல்லும்படியாகிறது' என்று சொல்லும்போதே அவளுக்கு வருத்தத்தில் அழுகை வந்துவிடும். சிறிது சென்றபின் பழையபடி தாயாரும், பிள்ளையும் பேசிக் கொள்வதைப் பார்க்கும் போது - இவருடைய குதூகல குடும்பப் பேச்சுகள் !

 ஆம், அம்மா பற்று மூன்றே காலணாத்தான். எதிரிலே. மேஜையின் மீது நோட்டு விரிக்கப்பட்டு வெறிக்கப் பார்க்கிறது. அவர் கண்ணீர் நின்றுவிட்டாலும் மனது மட்டும் உள்ளே உருகிக் கொண்டிருந்தது. குடும்ப வீட்டின் தாய்ச் சுவர் இடிந்து கரைந்ததைக் கண்டார். அதற்குப் பிரதியாக, தன்னால் தாங்கி நிற்க முடியுமா என்ற எண்ணத்தில் தன் முழு பலவீனத்தையும் உணர்ந்தார். குடும்ப விவகாரங்களை, அடுத்த தலைமுறைக்கு விட்டு விட்டுத் தன் தாயார் வகித்த ஸ்தானத்தை ஏற்றுக்கொள்ளச் சமயம் இன்னும் வரவில்லையே என்பதை எண்ணினார். 

அவருடைய பெரிய பையன் படித்துவிட்டு உத்தியோக வேட்டையில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறான். மற்றவர்கள் இன்னும் சிறுவர்கள் தான். தன் மனைவியோ வெனில் ....... சுத்த அசடுதானே! 

திடீரென்று எழுந்து உள்ளே காப்பி சாப்பிடச் சென்றார். வீடே வெறிச்சென்று தோன்றியது. மனைவி காப்பி வைத்துவிட்டுப் போனதும், ஏதோ சொப்பன உலகில் ஊமையாக நடப்பதுபோன்று தான் தோன்றியது. சந்தனக் கல்லடி காலியாக இருந்தது. காப்பி குடித்துவிட்டு வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். அவர் மனைவி, பாத்திரங்களை எடுத்துப்போக வந்தபோது எதிரே எங்கேயோ ஆகாயத்தைப் பார்ப்பது போல உட்காந்திருந்தார். சிம்னி இல்லாது தொங்கிக் கொண்டிருந்தது கூடத்தில் பவர்லைட்! 'மூன்று நாளாச்சி, கிளாஸ் உடைந்து - சொன்னால் மறந்து விடுகிறீர்களே என்று பாத்திரங்களைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் மனைவி உள்ளே போக ஆயத்தப்பட்டவள் , அவர் எதையோ உற்றுநோக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுச் சொன்னாள். 

மூன்று நாளாய் அவள் சொல்லியதும் மறக்கும்படியாகத் தான் இருந்தது. கிருஷ்ணய்யருக்கு அவள் சொன்னது போலவே இல்லை . தன் தாயார் சொல்லியிருந்தால்...? தான் மறந்திருந்தால் -? அவர் மனது என்னவெல்லாமோ யோசித்தது நான்கு வருஷத்துக்கு முன் ஊரார் கூடிப் பெருமாள் கோவிலில் ஏகாதசி இரவு பஜனை செய்ய எண்ணினார்கள். அது விட்டு விட்டுத் தூங்கும் பக்தி சிரத்தையின் ஒருவிதத் திடீர் ஆரம்பம். இவர் வீட்டு பவர்லைட் இரவல் போயிற்று. அது அவர் தாயாருக்குத் தெரியாது. அன்று இரவு அவர் சாப்பிடும் போது தூணடியில் அவர் தாயார் உட்கார்ந்து பலகாரம் செய்துகொண்டு இருந்தாள். கிருஷ்ணய்யரின் மனத்துள்ளே, ஏதோ சொல்லவேண்டிய ஒரு விஷயம் வெளிச் செல்லாது அடக்கப்பட்டதினால் ஏற்பட்ட ஒரு வேகம். அவர் அறியாமல் சொன்னவர் போன்று 'அம்மா கோவிலுக்கு பவர்லைட்' என்று ஆரம்பித்தவர், சொல்லி முடிக்கவில்லை . அவர் தாயார் சொன்னாள், 'எதையும் எரவல் கொடுத்துவிடு. ஏன் வாங்கணும்? தொலைக்கத்தானே...' அப்போது அவருக்குச் சிறிது கோபம்தான். இருந்தாலும் அவள் சொன்னதில் என்ன பிசகு இருக்கிறது என்பதில் சந்தேகம். அவளிடம் ஏன் சொல்லவேண்டும்? சொன்னால் தானே, அவள் சொல்வதற்குக் காரணமாகிறது? அது ஒரு விநோத விஷயம்தான் - தாயாருக்கு தெரியப்படுத்துவது என்பது. எதில் தான் என்ன பிசகு. தன் தாயாருக்குத் தெரியாது, தெரியப்படுத்தாது இருந்தால்? ஆனால் அவ்வகையில் தான் குடும்பம் நடத்தினால் நாசகாலம் தான். அவருக்குத் தன் குடும்பத்தில் தன் தாயார் வகிக்கும் பொறுப்புத் தெரியும். அவள் சொல்வதில் என்ன பிசகு என்பதைத்தான் உணர்ந்தார். பேசாது இருந்துவிட்டார். மறுநாள் விளக்கு வந்தபோது கிளாஸ் உடைந்து இருந்தது. தம்பூராவை நிமிர்த்தி சுருதி கூட்டிய போது அது விளக்கைத் தட்டியதினால் சிம்னி விரிந்து விட்டது. அந்த விஷயமும் தன் தாயாருக்குச் சொன்னார். அவருடைய மனதை அறிந்தவள் போன்றே ஆறுதலாக, "போகிறது. அல்பவிஷயம் ஸ்வாமி காரியம். ஒன்று வாங்கி வந்துவிடு சாயங்காலம்" என்றாள். அந்தச் சிம்னி தான் இதுவரையிலும் இருந்து வந்தது. எதிரே அந்த சிம்னியில்லா விளக்கும் தன் தாயார் நினைவை ஊட்டிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார். 

இரேழி உள் சாத்தாது வந்தது ஞாபகம் வந்தது. எழுந்து உள்ளே சென்று சிறிது உட்கார்ந்து இருந்தார். கணக்குப் புஸ்தகம் மூடி மேஜை அறையில் வைக்கப்பட்டது. நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார் கிருஷ்ணய்யர். மாட்டுக்காரப் பையன் மாடுகளை வீட்டு வாயில் வழியாக உள்ளே அடித்துவிட்டு 'அம்மா மாட்டைக் கட்டுங்கோ' என்று கூவிவிட்டுப் போய்விட்டான். 

மேல்காற்று வாயிலில் புழுதியைத் தூற்றிக் கொண்டிருந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த விரைக்கோட்டை அந்துகள் அவர் முகத்தில் மொய்த்தன. அவருக்கு அதுவும் தெரியவில்லை. ஜன்னல் கதவு காற்றில் தடாலென்று அடித்துக்கொண்டது. மேல்காற்று நாளில் தன் தாயார் சொல்வது ஞாபகம் வந்தது. 'உடம்பு வலி எடுக்கும்; ரேழியிலேயே படுத்துக்கொள்' அவர் எங்கே படுத்துக்கொண்டாலும் அதைப்பற்றி அவளுக்குத் தெரியாது. அவள் சொல்லிதான் விடுவாள். இரவிலே அநேகமாக அவள் தூங்கமாட்டாள். காது மந்தம்; கிழவயது. தாழ்வாரத்துக் கீற்று இரட்டை விரி இரவில் காற்று அடித்துக் கொள்ளும் போது 'யார்-யார்?' என்று கேட்டுவிட்டுப் பின்னர் விஷயத்தை யூகித்துக் கொண்டு பேசாது உறங்கிவிடுவாள். மற்றும் நடுஇரலில் கேட்காத சப்தங்கள் (?) அவள் நுண்ணுணர்விற்கு எப்படியோ எட்டி 'யார்' என்று கேட்டும் திருப்தி அடையாது, இருளின் பயத்தை, அவள் ஊன்றுகோல் உதவின டக்டக் சப்தத்தினால் விரட்டுவது போன்று எழுந்து நடந்து ஒவ்வொரு இடத்தையும் தடவித் தடவித் திருப்தியுற்று, திரும்பிப் படுத்துக் கொண்டு விடுவாள். மார்கழி மாதக் குளிரானாலும் அவளை வருத்தாது. விடியற்காலையில் எழுந்து ஏதோ சுலோகத்தை முணு முணுத்துக் கொண்டு, கொல்லை மேட்டிலிருந்து வாயில் வரையிலும் சாணம் தெளித்து வீட்டையே புனிதமாக்குவது போன்று வேலை செய்வாள். 

கிருஷ்ணய்யருக்குத் தன் தாயாரை இழந்ததின் வருத்தம் தாங்கமுடியவில்லை. இழக்கப்பட்ட தாயார் தனக்குக் கவலைக்கு இடமின்றி குடும்பத்தை நடத்த எவ்வெவ்வகையில் உதவியாக இருந்தாள் என்பதை உணர்ந்தபோது, அவள் இடத்திற்கு யார் இப்போது இருக்கிறாள் என்பதை அவரால் கண்டுகொள்ள  முடியவில்லை . அப்படி அவள் இல்லாது நடத்தும் வகையும் தோன்றவில்லை. தான் அந்த இடத்தைக் கொள்ள வேண்டின், தன் பொறுப்புகளைத் தன் கீழ் வாரிசுகள் கொள்ள வேண்டும். அதற்கோ ஒருவரும் இல்லை. இருந்தும் தன் தாயாரைப் போன்று தான் அவ்வளவு நன்றாகப் பாதுகாப்பளிக்க முடியுமா? இரவில், கூடத்துக் குத்துவிளக்கின் ஒளிபடராத பாதி இருளில் அவன் உட்கார்ந்து ஜபம் செய்து கொண்டிருப்பாள். உள்ளே குழந்தைகள் தாயாரிடம் விஷமம் செய்து கொண்டு அவளைக் காரியம் செய்யவிடாது உபத்திரவம் செய்யும் போது, குழந்தைகளைக் கூப்பிட்டு கதை சொல்வதும்..... அடிக்கடி குழந்தைகள் உடம்பு இளைத்துவிட்டது என்று நாட்டுப் பெண்ணைக் கோபித்துக் கொள்வதும், இவ்வகையில் தன்னால் கவனம் செலுத்த முடியுமா என்பதை அவர் நினைக்கும்போது யோசிக்க, யோசிக்க, கிருஷ்ணய்யர் வீடே தன் தாயாரால் நிரப்பப்பட்டிருந்தது போன்ற தோற்றத்தைத் தான் உணர்ந்தார். அவள் இறந்ததை எண்ணும் போது தன் பலவீனத்தைக் கண்டார். 

