ஞாயிறு, 26 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 29

எங்கள் பாரத நாடு! 



கர்நாடக இசைக்கச்சேரி மேடைகளிலும் மற்ற ஊடகங்களிலும்  நாம் கேட்டுப் பரவசப்படும் பல மெட்டுகளுக்கு யார் இசையமைத்தார் என்ற தகவலைத் துரதிர்ஷ்ட வசமாக யாரும் அறிவிப்பதில்லை. எல்லா ஒலிநாடாக்களும், குறுந்தகடுகளும்  குறிப்பிடுவதும் இல்லை. இசையமைப்பாளர்களுக்குத் திரைப்பட உலகில் இருக்கும் கௌரவம் கர்நாடக இசையுலகில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  ( பல பாடகர்களுக்கே இந்தத் தகவல்கள் தெரியுமா என்பதும் எனக்குச் சந்தேகமே!)  இந்தப் பழக்கத்தால் பலருக்கு முறையாகச் சேரவேண்டிய புகழ் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட பலரில் ‘மீரா’ பட இசைப்புகழ்  எஸ்.வி. வெங்கடராமன் ஒருவர். இன்று பலராலும் மறக்கப்பட்ட இந்த இசை மேதைதான் எம்.எஸ். அவர்கள் பாடிப் பிரபலமாக்கிய “ வடவரையை மத்தாக்கி” ( சிலப்பதிகாரம்) , “பஜ கோவிந்தம்” (ஆதி சங்கரர்) , “முடியொன்றி “ ( பெரியாழ்வார்) போன்ற பல பாடல்களுக்கு இசை அமைத்தார் என்ற தகவல் எவ்வளவு பேருக்குத் தெரியும்?

ஆனால், ஒரு சமயம் ‘கல்கி’யில் ஓர் இசைத்தட்டு விளம்பரத்தில் இவருடைய பெயர் அழகாக வெளியிடப்பட்டது. எப்போது தெரியுமா? இந்தியக் குடியரசுத் தின விழாவிற்கென்றே பிரத்தியேகமாய் எம்.எஸ். அவர்கள் பாடி ‘எச்.எம்.வி’ வெளியிட்ட ரிகார்டின் விளம்பரத்தில் தான்!
இதோ ‘கல்கி’ யின் 1950 குடியரசுத் தின மலரில் வந்த அந்த விளம்பரம்!


விளம்பரம் மட்டும் போதுமா? ‘கல்கி’ சும்மா இருப்பாரா? பாரதியின் அந்த இரு பாடல்களையும் அந்த 1950 குடியரசு மலரில் அழகான ஓவியங்களுடன் வெளியிட்டார்!

ஓவியர் ‘மணிய’த்தின் படத்துடன் பாரதியின் ‘மன்னும் இமயமலை’ மிளிர்வதைக் கீழே பாருங்கள்! ( பாரதி இதைப் பாடும்போது “எங்கள்’ என்ற இடத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் பெருமையாக என்பர்!)

                                       
                                                

பாட்டுக்குப் பாட்டு! படத்துக்குப் படம்!

https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/07-mannum-imayamalai


இனிய குடியரசுத் தின வாழ்த்துகள்!
[ நன்றி : ‘கல்கி’ ]

தொடர்புள்ள பதிவு:


6 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

இடம், பொருள், ஏவல் எல்லாம் பொருத்தமே.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான பகிர்வு. இந்தப் புத்தகம் எங்கள் நூலகத்தில் இருக்கிறதா பார்க்க வேண்டும்.....

Pas S. Pasupathy சொன்னது…

வெங்கட் நாகராஜ் : ‘கல்கி’ ’விகடன்’ மலர்களைச் சேகரிக்கும் நூலகம் உள்ளதா? அதிசயம் தான்! இருந்தால் சொல்லுங்கள்! பழைய மலர்களிலிருந்து எனக்குப் பல தகவல்கள் தெரிய வேண்டும்! :-)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தில்லித் தமிழ்ச் சங்க நூலகத்தில் விகடன், கல்கி மலர்கள் நிறைய இருக்கின்றன. சுதேச மித்திரன் கூட இருக்கிறது. எந்த மலர் என்று சொன்னால் தேடிப் பார்க்கிறேன்.

RSR சொன்னது…

I think, the music for 'Bajagovindam' was by Kadayanalloor Venkataraman and not S.V.Venkataraman.

Pas S. Pasupathy சொன்னது…

@RSR See https://en.wikipedia.org/wiki/S._V._Venkatraman