வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

லா.ச.ராமாமிருதம் -3: சிந்தா நதி - 3

12. ஒரு யாத்திரை

லா.ச.ராலா.ச.ரா வின் ஒவ்வொரு கட்டுரைக்கும் பல அடிக் குறிப்புகள் வேண்டும் என்று எனக்கு அடிக்கடி தோன்றும். ஆங்கிலத்தில், ‘ ஆலஸ் இன் வொண்டர்லாண்ட்’ ( Alice in Wonderland) என்ற பிரபல ’சிறுவர்’ புத்தகத்திற்கு இப்படிப் பல அடிக்குறிப்புகள் எழுதி ‘அன்னொட்டேடட் ஆலஸ்’( Annotated Alice)  என்ற நூலையே மார்ட்டின் கார்ட்னர் எழுதியுள்ளார்! இதுபோல் லா.ச.ரா வின் ‘சிந்தா நதியை’யும் யாரேனும் விவரக் குறிப்புகள் சேர்த்து வெளியிட வேண்டும் என்று தோன்றுகிறது! ஒரு சின்ன முயற்சியாய்ச் சில குறிப்புகளைக் கீழ்க்கண்ட கட்டுரைக்குப் பின் எழுதியிருக்கிறேன்.

இந்தக் கட்டுரை வழக்கம்போல் தலைப்பு இன்றித் ‘தினமணி கதிரி’ல் வந்தது. நூலில் இது  12-ஆம் அத்தியாயம் .  மார்வாரிப் பெண்கள் கும்மியடிப்பதை அழகாய்ப் படமாக்கியிருக்கிறார் ஓவியர் உமாபதி. லா.ச. ரா எழுதுவது உரைநடைக் கவிதை தான் என்று நெருப்பின் மீது கைவைத்துச் சத்தியம் செய்பவர் பலர். இந்த ’உரைநடை’ நினைவலையில் ஓர் அடையின் ’கவிதை’ மிதக்கிறது!


அடிக்குறிப்புகள்:

1. அமரர் நா. சீ.வரதராஜன் . பாரதி கலைக் கழகத்தின் கவிமாமணி பட்டம் பெற்றவர்.
புனைபெயர்: ‘பீஷ்மன்’ ; பிறப்பு: 20.5.1930
கவிதை நூல்கள்: அஞ்சலிப் பூக்கள், கானூர் கந்தன் திருப்புகழ், எண்ணத்தில் பூத்த எழில் மலர்கள், வெளிச்ச வாசல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்: ஆத்மாவின் மன்னிப்பு, தூவானம், நாதக் கனல், தேனிலவுக்கு வந்தவர்கள், இருட்டில் ஒரு விடிவு

[ நன்றி: பாட்டுப் பறவைகள், தொகுப்பாசிரியர்: பாரதி சுராஜ், ராஜேஸ்வரி புத்தக நிலையம் ]

உதாரணமாய்,  நா.சீ. வ வின் ஒரு கவிதை:


அக்கறை 

நா.சீ. வ 

புதுஇடத்தில் புது வீடு புது மனைவி
புது வாழ்க்கை மதுகுடித்த நிலையிலொரு
மயக்கத்தில் சுக வேட்கை
நண்பரொரு பொறியாளர், நன்றமைத்த வீட்டினிலே
பண்பரவத் தென்றலுடன் பளிச்சென்று வெளிச்சம் வர
உல்லாசமாய் வாழ்க்கை ஓடிக்கொண்  டிருக்கிறது
சல்லாபத் தனிமையினைத் தகர்க்கின்ற கீச்சொலியைக்
கேட்டவனின் பார்வை கீழ்மேலாய் அலைகிறது.
வீட்டினொரு மூலையிலே விர்ரென்று பறக்கின்ற
குருவிகளின் கூச்சல் கூடுகட்டும் வேலையங்கே
விரைவாய் எழுந்தவனும் விரட்டக்கை யோங்குகிறான்
விலக்குகிறாள் அவன் துணைவி ,வேண்டாங்க என்கின்றாள்
கலக்கமவள் முகத்தினிலே. கலங்காதே புது வீட்டில்
அவற்றுக்கும் குடியிருப்பொன் றமையட்டும் எனச்சிரித்தே
இவற்றுக்கும் இல்வாழ்க்கை இனிதாகுக என்றான்.
தன்னவளின் முகம் பார்த்து தனிமுறுவல் அவன் முகத்தில்
சின்னாளில் கூட்டைமிகச் செப்பமுடன் கட்டிவிட்டுக்
கீச்கீச்சென் றொலியும்சங் கீதமங்கே இசைக்கிறது
பேச்சுத் துணையிதென்று பெண்சிரித்தாள் அவன் மகிழ்ந்தான்
மழைக்காலம் இடியோடு வானத்தில் மின்னொளியும்
இழைக்கோலம் போட்டொளிய, இடையின்றி மழை பொழிய
குருவிகளும் சுகமாகக் கூண்டிற்குள் ளேபதுங்க,
அருவியென முற்றத்தில் அப்படியோர் மழை வெள்ளம்
வானம் பிளந்ததுபோல் மழை தொடர்ந்து பெய்கிறது
ஏனிப்படி யென்றான் எரிச்சலுடன் அவன். அவளோ
பாருங்கள் இதையென்றே பகர்ந்தாள் அவன் சென்றான்
ஓரங்களில் சுவரில் ஓழுகுகின்ற நீர்கண்டான்
நேருயரே மேற்சுவால் நீர்படிந்து சொட்டுவதை
பொறியாளர் திறமையிஙகு பொத்தல்கண்டு விட்டதெனில்
கும்மாளம் கீச்சொலிகள் குறையொன்றும் இல்லாமல்
செம்மாந்தப் புள்வீடு சிரிக்கிறது மூலையிலே.

[ நன்றி: கவிமாமணி இலந்தை இராமசாமி ]

2. ஸைகல் 

குந்தன் லால் ஸைகல். K. L. Saigal.  ’அந்த’க் காலத்தவருக்கு மிகப் பழக்கமான இந்திப் பாடகர். தமிழிலும் ஓரிரண்டு பாடி இருக்கிறார்!
1935  'தேவதாஸ்’ தமிழாக்கத்தில் -இல் “கூவியே பாடுவாய் கோமளக் கிளியே!’ கேட்கிறீர்களா?
http://www.youtube.com/watch?v=ZVU0pbXBNj4

3. துனியா ரங்க் ரங்கேலி 

1938- திரைப்படம் ஒன்றில் ஸைகல் மேலும் இருவருடன் பாடிய பிரசித்தமான பாடல்.
http://www.youtube.com/watch?v=_6ZQqHEB8kEதுர்கா ராகம் என்று நினைக்கிறேன். இசை விமர்சகர் சுப்புடு சொல்வது போல், “ சுத்த சாவேரிக்குச் சுரிதர் போட்டால் துர்கா” . “பிருந்தாவனத்தில் நந்தகுமாரனும் “.... என்ன, நினைவுக்கு வருகிறதா?


4. ஆக் ---   இது 1948-இல் வந்த , ‘ராஜ் கபூர், நர்கிஸ்’ நடித்த இந்திப் படம் என்று நினைக்கிறேன்.  கால நிர்ணயம் சரியாய் இருக்கிறது.
http://www.imdb.com/title/tt0040067/[ நன்றி: தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள் :

லா.ச.ரா : படைப்புகள் 

நா.சீ.வரதராஜன்

1 கருத்து:

KAVIYOGI VEDHAM சொன்னது…

அட்டகாசம். பீஷ்மனை இங்கு நன்றாக ஞாபகப்படுத்தி என்னை நெகிழச் செய்துவிட்டீர். அவரும் நானும் தில்லகேணியில் பக்கத்து பக்கத்துத் தெருவில் குடியிருந்து உரையாடிய இரட்டை அர்த்தம் தொனிக்கப்பேசிய நகைச்சுவையெல்லாம் இப்போ ஞாபகம் வந்து படுத்துகின்றது. வாழ்க பசுபதி பணி,
வேதம்

கருத்துரையிடுக