வெளியில் தான் எவ்வளவு கெட்டிக்காரரெனத் தோன்றுவதற்கு ஒரு உரைகல் போலவிருந்த தாயார் போய்விட்டாள். 

எழுந்து கதவைப்பூட்டிக்கொண்டு கொல்லையில் வேலை செய்யும் தச்சனைப் பார்க்கப் போனார். கொட்டிலில் கட்டப்படாத மாடுகளில் ஒன்று கடந்த அரைமணி நேரமாக தவிட்டைத் தின்று கொண்டிருந்தது. மாடு வந்திருக்கு கட்டு' என்று முன்பு தன் தாயார் சொல்லுவதை 'அனாவசியமாக ஏன் சொல்லுகிறாள்? கட்டமாட்டார்களா என்று மிகுந்த அலட்சியமாக எண்ணியவர், கண் கூடாக அவள் வார்த்தைகளின் மதிப்பைப் பார்த்தார். கொல்லையில் சாவதானமாக வீட்டு வேலைக்காரன் வேட்டி துவைத்துக் கொண்டிருந்தான். உள்ளே அவர் மனைவி படுத்துக்கொண்டிருந்தாள். மாடுகளைக் கட்டிவிட்டு கொல்லையில் சென்றபோது, தச்சன் வேலை செய்யாது வெற்றிலை போட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருந்தான். அவனைக் கடிந்து, வாயிற்பக்கம் பார்த்துக்கொண்டே அங்கு உட்கார்ந்தார். கொல்லையில் வேலையை கவனிக்கும் போதும், வாயிற்பக்கத்தில் கவனிப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. எவ்வளவு சமாதானத்தோடு முன்பு வீட்டை விட்டு வெளியே போக முடியும் என்பதையும் வருகிறவர்கள் போகிறவர்களுக்கு எவ்வளவு சரியானபடி தன் தாயார் ஜவாப்பு சொல்லுவாள் என்பதையும் நினைத்துக் கொண்டார். 'அந்தக் கர்நாடகம்' என்று அவளை அடிக்கடி இவர் சொல்வது உண்டு . 

ஆனால் அப்படியல்ல. நாகரிகத்தையும், நாகரிகத்தில் ஜனங்கள் முன்னேற்றத்தையும் அவள் கண்டுகொள்ளாமல் இல்லை. கண்டு கொள்ள அவைகளைப் பயன்படுத்தும் 

வகையில் தான் வித்தியாசம். சூன்ய மூளையில், அழகற்று மிருகவேகத்தில் தாக்குவது போன்று நவநாகரிகம் , அவளிடம் தன் சக்தியைக் காட்டமுடியாது. எத்தனையோ தலைமுறையாகப் பாடுபட்டுக் காப்பாற்றி வரப்பட்ட , மிருதுவாக உறைந்த குடும்ப லஷியங்கள் உருக்கொண்டவள் போன்றவள் தான் அவள். வெற்று வெளியிலும், தாழ்ந்த இடத்திலும் பாய்வது போலவன்றித் தணிவு பெற்ற, அழகுபட, அமைதியுடன் தான் நாகரிகம் அவளிடம் இசைவு கொள்ளும். திடீரென்று தோன்றும் பச்சை எண்ணங்களையும், பழக்க வழக்கங்களையும் பதனிடாமல் ஏற்று வழங்குவது முடியுமோ குடும்பங்களினால்? 

அவளைவிடப் புதுக்காலத்தின் முன்னேற்றத்தின் உயர் அம்சங்களை உணர்ந்தவர்கள் இல்லை. வெகு நாட்கள் முன்பே, வீட்டில் மணி அடிக்கும் கடியாரம், அவள் தூண்டுகோலின் பேரிலே வாங்கப்பட்டது. அதனால் அவளுக்குக் கொஞ்சமும் பிரயோஜனமில்லை . பகலில் முற்றத்தில் விழும் நிழல் தான் அவளுக்குக் கால அளவு. இரவிலோ வெனின், அவளுக்கு நக்ஷத்திரம் பார்க்கத்தெரியும். அருணோதயத்திற்கு இன்னும் எவ்வளவு நாழிகை இருக்கிறது என்று அவளால் தெரிந்து கொள்ள முடியும். வாங்கிய பின், அநேகர் மணி பார்க்க வருவதுண்டு. அதில் தான் அவளுக்கு மிகுந்த திருப்தி. சிறுவயதில், குடும்பத்தின் கௌரவ எண்ணங்களை, குழந்தைகளுக்குச் சொல்லுவாள். அதனால்..... குடும்பத்தில் பழைய நினைவுகள்... குத்துவிளக்கடியில் குழந்தைகளுக்குச் சொல்லும்போது... அறிவுக்கெட்டாது திகைப்பில் காலத்தில் மறைந்த பழைய பழைய கதைகள்.... அவளுடைய மாமிப் பாட்டி அப்படி இருந்தது.... பெரிய மாமனார் காசிக்கு ஓடிப்போனது... எவ்வளவு தூரம் தன் மதிப்பு, குடும்ப மதிப்பு, ஆரோக்கியமான போதனைகளை, குழந்தைகள் மனத்தில் பாலூட்டுவது போன்று, ஊட்டிவந்தாள்!.... 

சாயங்காலம் ஆகிவிட்டது. கொல்லைக் கதவுகளை பூட்டிக்கொண்டு வாயிற்பக்கம் வந்தார். அப்போது அவருடைய தூர பந்து ஒருவர், அவர் தாயார் இறந்த துக்கம் விசாரிக்க வந்தார். அவரோடு பேசும்போதே கிருஷ்ணய்யருக்கு துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது. வந்தவருக்கு இது வியப்பாகத்தான் இருந்தது. 'என்னடா கிருஷ்ணா! பச்சைக் குழந்தையைப் போல, அம்மாவை நினைத்துக்கொண்டு...! உன்னுடைய திடசித்தம் எல்லாம் எங்கே? என்றார் அவர். 

ஆனால் கிருஷ்ணய்யருக்கன்றோ, தன்னுடைய அவ்வளவு வெளியுலகப் பெருமைகளுக்கும் காரணம் மறைமுகமாக வீட்டினுள் இருந்தது, யார் என்று தெரியும்.

 அவர் போனபின், என்ன நினைத்தென்ன என்று ஒரு பெருமூச்செறிந்தார் கிருஷ்ணய்யர். அவர் துக்கமெல்லாம், ஒரு குழந்தை போன்று, தன் தாயாரை இழத்தற்கன்று. மனது ஒரு நிதானமின்றி அலைமோதியது. அவருடைய குடும்பப் பொறுப்பைக் காப்பாற்றிப் பின்வருபவர்களிடம் ஒப்படைக்க, தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒரு உன்னத லக்ஷ்யம். குடும்பம் என்பது சமூகத்தின் எவ்வளவு அடிப்படையான அஸ்திவாரம் என்பது அவருக்குத் தெரியும். எவ்வளவு நாகரிக முற்போக்கு எண்ணங்களிலும் கட்டுக்கடங்கி உணரமுடியாது எட்டிச் செல்வது போன்ற குடும்பம் குடும்பவாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் தன் தாயாருடன் லயித்து இருந்தது என்பதை எண்ணித் துக்கமடைந்தார். உலகம் சீர்கெட்டுத் சிதைவு படுவதின் காரணம் குடும்ப வாழ்க்கையில் சமாதானமற்று இருப்பது தான் என்பதை ஸ்பஷ்டமாக அறிந்தார். குடும்பத்தினர் ஒருவரிடமும், அதன் பொறுப்பு அடைபட்டுக் கிடக்கவில்லை . ஒருவர் ஏற்கும்படியான அவ்வளவு லேசானதல்ல.. எல்லாரிடமும் அது இருப்பது முடியாது. அப்போது அது குடும்பப் பொறுப்பாகாது; சீர்கெட்ட தன் தலை ஆட்டம். பொறுப்பை வகிக்கும் அவர், பொறுப்பாளியின்றி, எல்லாம் தாயார் - தாயாரிடம் சொல்லி சொல்லுக் கேட்டுத்தான்- அவர் குடும்பத் தலைவர்! ஒரு விசித்திர யந்திரம்தான் குடும்பம் என்பது!........ 

மாலை நேரம் சிறிது சிறிதாக இருட்டிவிட்டது. கிருஷ்ணய்யர் வாய்க்கால் சென்று சந்தி ஜபம் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். திண்ணைச் சாய்மணையில், எதிர்த் தூணில் காலை உதைத்துக்கொண்டு, சாய்ந்து படுத்திருந்தார். வாய் ஏதோ மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தாலும், மனது என்னவெல்லாமோ புரியாத வகையில் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. தலைக்கு மேலே மாடத்தில், ஒரு சிறு விளக்கு , லக்ஷ்மிகளை வீசிப் பிரகாசித்தது. வெகு நேரம் அப்படியே சாய்ந்து கொண்டிருந்தார். உள்ளிருந்து வந்து தன் மனைவி விளக்கை எடுத்துச் சென்றதும் அவருக்குத் தெரியாது..... அவர் கடைசிக் குழந்தை, 'அப்பா நாழிகையாச்சு - சாப்பிடவா -' என்று கூப்பிட்டதால் திடுக்கிட்டு எழுந்தார். வீதியில் சென்று அங்கிருந்தே பெருமாளைத் தெரிசித்துவிட்டு கதவைத் தாளிட்டு உள்ளே சென்றார். மனத்தில் ஒரு பெரிய பளுத்தொல்லை நீங்கினதான ஒரு உணர்ச்சி.... பலங்கொண்டதான ஒரு எண்ணம். எதிர்கால வாழ்வு மிகவும் லேசாகத் தோன்றியது. ஒரு அளவற்ற ஆனந்தம்... புரியாத வகையில் அவர் மனது குடும்பம் ஒரு விசித்திர யந்திரம். பழுது பட்டுப்போன ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை. அதற்குப் பிரதி மறு பாகம் தானாகவே உண்டாகிவிடும்...' என்று என்னவெல்லாமோ எண்ணியது. 

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 26 ஜூலை, 2022

2188. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 9

கவிமணியும், டி.ஏ.மதுரமும் 



ஜூலை 27. கவிமணியின் பிறந்த தினம்.






[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!




திங்கள், 25 ஜூலை, 2022

2187. இளங்குமரனார் - 1

இறப்பின்றித் துலங்குவார் எந்நாளும்!

பேரா.ய.மணிகண்டன்


ஜூலை 25. இளங்குமரனாரின் நினைவு தினம்.

'தினமணி' ( 28-7-2021) இதழில் வந்த கட்டுரை  இது.

===


இரண்டாண்டுகளுக்கு முன்னர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் மூன்று நூல்களை வெளியிட்டு உரையாற்ற மதுரை நண்பர் பி. வரதராசன் ஏற்பாட்டில் சென்றிருந்தேன். மாணவர்களை உள்ளடக்கிய அந்த அரங்கில் நான் பேசும்போது, "பரிதிமாற்கலைஞரை, மறைமலையடிகளைக் காணும் பேறு நமக்கில்லை; தேவநேயப் பாவாணரைக் கண்டவரும் உங்களில் ஒரு சிலரே இருக்க இயலும்; என்றாலும் இம்மூவரையும் ஒரே வடிவில் காணும் அரிய பேறு உங்களுக்கு வாய்த்திருக்கின்றது, இதோ கண்டு வணங்குங்கள்' என்று மேடையில் நடுநாயகமாக வெண்ணிற உடையில், வெண்ணிற உடலில், தூய வெள்ளை உள்ளத்தோடு விளங்கிய, அங்கு வெளியிடப்படவிருந்த நூல்களின் ஆசிரியரான அப்பெருமகனைச் சுட்டிக்காட்டினேன். அரங்கின் கவனம் அவர்பால் அழுத்தமாகக் குவிந்தது. அவர்தாம் அறிஞர் இரா. இளங்குமரனார்.

இரா. இளங்குமரனார் தமிழறிஞர் திருக்கூட்டத்தில் முக்கியமான ஒருவர் என்னும் நிலையினர் மட்டுமல்லர்; வரலாற்று நிலையில் கருதிப்பார்க்கையில் ஒருபுறம் பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் என்னும் மரபில் அவர் ஒரு தனித்தமிழ் இயக்கப் பேராளுமை. இன்னொருபுறம் பழந்தமிழ் நூல்கள் தொடங்கிப் பைந்தமிழ் நூல்கள் ஏராளமானவற்றைச் செம்மையுறப் பதிப்பித்தளித்த சி.வை. தாமோதரம் பிள்ளை , உ.வே. சாமிநாதையர், எஸ். வையாபுரிப்பிள்ளை என்னும் நிரலில் ஒளிரும் பதிப்பாசிரியச் செம்மல். பிறிதொரு நிலையில் பனிமூடிய பண்டைத் தமிழ் இலக்கண, இலக்கியச் செல்வங்களை உரை ஒளிகாட்டித் துலக்கும் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர்களின் வரிசையில் இருபதாம் நூற்றாண்டு கண்ட ஏற்றமிகு உரையாசிரியர். தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டபின் சென்னைப் பல்கலைக்கழக மெரீனா வளாகத்தில் முதல் தேசியக கலந்தாய்வுக்கூட்டம் செம்மொழி நிறுவன அறிஞர் க. இராமசாமியின் ஒருங்கிணைப்பில் நிகழ்ந்தது. அது ஏராளமான இலக்கண, மொழியியல் பேராசிரியர்களும் அறிஞர்களும் கருத்துரை வழங்கும் அமர்வு. அதற்கு யாரைத் தலைமை தாங்கச் செய்யலாம் என்ற எண்ணம் முன்னின்று செயல்பட்ட எங்களுக்குள் எழுந்தது. எங்கள் நெஞ்சில் தோன்றிய முதற்பெயர் இளங்குமரனார்தான். வாழும்போதே அந்த மதிப்பார்ந்த இடத்தை அவர் ஏற்க அறிஞர் க. இராமசாமி, பேராசிரியர் வ. ஜெயதேவன் உள்ளிட்ட நாங்கள் கருவிகளாய் இருந்தோம். அதில் அவர் நெகிழ்ச்சி கொண்டார்; நாங்கள் மகிழ்ச்சி கொண்டோம். தமிழின் தொன்மை, தமிழின் தூய்மை, தமிழின் வளமை இவையே மூச்சாய், பேச்சாய், எழுத்தாய், செயலாய் அமைந்ததுதான் இளங்குமரனாரின் வாழ்க்கை இயக்கம். 

இலக்கிய வளமும் இலக்கண வளமும் கொண்ட தமிழில் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் நூற்றுக்கணக்கானவை. ஆனால் இலக்கண வரலாறு கூறும் நூல்கள் மிகச் சிலவே. முதலில் சுருக்கமாக எழுதியவர் சோம. இளவரசு. அடுத்து மிக விரிவாக இலக்கண வரலாற்றை வரைந்த வரலாற்றுச் சாதனையாளர் இளங்குமரனார் ஒருவரே. மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் அணிந்துரை முத்திரையைப் பெற்ற நூல் அது.

தமிழன்னை இழந்த இலக்கண, இலக்கியச் செல்வங்களை மீட்பதிலும் மீட்டுருவாக்குவதிலும் தனித்தன்மையோடு பங்களித்தவர் இளங்குமரனார். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி மறைந்தொழிந்ததை எண்ணித் தாமே பண்டைக் கதைக்கரு கொண்டு 1,127 பாக்களில் அழகிய காப்பியத்தைப் படைத்தார். அக்காப்பியத்துக்கு அறிஞர் சோமசுந்தர பாரதியார் வாழ்த்துரை வழங்கியிருந்தார்.

 தொல்காப்பியத்திற்குப் பிந்தைய வரலாற்றில் தோன்றிய முதன்மையான யாப்பிலக்கண நூலான காக்கைபாடினியம் கிடைக்காமல்போன நிலையில், ஓலைச்சுவடியின் துணையின்றியே அதனைக் கண்டெடுத்த அதிசயத்தைத் தமிழ் வரலாற்றில் அவர் நிகழ்த்தினார். ஆம்! தமிழில் உள்ள இலக்கண, இலக்கிய உரைகளில் காக்கைபாடினியார் பெயரால் இடம்பெற்றிருந்த நூற்பாக்களையெல்லாம் திரட்டி ஒழுங்குசெய்து உரையும் வரைந்து நூல் மீட்பரானார். தமிழ்நூல் மீட்பு வரலாற்றிலும் பதிப்பு வரலாற்றிலும் எவரும் எண்ணிப்பார்க்காத புது முயற்சியும் அரிய சாதனையுமாகும் அது. 2002-இல் தஞ்சையில் நடந்த பாவாணர் நூற்றாண்டு விழாப் பாட்டரங்கில் அரங்கின் முன் வரிசையை அணிசெய்த இளங்குமரனாரை "வாழும் பாவாணர்' என அவர் முன்னிலையில் போற்றி இசைத்தேன். இரண்டாம் பாவாணராய் இத்தமிழ்நாடு முழுதும் வலம் வந்த அவர் பாவாணரை அடியொற்றி வேர்ச்சொல் ஆராய்ச்சித்துறைக்கு நலம் சேர்த்தார்; பாவாணர் கடிதங்கள், பாவாணர் பழமொழிகள், தேவநேயம் எனப் படைப்புப் பல படைத்துப் பாவாணரியலுக்கு வளம் சேர்த்தார்.

சுவடியியல் என்னும் துறையில் முன்னோடியாக அரும்பணியை ஆற்றியவர் இளங்குமரனார். "சுவடிக்கலை' என்னும் அவர்தம் நூல் இத்துறைக்கு ஆற்றுப்படுத்தும் சீரிய படைப்பாகும். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் நான் பணியாற்றிய காலத்தில் சுவடிப் பயிலரங்குகளில் உரையாற்ற அழைக்கும்போதெல்லாம் பேருந்துப் பயணத்தில் என்னுடன் சேர்வார். 

ஓய்வெடுக்கத் தனி அறை வாய்ப்பற்ற சூழலைப் பொருட்படுத்தாமல் நூலகத்தின் ஓர் அறையில் கைப்பையையே தலையணையாய்க் கொண்டு சற்று ஓய்வெடுத்துப் புத்துணர்வோடு சொற்பொழிவு மாமழையை, கேட்போர் உள்ளம் குளிர, அறிவுப் பயிர் வளர வழங்குவார். இந்த எளிமையும் அர்ப்பணிப்பும்தாம் இளங்குமானார்.வாழ்நாளெல்லாம் திருக்குறள் நெறி பரப்பியவர் அவர். தமிழ்வாழ்வின் தலைநாள்களில் மாணவர்கள் மனங்கொண்ட "திருக்குறள் கட்டுரைகள்' என்னும் பத்துத் தொகுதிகளைப் படைத்தார் என்பதும் அவற்றை அற்றைநாள் இந்திய பிரதமர் ஜவாஹர்லால் நேரு காந்திகிராமத்தில் நடைபெற்ற குழந்தைகள் விழாவில் 1963-இல் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கன. 

2005-ஆம் ஆண்டு அவர் உரை வரைந்த புறநானூற்றை உள்ளடக்கிய சங்க இலக்கிய நூல்கள் தில்லியில் இந்தியக் குடியரசுத்தலைவர் மாளிகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமால் வெளியிடப்பட்டன என்பதும் அவர் வாழ்வின் ஒளிமிகுந்த இன்னொரு நிகழ்வாகும். 

ஆசிரியப் பணியின் அருமையை உணர்ந்து தமிழக அரசு நல்லாசிரியர் விருது நிறுவிய 1978-இல் அவ்விருதை முதன்முதலில் பெற்றவர் இளங்குமரனாரே. மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "தமிழன்னை ' விருது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதுமுனைவர் பட்டம், தமிழக அரசின் திரு.வி.க. விருது, அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான "பெட்னா' வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது என ஏராளமான விருதுகள் அவருக்குப் பெருமை சேர்த்தன. தனித்தமிழியக்க அறிஞர், திருக்குறள் வித்தகர், இலக்கண இலக்கிய ஏந்தல், அகராதியியல் ஆற்றலாளர், சொல்லாராய்ச்சித் தோன்றல், பதிப்பியல் செம்மல் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர் மட்டுமல்லர் இளங்குமரனார்; தமிழ் முழுதறிந்த பெருமகனார். பொதுவாகத் தனித்தமிழியக்க அறிஞர்களுள் பாரதியையும் பாரதிதாசனையும் ஒருசேர முழுமையாகப் பயின்றவர்களும் உணர்ந்தவர்களும் ஏற்றுப் போற்றியவர்களும் எண்ணிக்கையில் அதிகமில்லை. இருவர்தம் முழுமையையும் கண்டோருள் தலையாயவர் இருவர். தமிழின் முழுமை உணரும் உள்ளங்களுக்குத்தான் இந்தச் சமநிலைப் பார்வை வாய்க்கும். ஒருவர் என் பேராசிரியர் இரா. இளவரசு; பிறிதொருவர் இரா. இளங்குமரனார். இளங்குமரனாரின் மூத்த மகன் பெயர் இளங்கோ ; இளைய மகனின் பெயர் பாரதி. இளைய மகனின் பெயருக்கான காரணத்தைக் குறிப்பிடும்போது "பாரதியின் புதுப் பார்வைப் பற்றில் வைத்த பெயர்' என்று குறிப்பிட்டுள்ளார் அவர். 

தன் வாழ்வை வடிவமைத்த முதன்மையாளர்களை நிரல்படுத்திய ஒரு பதிவில், தனக்குப் பெயர் தந்தவர் மறைமலையடிகள், நெஞ்சம் தந்தவர் திரு.வி.க., தோள் தந்தோர் பாவாணர், இலக்குவனார், துணிவு தந்தோர் பாரதியார், பாவேந்தர் எனக் குறிப்பிட்டுச் செல்கின்றார். இளங்குமரனாரின் வாழ்வில் பாரதியின் தாக்கம் எத்தகையது என்பதை இவை நன்குணர்த்தும்.

பெ. தூரனாரின் "பாரதி தமிழி'லும், சீனி. விசுவநாதனாரின் (இளங்குமரனார் சொல்லாட்சி) பாரதி தொகுதிகளிலும் அவர் திளைத்ததன் விளைவு, இருபத்தைந்து தொகுதிகளாக, ஐயா இளவரசின் துணையோடு மலர்ந்த "பாவேந்தம்'. 

இளங்குமரனாரைப் போற்றும் தமிழ்கூறு நல்லுலகம், இந்தப் பாரதி நினைவு நூற்றாண்டில் அவர்தம் பாரதி - பாரதிதாசன் மதிப்பீட்டை எண்ணுதல் தகும்.

பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் "பாரதிதாசனாராக'வே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் "பாரதிதாசனாகவே' இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனாரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! (பாவேந்தம்)

அன்று அந்தத் தமிழ்த்தாத்தாவிற்கு வாழும்போது பாரதி சொன்ன தொடரை இந்த 91 வயது நிறைவுபெற்ற (தனது பிறந்த ஆண்டு 1930 என அவரே தன் வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்) தமிழ்த்தாத்தாவின் மறைவின்போதும் எடுத்துச்சொல்வது பொருந்தும். 

தமிழர் நெஞ்சில் எந்நாளும் "இறப்பின்றித் துலங்குவார்' இரா. இளங்குமரனார். அரசு மரியாதையுடன் முதுபெரும் தமிழறிஞரை வழியனுப்பிவைத்துக் கடமைபுரிந்த தமிழகம் அவர் நினைவுபோற்றும் நிலைத்த சின்னங்களை அமைக்கவும் தலைப்பட வேண்டும். இளங்குமரனாரைப் போற்றுவது தமிழைப் போற்றுவது என்பதறிக!


கட்டுரையாளர்: தலைவர், தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்;

இரா. இளங்குமரன்: விக்கி


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 24 ஜூலை, 2022

2186. பால கங்காதர திலகர் -3

திலகர் பெருமான் திருவிழா!


ஜூலை 23. திலகரின் பிறந்த தினம்.


‘கல்கி’யில் 1956-இல் வந்த ஒரு தலையங்கம்  இதோ!





                                                


[ நன்றி : கல்கி ] 


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


[நன்றி: கல்கி]

தொடர்புள்ள பதிவுகள்:

பால கங்காதர திலகர்


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

சனி, 23 ஜூலை, 2022

2185. கல்கி -25

தெய்வயானை 

கல்கி


ராஜாஜி நடத்திய 'விமோசனம்' இதழில் 1929 -இல் வந்த கதை. 'கல்கி'யில் பின்னர் மீள்பிரசுரம் ஆயிற்று, 'சந்திரா'வின் ஓவியங்களுடன்.

'விமோசனம்' இதழில் துணையாசிரியராய் இருந்த 'கல்கி' அங்கு ஆறு மதுவிலக்குக் கதைகளையும், ஒரு நாடகத்தையும் ( 'பாங்கர் விநாயகராவ்') எழுதினார். அவருடைய ஆறு கதைகளில்  மிகச் சிறந்தது 'தெய்வயானை' என்பார்'சுந்தா'.  


== 


என்னுடைய நண்பர் வெற்றிலை பாக்குக் கடை ஓமக்குட்டி முதலியாரும் நானும் ஒரு நாள் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மதுவிலக்கு இயக்கத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. "இருக்கட்டும்; நீங்கள் ஒரு காலத்தில் சாராயக் கடை குத்தகை எடுத்திருந்தீர்களாமே. அதை எப்படி விட்டீர்கள்? உத்தரமேரூரை விட்டுச் சென்னைப் பட்டணத்திற்கு ஏன் வந்தீர்கள்?" என்று நண்பரைக் கேட்டேன். "அது பெரிய கதை!" என்றார் முதலியார்.

"பாதகமில்லை, சொல்லுங்கள்" என்றேன். ஓமக்குட்டி முதலியார் சொல்லத் தொடங்கினார்:

நாங்கள் ஜாதியில் நெசவுக்காரர்கள்; ஆனாலும் எங்கள் குடும்பத்தில் மட்டும் இரண்டு தலைமுறையாய் நெசவுத் தொழில் செய்வது கிடையாது. எங்களுடைய பாட்டனார் எங்கள் ஊரிலேயே பெரிய பணக்காரராயிருந்தார். ஆனால் என் தகப்பனார் காலத்தில் எங்கள் சொத்தெல்லாம் பல வழியில் அழிந்துவிட்டது. என்னையும் என் தாயாரையும் ஏழைகளாய்விட்டுத் தந்தை இறந்துபோனார். அப்பொழுது எனக்கு மூன்றே வயது; கடன்காரர்கள் எங்கள் சொத்தெல்லாம் எடுத்துக் கொண்டு விட்டார்களாம்.

என் தாயைப் பெற்ற பாட்டனார் ஒருவர் இருந்தார். அவர் அப்போது எங்களுடன் வந்து வசிக்கத் தொடங்கினார். அவர் கிழவர்; வேலை செய்யத் தள்ளாதவர். ஆனால் நல்ல கெட்டிக்காரர். எங்களுக்கு மிஞ்சிய சொற்ப நிலத்தின் சாகுபடிக்கு வேண்டிய ஏற்பாடு செய்து குடும்ப காரியங்களைச் சீராக நடத்தி வந்தார். நான் தினந்தோறும் பகலில் எங்கள் மாடுகளை ஓட்டிச்சென்று வருவேன். மாலையில் விட்டுக்கு வந்து மாடுகளைக் கட்டிவிட்டுப் பாட்டன் பக்கத்தில் உட்காருவேன். அவர் இராமாயண, பாரதக் கதைகள் சொல்லுவார். விக்கிரமாதித்தியன் கதை, தேசிங்கு ராஜன் கதை முதலியனவும் சொல்லுவார். இவைகளையெல்லாம் நான் மிகவும் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

ஒருநாள் அவர் நளன் கதை சொல்லிக்கொண்டிருந்தார். தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் என்பதாக நளனுக்குச் செய்தி வந்த இடத்தில் கதையை நிறுத்தி, 'உடம்பு சரியில்லை, அப்பா! ஏதோ ஒரு மாதிரியாயிருக்கிறது. பாக்கிக் கதையை நாளைக்குச் சொல்லுகிறேன்' என்றார்.

கதையை அவர் முடிக்கவேயில்லை. மறுநாள் அவருக்கு உடம்பு அதிகமாய்விட்டது. ஊரார் அவர் செத்துப்போய் விடுவாரென்று பேசுவதைக் கேட்டேன். செத்துப் போவதென்றால் அது என்ன வென்று எனக்கு அப்போது முழுதும் புலப்பட வில்லை. எலி, பெருச்சாளி, பூச்சியின் சாவுதான் தெரியும். ஆனாலும் எல்லாரும் பேசிக் கொள்வதைக் கேட்டு ஒருவிதத் துக்கம் உண்டாயிற்று. அதைவிடக் கதை பாக்கியாய் நின்று விட்டதே என்ற துக்கம்தான் அதிகமாயிருந்தது. எனக்கு இப்போது நன்றாய் ஞாபகமிருக்கிறது; அவர் அருகில் சென்று "தாத்தா! நீ செத்துப் போகிறாயா? வேண்டாம்! கதையை முடிக்காமல் செத்துப் போக வேண்டாம்" என்று சொல்லி அழுதேன். அப்போது அவர் புன்சிரிப்புச் சிரித்து "குழந்தாய்! இதற்காக நீ வருத்தப்படாதே; நீ புத்தகம் படிப்பதற்குக் கற்றுக்கொள். நான் உனக்குச் சொன்ன கதைகளை விட இன்னும் எவ்வளவோ நல்ல கதைகள் புத்தகங்களில் இருக்கின்றன. நீ படிக்கக் கற்றுக் கொண்டால், ஆயிரங்கதைகள் படிக்கலாம். மற்றவர்களுக்கும் சொல்லலாம்" என்றார். மறுநாள் அவர் இறந்து போனார்

பாட்டன் கூறிய வார்த்தைகளை நான் மறக்கவேயில்லை. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. தாயிடம் உத்தரவு பெற்று அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் போனேன். எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும் வரையில் நான் அங்கே இருந்தேன். வீட்டு வேலை, வயல் வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. ஆனால் படிப்பதை மட்டும் விடவில்லை. எங்கே, யாரிடத்தில் கதைப் புத்தகம் இருந்தாலும் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன். விளங்கினாலும், விளங்காவிட்டாலும் தட்டுத் தடுமாறி வாசித்து முடிப்பேன். ஒரு கந்தல் ஏடு அகப்பட்டால்கூட விடுவதில்லை. இவ்வாறு இராமாயணம், பாரதம், கந்தபுராணம், நளமகாராஜன் கதை, அரிச்சந்திர மகாராஜன் கதை, விக்கிரமாதித்தன் கதை, அல்லி அரசாணி மாலை முதலிய பல நூல்களைப் படித்து முடித்தேன்.

இப்படி பல வருஷம் சென்றன. ஒருநாள் எனக்கு ஒரு "நாவல்" கிடைத்தது. ஆஹா! அதைப் படித்தபோது நான் அடைந்த சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. அது முதல், நாவல் பைத்தியம் என்னை நன்றாய்ப் பிடித்துக் கொண்டது. ஒரு முறை ஊரிலிருந்து சிலர் கிறிஸ்துமஸ் வேடிக்கை பார்க்கப் பட்டணத்திற்கு வந்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து வந்தேன். அவர்களெல்லாம் ஏதேதோ சாமான்கள் வாங்கிக் கொண்டு திரும்பினார்கள். நான் என்ன செய்தேன் தெரியுமா? மூர்மார்க்கட்டில் பழைய கிழிந்த நாவல்களில் ஒரு கட்டு வாங்கிக்கொண்டு போய்ச்சேர்ந்தேன். இரவு பகல் ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன். இப்பொழுது நினைத்தால் மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது. குப்பைத் தொட்டியில் போடுவதற்கே தகுந்தவை என்று இப்போது நான் கருதும் நாவல்களை அப்போது எத்தனை ஆவலுடன் படித்தேன், தெரியுமா?

["இருக்கட்டும். நீங்கள் என்னைக் கேலி செய்வதில்லை என்று உறுதி கூறினால்தான் இனி மேல் கதை சொல்லுவேன்" என்றார் ஓமக்குட்டி முதலியார். "ஒரு நாளும் கேலி செய்யமாட்டேன். சொல்லுங்கள்" என்றேன்.]

சாதாரணமாய் நாவல்கள் என்றால் எப்படிப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியுமே? எல்லாம் காதல் மயம். நமது வாழ்வுக்குச் சற்றும் பொருந்தாதவை. ஆனால் நான் அப்போது பதினெட்டு வயது வாலிபன். இவ்வளவு தூரம் பகுத்தறியும் சக்தி எனக்கில்லை. ஆகவே மேற்படி நாவல்களைப் படித்ததன் பயனாகக் காதலைப் பற்றியும், விவாகத்தைப் பற்றியும், வருங்கால வாழ்வைப் பற்றியும் ஏதேதோ மனோராஜ்யம் செய்யத் தொடங்கினேன்.

எங்கள் கிராமத்தில் அப்பொழுது பெரிய பணக்காரர் அப்புக் குட்டி முதலியார். அவர் தான் கிராம முன்சீப்புக்கூட. அவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் தெய்வயானை. இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அவள் ஒரு சர்வ சாதாரணமான பெண் என்றே தோன்றுகிறது. ஆனால் அப்போது "நாவல்" கண்ணுடன் பார்த்த எனக்கு அவள் ஓர் அப்ஸர ஸ்திரீயைப் போல் காணப்பட்டாள். பூலோகத்திலும் சரி, தேவலோகத்திலும் சரி, அவளைப் போன்ற அழகி வேறொருத்தியில்லை என்று நிச்சயமடைந்தேன். புத்தகத்தில் படித்த கதாநாயகர்களைப் போலவே நானும் அவளைக் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் உயிர் பிழைத்திருக்க முடியாதென்று உறுதி கொண்டேன்.

இது வரையில் நாவல் படிப்பு பயன்பட்டது. இதற்குமேல் என்ன செய்வதென்பதற்கு நாவல்களின் உதவி கிடைக்கவில்லை. நானோ தன்னந் தனியனான வாலிபன்; தகப்பனற்றவன்; ஏழை. அப்புக்குட்டி முதலியாரோ பெரும் பணக்காரர்; ஊருக்கு எஜமானர். அவரிடம் போய் "உன் பெண்ணைக் கொடு" என்று கேட்டால் கட்டி வைத்து அடிப்பார். நாவல்களில் படித்ததைப்போல் பெண்ணை நேரே பார்த்து என் காதலை வெளியிடுவதற்கு வேண்டிய தைரியம் இல்லை. அதெல்லாம் நாவல்களில் நடக்கும். வாழ்க்கையில் நடைபெறாது. ஆதலால் ஓயாமல் சிந்தித்த வண்ணம் இருந்தேன். கடைசியாக ஒரு யுக்தி தோன்றியது. அந்த ஊரில் சமீபத்தில் கள்ளு சாராயக்கடைகள் ஏலம் போட இருந்தார்கள். அந்தக் கடைகளை ஏலம் எடுப்பதென்று தீர்மானித்தேன். விரைவில் பணம் சம்பாதித்து அப்புக்குட்டி முதலியாருக்குச் சமமாவதற்கு இது ஒன்றுதான் வழி என்று எண்ணினேன்.

தன் நகைகளை விற்றும், பத்துப் பன்னிரண்டு வருஷங்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்தும் என் தாயார் இருநூறு ரூபாய் வரையில் பணம் வைத்திருந்தாள். ஏலப்பணத்தைக் கட்டுவதற்கு அத்தொகையைக் கொடுக்கும்படி கேட்டேன். தாயார் முதலில் ஆட்சேபித்தாள். "அந்தப் பாவத் தொழில் நமக்கு வேண்டாமப்பா; ஏதோ உள்ளதை வைத்துக்கொண்டு திருப்தி அடைவோம்" என்றாள். நான் பிடிவாதம் பிடித்ததன் மேல் அவள் "குழந்தாய்! நம்முடைய குடும்ப சொத்தெல்லாம் எப்படி அழிந்தது தெரியுமா?" என்று கேட்டாள். "தெரியாதே! எப்படி?" என்றேன். "எல்லாம் உன் தகப்பன் குடித்தே ஒழித்துப் போட்டான். அந்தப் பாவம் என்னத்திற்கு?" என்றாள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இதுவரையில் அந்த விஷயம் எனக்குத் தெரியாது. ஆனால் தெய்வயானையை நினைத்துக் கொண்டேன். தாயார் சொன்ன செய்தியிலிருந்து என்னுடைய தீர்மானம் இன்னும் உறுதிபட்டது. "அம்மா! கள்ளுக் கடையில் போன சொத்தை கள்ளுக்கடை மூலமாகவே சம்பாதித்துத் தீருவேன். அதுதான் தெய்வத்தின் சித்தம். இல்லாவிட்டால் எனக்கேன் இந்த யோசனை தோன்ற வேண்டும்?" என்றேன்.

கள்ளுக்கடைக்குப் போட்டி அதிகம். எடுக்க முடியவில்லை. சாராயக்கடை மட்டும் எடுத்தேன். வியாபாரம் நன்றாய் நடந்தது. உத்தியோகஸ்தர்களுக்கு அதிகப் பணம் கொடுத்தேன். ஆனால் என் கையிலும் பணம் அதிவேகமாகச் சேர்ந்து கொண்டு வந்தது. அடுத்த வருஷம் கள்ளுக்கடை, சாராயக்கடை இரண்டையும் எடுத்தேன். அப்புக்குட்டி முதலியாருடைய பெண்ணுக்காக நான் செய்த காரியங்களெல்லாம் அவர் மனதில் பொறாமையைத்தான் உண்டாக்கின. ஏனெனில் அப்போது அவருடைய கை இறங்கி வந்தது. கடன் அதிகமாயிற்று. "கள்ளுக்கடைக்காரப் பயல்" என்று என்னைப் பற்றி அவர் அவமதிப்பாய்ப் பேசியதாய்க் கேள்விப் பட்டேன். அவருடைய அகம்பாவத்தை அடக்குவது எப்படி என்று ஓயாமல் சிந்தித்துக் கொண்டு வந்தேன். என் எண்ணம் நிறைவேறுவதற்கான ஒரு சம்பவம் விரைவிலேயே நடந்தது. கடவுள் என் பக்கம் இருக்கிறார் என்று தோன்றிற்று!

ஒரு சமயம் அப்புக்குட்டி முதலியார் தம் குடும்பத்துடன் ஏதோ வியாதியைச் சொஸ்தப்படுத்திக் கொள்ளப் பட்டணத்துக்கு வந்து ஆறுமாதம் தங்கியிருந்தார். இங்கே அவர்களுக்கு பந்துக்கள் பலர் இருக்கிறார்கள். அவர் திரும்ப ஊருக்கு வந்த அன்று அவருடைய ஆள் ஒருவன் சாராயக்கடைக்கு வந்து ஒரு புட்டி சரக்கு வாங்கிக்கொண்டு போனான். எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. பட்டணத்தில் பந்துக்கள் வீட்டில் கற்றுக்கொண்டார் போலும் என்று எண்ணினேன். மூன்று நாள் கழித்து மறுபடியும் அந்த ஆள் வந்து இன்னொரு புட்டி வாங்கிக் கொண்டு போனான்.

அப்போது எனக்குண்டான சந்தோஷத்தை அளவிட முடியாது. "சரி, முதலியார் நமது வலையில் வீழ்ந்தார். அவர் கர்வம் ஒழிந்தது; இந்த ஊரில் நம்மைத் தவிரக் கடன் கொடுப்பார் யாருமில்லை. தெய்வயானை நம்மைத் தப்பி எங்கே போகிறாள்?" என்று இவ்வாறெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினேன்.

எல்லாம் நான் எண்ணியபடியே நடந்து வந்தது. ஒரு வருஷத்திற்குள் அப்புக்குட்டி முதலியார் ஊரறிந்த பெருங் குடிகாரர் ஆனார். கடன் விஷம் போல ஏறி வந்தது. ஏராளமான பூமி அவருக்கு இருந்தாலும் வட்டி கொடுப்பது எளிதன்று. நிலத்தை விற்றுக் கடனைத் தீர்ப்பதற்கும் நிலத்தை வாங்குவார் யாருமில்லை. இந்த நிலைமையில் ஒரு கோர்ட்டு வாரண்டு அவர்மீது பிறந்தது. வாரண்டில் தப்புவதற்காகக் கையிலிருந்த சர்க்கார் கிஸ்திப் பணத்தைக் கொடுத்துவிட்டார். இவர் குடிகாரரென்றும், கடன்காரரென்றும் மொட்டை விண்ணப்பத்தின் மூலம் அதிகாரிகளுக்குத் தெரிந்து சோதனைக்கு வந்துவிட்டார்கள். முதலியார் தம் கர்வத்தை எல்லாம் விட்டு என்னிடம் ஓடிவந்தார். என் காலில் விழுந்து கெஞ்சினார். எண்ணூறு ரூபாய் கடன் கொடுத்து அவர் தலைக்கு வந்த விபத்திலிருந்து அவரைத் தப்புவித்தேன்.

நான் கொஞ்சம் குறிப்புக் காட்டியதுதான் தாமதம், முதலியார் தெய்வயானையை எனக்குக் கலியாணம் செய்து கொடுப்பதற்குத் தம்முடைய பூரண சம்மதத்தைத் தெரிவித்தார். விவாகத்திற்கு நாள் குறிப்பிடுவது தான் பாக்கி. இந்தச் சமயத்தில் அப்புக்குட்டி முதலியார் ஒருநாள் திடீரென்று மரணமடைந்தார். நல்ல திடதேகியாயிருந்த அவர் இப்படி அகால மரணமடைந்ததற்கு மிதமிஞ்சிய குடிதான் காரணமாயிருக்கவேண்டும். இந்தத் துக்க சம்பவத்தினால் என்னுடைய உத்தேசங்களைப் பற்றிப் புனராலோசனை செய்ய வேண்டியதாயிருந்தது. இப்பொழுது நான் தெய்வயானையை விவாகம் செய்து கொண்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். ஏனெனில் அவர்கள் வீட்டில் வயது வந்த ஆண் மக்கள் யாருமில்லை. அப்புக்குட்டி முதலியாருடைய இரண்டாந்தாரம் சிறு பெண். அவளும், அவளுடைய கைக்குழந்தையும், தெய்வயானையும்தான் வீட்டிலுள்ளவர்கள். இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பையும், குடும்பத்தின் கடனைத் தீர்த்துச் சீர்ப்படுத்தும் பொறுப்பையும் நானே வகிக்க வேண்டியவனாவேன். இப்படி எல்லாம் மனதில் சந்தேகங்கள் உண்டாயின. ஆனாலும் முடிவில் தெய்வயானையை மணந்துதான் தீர வேண்டும் என்று தீர்மானித்தேன்.

இப்போதெல்லாம் கள்ளு, சாராயக் கடைகளுக்கு நானே நேரில் போவதில்லை. சம்பள ஆள்கள் வைத்துவிட்டேன். அன்றாடம் சாயங்காலத்தில் மட்டும் சென்று கூடுமுதல் தொகையை வாங்கிக் கொண்டு வருவேன். ஒரு நாள் அவ்வாறு சென்றபோது, கிராம முன்சீப்பு வீட்டு வேலைக்காரன் அப்பொழுதுதான் கையில் புட்டியுடன் கடையிலிருந்து வெளியே வருவதைக் கண்டேன். என்னைப் பார்த்ததும் அவன் சாலையோரமாய்ப் பதுங்கிக் கொண்டு சென்றான்.

"இவன் இப்போது யாருக்குச் சாராயம் வாங்கிப் போகிறான்?" என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ஏதோ ஒரு குருட்டு எண்ணத்தினால் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று தோன்றிற்று. ஆகவே அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன். அவன் ஊர்த் தெருவின் புறமாய்ச் சென்று அப்புக்குட்டி முதலியாரின் வாயிற்படி வழியாய் நுழைந்தான். இதை முற்றும் ஆராய வேண்டுமென்று எண்ணி, தெருவீதிக்குச் சென்று முதலியார் வீட்டுக்குள் நுழைந்தேன். நடைக்குச் சென்றதும் சிறிது தயங்கி உள்ளே எட்டிப் பார்த்தேன். அப்போது நான் கண்ட காட்சி இடிவிழுந்தாற்போல் என்னைத் திகைக்கச் செய்து விட்டது.



தெய்வயானையும் அவளுடைய சிறிய தாயாரும் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தார்கள். முதலியாருடைய மனைவியின் கையில் சாராயபுட்டி. இரண்டு தம்ளர்களில் ஊற்றி ஒன்றை தெய்வயானையிடம் கொடுத்து மற்றொன்றைத் தான் அருந்த ஆரம்பித்தாள். பலவருஷ காலமாக என் உள்ளத்தில் வளர்ந்து வந்த காதல் அத்தனையும் அந்த ஒரு கண நேரத்தில் விஷமாகிவிட்டது. சொல்ல முடியாத அருவருப்பு எனக்குண்டாயிற்று. சத்தம் செய்யாமல் வெளியே வந்து அவசரமாக வீடு வந்து சேர்ந்தேன்.

என் மனோரதத்தில் இடி விழுந்தது. என் ஆசை எல்லாம் நிராசையாயிற்று. முதலில் அப்புக் குட்டி முதலியார் வீட்டில் சாராயபுட்டி புகுந்ததைப் பார்த்தபோது, நான் ஆசைப்பட்ட பழம் கிட்டிவிட்டது என்று சந்தோஷப்பட்டேன். வீட்டிற்குள் சென்ற அந்த சாராயபுட்டி, பின்னால் செய்த வேலையைப் பார்த்ததும், அந்தப் பழம் விஷமாய்ப் போவதற்கு காரணமாயிற்று. அளவில்லாத துக்கத்துடன் அன்று படுத்தேன். பாட்டன் சொன்ன பழங்கதைகளெல்லாம் நினைவுக்கு வந்தன. நாவல்கள் எல்லாம் ஆபாசமாய்த் தோன்றின.

அதற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் கள்ளு, சாராயக் கடைகளைத் தொலைத்துத் தலை முழுகினேன். அக்கடைகளில் சம்பாதித்த சொத்தை எல்லாம் அந்த ஊர்க் கோவிலுக்கும், பஜனை மடத்திற்கும், பள்ளிக்கூடத்திற்குமாகப் பகிர்ந்து எழுதி வைத்தேன். இந்த தர்மங்கள் சரிவர நடப்பதற்கும் ஏற்பாடு செய்தேன். கையில் கொஞ்ச ரூபாய் எடுத்துக்கொண்டு தாயாரும் நானும் இந்தச் சென்னை நகருக்கு வந்து சேர்ந்தோம்" என்று கூறி நண்பர் கதையை முடித்தார்.

---------------

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

கல்கி 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வெள்ளி, 22 ஜூலை, 2022

2184. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் - 4

ஆறுபடை வீடுடையான்

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

கந்தர் சஷ்டி விழா ஆறுநாட்கள் நடைபெறும். இந்த ஆறு நாட்களிலும் நாள் ஒன்றுக்கு ஒரு படைவீடு என்று ஆறு படை வீடுகளுக்கும் சென்றுவரும் பழக்கம் உடையவர்கள் அனேகர். ஆனால் இதனை ஒட்டி ஒரு விவாதம், ஆறு படை என்பது சரியல்ல. ஆற்றுப்படை என்பதே சரி என்பாரும், ஒரு ‘ற்’ செய்த வேலை காரணமாகவே ஆறு படையே ஆற்றுப்படை என்றாயிற்று என்பாரும் உளர்.

படைவீடு என்றால் ஓர் அரசன் தன் பகைவரை அழிக்கப் போர்க்கோலம் கொண்டு தன் படையுடன் தங்கியிருக்கும் இடம் என்று பொருள். முருகனும் தன் பகைவரான அசுரரை அழிக்க ஆறு படைவீடுகளில் தங்கியிருக்கின்றான். அவைதாம் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்பவை. இதுதான் கர்ணபரம்பரை வழக்கு. இத்தலங்கள் ஆறையும், நக்கீரர் தம் திருமுருகாற்றுப் படையில் பாடி இருக்கிறார் என்பதையும் அறிவோம். இதில் ஒரு சங்கடம். முதலில் குறிப்பிட்ட மூன்று ஊர்களும் எங்கே இருக்கிறது என்று தெரியும். ஏரகம் என்பது சுவாமி மலையே என்பர் ஒரு சாரர். இல்லை அது மலைநாட்டுத் திருப்பதியாம் குமர கோயிலே என்று வாதிடுபவர் மற்றையோர். எது எப்படி இருந்தாலும் குன்றுதோறாடல் ஓர் ஊரைக் குறிப்பது அன்று. முருகன் ஏறிநிற்கும் குன்றுகளுக்கெல்லாம் இப்பெயர் பொருந்தும் என்றாலும் சிறப்பாக தணிகை மலையையே குறிப்பிடுவதாகும் என்று கருதுவதும் உண்டு. இன்னும் பழமுதிர் சோலையைப் பற்றியும் ஒரு விவாதம். பழங்கள் கனிந்திருக்கும் சோலை என்றுதானே பழமுதிர் சோலைக்குப் பொருள் கொள்ள முடியும். என்றாலும் இந்தப் பழமுதிர்சோலை மதுரைக்குப் பக்கத்தில் உள்ள அழகர் கோயில் மலைதான் என்றும் கூறுவர். இதையெல்லாம் நோக்கியபோது படைவீடுகள் ஆறு அல்ல ஆயிரக் கணக்கானவை என்று கூடக் கூறலாம்.

இன்னும் ஓர் இடர்ப்பாடு. முருகப் பெருமான் சூரபதுமனோடு போர் தொடுத்த போது படைவீடு வீரமகேந்திர புரத்தை அடுத்த ஏமகூடத்தில் இருந்தது என்று கந்தபுராணம் கூறுகிறது. அப்படியிருக்க, நக்கீரர் கூறிய ஆறு இடங்கள் எப்படிப் படைவீடுகள் ஆகும். திருப்பரங்குன்றத்திலே முருகன் தெய்வயானையை மணந்து கொள்கிறான். அது அன்றி போர் முரசம் அங்கு கொட்டியதாக வரலாறு இல்லை. ஏரகத்திலும், ஆவினன் குடியாகிய பழனியிலும் இருப்பவனோ கோவணாண்டி, தனித்திருக்கும் தவமுனிவன் இவனுக்கும், போருக்கும் தொடர்பு இருத்தல் இயலாது. தணிகையில் அமைதியை நாடுகிறான். பழமுதிர் சோலையிலோ பழைய முருகனையே காணோம். அங்கும் போர்ப்படை அமைந்திருக்க நியாயமில்லை.

இதிலிருந்து நாம் அறிவது ஆறு படைவீடு என்று நம்முன்னேர்கள் வழிவழியாக சொல்லி வருகிறார்கள். உண்மையில் நக்கீரர் நம்மை முருகனிடத்து ஆற்றுப்படுத்துகிறார் என்றே கொள்ளல் வேண்டும். ஆற்றுப்படை என்றால் வழிகாட்டுதல் என்றுதான் பொருள். பழந்தமிழ் நாட்டில் புலவர்களும், கலைஞர்களும் பரிசு கொடுக்கும் மன்னர்களையும், வள்ளல்களையும் தேடி அலைந்தனர். அப்படி அலையும்போது முன் சென்ற புலவன் ஒருவன் தான் ஒரு வள்ளலை அடுத்து அவனிடம் பரிசு பெற்று வந்த வரலாற்றைக் கூறி நீயும் அவனை அடுத்துச் சென்றால் அவ்விதமே பரிசு பெறலாம் என்று கூறுவதே ஆற்றுப்படையின் அடிப்படை. இதைப் போலவே முருகப் பெருமானிடம் சென்று அவன் அருள் பெற்ற கவிஞன் ஒருவன் மக்களை எல்லாம் கூவி அழைத்து அப்பெருமானிடம் சென்று அவன் அருள் பெறவைப்பதே ஆற்றுப்படை.


எய்யா நல்லிசை

செவ்வேள் செய்

சேவடி படரும்

செம்மல் உள்ளமொடு


நலம்புரி கொள்கை

புலம் பிரிந்து உறையும்

செலவு நீ நயந்தனை

ஆயின் பலவுடன்

நன்னர் நெஞ்சகத்து

இன்நசை வாய்ப்ப

இன்னே பெறுதிநீ

முன்னிய வினையே


என்றுதானே ஆற்றுப்படுத்துகிறார். இந்த முறையிலே நானும் இந்த கந்தர்சஷ்டி விழாவிலே உங்களை எல்லாம் ஆறுபடை வீடுகளுக்குமே ஆற்றுப்படுத்த விழைகிறேன். கால வசதியும் பொருள் வசதியும் உடையவர்கள் தாமே, இந்த விழா நடக்கும் ஆறு நாட்களுக்குள், ஆறுபடை வீடுகளுக்கும் சென்று ஒவ்வொரு கோயிலிலும் வணங்கித் திரும்புதல் கூடும். நானோ ஒரு சிரமும் இல்லாமல், செலவுக்கும் இடம் வைக்காமல் ஆறுபடை வீடுகளுக்கும் அநாயாசமாகவே அழைத்துச் சென்று திரும்பியும் கொண்டு வந்து சேர்த்து விடுவேன். இந்த மானசீக யாத்திரையைத் துவங்குவோமா?

ஆறுபடை வீடுகளிலும், படைவீடு என்னும் பொருளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பது திருச்செந்தூர்தான். அதைத்தான் திருச்சீர்அலைவாய் என்று நக்கீரர் அழைத்திருக்கிறார். அலைவாய் என்ற பெயரிலேயே அது ஒரு கடற்கரைப் பட்டினம் என்று தெரியும். திருநெல்வேலி மாவட்டத்திலே கீழ்க்கோடியிலே மன்னார் குடாக் கடற்கரையிலே முருகன் சூரபதுமனை வதைத்து வெற்றி கொண்டிருக்கிறான். சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேலைத் தாங்கியவனாகவே நிற்கிறான். அங்கே கருவறையில் நிற்கும் அவனையும் முந்திக் கொண்டே சண்முகன் நம் வரவை எதிர்நோக்கி, நிற்பவன் போல, நாம் கோயிலில் நுழைந்ததும் காட்சி தருகிறான். அவனது ஆறு முகங்களும் எப்படிப் பொலிகின்றன, எவ்வாறெல்லாம் அருள்புரிகின்றன என்பதை நக்கீரர் வாயாலேயே கேட்கலாம்.


மாயிருள் ஞாலம்

மறுஇன்றி விளங்கப்

பல்கதிர் விரிந்தன்று


ஒரு முகம்; ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த
அமர்ந்து இனிது ஒழுகிக்
காதலின் உவந்து
வரம்கொடுத்தன்றே; ஒருமுகம்
மந்திர விதியின்
மரபுளி வழா
அந்தணர் வேள்வி
ஒர்க்கும்மே; ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை
ஏம்உற நாடித்
திங்கள் போலத்
திசைவிளக்கும்மே; ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச்
செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு
களம் வேட்டன்றே; ஒரு முகம்
குறவர் மடமகள்
கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு
நகையமர்ந்து அன்றே

இப்படி மூவிரு முகங்களும் முறைநவின்று ஒழுகும் என்றே பாடி மகிழ்ந்திருக்கிறார் அவர். இந்த சண்முகனே வள்ளி தெய்வானை என்னும் இரு மனைவியரையும் உடன் இருத்திக் கொண்டே மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கிறான். கோயிலின் தெற்குப் பிரதான வாயிலில் நுழைந்து அந்த சண்முக விலாசத்தைக் கடந்தே கருவறையில் உள்ள பாலசுப்பிரமணியனைக் காண வேணும். அவனோ அழகிய வடிவினன். அவனை விபூதி அபிஷேகம் பண்ணிப் பார்த்தால்தான் அவன் அழகு முழுவதையும் அனுபவித்தல் கூடும். இவனது அழகையும், அருளையும் நினைத்துத் தானே,

சூரலை வாயிடைத்

தொலைத்து மார்பு கீண்டு

ஈரலை வாயிடும்

எஃகம் ஏந்திய

வேரலை வாய் தரு

சீரலைவாய் வரு

சேயைப் போற்றிப்

பாடி மகிழ்ந்திருக்கிறார்கள் பக்தர்கள். நாமும் அந்தப் பக்தர் கூட்டத்தில் கூடி நின்று வணங்கி எழுந்து மேல் நடக்கலாம்.

கார் வசதியோடு சென்றிருந்தால் அன்றே வடக்கு நோக்கிக் காரைத் திருப்பி விரைந்து செல்லலாம். அப்படி நூறு மைல் சென்றால் நாம் திருப்பரங்குன்றத்திற்கு வந்து சேரலாம். மதுரைக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்தில் இருக்கிறது திருப்பரங்குன்றம்.

அங்கு ஓங்கி உயர்ந்து நிற்பது பரங்குன்று. அதனையே சிக்கந்தர் மலை என்பர் சாதாரண மக்கள். உண்மையில் கந்தன் மலைதான் அது. சமய வேறுபாடுகளைப் பெரிது பண்ணாத தமிழர் அம்மலை முகட்டில் முஸ்லீம் பெரியார் ஒருவரைச் சமாதி வைக்க அனுமதித்திருக்கிறார்கள். அதனால் தான் கந்தன் மலை நாளடைவில் சிக்கந்தர் மலையாக உருப்பெற்றிருக்கிறது. குன்றமர்ந்து உறையும் முருகன் இங்கு ஒரு பெரிய கோமகனாகவே வாழ்கிறான். சூரபதுமனை வென்ற வெற்றிக்குப் பரிசாகத்தானே அந்த தேவேந்திரன் தன் மகள் தேவசேனையை மணம் முடித்துக் கொடுக்கிறான். தேவர் சேனாதிபதியாக இருந்து போர்களில் வெற்றி பெற்றவன் இங்கு தேவசேனாபதியாகவே அமைகிறான். அக்கோமகன் கோயில் கொண்டிருக்கும் கோயிலும் பெரிய கோயில்தான். பலபடிகள் ஏறிக் கடந்தே அவன் சந்நிதிமுன் சென்று சேரவேணும். அங்கு மலையைக் குடைந்தமைத்த குடை வரையிலேதான் அவன் குடியிருக்கிறான். அவனை வணங்கித் திரும்பும்போது அடிவாரத்தில் உள்ள மகாமண்டபத்துத் தூண் ஒன்றில் தேவசேனையை மணந்து கொள்ளும் காட்சியையும் கண்டு மகிழலாம். இத்தலத்திற்கு வந்த சுந்தரர், அன்று முடியுடை வேந்தர் மூவரும் வந்து வணங்கிய தலம் என்பர். நாமும் இன்று முடியுடைவேந்தர் தாமே. ஆதலால் நாம் அம்மூவரைப் பின்பற்றி வணங்கி சரித்திர ஏடுகளில் இடம் பெறலாம் தானே.

