ஞாயிறு, 10 நவம்பர், 2013

கொத்தமங்கலம் சுப்பு - 5 : ஔவையார்

ஔவையார் திரைப்படம்

நவம்பர் 10. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பிறந்த நாள். 

அவருக்கு நிறைய புகழ் தேடித் தந்த  ‘ஔவையார்’ படத்தைப் பற்றிச் சில வரலாற்றுத் தகவல்கள் என் களஞ்சியத்திலிருந்து! 
[ கொத்தமங்கலம் சுப்பு: படம்: தாணு; நன்றி; ஸ்ருதி இதழ் ]


இப்போது ‘ஔவையார்’ என்பவரைப் பற்றிய நம் கண்ணோட்டம் வேறு! மூன்று ஔவையார்களா? நான்கு பேரா? என்றெல்லாம் ஆராய்வதிலேயே முனைந்து  ஒரு ஔவையாரின் பாடல்களையும் ஒழுங்காய்ப் படிக்காமல் போகும் நிலைதான் நமது! 53-இல் வெளியான  திரைப்படமோ நமக்குத் தெரிந்த எல்லா ஔவைக் கதைகளையும் சேர்த்து ஒரு கவர்ச்சிகரமான கலவையை அளித்த முத்தமிழ்க் காவியம்!  

படத்தைப் பார்த்த திருவாசகமணி கே. எம். பாலசுப்பிரமண்யம் 'சிவாஜி' இதழில் 1953- இல் 'ஔவையார் வெண்பா'க்கள்  எழுதினார்.
அதில் ஒன்று:

திடமெல்லாம் வாசன் திடமாகா! செய்யும்
படமெல்லாம் ஔவைபடம் போல -- நடமாடா!
பாட்டெலாம் சுந்தராம்பாள் பாட்டாகா என்றுலகின்
ஓட்டெல்லாம் கூறும் உணர்.
( தகவல்: 'அமுதசுரபி' )கவிஞர் ‘வாலி’ சுப்பு அவர்களைப் பற்றி ஒரு கவிதையில் இப்படி எழுதினார்:

அவ்வையார்’
அவர் இயக்கிய படம்;
தமிழை
தமிழிசையை 
தமிழ்ப்பண்பை
தமிழ்ப் பாராம்பரியத்தை 
துலாம்பரமாகத் 
துலக்கிய அந்தத் 
திரைச் சித்திரம் 
தந்தது ...
சுப்புவிற்கு 
சிறப்பான தனி இடம் 
ஆயினும் -
அவர் நிறைகுடம்! 

'ஔவையார்' படம் எடுத்ததற்காகத் தமிழ் நாட்டில் 1954-இல் பெரும் விழாக்கள் எடுக்கப் பட்டன. இதில் பேராசிரியர் 'கல்கி' முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார். 

அந்த விழாக்கள் தொடர்புள்ள சில 'விகடன்' பக்கங்கள்

சென்னையை விடப் பெரிய முறையில் தஞ்சையில் ஒரு பாராட்டு விழா நடந்தது. அதைப் பற்றிய  'விகடன்' பக்கங்கள் இதோ

[ நன்றி : விகடன் ] 

படங்கள்: “ராவுஜி” [ ஸ்ரீநிவாச ராவ். “நாரதர்” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.] 

தொடர்புள்ள பதிவுகள்:

5 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

அபாரம்! அபாரமான அபாரம்! அதற்க்கும் மேலே அபாரம்!

அனந்த் (Ananthanarayanan) சொன்னது…

அரிய படங்களும் விவரங்களும் கொண்ட அருமையான பதிவு.

அனந்த்

கோமதி அரசு சொன்னது…

உங்கள் இந்த அருமையான பதிவு, இன்றைய வலைச்சரத்தில்
வாழ்த்துக்கள்.

http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_26.html

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_26.html?showComment=1388023369804#c6732373831674887856

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான வரலாற்றுப்பகிர்வுகள்...பாராட்டுக்கள்..

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..!

கருத்துரையிடுக