வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

கருமை : கவிதை

கருமை
பசுபதிஅன்புள்ள ஆங்கிலேயா!
அறிந்திடுவாய் உண்மைசில.

ஆப்பிரிக்கன் நான்
அறைகின்றேன் கேள்!

கறுப்பாய்ப் பிறந்தேன் நான்;
கறுப்பாய் வளர்ந்தேன் நான்;

கோடையில் நான் கறுப்பு;
குளிரிலும் நான் கறுப்பு;

பயத்திலும் கறுப்பு; நோய்ப்
படுக்கையில் கறுப்பு; மரணப்
பாடையிலும் கறுப்பு.

வெள்ளையனே! வெள்ளையனே!
வேடிக்கை கேள்!

பிறவியில் நீ ரோஜா நிறம்;
பெரியவனாய் வெண்மைநிறம்;

வெயிலில் சிவப்பு நீ;
வெங்குளிரில் நீலம் நீ;
வியாதியில் பச்சை நீ;

அஞ்சும்போது மஞ்சள் நிறம்; நீ
துஞ்சும்போது சாம்பல் நிறம்.

ஆனால்

நீ என்னைக் கூப்பிடுகிறாய்
'நிறமுள்ளவன் ' என்று!
நிறையக் கொழுப்படா உனக்கு!

( ஓர் அநாமதேய ஆப்பிரிக்கக் கவிஞரின்
ஆங்கிலக் கவிதையின் மொழியாக்கம்)

[ 30, ஜூலை 2000 'திண்ணை' இதழில் வந்தது ]

தொடர்புள்ள பதிவுகள்: 
கவிதைகள்

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமை அய்யா
பேசும் வரிகள்

மனம் மாறாத நினைப்பு
நிறம் மாறாத கருப்பு
இயற்கை எழில் வனப்பு
மூலதனம் எங்கள் உழைப்பு

இராகி

Adimurugan சொன்னது…

கருமை, மிக அருமை.

Govindaswamy சொன்னது…

தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வங்களின் பெயர்கள் கருப்புசாமி, கருப்பண்ணன், கருப்பராயன், பெரியகருப்பு, மலைக்கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு என்றுள்ளனவே. ஏன்

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி. விடை கிட்டினால் இங்கிடுவேன். ( கிருஷ்ண = கருமை என்பது தொடர்புடையதோ?)

கருத்துரையிடுக