திங்கள், 26 ஜனவரி, 2015

பாடலும் படமும் - 9:

குடியரசுக் கொண்டாட்டங்கள் ! 

ஜனவரி 26, 1950. முதல் குடியரசு தினம். ‘கல்கி’ குடியரசு மலர் ஒன்றை வெளியிட்டது.   அதில் பாரதியாரின் சில வைர வரிகளுக்கு ஓவியர் சந்திரா வரைந்த இரு ஓவியங்களை இங்கு இடுகிறேன்.

முதலில் ஓவியர் சந்திராவைப் பற்றிக் கல்கி பொன்விழா மலரில் வந்த ஒரு குறிப்பு.
[ ஓவியர் சந்திரா: நன்றி: கல்கி ] 

“ சந்திராவின் தனிப்பாணியைப் படத்தைப் பார்க்கும் எவரும் உணரலாம்.  ஒவ்வொரு சிறு அம்சத்தையும் கவனித்து நகாசு வேலை போல் வரம்பு கட்டி வண்ணம் தீட்டுவார். இதனால் ஒவ்வொரு ஓவியமும் தங்கச் சரட்டில் வைரங்கள் பதிந்தது போல் மின்னும் .” 

இளம் வயதிலேயே ஓவியர் சந்திரா மறைந்தது பெரும் இழப்பு.

இந்தக் குடியரசு தினத்தில் இந்தப் பதிவின் மூலம் அவருக்கென் அஞ்சலி.
    

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவு:

3 கருத்துகள்:

Soundar சொன்னது…

நன்றி. குடியரசு தின வாழ்த்துகள்.

முதலாவது சித்திரத்தில், தளை தட்டாமலிருக்க, "ஓசை வளர்முரச" என்று சீர் பிரித்து எழுதியிருக்க வேண்டும்.

John Simon C சொன்னது…

ஐயா இவர் இலங்கை ஓவியர் திரு.சந்ரா அல்லவே?

Pas Pasupathy சொன்னது…

@John Simon. இல்லை.

கருத்துரையிடுக