என் நண்பன் ‘நம்பி’, அவன் மனைவி ‘நங்கை, அவர்கள் குழந்தைகள் யாவரும் இருக்கும் வீட்டின் பெயர் ‘வெண்பா வீடு’;
இது என் வீட்டிற்கு அருகில்தான் உள்ளது. எல்லோரும் அங்கே ‘வெண்பா’க்கள் மூலமாய்த்தான் பேசிக்கொள்வார்கள்.
ஒரு நாள் ‘வெண்பா வீட்'டிற்குள் நுழையும் போது, நான் கேட்டது:
நம்பி:
முன்தூங்கிப் பின்னெழுந்துன் மூஞ்சிக்குச் சாயமிட்டுப்
பொன்னான நேரத்தைப் புத்தகத்தில் பாழாக்கி
மிஞ்சிடுமிவ் வேளையிலே வீண்வம்பு பேசாமல்
கொஞ்சம்நீ என்னுடன் கொஞ்சு.
இதற்குப் பதில் சொன்னாள் நங்கை
நங்கை:
பண்பற்ற நண்பருடன் பாதிநாள் சீட்டாட்டம்;
கண்கெடுக்கும் தீயதொலைக் காட்சி சிலமணிகள்;
மின்னிணைய மேனகைகள் மீதிநாள் வீணடிக்க
என்னிடமின்(று) ஏன்பல் இளிப்பு ?
என்கையில் இருந்த சீட்டுக் கட்டை அவசரம் அவசரமாக மறைத்துக் கொண்டு, நான் வெண்பா வீட்டை விட்டு வெளியேறினேன்.
[ பல வருடங்களுக்கு முன் ‘மன்றமைய’த்தில் ( forumhub) ‘வெண்பா வடிக்கலாம் வா!’ என்ற இழையில் எழுதியது. ]
தொடர்புள்ள பதிவுகள்:
கவிதைகள்

7 கருத்துகள்:
Arumai, best wishes
Thanks.
அருமையான அகம்மகிழ் நகைசுவைபா இந்த வெண்பாக்கள்.
@Muhunthan Rajadurai
ரசித்தமைக்கு நன்றி
அருமையான நகைச்சுவை கவிதைகள். அற்புதமான கற்பனை.
Wow! Great sense of humor. Thank you for sharing these gems.
If it is today's world it might have referred to whatsapp be FB or Twitter
கருத்துரையிடுக