சங்கீத நினைவுகள் -1
சுப்புடு
பிரபல இசை, நாட்டிய விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களையும், அவற்றின் தொகுப்பாக வந்த சில நூல்களையும் பலர் படித்திருப்பார்கள்.
இதோ அவருடைய நூல் ஒன்றின் அட்டைப் படமும், அவருடைய முன்னுரையும் :
அவருடைய விமரிசனங்கள் பலவற்றின் படிகளைச் சுப்புடு அவர்கள் 94-இல் டொராண்டோ வந்தபோது அவருக்குக் கொடுத்தவன் நான்தான். ( ஆனால் நூல் வெளியிடும் போது, என் பெயரை மறந்து, அதை மாற்றி ”பாலசுப்பிரமணியம்” என்று எழுதிவிட்டார்! அது போகட்டும்! )
அவருக்கு நான் கொடுத்தவை தவிர மேலும் சில கட்டுரைகள் என்னிடம் இருக்கின்றன என்று எண்ணுகிறேன். அவற்றுள் சிலவற்றை, முடிந்தவரை சில மூல படங்களுடன் இந்தத் தொடரில்... அவ்வப்போது .... இட எண்ணுகிறேன். இதோ முதல் கட்டுரையின் முதல் பகுதி !
அவருடைய நகைச்சுவை உணர்வை இதில் ரசிக்கலாம்!
அவர்களின் நலனைக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் கூட கல்கத்தாவில் போலீஸ்காரர்கள் அசெம்பிளியில் புகுந்து அட்டகாசம் செய்தார்கள். கேள்வி கேட்பார் இல்லை. ஏகத் திருட்டு. இரண்டு நாள் முன்னால் கோல் மார்க்கெட்டில் பட்டப் பகலில் அவ்வளவும் கொள்ளை போய்விட்டது. கேள்வி கேட்பார் இல்லை.அந்தக் காலத்தில் கோல் மார்க்கெட்டில் வீட்டைத் திறந்துவிட்டுப் போகலாம். அப்போதெல்லாம் டெல்லியில் வீட்டுக் கஷ்டம் கிடையாது. டெல்லியில் உள்ள சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் ஆறு மாதம் சிம்லா போகும்போது அவர்களுடைய டில்லி வீடு பூட்டிக் கிடக்கும். யாராவது இருந்து விளக்கேற்றினால் போதும் என்று கெஞ்சுவார்கள். வீட்டு வாசலிலேயே எருமையைக் கொண்டு வந்து கறப்பான். ரூபாய்க்குப் பதினாறு படி. ஒரு எருமை இரண்டாயிரம் பெறும். கீழே பெரிய வாளியைக் கொண்டு வைத்து கறப்பான். சொட்டு தண்ணீர் விடமாட்டான் . . . . . "
போதுமா? எங்கேயோ ஆரம்பித்து எருமை மாடு வரை வந்து விடுவார்!
[ நன்றி: தினமணி கதிர் ]
தொடர்புள்ள பதிவுகள்:
சுப்புடு
சங்கீத சங்கதிகள் : கட்டுரைகள்

94-இல் டொராண்டோவில் சுப்புடு தம்பதியர் |

4 கருத்துகள்:
படித்துக் கொண்டே வரும்போது, யாரிந்த பாலசுப்பிரமணியன்? இவ்வளவு நாள் தொரொந்தோவில் இருந்தும் தெரிந்துகொள்ளாமல் போய்விட்டோமே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது, மேலே படித்தவுடன் தெளிவு கிடைத்தது. இந்த பாலசுப்பிரமணியன் அவர்களை நன்கறிவேன்.
சௌந்தர்
நன்றி
Great! I read this book in my teen age from public library. But I am searching for Subbudu's review books and Seems not available. May I know where to find?
கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், 5, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை -17.
கைபேசி: 97910 71218
கருத்துரையிடுக