வெள்ளி, 26 நவம்பர், 2021

1979. பாடலும் படமும் - 141

இராமாயணம் - 21
பால காண்டம் - 2



எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் இரண்டாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.




அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.

पश्यतां नृपसहस्राणां बहूनां रघुनन्दन: ।
आरोपयत्स धर्मात्मा सलीलमिव तद्धनु:    ( வால்மீகி )

Virtuous Rama, the delight of the Raghus, in the presence of several thousands of men fixed the string to the bow and drew it as though with ease.

கம்பன்:

தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.

தடுத்து   இமையால்- கண் கொட்டுவதைத் தடுத்து  இமையாதபடி;
இருந்தவர்   யாரும்  -  (நிகழ்வதை)  பார்த்து  நின்ற  அவையோர் யாவரும்;
தாளில்   மடுத்ததும்   -  (இராமன்)  தன்  திருவடியால் அவ்வில்லின்  முனையை  மிதித்ததையும்;
நாண்  துதி வைத்ததும் - (அதை  வளைத்து)  மற்ற முனையில் நாண் ஏற்றியதையும்;
கடுப்பினில் -   (செயலின்)   வேகத்தால்;
நோக்கார்  -  காணமுடியாதவராயினர்;
அறிந்திலர் -       அன்றியும்      மனத்தாலும்   இன்னது   தான் நிகழும்  என்று கருதவும் இயலாதவர் ஆகினர்;
கையால்  எடுத்தது - (ஆயினும்)   இராமன்  தன்  கையால்  (அவ்  வில்லை)   எடுத்ததை;
கண்டனர்  -  பார்த்தார்கள்;
இற்றது கேட்டார்- (அந்தவில்) முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்..

[ நன்றி : ஓவியம், லலிதாராம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம்

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: