நேற்று
பனிசூழ் கனடாப் பகுதியிலே
பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன்.
தனிமைத் துயரத் தழலதனைத்
தாங்கச் சற்றுஞ் சக்தியிலை.
இனிமை எட்டும் வழியொன்றை
ஈசன் எனக்குக் காட்டிவிட்டான்.
'மனித வருத்தம் மகிழ்வெல்லாம்
மனத்தின் மாயம் ' எனவுணர்ந்தேன்.
இன்று:
கையிற் கணினி விசையுண்டு;
கருத்திற் கன்னித் தமிழுண்டு ;
பையிற் பண்டை யாப்புண்டு;
பாட்டுக் கோர்வா னொலியுண்டு;
வைய வலையில் நட்புண்டு;
மலரும் மரபுக் கவியுண்டு;
ஐயன் முருகன் அருள்கிட்டின்
அண்டர் உலகம் வேறுண்டோ ?
16 கருத்துகள்:
கையிற் கணினி விசையுண்டு;
கருத்திற் கன்னித் தமிழுண்டு ;
பையிற் பண்டை யாப்புண்டு;
பாட்டுக் கோர்வா னொலியுண்டு;
வைய வலையில் நட்புண்டு;
மலரும் மரபுக் கவியுண்டு;//
அருமை அருமை
யாத்ம் ஊரே யாவரும் கேளிர் என்கிற
பண்டைத் தமிழனின் மனோ நிலை
இன்று இந்த வலைத் தொடர்பால்தான்
சாத்தியமானது
அதை மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும்
பதிவு அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொட்ர வாழ்த்துக்கள்
நன்றி, ரமணி அவர்களே!
கையிற் கணினி விசையுண்டு;
கருத்திற் கன்னித் தமிழுண்டு ;
பையிற் பண்டை யாப்புண்டு;
பாட்டுக் கோர்வா னொலியுண்டு;
வைய வலையில் நட்புண்டு;
நிஜத்தில் நிகழ்காலக் கவிதை
பூங்குழலிக்கு நன்றி!
அழகானக் கட்டுரைகள், கவிதை, காதை
அளிக்கின்ற பசுபதியார் வலைப்பூ விற்கே
வழிகாட்டும் தினமணியைக் கண்டேன் கண்டேன்
மகிழ்ந்தளிக்கும் வாழ்த்திதனை ஏற்றுக் கொள்க!
மொழியார்வம் உள்ளோர்கள் பயன டைய
முன்வந்து உதவுவலைப் பூநீ வாழ்க!
எழுஞாயிற் றைப்போலே நீயும் நன்றே
எஞ்ஞான்றும் இதுபோலத் தொண்டு செய்க!
சிவ சூரியநாராயணன்.
நேற்றும் இன்றும் இனிக்கின்றது உங்களின் சொல்லாக்கத்தில் அய்யா
நன்றி, அரசன் சே !
பனிசூழ் கனடாப் பகுதியிலே
பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன்.
தனிமைத் துயரத் தழலதனைத்
தாங்கச் சற்றுஞ் சக்தியிலை.
இனிமை எட்டும் வழியொன்றை
ஈசன் எனக்குக் காட்டிவிட்டான்.
'மனித வருத்தம் மகிழ்வெல்லாம்
மனத்தின் மாயம் ' எனவுணர்ந்தேன்.//
உள்ளத்து உணர்வுகளை உள்ளவாறே உரைத்த உன்னத கவிதை! அருமை!
நேற்றும் இன்றும் என்றும் இனிக்கும் தமிழாள் எம்மைக் கவர்ந்த வரிகளால் கட்டுண்டு கிடக்கிறோம் ஐயா .மிக்க நன்றி.
Sasi Kala, புலவர் சா இராமாநுசம் ;
மிக்க நன்றி!
உங்கள் வரிகள் அருமை ஐயா. உங்களிடம் கற்க நிறைய உண்டு. உங்கள் தொடர்பு வேண்டும் எனக்கு.
ஐயா,இறைவனை கண்டதால் தான் பேரானந்தம் என்று சொல்கிறார்கள்.ஆனால் ஆதைவிட இன்பம் இணையவழியில் உங்களின் கவிதை இயற்றிக்கலக்கு என்ற நூலுருவை படித்த போதில் ஏற்பட்டது.
பையிற் பண்டை யாப்புண்டு; திருடத்தொடங்கிவிட்டேன் மனதால்.அதனால்
தனிமைத்துயர் எனக்கில்லை யினி இங்கே.
அருமையான பதிவுகள் ஐயா
பதிவுலகில் தொடர்ந்தும் இணைந்திருந்து கற்பியுங்கள் தயவுசெய்து.
Muhunthan Rajadurai,நெற்கொழுதாசன்:
வருகைக்கு நன்றி!
ஐயா!
இதுவல்லவோ கவிதை!
அன்றையும் இன்றையும் அருமையாக விளக்கிய உங்கள் கவி.
இணையம் தனிமை விரட்டி தான்,
நேற்றுக் கூட என் அக்காவிடம் கூறினேன். 10 ஆண்டுகளுக்கு முன்
நேரத்தைக் கொல்லத் தவித்தேன். இன்றோ நேரத்தைத் தேடுகிறேன்.
மிக அருமை.ஜ்
யாவருக்கும் நன்றி!
கருத்துரையிடுக