வியாழன், 4 ஜூலை, 2013

கல்கி -4 : கிட்டப்பா ஞாபகம்

கிட்டப்பா ஞாபகம்
கல்கி

இன்று மறக்கப்பட்ட பல தேசபக்தர்களில் ஆக்கூர் அனந்தாச்சாரியாரும் ஒருவர். பேராசிரியர் கல்கியுடன் 25 வருஷங்களுக்கு மேல் பழகிய ஆப்த நண்பர்களில் இவர் ஒருவர். பாரதி அன்பர்கள் பலரை உறுப்பினராய்க் கொண்டு 1949-இல் ’கல்கி’ நிறுவித் தலைவராய் இருந்த பாரதி சங்கத்தின் திறமைமிக்க செயலாளராய் இவர் பலவருடங்கள் பணியாற்றினார். சென்னையில் வாணிமகாலில் நடந்த பல பாரதி சங்க விழாக்களில் இவரை, பரலி நெல்லையப்பருடன் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

ஆக்கூர் அனந்தாச்சாரியார்
[நன்றி: 

நாடக உலகின் முடிசூடா மன்னராய்த் திகழ்ந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் நெருங்கிய நண்பர் அனந்தாச்சாரியார். 1933-இல் தன் 27-ஆம் வயதிலேயே மறைந்த கிட்டப்பாவின் நினைவில் அனந்தாச்சாரியார் ஓர் இலவசப் பள்ளியை நிறுவி, அதில் இசையும், ஹிந்தியும் கற்றுக் கொடுத்து வந்தார். அதற்கு 1945-இல் விஜயம் செய்த ‘கல்கி’ அவர்களின் கட்டுரையைக் கீழே பார்க்கலாம்:


[ நன்றி: கல்கி ]

கல்கி’ கட்டுரைகள்

கிட்டப்பா பிளேட் : கல்கி

கிட்டப்பாவின் விருத்தம் : கல்கி

எஸ்.ஜி. கிட்டப்பாவைப் பற்றி அறிய:

http://senkottaisriram.blogspot.ca/2010/03/blog-post_2999.html

5 கருத்துகள்:

Ramani S சொன்னது…

அறியாத அவசியம் அனைவரும் அறிந்திருக்கவேண்டிய
ஒப்பற்ற மனிதர் கிட்டப்பாஅவர்கள்
அவர் குறித்த அரிய தகவல்களை இந்தத் தலைமுறைக்கு
அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

Kanags சொன்னது…

நன்றி ஐயா.

Pas Pasupathy சொன்னது…

நன்றி, Ramani, Kanags.

Chellappa Yagyaswamy சொன்னது…

எஸ்.ஜி.கிட்டப்பா பற்றி இப்போது தான் முழுதாக அறிந்துகொண்டேன். கே.பி.எஸ். அவர்களுக்கும் கிட்டப்பாவுக்கும் திருமணம் நடந்தது தெரியும். மற்ற விஷயங்கள் தெரிந்திருக்கவில்லை. (2) ஆக்கூர் அனந்தாசாரியார் பற்றியும் எழுதினீர்கள். சிறுவயதில் அவருடைய ஆக்கத்தில் கையடக்கப் பதிப்பாக ‘ஆதித்ய ஹ்ருதயம்’ எங்கள் வீட்டில் இருந்தது. (இராணிப்பேட்டையில்). அப்போதெல்லாம் கே.ஆர்.கலியாணராமன் என்ற தேசபக்தர் எங்கள் பள்ளிக்கு வந்து பேசுவார். ஆக்கூராரைப் பற்றியும் சொல்லுவார். நினைவூட்டியதற்கு நன்றி. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Pas Pasupathy சொன்னது…

@Chellappa
வருகைக்கு நன்றி.

கருத்துரையிடுக