வெள்ளி, 9 அக்டோபர், 2020

1651. மு.வரதராசனார் - 6

 மு.வ.மறைந்தார் 


அக்டோபர் 10 மு.வரதராசனாரின் நினைவு தினம். அவர் 1974-இல் மறைந்தவுடன், 'கல்கி'யில் வந்த அஞ்சலி.



விகடனில் வந்த அஞ்சலி.
====
மு.வ. என்றாலே அன்பு, பணிவு, கனிவு, கடமை, ஒழுக்கம் என்று பொருள்.
'முன்னுக்கு வருக' என்று இளைஞர்களைத் தம் எழுத்தால் உணர்ச்சி யூட்டி ஆர்வத்துடன் அழைத்த டாக்டர் மு.வ., சங்க இலக்கியங்களில் தேடியது இயற்கை. தம் வாழ்நாளில் ஊசியோ மாத்திரையோ ஏற்றுக்கொள்ளாமல் அவர் பின் பற்றியது இயற்கை வைத்தியம். இன்று அவரை அணைத்துக் கொண்டதும் இயற்கை.

பள்ளி ஆசிரியராகப் பணியினைத் துவங்கி, பல்கலைக்கழகத் துணைவேந்தராக உயர்ந்த அவர் வாழ்க்கை சொல்வது... 'எறும்பு போல் விடாது முயலவேண்டும்!' அதன்படி, அவர் முயற்சியின் முடிவாய் வாழ்ந்து மறைந்தார். ஒரு தமிழன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அவர். ஓர் அரசியல் தலைவரை அவரது கட் சிக்காரர்கள்தான் பின்பற்றுவார்கள். ஆனால் மு.வ. அவர்களைப் பின்பற்றிய லட்சக்கணக்கான இளைஞர்கள் எல்லாக்கட்சியிலும் இருக்கிறார்கள். அவர்கள் 'மு.வ. கட்சி' என்ற தனி உலகத்தைச் சேர்ந்தவர்கள்.

இதயவலித் துடிப்போடு கடமையை முடித்து, சென்னைக்கு வந்தவர், வீட்டிலேயே இயற்கை வைத்திய முறையில் தன் மனக் கட்டுப்பாடே மருந்தென்று இருந்தார். தன் வைத்திய முறை தோல்வி கண்டதை உணர்ந்த நிலையில், மருத்துவமனையில் நுழையச் சம்மதித்திருக்கிறார் அவர்.
அமைச்சர் அன்பழகன் அவரை மருத்துவமனையில் காண வந்த போது, "நேற்று இரவும் சந்திக்க வந்தீர்களாம். அப்போது நான் தூங்கிக் கொண்டிருந்தேனாம். மன்னிக்கவும்!" என்றார் பணிவுடன். தனக்குக் கீழ் பேராசிரியராகப் பணியாற்றியவர் அந்த அமைச்சர் என்பதை அவர் எண்ணவில்லை.
மறைந்த அவரை நினைத்து 'அல்லி' அழுகிறாள். 'கரித்துண்டு' கரைகிறது. 'கி.பி. 2000' 'என்னைக் காண வந்தாயோ' என்று துடிக்கிறது.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ] 


தொடர்புள்ள பதிவுகள்:

மு.வரதராசனார்

கருத்துகள் இல்லை: