சனி, 4 ஏப்ரல், 2015

சொல்லின் செல்வன் : கவிதை

பல மாநிலங்களில் இன்று  ( 4.4.2015 ) அனுமன் ஜயந்தி .



முதலில் இறையருள் ஓவியர் ‘சில்பி’யின் ஓவிய மடலொன்று ! பிறகு ஒரு கவிதை! 



சொல்லின் செல்வன்

பசுபதி 



அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்;
'என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும் ? '

தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்:
'ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். '

ஞானம் மலர்நிலையில் ஞாலம்நீ ; துகள்நான்;
ஞானம் கனிந்தபின்னர் நானேநீர்; நீரேநான். '

சிரித்தணைத்தார் ஸ்ரீராமர் சொல்லின் செல்வனை;
திருமாலாய்க் காட்சிதந்தார்; செஞ்சொற்கள் ஒலித்ததங்கே.

' 'திருமால் மாருதி! ' திருப்பியிதைப் படித்தாலும்
'திருமால் மாருதி 'தான் ! தெளிந்தவர் களித்திடுக! '

இருநாமம் இணைந்துநிற்கும் இணையற்ற மந்த்ரமிது!
இருபோதும் ஓதுங்கள் ! இறையோடு இணையுங்கள் !

[ திண்ணை’  மே 13, 2004 இதழில் வந்தது ] 

தொடர்புள்ள பதிவுகள்

திருமால் -மாருதி : மாலைமாற்று

கவிதைகள்

’சில்பி’யின் மற்ற ஓவியங்கள்

1 கருத்து:

ஊமைக்கனவுகள் சொன்னது…

திருமால் மாருதி.............. தெளிந்து களித்தேன்.

இம்மாலைமாற்று அருமை அய்யா!

பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூநீறு நாளைவா பூ

என்னும் அகத்துறை குறள் வெண்பாவும் அது...!

தொடர்கிறேன்.

நன்றி.