புதன், 25 மார்ச், 2020

1499. கதம்பம் -13

இசைப்பேரறிஞருக்குக் குழந்தை உள்ளம்
கி.ராஜேந்திரன்


மார்ச் 24. சீர்காழி எஸ்.கோவிந்தராஜனின் நினைவு தினம். அவர் 1988-இல் மறைந்தவுடன் கல்கியிலும் , விகடனிலும் வந்த கட்டுரைகள் இதோ.


முதலில், கல்கியில் வந்த அஞ்சலி.

[ நன்றி: கல்கி ]

ஆனந்தவிகடனில் வந்த அஞ்சலிக் குறிப்பு.
=====
சீர்காழி தந்த பெட்டிகள்!

பக்திப் பாடல்களைப் பதிவு செய்வதற்கு முன் ரிகர்சல் பார்த்துக் கொள்ள வசதியாக அண்மையில் வீட்டிலேயே ஒரு ஹாலை ஏற்பாடு செய்தார் சீர்காழி கோவிந்தராஜன். அந்த ஹாலைப் பக்காவாக ரெடி பண்ண வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அந்த அறையில் ஒரு பழைய ட்ரங்க் பெட்டியும், சுருதிப் பெட்டியும் இருந்தன. அந்த இரண்டையும் எடுத்த சீர்காழி, தன் மகன் சிவ சிதம்பரத்தை அழைத்தார். "இதோ பாருப்பா! நான் மாடர்ன் தியேட்டர் ஸில், கலைத்துறையில் அடியெடுத்து வைக்கும்போது என் அப்பா வாங் கிக் கொடுத்தவை இவை. இவற்றை நீ பத்திரமாகக் கொண்டு போய்ப் பூஜை அறையில் வை. அது மட்டுமல்ல, தவறாமல் ஒவ்வொரு நாளும் நீ இவற்றைப் பார்க்கவேண்டும். அப்போதுதான் என் உழைப்பின் உயர்வு உனக்குத் தெரியும்" என்று ட்ரங்க் பெட்டியையும், சுருதிப் பெட்டியையும் மகனிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சி நடந்தது, சீர்காழி இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்.


திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீபத்தைக் காணவேண்டும் (முதல்முறையாக) என்று கடந்த டிசம்பரில் குடும்பத்துடன் திடீரென்று கிளம்பிவிட்டார் சீர்காழி. தீபம் சரியாகத் தெரியவில்லை என்று சின்ன மனக்குறை. எப்படி யாவது பார்த்தே தீருவது என்று ஒரு வேகத்துடன், முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் வீட்டுக் குச் சென்றார். "தீபம் தரிசிக்கணும். மாடியிலிருந்து தரிசிக்கிறேனே!" என்று சொல்லிவிட்டு, மாடிக்குச் சென்றார். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தது தான் தாமதம்... ஜகஜ்ஜோதியான தீப தரிசனம் கிடைத்தது!

இலங்கையில் தமிழர்கள் கொல் லப்படுவதைப் பற்றிய செய்திகளைக் கேட்கும்போதெல்லாம், "முருகா! இதென்ன சோதனை? உன் புகழைப் போற்றி நான் பாடும் பாடல்களைக் கேட்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தினமும் மடிவதை என்னால் தாங்க முடியவில்லையே!" என்று உள்ளம் உருகி, நல்லூர் கந்தசாமி கோயில் முருகனை நினைத்து வேண்டுவாராம் சீர்காழி.

மார்ச் 23-ம் தேதி புதன்கிழமை, மாலை 6 மணிக்கு சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மிருதங்க வித்துவான் பாஸ்கர ராவைப் பார்த்துவிட்டுக் கிளம்பிய சீர்காழி, அங்கிருந்து நேராக டாக்டர் நண்பர் ஒருவர் வீட்டில் பேசிவிட்டு, இரவு வீடு திரும்பியிருக்கிறார். இரவு 11 மணிக்கு, "அப்பா மூச்சு விட முடியாம திணறுறாங்க" என்று அம்மா அழைத்தவுடன், பதறிப் பாய்ந்தோடி வந்த சிதம்பரம், அவசர சிகிச்சை அளித்திருக்கிறார். அந்தச் சமயத்திலும் கந்தர் அலங்காரத்தை யும், சஷ்டி கவசத்தையும் சொல்லிக் கொண்டிருந்தார் சீர்காழி. மெதுவாக அவரை காரில் ஏற்றி, காரிலேயே ஹார்ட் மசாஜ் செய்து, தேவகி மருத் துவமனைக்குச் சென்றும் பலனில் லாமல் போய்விட்டது. நவசக்தி விநாயகர் கோயிலருகே, "உலகம் வாழ்க!" என்று சொல்லியபடியே சாய்ந்துவிட்டார் சீர்காழி.
- சுந்தரன்
[ நன்றி: விகடன் ]


[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

சீர்காழி கோவிந்தராஜன்: விக்கிப்பீடியாக் கட்டுரை

1 கருத்து:

துரை செல்வராஜூ சொன்னது…

சீர்காழியாரின் நினைவுகள் நெஞ்சை அழுத்துகின்றன...