செவ்வாய், 6 மே, 2014

பி.ஸ்ரீ -7 : சித்திர ராமாயணம் -7

கிஷ்கிந்தா காண்டத்தின் இறுதியை விவரிக்கும் இக்கட்டுரையில், பி.ஸ்ரீ கம்பனின் எல்லாக் காண்டங்களையும் பற்றித் தன் கருத்துகளைச் சுருக்கமாய்க் கூறுகிறார்.

1944 -இல் விகடனில் தொடங்கிய இத்தொடரில், 50-இல் எழுதிய ‘கிஷ்கிந்தா காண்டம் இறுதிவரையே 366 கட்டுரைகள் ( 7 ஆண்டுகள்! ) எழுதி இருக்கிறார் பி.ஸ்ரீ! அப்படியானால், மீதி எவ்வளவு கட்டுரைகள் எழுதியிருப்பார்? நீங்களே யூகித்துக் கொள்ளலாம். என்னிடம் அந்தக் கணக்குத் துல்லியமாக இல்லை! 1956/57 - ஆண்டில் தொடரில் (யுத்த காண்டத்தில் , “ மூவுலகு ஆளும் செல்வம் கொடுத்து நீ முடித்தி! ... போன்ற பாடல்கள் ) அசோகவனத்தில் நடக்கும் ராவணன் -சீதை சம்பாஷணையைப் படித்த நினைவு இருக்கிறது.  14 ஆண்டுகள்; சுமார் 700+ கட்டுரைகள்; 1957- செப்டம்பர் 22 இதழில்  நிறைவு பெற்றது. ( இவ்வளவு ஆண்டுகள் தொடர்ச்சியாக வேறெந்தத் தொடராவது எந்தத் தமிழ்ப் பத்திரிகையிலாவது வந்துள்ளதா ? தெரிந்தால் சொல்லுங்கள்! )

நான் அறிந்தவரை பி.ஸ்ரீ கம்பனைப் பற்றி எழுதிய தொடர்கள்/ நூல்கள் மூன்று.

‘கம்ப சித்திரம்’, ‘சித்திர ராமாயணம்’ என்ற முதல் இரண்டு தொடர்கள் விகடனில் வெளிவந்தன. பிறகு, பி.ஸ்ரீ தன் 95-ஆம் வயதில் , சரஸ்வதி ராமநாதனுடன் இணைந்து எழுதிய ‘கம்பன் கலைக்கோயிலுக்கு ஒரு கைவிளக்கு’ என்ற நூல் 1980 -இல் ‘வானதி பதிப்பக’ நூலாக வந்தது. ( தன் வாழ்நாளில் ‘சித்திர ராமாயண’த்தை நூல்களாகப் பார்க்கமுடியாது என்று அவருக்குத் தோன்றியதோ, என்னவோ?) இந்தக் கடைசி நூல் ஒன்றுதான் பி.ஸ்ரீ என்ற மாபெரும் கம்பராமாயண ஆய்வாளரை நமக்கு நினைவுபடுத்த இன்று நம்மிடையே நூலாக உள்ளது. அதை வெளியிட்ட ’வானதி’க்கு என் நன்றிகள்!


தொழில் நுட்பம் வளர்ந்திருக்கும் இந்நாளில் கூடிய விரைவில், விகடன் பதிப்பகம் முழுத் தொடரையும் , ’சித்திரலேகா’வின் படங்களுடன் நூல்களாக வெளியிடும் நாளை எதிர்நோக்குகிறேன். ‘கம்ப சித்திரம்’ தொடரையும் நான் படித்ததில்லை. அதனையும் விகடன் வெளியிட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சியே!

366.  கிஷ்கிந்தா காண்டத்தின் ஸ்தானம்

பி. ஸ்ரீ
( இப்போதைக்குச் ‘சித்திர ராமாயண’த் தொடரை இத்துடன் நிறைவு செய்கிறேன்.  )

தொடர்புள்ள பதிவுகள் ;

360. தமிழகத்தில் ராம தூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா
364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?
365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கைபி. ஸ்ரீ படைப்புகள்

1 கருத்து:

கவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…


வணக்கம்!

வணக்கம்!

பொிய மனமொளிரப் பெற்றேன் இனிமை
அாிய படைப்பை அறிந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கருத்துரையிடுக