தமிழின் இழப்பு
அவர் 1967-இல் மறைந்தபின் , கல்கியில் வந்த அஞ்சலி.
அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் :சிதம்பரநாதன் செட்டியார் 10 :
தமிழ் அறிஞர், சொற்பொழிவாளர்
ராஜலக்ஷ்மி சிவலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞரும், சொற்பொழிவாளருமான சிதம்பரநாதன் செட்டியார் (Chidambaranathan Chettiyar) பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கும்பகோணத்தில் (1907) பிறந் தார். பேட்டை தொடக்கப்பள்ளி, கும்பகோணம் நேட்டிவ் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைத் தேர்வில் மாநிலத் திலேயே முதல் மாணவராகத் தேறி, டாக்டர் ஜி.யு.போப் நினைவு தங்கப் பதக்கம் பெற்றார்.
* கல்லூரி மாணவர் மன்றச் செய லாளராகப் பணியாற்றியபோது, தமிழ் கூட்ட அறிக்கைகளைத் தமிழிலேயே வழங்க வழிவகுத்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே, தமிழவேள் உமாமகேஸ்வரன் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆகியோரை கல்லூரிக்கு அழைத்து, சொற்பொழிவு நிகழ்த்த வைத்தார்.
* வரலாற்றுத் துறை நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு, ‘தமிழ் நாகரிகத்தின் தொன்மை’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்றார். பட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னை பல்கலைக்கழகம், அரசு தலைமைச் செயலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.
* தமிழ், ஆங்கிலத்தில் நன்கு புலமை பெற்ற இவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1943-ல் ‘தமிழ்ச் செய்யுள் வரலாறு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இதன்மூலம், முனைவர் பட்டம் பெற்ற முதல் தமிழ் அறிஞர் என்ற பெருமை பெற்றார்.
* சென்னை புதுக்கல்லூரி, பாலக்காடு அரசினர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கடினமான கவிதை, செய்யுள், இலக்கண, இலக்கியங்களை மாணவர்களுக்கு எளிமையான நடையில் விளக்கிப் புரியவைத்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.1948-ல் இங்கு இடைக்கால துணைவேந்தராகப் பணியாற்றினார்.* சிலப்பதிகாரத்தை தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். நல்ல எழுத்தாளரான இவர், இலக்கணம், இலக்கியம், மொழியியல், வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு, வாழ்வியல், மொழிபெயர்ப்பு என அனைத்து களங்களிலும் புகழ்பெற்றார். இவர் எழுதிய ‘ஆன் இன்ட்ரொடக் ஷன் டு தமிழ் பொயட்ரி’ , தமிழ்க் காப்பியங்களை உலக அரங்குக்கு கொண்டு செல்ல வழிவகுத்தது.
 சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமியின் வேண்டுகோளை ஏற்று, ‘ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்’ நூலுக்கு தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றார். இப்பணியில் 6 ஆண்டுகள் ஈடுபட்டார். தமிழ் ஆசிரியர் கழக மாநிலத் தலைவர், தமிழகப் புலவர் குழுத் தலைவர் போன்ற பதவிகளில் சிறப்பாக செயல்பட்டார்.
* பல நாடுகளுக்கும் சென்று தமிழின் சிறப்பு குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினார். டெல்லியில் 1961-ல் நடந்த அனைத்துலக இலக்கிய பேரறிஞர் கருத்தரங்கில் தமிழ் இலக்கியங்களின் செறிவை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
* பட்டதாரிகள் தொகுதியில் இருந்து பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், பட்டதாரி ஆசிரியர் தொகுதியில் இருந்து அகாடமி கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் ஆசிரியர் இவர்தான். மதுரை தியாகராசர் கலைக் கல்லூரி முதல்வராக 2 ஆண்டுகள் பணியாற்றினார்.
* சென்னை மேலவை உறுப்பினராக 1964-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன் உரைகளால் அனைவரையும் கவர்ந்தார். இவரது தமிழ்த் தொண்டுக்காக ‘செந்தமிழ்க் காவலர்’ என்ற சிறப்பு பட்டத்தை தருமபுரம் ஆதீனம் வழங்கியது. மொழியியல், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் தனி முத்திரை பதித்த சிதம்பரநாதன் செட்டியார் 60-வது வயதில் (1967) மறைந்தார்.
[ நன்றி : https://www.hindutamil.in/news/blogs/186124-10-2.html ]
[ If you have trouble reading some of the writings in an image , right click on each such image , choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read. ]
தொடர்புள்ள பதிவுகள்:
அ. சிதம்பரநாதச் செட்டியார் : விக்கிப்பீடியா
அ.சிதம்பரநாதன் செட்டியார்
2 கருத்துகள்:
எங்கள் ஊர்க்காரர் என்பதில் எங்களுக்கெல்லாம் பெருமையே. எங்கள் இல்ல நூலகத்தில் உள்ள இந்த ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம் மிகவும் பயனுள்ள நூல்களில் ஒன்று.
கும்பகோணத்தில் உள்ள சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்திற்கு இவரால் அடிநிலைக்கல் நாட்டப்பட்டதற்கான கல்வெட்டு இன்றும் அந்நூலகத்தில் உள்ளது.."21.5.1958இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் சென்னை மேல்சபை உறுப்பினர் செந்தமிழ்க்காவலர் பேராசிரியர் டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களால் நூல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது." (https://drbjambulingam.blogspot.com/2016/09/blog-post_15.html)
அருமையான தகவல்களுக்கு நன்றி.
கருத்துரையிடுக