அடுத்த படைவீடு என்று கருதப்படுவது பழமுதிர் சோலை. நான் முன்னமேயே சொல்லியிருக்கிறேன். இது எந்த இடம் என்று தீர்மானிப்பதில் பல கஷ்டங்கள் உண்டு என்று. என்றாலும் பலரும் ஒப்புக் கொள்ளும் பழமுதிர் சோலைதான், மதுரைக்கு வடக்கு பத்து மைல் துரத்தில் உள்ள அழகர் கோயில், அந்த அழகர் கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள பெரிய கோயிலில் இருப்பவன் சுந்தரராஜன் என்னும் பெருமான் அல்லவோ என்று தானே கேட்கிறீர்கள். அந்த மாமன் பின்னர் உருவானவன்தான் என்பர் பெரியோர். அவனையும் வணங்கி அங்குள்ள மலைமீது ஏறி ஒன்றரை மைல் நடந்து சென்றால் ஒரு குளிர் பூஞ்சோலையில் வந்து சேருவோம். அங்கு தான் நூபுர கங்கை என்னும் சிலம்பாறு ஓடுகிறது. அந்தப் பழமுதிர் சோலை மலை கிழவோன் நல்ல இடத்தைத் தான் தேடி எடுத்திருக்கிறான். இங்கு அவன் கோயில் கொண்டிருந்த இடத்தில் ஒரு மண்டபமும் அதில் வேல் ஒன்றும் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. சமீப காலத்தில் அன்பர் பலர் சேர்ந்து ஒரு சிறுகோயிலையே கட்டி வைத்திருக்கின்றனர். இந்தக் கோயில் காரணமாக இப்பழமுதிர் சோலைக் கிழவன் கோர்ட்டு வரை வரவேண்டியவனாக இருந்திருக்கிறான். அவன் கோர்ட் வரை வந்தாலும் நாம் அவனைத் தேடிச் சென்று கண்டு வணங்கித் திரும்பலாம். நமது கந்தர் ஷஷ்டி விழா யாத்திரையில் பழமுதிர் சோலையம் பகவனை வாழ்த்திப் போற்றிய மன அமைதியுடன் மேல் நடக்கலாம்.

ஒரு சிறப்பு என்னவென்றால் ஆறுபடை வீடுகளில் நான்கு படைவீடுகள் பாண்டி நாட்டிலேயே அமைந்திருக்கின்றன. அதில் மூன்றைத் தான் பார்த்திருக்கிறோம். அடுத்தது தான் திரு ஆவினன்குடி, ஆவினன் குடி என்றால் அது எங்கே இருக்கிறது என்றுதான் கேட்கத் தோன்றும். ஆனால் பழநி என்னும் தலமே அது என்றால் அங்குதான் பல தடவை சென்றிருக்கிறோமே. பழநி ஆண்டவனையும் வணங்கியிருக்கிறோமே என்றுதான் பலரும் சொல்வார்கள். ஆம், நாம் அந்த பழநிக்கே செல்லலாம். பழநி மலைக் கோயிலும் அங்குள்ள ஆண்டவன் சந்நிதியும் பிற்காலத்தில்தான் எழுந்திருக்க வேண்டும். அங்குள்ள பழமையான கோயில், மலை அடிவாரத்தில் உள்ள திரு ஆவினன் குடிக் கோயில் என்பர். அந்த ஆவினன் குடி உறை அமலனைத் தானே நக்கீரர் பாடியிருக்கிறார்.

ஆவினன் குடியில் உள்ளவனையோ அவன் பெருமைக்கு எல்லாம் மேலான பெருமையுடைய பழநி ஆண்டவனைப் பற்றியோ அதிகம் கூற வேண்டியதில்லை. எண்ணியது எண்ணியாங்கு எய்தும் வகையில் அருள்புரியும் கண்கண்ட தெய்வமாக வணங்கப்படுபவன் அல்லவா? ஆதலால் நாமும் அங்கு சென்று விழுந்து வணங்கித் திரும்பலாம்.

இனித்தான் சோழநாட்டில் புகவேண்டும் சோழ நாட்டில் உள்ள கோலக்குமரர்களில் எல்லாம் சிறப்பு வாய்ந்தவன் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாதனே. அவன் தந்தைக்கு குருவாக அமைந்தவன் ஆயிற்றே. பிரணவப் பொருளைத் தந்தையாம் சிவபெருமானுக்கே உபதேசிக்கும் ஆற்றல் பெற்றவன் என்றல்லவா புராணங்கள் பேசுகின்றன. இந்த சுவாமி மலைதான் அன்றைய ஏரகம் என்பர். அவனையே ஏரகத்து உறைதலும் உரியன் என்று நக்கீரர் பாடியிருக்கிறார். அங்குள்ள சுவாமிநாதனையும் வணங்கலாம். அதிலும் அவனை ராஜகோலத்தில் அலங்கரித்து இருக்கும் போது கண்டால் ‘ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டல மீதே மனோகர ராஜகம்பீர நாடாளும் நாயகன்’ என்று அருணகிரியார் பாடியதின் பெருமையையும் அறியலாம்.

சரி, ஆறில் ஐந்து தலங்கள் சென்று விட்டோம். கடைசியாக எங்கு செல்வது என்பதுதான் பிரச்சனை. இந்த நக்கீரர் கடைசியாக குன்றுதோறாடும் குமரர்களிடம் அல்லவா நம்மை ஆற்றுப் படுத்துகிறார். குன்றுதோறாடும் குமரர்கள் ஒன்றா இரண்டா, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குன்றின் பேரிலும் தான் ஒரு குமரன் கோயில் இருக்கிறதே. தெற்கே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமரகோயிலிலிருந்து வடக்கு நோக்கி நடந்தால், திருமலையில் ஒரு முருகன், மயிலத்தில் ஒரு முருகன், செங்கோட்டில் ஒரு வேலன் என்றெல்லாம் வடவேங்கடம் தென் குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் குன்றுதோறாடும் குமரர்களில் சிறந்தவன் ஒருவனைக் காணவேண்டும் என்றால் திருத்தணிகை செல்ல வேணும். இத் தணிகை மலை சமீபகாலத்தில் தான் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவோ காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டுடன் இணைந்திருக்க வேண்டிய இத்தணிகை ஏன் இவ்வளவு காலம் கழித்து இணைந்தது என்று ஏங்கும் நம் உள்ளம். இதே ஏக்கம் அன்று அருணகிரியாருக்கும் இருந்திருக்கிறது. அந்த ஏக்கத்தைத்தானே.

கோடாத வேதனுக்கு யான்செய்த

குற்றம் என்? குன்றெறிந்த

தாடாளனே! தென் தணிகைக்

குமரா; நின் தண்டையந் தாள்

சூடாத சென்னியும் நாடாத

கண்ணும் தொழாத கையும்

பாடாத நாவும் எனக்கே

தெரிந்து படைத்தனனே

என்று வெளியிட்டிருக்கிறார். நாம் அந்த ஏக்கம் உடையவர்களாக இருக்க வேண்டியதில்லை அல்லவா. நாம்தான் இந்த ஆறுபடை வீடுடையானை அவன் இருக்கும் ஆறு தலங்களிலுமே சென்று கண்டு வணங்கித் திரும்பியிருக்கிறோமே.

ஆறுபடை வீடு என்றெல்லாம் பேசுகின்ற போது தமிழ் நாட்டில் இறைவழிபாடு எப்படி உருவாகியிருக்கிறது என்பதுமே தெரிகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தமிழ் மக்கள் குறிஞ்சியிலும், முல்லை, மருதம், நெய்தல், நிலங்களிலும் குடிபுகுந்து வாழ்வு நடத்தியிருக்கிறார்கள். தமிழ் மக்களது வாழ்வு துவங்கிய இடம் மலையும், மலையைச் சார்ந்த குறிஞ்சியுமாகவே இருந்திக்கிறது. பின்னரே அவர்கள் காடாகிய முல்லையில் இறங்கி, வயலாகிய மருதத்தில் தவழ்ந்து நெய்தலாகிய கடற்கரை வரையிலும் சென்றிருக்க வேண்டும். ஆதலால் தான் இறைவழிபாடு முதல் முதல் மலைநாடாகிய குறிஞ்சியில் தோன்றியதில் வியப்பில்லை. நீண்டுயர்ந்த மலையிலே பிறந்த இறை வழிபாடு அகன்று பரந்த கடற்கரைக்கே நடந்திருக்கிறது. அதற்கடுத்தபடியாகத்தான் காடாகிய முல்லையிலும், வயலாகிய மருதத்திலும், பரவியிருக்கிறது. இந்நாடுகளிடையே எழுந்த பலபல குன்றுகளிலும் சிலசில சோலைகளிலும் புகுந்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்த நக்கீரர், இறை வழிபாட்டை மலையாம் திருப்பரங்குன்றத்திலே துவங்கி, கடற்கரையாம் திருச்செந்தூரிலே நடத்தி, காடாகிய ஆவினன் குடியிலும் வயல் வெளியாகிய ஏரகத்திலும், சோலையாகிய பழமுதிர் சோலையிலும் பரவவிட்டிருக்கிறார். இப்படி ஆதியில் எழுந்த இறை வழிபாடே, தமிழ் நாட்டில் முருகன் வழிபாடாக வளர்ந்திருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம் நாமும்.

[ நன்றி: “ ஆறுமுகமான பொருள்”  தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ]

தொடர்புள்ள பதிவுகள்:

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

முருக வழிபாட்டு நெறியின் முன்னோடி: கட்டுரை 

குருஜி ஏ.எஸ்.ராகவன்

திருப்புகழ்

முருகன்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be

 found on the top right-hand side of my blog, the service , follow.it    

      will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!