வியாழன், 10 அக்டோபர், 2013

பாடலும் படமும் - 6: அபிராமி அந்தாதி -1

அபிராமி அந்தாதி -1அபிராமி பட்டரின் ‘அபிராமி அந்தாதி’க்கு யாராவது தமிழிதழ்களில் வரிசையாக ஓவியங்கள் வரைந்திருக்கிறாரா என்று தேடியதில் கிடைத்தன இந்தப் படங்கள்.

கலைமாமணி விக்கிரமனின் ’இலக்கியப் பீடம்’ இதழ்களில் 2006-இல் மூன்று பாடல்களுக்குக் கலைமாமணி ’கோபுலு’ வரைந்த கோட்டோவியங்களும், திருமதி தேவகி முத்தையாவின் விளக்கங்களும் இதோ!


[ ”சொல்லும் பொருளும் என “ என்ற சொற்றொடர் “வாகர்த்தா விவ சம்ப்ருக்தௌ ‘ என்று ”ரகுவம்ஸ’த்தைத் தொடங்கும் காளிதாசனின் ஸ்லோகத்தை நினைவுறுத்துகிறது அல்லவா?  அபிராமி அந்தாதிக்கு உரை எழுதிய கி.வா.ஜகந்நாதன் இதே கருத்தை வெளிப்படுத்தும் இன்னொரு மேற்கோளையும் தருகிறார்:

  “ சொல்வடிவாய்நின் இடம்பிரியா இமயப் பாவை,
    தன்னையும்சொற் பொருளான உன்னையுமே”
          -- திருவிளையாடற் புராணம் ]
[ நன்றி : இலக்கியப் பீடம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

அபிராமி அந்தாதி -2

பாடலும் படமும்
கோபுலு

2 கருத்துகள்:

Soundar சொன்னது…

"அர்த்தோ விஷ்ணு: இயம் வாணி" என்று பராசர மஹரிஷியும் விஷ்ணு புராணத்தில் இதே கருத்தைச் சொல்லியுள்ளார். விஷ்ணுவைப் பொருளுக்கும், இலக்குமியைச் சொல்லுக்கும் (வாணி) காட்டாகச் சொல்லி, இவ்விரட்டையின் இணைபிரியாத் தன்மையைச் சுட்டுகிறார். இதேபோல் மொத்தம் 35 காட்டுகளை வரிசையாகச் சொல்கிறார்.

வைத்தீஸ்வரன் சொன்னது…

கம்ப ராமாயணத்தின் தாடகை வதை படலத்தில் கம்பன், சொல்லையும் பொருளையும் உவமையாகக் கொண்டு அதே நேரத்தில் அவற்றை பிரித்து காட்டியுள்ளார். அந்த பாடல் :

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!

இராமன் வில்லிலிருந்து புறப்பட்ட சரம் சொல்லை ஒத்தது. தாடகை நெஞ்சை பிளந்து சென்ற அதே அம்பு பொருள் என போயிற்று என்கிறார்.

Vaitheeswaran. R

கருத்துரையிடுக